Advertisement

ப்ச் இப்போ என்னாகிருச்சு? நாம நினைக்கிறது எல்லாம் நடந்துருச்சுன்னா அப்ப கடவுள்னு ஒருத்தன் இருக்கான் எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா என்ன? விடு, அதான் மாப்பிள்ளை பாத்தாச்சில்ல பின்ன என்ன நல்ல இடம் நல்ல பையன் குடும்பமும் நல்ல குடும்பம் ராணி மாதிரி வாழ போறா பின்ன என்னத்துக்கு அழுதுட்டு இருக்குறஎன்று அடக்கியவர்

அவகிட்ட சொல்லிட்டயா கடைசி நேரத்துல தாம் தூம்னு குதிக்க போறா

இன்னும் சொல்லல மதினி பயமா இருக்கு என்ன மாதிரி எடுத்துப்பாளோன்னு ஏதாவது ஏடாகூடமா பண்ணிக்கிட்டான்னா அப்றம் நாங்க ரெண்டுபேரும் இருந்து என்னத்துக்கு? அதான் அண்ணே கிட்ட சொல்லி விஷ்ணுவ விட்டு பேச சொல்லிருக்கேன்என்று சேலை தலைப்பால் கண்ணீரை துடைத்து கொள்ள

அடி கூறு கேட்டவளே என்ன பண்ணி வச்சுருக்க அவன விட்டு ஏன் பேச சொன்ன? ஏதாவது ஏடாகூடமா பேசி வச்சிற போறான் நீயே அவகிட்ட பதமா எடுத்து சொல்லிருக்க வேண்டியது தானேஎன்று அன்னம் கோபத்தில் பொறிய

இல்ல அண்ணி விஷ்ணு தான் சரி, அவன் எப்டியாவது பேசி ஒத்துக்க வச்சிருவான்என்ற சாவித்ரி 

இன்னும் கொஞ்ச நாள் வெய்ட் பண்ணிருக்கலாம் ஒருவேளை விஷ்ணு மனசு மாறி வைதேகிய கல்யாணம் பண்ணிகிட்டான்னா நாமா அவசரப்படுறோமோன்னு தோணுதுஎன்றவர்அது தான் வருத்தமா இருக்கு நம்ம பையனுக்கு இல்லாம போச்சேன்னு நம்ம வீட்டு மகாலட்சுமிய வேற வீட்டுக்கு அனுப்பி வைக்க எனக்கு மனசு ஒப்பலஎன்று வருத்தம் கொள்ள

அட நீ வேற ஏண்டி நானே அவள பேசி ஒரு நிலைக்கு கொண்டு வந்துருக்கேன் நீ மறுபடியும் ஆரம்பிச்சு உச்சானி கொம்புக்கு ஏத்துறஎன்று மூவரும் தீவிரமாக தங்களின் செல்வ மக்களை பற்றி பேசி கொண்டிருக்க 

என்னம்மா என்ன விஷயம்? ஏதோ ரகசிய மாநாடு நடக்குதுஎன்று கூட்டத்தில் ஐக்கியமானான் விஷ்ணு

எல்லாம் வைதேகிய பத்தி தான் பேசிட்டு இருக்கோம் எப்டியாவது அவகிட்ட பேசி சம்மதிக்க வச்சுருடாஎன்று அன்னம் இறைஞ்சுதலாய் கேட்க

ப்ச் அப்பா சொல்லிட்டாரும்மா நா என்ன பேசனுமோ பேசி சம்மதிக்க வைக்கிறேன் அது என்னோட பொறுப்பு அத்தைய கவலைப்படாம இருக்க சொல்லுங்கஎன்று சிறு புன்னகை உதிர்த்து நம்பிக்கையுடன் கூறிவிட்டு எழுந்து செல்ல 

கவலையை அப்பி கொண்டது இந்திராணியின் மனம் நிராசையுடன் செல்பவனை பார்த்து கொண்டிருந்தவர் நடப்புணர்ந்து 

அடுத்து வேலை இருபதாக கூறிவிட்டு எழுந்து கொள்ள கூட்டத்தை கலைத்து பெண்கள் மூவரும் சமையலை கவனிக்க தொடங்கினர்  

