Advertisement

அட போடா..! உன்னோட அன்பை பெற ஏதாவது வழி இருந்தா சொல்லி தொலை எதுவும் சொல்லாம இப்டி சாகடிக்கிறயே உன் மனசோட ஆழம் தான் என்ன! அதுல அப்டி என்ன ரகசியம் இருக்கு? அதை எப்போ தான் சொல்ல போற? தேடி வரும்போதெல்லாம் என்னை உதாசீனம் செய்யிற இருந்தும் உன்ன விட்டு விலகி போக முடியலை உன்னோட விஷயத்துல மட்டும் எனக்கு சொரணை இல்லாம போயிருச்சு! நா பேசுறது உனக்கு புரியிதா புரியலையான்னு கூட தெரியலை மனசுக்கு பிடிச்சவங்க என்ன நினைக்கிறாங்கன்னு சொல்லாமலே தெரியும் அவங்க முகத்தை வச்சே கண்டுபிடிச்சிருவாங்க நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு புரியிது ஆனா நா நினைக்குறது உனக்கு?” என்று எண்ணியவளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க சத்தமில்லாமல் ஜன்னல் புறம் திரும்பி விசும்பலானாள்

அவள் விசும்பல் ஒலி வைதேகியின் செவிகளுக்கு எட்ட அவசரமாக வைஷாலியின் அருகில் வந்து அமர்ந்தவள்என்னாச்சு வைசு அழுகுற உடம்பு முடியலயா?” என்று பரிவாக கேட்க

இல்லைஎன்று தலையாட்டியவள்உடம்பு நல்லா தான் இருக்கு மனசு தான் சரியில்ல என்னால முடியல வைத்தி ரொம்ப கஷ்டமா இருக்கு

என்னாச்சு வயிறு வலிக்கிதா வண்டிய வேணா நிறுத்த சொல்லவா?” என்று பதட்டத்துடன் கேட்க 

அந்த வலி இல்ல சிலர் புரிஞ்சும் புரியாத மாதிரி தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்காங்களே அவங்க கொடுக்குற கஷ்டம் முடியல என்னவோ மாதிரி இருக்குஎன்று வைதேகி தோளில் சாய்ந்து கொண்டு விம்மலானாள்,வைதேகி விஜயனின் முகம் பார்க்க என்ன சொல்வதென்றே தெரியவில்லை இருவரும் ஒரே மாதிரியான வலியையும் வேதனையை அனுபவிக்கின்றனர் யாருக்கு யார் என்ன ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் விழிகள் பிதுங்க பாவமாக விஷ்ணுவை பார்க்க

அவள் பார்வையை உணர்ந்து அருகில் வந்தவன் வைதேகியை எழுந்து கொள்ள சொல்லி அருகில் அமர்ந்துஇப்போ எதுக்கு அழுகுற அழுகுறத முதல நிறுத்து நீ நினைக்கிற அளவுக்கு எதுவும் நடக்காது கவலைபடாத அவன் உன்ன கண்டிப்பா ஏத்துப்பான் கொஞ்சம் டைம் கொடு, அவனோட மனசுல என்ன இருக்குன்னு நமக்கு எப்டி தெரியும்? நல்லா யோசிகட்டும் அதுவரைக்கும் நீ அமைதியா இரு! அவன எதுக்கும் வற்புறுத்தாதமுதல நீ இப்டி எமோஸ்னல் ஆகாதா கண்ணை துடை அத்தை முழிச்சிற போறாங்கஎன்றவன் கைக்குட்டை கொண்டு கண்களை துடைத்துவிட

முடியல விஷ்ணு ஒவ்வொரு தடவையும் அவன் முன்னாடி போய் நிக்கும் போது அவமானபடுத்தி திட்டி அனுப்புறான் என்ன அவமானபடுத்துனா கூட பரவாயில்ல ஆனா என்னோட அன்பையும் அவமான படுத்துறான் நேத்து நைட்டு நீயே பாத்தில்ல எப்டி பேசுனான்னு என்னோட மனச காயப்படுத்துறதே அவனுக்கு வேலையா போச்சு அதுல அவனுக்கு பரம சந்தோஷம்என்று ஆவேசமாக கூற

அப்டியெல்லாம் இல்ல வைசு பாவம் அவன், அவனோட இழப்பு நமக்கு தெரியாது தெரியும் போது நம்ம பேசுனது எவ்ளோ தப்புன்னு அப்போ புரியும் அவசரப்பட்டு வார்த்தைய விட்டுறாத இப்போ எதுவும் பேச வேணாம் நா பாத்துக்கிறேன் நீ எத நினைச்சும் கவலைப்படாதஎன்று ஆறுதல் கூறியவன் வைதேகியிடம் திரும்பிநீ இவ பக்கத்துலயே உக்காரு சரியா?” என்று எழுந்து சென்று விஜியின் அருகில் அமர்ந்துகொள்ள 

அவர்களுக்கு முன் சீட்டில் வந்து அமர்ந்த துவாரகேஷ் இருவரையும் பார்த்த வண்ணம் திரும்பி அமர்ந்து கொண்டுஏண்டா இப்டி இருக்கஎன்றதும்

ப்ச் உடனே நீ ஆரம்பிக்காத அவனே வருத்ததுல இருக்கான் நீ வேற இன்னும் பேசி வேதனைய உண்டு பண்ணாதஎன்ற விஷ்ணு

சரி விடு அவ ஏதோ ஆதங்கத்துல உன்கிட்ட அப்டி பேசிட்டா அத பெருசா நினைச்சுக்காத எல்லாம் சரியா போகும்என்று அவனது மனதை ஆற்ற 

