Advertisement

மடியில் முகம் புதைத்து தேம்பி கொண்டிருந்தவளை நிமிர்த்தியவன்இங்க பாரு! என்ன பாரு! எதுவா இருந்தாலும் சொல்லிட்டு அழு எதுவுமே சொல்லாம அழுதா என்னனு எடுத்துகிறது எதுக்காக அழுகுற  யாராவது எதவாது சொன்னாங்களா?” என்று தணிவாக கேட்க

இல்லை என்று தலையாட்டியவள் கண்களை துடைத்து அழுகையை விழுங்கி கொண்டுஇன்னைக்கு லாஸ்ட் எக்ஸாம் சோ பிரெண்ட்ஸ் எல்லாரும் எக்ஸாம் முடிஞ்சு வெளிய போகலாம்ன்னு பிளான் பண்ணிருந்தோம் பீச்சுக்கு போய்ட்டு அப்டியே ஹோட்டல் போய் சாப்டுட்டு கொஞ்ச நேரம் சுத்திட்டு ரெண்டு மணிக்கு எல்லாரும் கிளம்பி அவங்க அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க,

எப்பவும் வர்ற வழியில வேலை நடந்துட்டு இருந்ததால அடுத்த தெருவழியா சுத்தி வந்தேன் என்கூட தான் வந்துட்டு இருந்தாரு அந்த பெரியவரு செருப்பு அந்துருச்சுன்னு நா நின்னுட்டேன் அப்போ! அப்போ..!” என்றவளுக்கு குரலும் உடலும் நடுங்கியது அவள் கையை ஆறுதலாக பற்றியவன் தண்ணிரை எடுத்து கொடுக்க பயத்தை தணிக்க மடமடவென குடித்து முடித்தவள் மேலே தொடர்ந்தாள் 

ஓரமா தான் போய்ட்டு இருந்தோம் எப்டி நடந்துச்சுன்னு இன்னும் எனக்கு தெரியலை? எங்க இருந்து அந்த கார் வந்துச்சுன்னு தெரியலை சரியான வேகம்! முன்னாடி போய்ட்டு இருந்தவர் மேல சட்டுன்னு மோதிட்டு நிக்காமா போயிருச்சு! கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா என்மேல மோதிருக்கும் சார்என்றவளின் உடல் நடுங்கியது 

நம்பர் நோட் பண்றதுக்குள்ள கார் கண்ணை விட்டு மறைஞ்சு போயிருச்சு திரும்பி பாக்கும் போது உடம்பு முகம் முழுக்க ஒரே.. ரத்தமா ரோட்டுல விழுந்து கிடந்தாரு அங்க இருந்த எல்லாரும் சுத்தி நின்னு வேடிக்கை பாத்தாங்களே தவிர யாரும் உதவி பண்ணல, திடீர்ன்னு ரத்தத்தை பார்த்ததும் எனக்கு தலை சுத்தி மயக்கம் வந்துருச்சு யாரோ ஒரு வயசான அம்மாதான் தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டாங்க, நா கண்ணு முழுச்சு பாக்கும் போதும் அந்த பெரியவரு அதே இடத்துல தான் இருந்தாரு, பேசிக்கிட்டே இருந்தாங்களே தவிர யாருமே ஆம்புலன்ஸ்கும் போலீஸ்க்கும் போன் பண்ணல கிட்டத்தட்ட பதினைஞ்சு நிமிஷம் இருக்கும் ஒரு சிலபேரு வீடியோ போட்டோ வேற எடுத்துட்டு இருந்தாங்க, தடுமாறி எந்திரிச்சு கொஞ்சம் தூரம் தள்ளி நின்னு போலீஸ்க்கும் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி சொன்னேன் அதுவரைக்கும் சுத்தி நின்னு வேடிக்கை பாத்துகிட்டு இருந்தங்களே தவிர அவரு பக்கத்துல கூட யாரும் போகலஎன்று விசும்பி கொண்டே கூற