திருக்கல்யாணம் முடிந்து சித்திரா பவுர்ணமியான நாளில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தொடங்கியது வைகை நதியே மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்க, கள்ளழகர் கம்பிரமாக குதிரையின் மேல் அமர்ந்து வந்து கொண்டிருந்தார் மேளா தாளங்கள் ஒரு புறமும் ஒலிபெருக்கியில் பக்தி பாடல்கள் ஒரு புறமும் என்று வைகையே கலைகட்டியது, ஆங்காங்கே தாகத்தை தணித்து கொள்ள ஏதுவாக தண்ணீர் பந்தல் மோர் பந்தல் அமைக்கபட்டிருந்தினர் பாதுகாப்புக்கென போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு அவ்வப்போது கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கைளை சரி செய்து கொண்டிருந்தனர் 

ஆற்றில் இறங்கியதும் மக்களின் உற்சாக ஒலியில் மதுரை நகரமே திக்குமுக்காடியது வைபவத்தை பார்த்து கொண்டிருந்த வைதேகியும் வைஷாலியும் கூட்டத்தை விட்டு சற்று தள்ளி நின்று கொண்டிருந்தனர் விஜயன் பெயருக்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் அவளின் அருகாமை அவனை விட்டு அகலாதிருக்க வரவில்லை என்றவனை வம்படியாய் பிடித்து இழுத்து வந்திருந்தனர் தோழர்கள் இருவரும்

துவாரகாவும் விஷ்ணுவும் விசில் அடித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்த உடன் சஞ்சளாவும் இணைந்து கொண்டாள் நாவை உள்பக்கம் மடக்கி ஆள்காட்டி விரலையும் கட்டைவிரலையும் இணைத்து நாவின் அடிப்பகுதியில் வைத்து ஊத சத்தம் துவராகாவின் காதை கிழித்தது 

சரவெடி காதுக்கு பக்கத்துல வந்து விசில் அடிக்கிறஎன்றவன்உனக்கு விசில் அடிக்க தெரியுமா?”என்று வியப்பாய் கேட்க 

ம் நல்லாவே தெரியும் காலேஜ் பங்சன்ல என்னோட பிரெண்ட்ஸ் எல்லாரும் என்ன தான் விசில் அடிக்க சொல்லுவாங்க யாருக்கும் தெரியாம அடிச்சிட்டு கமுக்கமா இருந்துக்கவேன் விசில் மட்டுமில்ல ஆளையும் அடிப்பேன்என்று இல்லாத காலரை தூக்கி விட்டபடி கெத்தாக கூற

ஆவென்று வாய் பிளந்தவன் அமைதியாக திரும்பி கொண்டான் அவன் பாவனை அவளுக்கு சிரிப்பை வரவைக்க கிளுக்கி சிரித்தவள் மேம்பாலத்தில் இருந்து நடக்கும் நிகழ்வில் கவனத்தை செலுத்தினாள் அனைவரும் கண்குளிர வைபவத்தை கண்டு விட்டு இல்லம் திருப்பினர் 

மாலைவரை அனைத்தும் சுமுகமாவே சென்றது வைதேகியிடம் விஷயத்தை எப்படி கூறுவது என்று சிந்தனையில் உழன்றவன்  அவளிடம் கூற போகும் விஷயத்தை தனக்கு தானே ஒருமுறைக்கு பலமுறை ஒத்திகை பார்த்து கொண்டான்

இரவு உணவை முடித்து கொண்டு பெரியவர்கள் மறுநாள் மாலை நடக்க போகும் நிச்சயத்திற்கான ஏற்பாடுகளை பற்றி இருவீட்டாரும் அமர்ந்து பேசி கொண்டிருக்க 

இளம் வயதினர் மாடிக்கு சென்று அன்று நடந்த நிகழ்வை பற்றி சிலாகித்து சிலிர்த்தபடி கதைத்து கொண்டிருத்தனர் 

இது தான் சமயம் என்று எண்ணியவன்தேவிம்மா உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்என்று தயக்கத்துடன் கூற

சரி நீங்க பேசிட்டு இருங்க நா வந்துடுறேன்என்று கூறிவிட்டு இருவரும் சற்று தள்ளி சென்றனர்  

துவாரகா பதட்டதுடன் பார்த்து கொண்டிருந்தான் இருவரின் உரையாடலைஎன்ன நடக்கப்போகுதோ விஷயத்தை சொன்னதும் அடிச்சாலும் அடிப்பா யாருக்கு தெரியும்?” என்று மனதில் எண்ணியவன் அடுத்து நடப்பதை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்க மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாய் பளார் என்று  அறையும் சத்தம் கேட்டு அனைவரும் திகைத்து பார்த்தனர் 