அவ காதல் எனக்கு புரியாம இல்லடா! அவளோட கஷ்டம் வேதனை எல்லாமே எனக்கு புரியிது! எனக்காக அவ வீட்டுல பாக்குற மாப்பிள்ளைய வேணாம் பிடிக்கலைன்னு சொல்லிட்டு இருக்கா அதெல்லாம் எனக்கு தெரியாம இல்ல! ஆனா.. அவள என்னால ஏத்துக்க முடியல ஏதோ ஒன்னு என்ன தடுக்குது அது ஏன் அவளுக்கு புரிய மாட்டிங்கிதுஎன்றான் விஜி வேதனை இழையோட 

துவாரகாவிற்கும் விஷ்ணுவிற்கும் அவன் மனநிலை வருத்தத்தை அளிக்கசரி விடு அவ புரிஞ்சுப்பா இப்போ தூங்கு ரொம்ப டைம் ஆச்சுஎன்று விஷ்ணு உரைக்க

வெற்றுபுன்னகை புரிந்தவன்நா தூங்கியே பல வருஷம் ஆச்சுடாஎன்று ஜன்னல் கம்பியில் தலை வைத்து கண்களை மூடி கொண்டான்  

அவன் நிலை இருவருக்கும் பச்சாதாபத்தை உண்டு பண்ண அவனுக்கு என்ன ஆறுதல் கூறுவது என தெரியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் சங்கடத்துன் பார்த்து கொண்டனர்

சரி நீ தூங்கு நா கொஞ்ச நேரம் டிரைவர் கிட்ட பேசிட்டு வறேன் முன்னாடி தனியா உக்காந்திருக்காருஎன்று விட்டு விஷ்ணு சென்று விட அப்போது தான் கவனித்தான் அவன் அறியாமல் அவன் மனதை கொள்ளை கொண்டவளை அமைதியாக அமர்ந்திருந்தவளின் அருகில் சென்று அமர்ந்தவன் 

என்ன சரவெடி அமைதியா வர்ற என்னாச்சு இன்னும் அம்மா ஞாபகம் போகலையா?” என்று கேலி பேச

ப்ச் என்னோட கவலை உங்களுக்கு கேலியா தெரியிதா போங்க சார், உங்களுக்கு என்ன தெரியும் அம்மாவ விட்டு ஒரு நாள் கூட பிரிஞ்சது இல்ல வற்புறுத்தி போய்ட்டு வான்னு சொன்னாங்களேன்னு தான் வந்தேன் அம்மாவுக்கும் என்ன அனுப்ப மனசே இல்ல ஆன்ட்டியும் நீங்களும் கேட்டீங்கன்னு தான் அனுப்பினாங்க இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்களோ தெரியல அதே நினைப்பாவே இருக்குஎன்று கவலை தேய்ந்த குரலில் கூற

கைகடிகாரத்தின் கண்ணாடியை தேய்த்து கொண்டு மணியை பார்த்தவன்இப்போ மணி பதினொன்னு முப்பது தூங்கிருப்பாங்க, எப்டியும் அவங்கள விட்டு ஒரு நாள் பிரிஞ்சு தானே ஆகணும்!” என்றதும் புரியாத பார்வையில் அவனை நோக்க

மீன் கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு போகும் போது பிரிஞ்சு தானே ஆகணும் அத சொன்னேன்” 

அப்டி நடக்காது பாத்தா வீட்டோட இருக்குற மாப்பிளையா பாக்க சொல்லுவேன் இல்லையா கல்யாணமே வேணாம்னு சொல்லிருவேன்! எனக்கு அம்மா தான் பர்ஸ்ட் அப்றம் தான் மத்த எல்லாருமேஎன்று அழுத்தமாக கூற

நானுமா?” என்ற அவனது வாக்கியத்தில் சற்று திகைத்தவள் முகத்தை சமன் செய்து கொண்டுஎல்லாரும் தான்என்று சமாளிக்க 

சரி சரி எதையும் போட்டு குழப்பிக்காம தூங்கு காலையில பேசிக்கலாம் நா முன்னாடி போறேன்என்று எழுந்தவனின் கைப்பற்றிகொஞ்ச நேரம் என் பக்கத்துலயே உக்காருங்களேன் ப்ளீஸ் ஏதாவது பேசலாம்!” என்று கெஞ்சல் குரலில் முகம் சுருக்கி கேட்க

துவாரகா பார்வையை சுருக்கி ஒரு மார்க்கமாக பார்த்ததும் கொக்கு போல தலையை தாழ்த்தி கொண்டாள் அவள் செயல் அவனுக்குள் சிரிப்பை வரவழைக்க குறுநகை புரிந்தவன் மறுத்து பேசாது அருகில் அமர்ந்து கொள்ள, முன்னே அமர்ந்து இருவரையும் கண்ட விஷ்ணுவின் இதழில் புன்னகை அரும்பியது சற்று நேரத்தில் டிரைவரை தவிர மற்ற அனைவரும் உறங்கி விட வாகனம் மட்டும் மதுரையை நோக்கிய பயணத்தில் செயல்பாட்டில் இருந்தது 

தொடரும்….

விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும் புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்!

அனல் மேலே வாழ்கிறாய் நதி போலே பாய்கிறாய் ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே!

இதைக் காதல் என்று சொல்வதா? நிழல் காய்ந்து கொள்வதா? தினம் கொல்லும் இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்!!”

Advertisement