அப்றம் என்னாச்சு அவர ஹாஸ்டல் கொண்டு போனாங்களா இல்லையா?” என்று பரபரப்புடன் கேட்க

போலீஸ் வந்து எல்லாரையும் போக சொல்லிட்டு ஆம்புலன்ஸ்ல ஏத்தும் போது இன்ஸ்பெக்டர் கேட்டாரு உயிர் இருக்கான்னு, உயிர் போயிருச்சு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஹாஸ்பிடல் கொண்டு வந்துருந்தா காப்பாத்திருக்கலாம்னு சொன்னதும் எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல! அவர பார்த்ததும் அப்பா ஞாபகம் வந்துருச்சு சார் அவரும் ஆக்ஸிடன்ட்ல தான் இறந்தாரு கொஞ்சம் மனிதாபிமானம் இருந்திருந்தா அவர காப்பாத்திருக்கலாம் நானும் அதுக்கு ஒரு காரணம் ஆகிட்டேன்னு குற்றவுணர்வா இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு முடியல! அவர பாத்ததும் என்ன காப்பாத்துடா ன்னு எங்கப்பா சொன்ன மாதிரியே இருந்துச்சு ஏன் கண்ணு முன்னாடி தான் அப்பாவும் இறந்தாரு அப்போ எனக்கு எதுவும் தெரியலை ஆனா இப்போ..?” என்றவள் அவன் தோளில் சாய்ந்து தேம்பி அழுக 

அவள் உணர்வுகளை புரிந்து கொண்டவன் தலையை ஆதூரமாய் தடவி கொண்டேஒன்னு அனுதாபம் மட்டுமே காட்டுவாங்க இல்ல யாரையாவது ஏவி விடுவாங்க இதை தவிர முன்ன வந்து எந்த உதவியும் செய்ய மாட்டாங்க இந்த சமூகத்துல வாடிக்கையா நடக்குறது தானே? எல்லாரும் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது சஞ்சு, அதுக்கு எதுக்கு நீ ஃபீல் பண்ற? இதுல உன்னோட தப்பு எதுவும் இல்ல சஞ்சும்மா நீ கில்ட்டியா தவிக்க வேண்டிய அவசியமில்லஎன்றவன் அவளை விலக்கி

இங்க பாரு உன்மேல தப்பு இல்ல சரியா! உன்னால முடிஞ்ச உதவிய நீ செஞ்சுருக்க ஒளி தான் நா சொன்னா கேப்பதானேஎன்று கேட்டதும் ஆமாம் என்று தலையாட்ட

அவர ஹாஸ்பிடல் கொண்டு போயிருந்தாலும் பிழைச்சுருப்பாறுன்னு சொல்ல முடியாது அப்டி இருக்குறப்போ நீ அத நினைச்சு வருத்தப்படுற, முதல கண்ண துடை உன்னோட இந்த கோலத்தை பாத்து ஆன்ட்டி எப்டி பயந்து போய்ட்டாங்க தெரியுமா? ஏன் நானே பயந்துட்டேன்என்று தீவிரமான பாவனையுடன் கூறியவனை கண்டு மெலிதாய் புன்னகைத்தவள் 

ரத்தத்தை பார்த்தது அப்றம் அவர் இறந்துட்டாருன்னு சொன்னது எல்லாமே சேந்து ஒரு மாதிரி ஆகிருச்சு அப்பா முகம் கண்ணு முன்னாடி வந்துட்டு போனது சார் சுத்தி என்ன நடக்குதுன்னு கூட புரிஞ்சிக்க முடியல குற்றவுணர்வாவே இருந்துச்சுஎன்று பயத்துடன் கூறியவள் சற்றும் தயங்காதுகொஞ்ச நேரம் உங்க மடியில படுத்துக்கவாஎன்று இளைப்பாறும் குரலில் கேட்க