அவ்ளோ தான் நினைச்ச மாதிரியே நடந்துகிட்டா என்ன.. அடி! போலீஸ்காரனுக்கே இந்த அடின்னா எவனாவது சீண்டுனா டெத் கன்பார்ம்என்று கன்னத்தில் கைவைத்து நடக்கும் உரையாடலில் செவிமடுக்க

நா சொல்றத புரிஞ்சுக்கோ தேவிம்மா எல்லா உன்னோட நல்லதுக்கு தான்

என்ன நல்லதுக்கு எது நல்லது? என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க விணு என்ன பாத்தா கேன சிறுக்கி மாதிரி தெரியிதா? எது சொன்னாலும் கேட்டுப்பா கொஞ்சம் விளையாடி பாக்கலாம்னு நினைச்சுட்டு இருக்கீங்களாஎன்று ஆவேசமாக கேட்டவள் 

அன்னைக்கு லவ் பண்றேன்னு சொன்னீங்க இன்னைக்கு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க உங்களுக்கு அவ்ளோ ஈஸியா போச்சுல்ல என்னோட வாழ்க்கை!,கையில கிடைச்ச பந்து மாதிரி ஆளாலுக்கு தூக்கி போட்டு விளையாடிட்டு இருக்கீங்க எனக்கும் மனசு இருக்கு உணர்வு இருக்கு அத ஏன் புரிஞ்சிக்க மாட்டிங்கிறீங்க விணு உங்கள நா புரிஞ்சுகனும் என்ன நீங்க புரிஞ்சுக்க மாட்டீங்க அப்டி தானேஎன்று மூச்சு வாங்க பேசியவளின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல பெருக்கெடுத்தது

நா ஏன் சொல்றேன்னு புரிஞ்சுக்கோ இப்பவும் உன்ன விரும்புறேன் ஆனா.. எனக்கு வேற வழி தெரியல நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சு தான் ஆகணும் இல்ல நா உங்க எல்லாரையும் விட்டு கண்காணாத தூரத்துக்கு போக வேண்டியது வரும் ஜென்மத்துக்கு திரும்பி வர மாட்டேன்என்று அறுதியிட்டு கூறி மிரட்டினான்

என்ன மிரட்டி பணிய வைக்க பாக்குறிங்களா? எப்டி மாமா இப்டி பேச உங்களுக்கு வாய் வருது விரும்புறது உங்கள  ஆனா கல்யாணம் மட்டும் வேற ஒருத்தன் கூட! நினைக்கவே அருவருப்பா இல்ல? என்னால அப்டி ஒரு வாழ்க்கைய நினைச்சு பாக்கவே முடியலை” 

அன்னைக்கு காதலிக்கிறேன்னு சொன்னீங்களே அந்த ஒரு வார்த்தையிலேயே ஜென்மத்துக்கு உங்கள நினைச்சுக்கிட்டே வாழ்ந்திரலாம்னு நினைச்சேன் புத்திகெட்ட மனசு ஒருபடி மேல போய் உங்க மனசு மாறும் உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கும் கடைசி வரைக்கும் உங்க கூட வாழணும்னு எப்டியெல்லாம் கற்பனை பண்ணேன் தெரியுமா? அதெல்லாம் கற்பனையா போகணும்னு நினைக்கிறீங்களா மாமா” 

தயவுசெய்து நிச்சயம் வேணாம் நீங்க என்ன கல்யாணம் பண்ணலன்னாலும் பரவாயில்ல ஆனா இன்னொருத்தன கல்யாணம் பண்ண சொல்லி கட்டாயபடுத்தாதிங்கஎன்று முகத்தை மூடி தேம்பி அழுதாள்

அவளின் கண்ணீர் அவனுக்குள் ரணத்தை அளிக்க தன் இயலாமையை எண்ணி கைமுஷ்ட்டிகள் இறுக வலியை உள்ளங்கையில் அடக்கியவன்இல்ல தேவிம்மா என்னால உன்ன இப்டி பாக்க முடியாது தயவு செஞ்சு என்ன குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்காத அப்றம் அதுவே எனக்கு எமனா வந்துரும் நாளைக்கு உனக்கு நிச்சயம்! நீ ரெடியா இருக்க அவ்ளோ தான் இல்லன்னா நா கிளம்பி எங்கயாவது போக வேண்டியிருக்கும் பாத்துக்கோஎன்று இரக்கம் இன்றி கூறியவனை வெறித்து பார்த்தவள்