அவள் வார்த்தையில் திகைத்து விழித்தவன் அவளின் மனநிலை என்னவென்பதை உணர்ந்துசரி படுத்துக்கோ!” என்றதும் அவன் மடியில் தலை சாய்த்து கொண்டவளுக்கு மனதில் நிம்மதியும் ஆறுதலும் பிறந்தது சற்று நேரம் கண்களை வெறுமனே மூடியிருந்தவள் அழுத களைப்பில் தன்னையும் அறியாமல் உறங்கி போக, மூச்சு காற்று தோய்வில்லாமல் வருவதை கண்டவன் உறங்கி போனாள் என்று ஊர்ஜித்து கொண்டு உறக்கம் கலைந்திடா வண்ணம் சஞ்சளாவின் தலையை தன் மடியில் இருந்து எடுத்து சோபாவில் மெதுவாக படுக்க வைத்தவன் அவளின் உரிமையான செயலிலும் பேச்சிலும் குழப்பம் மேலிட அவளையே பார்த்து கொண்டிருந்தான்

அழுதழுது கசங்கிய முகம் அமைதியைய் சூடி கொண்டது தலை மயிர்கள் எல்லாம் கலைந்து சிலிர்த்து சிலுப்பி கொண்டிருந்தன கள்ளம் இல்லா உள்ளம் ஆனால் உள்ளத்தில் என்ன உள்ளது என்பதை தான் அவனால் அறியமுடியவில்லை முற்படவும் இல்லை ஏதோ துடுக்காக பேசுகிறாள் வம்பளகிறாள் சிறு பெண் என்று எண்ணி கொண்டிருப்பவனுக்கு அவளுக்கும் அவனுக்குமான உறவை காலம் எடுத்துரைக்க காத்துக்கொண்டிருந்தது சில கசப்பான சம்பவங்களினால்

பொறுத்து பொறுத்து பார்த்தவன்டேய் இன்னுமாடா என்ன நடந்துச்சுன்னு கேட்டுகிட்டு இருக்க! எவ்ளோ நேரம் ஒரு மனுஷன் வெளியவே நிக்கிறது பாக்குறவங்க ஒரு மாதிரி பாத்துட்டு போறாங்கஎன்று குரல் கொடுத்த விஷ்ணு பொறுமையின்றி உள்ளே நுழைய

அமர்ந்த நிலை மாறாது  அமர்ந்திருந்தவனின் கோலம் கண்டு அதிர்ந்தவன்டேய்என்று உரத்த குரலில் அழைக்கவும் 

திடுக்கிட்டு திரும்பியவன் ஏக்கர் கணக்கில் அசடு வழிய நண்பனை பார்த்தான் 

உன்ன என்ன பண்ண சொன்னா நீ என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கோபம் கொள்ள

டேய் அவ தாண்டா மடியில தூங்குறேன்னு சொன்னா சரின்னு இப்போ தான் தூங்க வச்சுட்டு கீழ உக்காந்தேன்என்று வெண்ணெய் திருடிய கண்ணன் மாட்டிக்கொண்டு முழிப்பதை போல பார்க்க

நா அத சொல்லல பக்கி நல்லவேளை நா உள்ள வந்தேன் நீ இப்டி அவள பாத்துட்டு இருக்குறதா அவங்க அம்மா பாத்தா என்ன ஆகிருக்கும்?” என்று அதிர்ச்சியுடன் கூறவும்

ம் கூடிய சீக்கிறத்துல மாப்பிள்ளை ஆகிருப்பேன்என்று முணுமுணுத்தான் துவாரகேஷ்

என்ன சொன்ன?” என்று விஷ்ணு கேட்க

ஒன்னுமில்லஎன்றவன்வந்து ரொம்ப நேரம் ஆகுது இவ நடத்துன கூத்துல மறந்து போன பசி திருப்பவும் வயித்துல ஏதோ பண்ணுதுஎன்றபடியே விஷ்ணுவை கடந்து செல்ல

அவனை எட்டி பிடிக்க வேக நடை போட்டவன்டேய் அவளுக்கு என்னாச்சுன்னு கேட்டயா?”

கேட்டாச்சு கேட்டாச்சு ஏதோ ஆக்சிடன்ட பாத்து பயந்துருக்கா அதான் கேள்வி கேட்டும் பதில் சொல்லாமா பேயறைஞ்ச மாதிரி உக்காந்துட்டு இருந்திருக்கா இப்போ எல்லாம் சரியா போச்சுஎன்று நடந்து கொண்டே சாவாதினமாக கூறியவன் சாவித்ரி இல்லம் நுழைய அனைவரையும் அவனையே ஆர்வத்துடன் பார்த்தனர்

அவர்களின் ஆர்வத்தையும் அமிர்தாவின் தவிப்பையும் கண்ட துவாரகா விஷ்ணுவை பார்க்கஎன்ன? என்ன பாக்குற நா எதுவும் சொல்ல மாட்டேன் நீயே சொல்லுஎன்ற ரீதியில் கதவில் சாய்ந்து கொண்டு அசையாமல் நிற்க 

ஒன்னுமில்ல ஆன்ட்டி ரோட்டுல ஆக்ஸிடன்ட பாத்து ரொம்ப பயந்து போயிருக்கா நீங்க பயப்படாதிங்க இப்போ தூங்கிட்டா ரெண்டு நாளைக்கு தனியா எங்கயும் விட்டுறாதிங்க எதுக்கும் ஈவ்னிங் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் செக் பண்ணிடுங்க பீவர் இருக்குற மாதிரி தெரியிதுஎன்றவன் சஞ்சளா கூறியதை சொல்லிவிட்டு

இப்போ தனியா தான் படுத்துருக்கா பக்கத்துல இருந்து பாத்துக்கோங்க ஆன்ட்டிஎன்று கூற அமிர்தாவிற்கே வியப்பு தான் வியப்பை மறைத்து கண்ணிரை துடைத்து கொண்டவர் தன் இல்லம் செல்ல 

பெண்கள் இருவரும் அவனையே அதிசயித்து பார்த்தனர்என்ன பாக்குறிங்க என் முகத்துல ஏதாவது எழுதி ஒட்டியிருக்கா வாய் பாக்கிறத விட்டுட்டு சீக்கிரம் போய் சாப்பாடு எடுத்து வைங்க ரொம்ப பசிக்கிது வந்து எவ்ளோ நேரம் ஆகுதுஎன்று அதிகார தோணியில் துவாரகேஷ் கூற

டேய் உதைபடுவ ராஸ்கல் கைகால் கழுவிட்டு வா எடுத்து வைக்கிறேன்என்று சாவித்ரி சிரித்தபடி கூறிவிட்டு செல்ல பின்னோடு வைதேகியும் சென்றாள்

அறைக்கு சென்றதும்ஹப்பா என்ன ஒரு புழுக்கம்என்று மெத்தையில் தொப்பென்று அமர்ந்தவன்மசமசன்னு நிக்காம அந்த ஃபேன் சுவிட்சை போடுடாஎன்று உத்தரவு போல் கூற

உனக்கு உடம்பு பரபரக்குதுன்னு நினைக்கிறேன் என்கிட்ட அடிவாங்குறதுக்கு, கொன்றுவேன் மவனே எந்திரிச்சு நீயே போட்டுக்கோஎன்றவன் அவன் காலை வேண்டுமென்றே மிதித்து விட்டு வேகமாக குளியலறைகுள் புகுந்து கொள்ள

வலியில்..”வென்று கத்தியவன்போடா குறை மாசத்துல பிறந்த குரங்கேஎன்றதும்

நா குரங்குன்னா என்கூட சேந்து இருக்குற நீயும் அதே தான்என்று குளியலறையில் இருந்து எதிர் குரல் கொடுத்தவன்அதிகாரம் பண்ணாம விஜி எங்க இருக்குறான்னு கேளு?” என்று சொல்ல

விஜயனுக்கு அழைப்பு விடுத்தான் துவாரகேஷ்இங்கு தான் இருக்கிறேன்என்று மெல்லிய ஓசையில் அலைபேசி சிணுங்கி தன் இருப்பிடத்தை காட்ட

போன வச்சுட்டு எங்க போய் தொலைஞ்சானோஎன்று சலித்து கொண்டவன் வைஷாலியின் அறைக்குள் நுழைய முற்பட உள்ளே கேட்ட குரலில் சட்டென அறைவாசலில் நின்று கொண்டான் துவாரகேஷ் 

Advertisement