நா கேக்குற கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க விணு உங்களால செய்ய முடியும்னா நா இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றேன்என்று உணர்ச்சிகள் ஏதுமின்றி உரைத்தவள்என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கணும் செய்வீங்களா?” என்று கேட்க

திகைத்து பார்த்தவன்இல்ல முடியாது உன்னனு இல்ல என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது தேவிம்மா, அடம்பிடிக்காத எனக்காக உன்னோட வாழ்க்கைய வீணாக்காத இந்த குடும்பத்தோட ஒற்றுமையே உன்னோட கையில தான் இருக்கு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ தேவிம்மா என்ன கெஞ்ச வைக்காதடிஎன்று வேதனையுடன் கூற

உங்களால முடியாதுன்னா என்னாலயும் முடியாது மாமாஎன்று மறுத்து பேசி வாதம் புரிய

இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதம் சொல்ற அவ்ளோ தான் உனக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ நீ வர்ற பையன கல்யாணம் பண்ணி தான் ஆகணும் இல்லன்னா நா வேற மாதிரி முடிவெடுக்க வேண்டியது வரும்என்று பொறுமையிழந்து எச்சரிக்கை போல கூற

உங்களுக்கு மட்டும் தான் முடிவெடுக்க தெரியுமா எனக்கும் எடுக்க தெரியும் மாமா உங்களவிட எதுலயும் சலைச்சவ கிடையாது இந்த வைதேகிஎன்று காரசாரமாக பேசிவளின் கன்னம் காய்ந்தது 

கண்களில் நீர் வடிய கன்னத்தில் கைவைத்து எதிரில் இருந்தவனை பார்க்க விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்மானாய் கண்களில் தணல் ஜொலிக்க முகத்தில் கடுமையை பூசி கொண்டு தேகம் விரைக்க நின்று கொண்டிருந்தான் விஷ்ணு 

அங்கிருந்தவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை கை ஓங்குவான் என்றுநானும் பொறுமையா கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி எடுத்து சொல்லி புரியவச்சுட்டு இருக்கேன் உன்னோட இஷ்டத்துக்கு பேசிட்டே போறா, என்னடி முடிவெடுப்பா ஹான் சொல்லு என்ன முடிவெடுப்ப? அத்தை மகன்னு கூட பாக்க மாட்டேன் அடிச்சு பல்லை கழட்டிருவேன் ராஸ்கல் நீ இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ற அவ்ளோ தான்! இதுல உன்னோட விருப்பம் தேவையே இல்ல நாளைக்கு கிளம்பி ரெடியா இருக்கஎன்று குரலில் கடுமையை காட்டி கூறிவிட்டு கீழே இறங்கி செல்ல படி வரை சென்றவனின் கால்கள் தயக்கத்தை ஏற்று கொள்ளவும் திரும்பி பார்த்தவன் சட்டென முகத்தை திருப்பி கொண்டு விறுவிறுவென படிகளில் இறங்கி சென்று விட்டான்

கனவா நனவா என்பதை கூட உணராது பேதையவள் கன்னத்தில் கைவைத்து அவன் சென்ற திசையை பார்த்து கொண்டிருந்தாள் இதுவரை கடுமையாக அதுவும் அடிக்கும் அளவிற்கு அவன் நடந்து கொண்டதில்லை பூவை போல மென்மையாக தன்னிடம் நடந்து கொண்டவன் இன்று.. நினைத்து நினைத்து பார்க்க நெஞ்சு விம்மியது 

இதய கூடு காலியானதை போல உணர்ந்தவள் யாரிடமும் ஆறுதல் தேட மனமில்லாமல் வேகமாக படிகளில் இறங்கி அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள் சத்தமின்றி அழுதவளுக்கு கண்ணீர் மட்டுமே துணையாய் இருக்க திசையறியா காட்டிலே விட்டது போல பெண்ணவள் செய்யும் வழி அறியாது தவிப்பில் ஆழ்ந்தாள் 

தொடரும்

உன்னோடு வாழ

இல்லை ஒரு யோகம்.

நான் செய்த பாவம்

யாரை சொல்வது.

காதல் ரோஜாவே

நலமாய் நீ வாழ்க

நீ சூடும் பூமாலை

வான்போல் வாழ்கவே.

Advertisement