Advertisement

மதுரை மேலூர் அருகே சிறு கிராமம் வயல் வரப்பிற்கு செல்வோர் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து கிளம்பி கொண்டிருக்க பால்காரன் ராசு சைக்கிள் மணியை அடித்து கொண்டே பக்கத்து வீட்டின் முன் நிறுத்தினான்ஏலே ராசு இங்க கறந்துட்டு போறது நீ வருவேன்னு திண்ணையிலேயே ஒரு மனுஷன் ஒக்காந்துட்டு இருக்கேன் ஓம்பாட்டுக்க பாத்தும் பாக்காத மாதிரி போற!” என்று பேச்சிலுக்க

என்ன ண்ணே உங்களுக்கு தெரியாதா இப்டி பேசுறிகளே? பாத்தும் பாக்காத மாதிரி போற ஆளா நானு! இங்க கறக்காம உங்க விட்டுல வந்து கறந்தேன்னா இந்தவீட்டு அம்மா ஆஞ்சு புடாது செத்த பொறுங்க முடிச்சிட்டு வாறேன்என்று பதிலுறைத்து விட்டுதினமும் இவகளுக்கு இதே சோழியா போச்சு பால்கறக்க வருவேன்னு தெரியாது வெள்ளென எந்திருக்க வேண்டியது தானே நேத்து தான் சொல்லிட்டு போனே வாறதுக்கு முன்னாடி எந்திரிங்கன்னுஎன்று புலம்பி கொண்டே பஞ்சாயத்து தலைவரின் வீட்டு கதவை தட்டி கொண்டிருந்தான் ராசு

அல்லிராணி ஊர் பஞ்சாயத்து தலைவரின் மனைவி என்ற பெருமையும் இறுமாப்பு அதிகம் பால் கறப்பதிலிருந்து காய்கறி விற்பவர் வரை முதலில் அவர் வீட்டில் போணி செய்த பின்னே அடுத்த வீட்டிற்கும் தெருவிற்கும் செல்ல வேண்டும் பெயருக்கு ஏற்றார் போல அல்லிராஜ்ஜியம் தான் நடக்கும் அவர் வீட்டில், கணவன் உட்கொண்டு பிள்ளைகள் வரை அவரின் குரலுக்கு அடங்கி போவார்கள், ஊருக்கு தான் ராமசாமி பஞ்சாயத்து தலைவரே ஒழிய வீட்டில் மனைவியின் ஆட்சி தான் யாரும் அவ்வளவாக பேச்சு வைத்து கொள்வதில்லை 

நடப்பதை வெளி திண்ணையில் அமர்ந்திருந்தவாறு பார்த்து கொண்டிருந்த பரமசிவம்ஏத்தா அன்னம் சீக்கிரம் கொண்டுவா நேரம் ஆகுதா இல்லையா வெரசா சந்தைக்கு போய்ட்டு வயலுக்கு போவணும் இன்னைக்கு நடவுக்கு ஆளுக வராக பருத்திக்கு வேற தண்ணி எடுத்து விடணும்என்று குரல் கொடுக்க 

செத்த நேரம் பொறுத்தாதா என்னவாம் கால்ல சக்கரத்தை கட்டிக்கிட்டு சுத்துறீகஎன்றவாறே நீராகாரத்தை கொடுத்தவர்பையன் வாறான் அவன பாத்துட்டு போலாம்ல சீக்கிரம் போய் என்ன பண்ண போறீக! அதான் சந்தைக்கு முத்து போறான்ல அவன்கிட்ட கொண்டுபோய் சந்தையில போட்டுட்டு வர சொன்னா போட போறான் மெனக்கெட்டு நீங்க போகனுமாக்கும்என்று நொடித்து கொள்ள

மகன் வந்தா நீ தாங்குத்தா போதும்! என்ன இருக்க சொல்லாத பாக்கவே கூடாதுண்டு இருக்கேன் இதுல துறை வர்ற வரைக்கும் காத்திருந்து பாத்துட்டு போகணுமாக்கும், என்னோட வேலைய நானே பாத்துக்கிறேன் மூத்தவன் எந்திருச்சா வயலுக்கு வந்துட்டு போக சொல்லு அவன் பாட்டுக்கு கிளம்பி வேலைக்கு போயிற போறான்என்றவர் 

சீக்கிரம் வாச தெளிச்சு கோலம் போடுத்தா நா போன பிறகு இந்த வேலையெல்லாம் செஞ்சுட்டு இருக்க கூடாது பால்கறக்க ராசு வருவான் நா தொழுவத்தை பெருக்கிட்டு வாறேன் அப்டியே முத்து வந்தா நிக்க சொல்லுஎன்று சொல்லி கொண்டிருக்கும் போது வாசலை விட்டு சற்று தள்ளி வந்து நின்றது வேன்  

முதலில் இறங்கியவரை கண்டதும் அன்னத்தின் முகம் புன்னகையை பூசி கொள்ளசாவித்ரிம்மா எப்டித்தா இருக்க பாத்து எம்புட்டு மாசம் ஆச்சுஎன்று நாத்தனாரை தழுவி கொள்ள 

பின்னோடு இறங்கிய ஜெகநாதனை கண்ட பரமசிவம்வாங்க மாப்பிளை எப்டி இருக்கீகஎன்று நலம் விசரித்தவரின் கண்கள் ஜெகநாதனின் பின்னால் அலைப்பாய்ந்தது சஞ்சளா வைஷாலி அதன் பின் துவாரகா விஜயன் என்று ஒவ்வொருவராய் தன் உடைமைகளை எடுத்து கொண்டு இறங்க அவர்களின் பின்னால் கடைசி ஆளாய் இறங்கினாள் வைதேகி, இறங்கிய மாத்திரத்தில்மாமாஎன்று ஓடி வந்து கட்டி கொள்ள 

பரமசிவம் பரிவாக தலையை தடவி கொண்டேஎப்டி தாயி இருக்கஎன்று கேட்டவரின் குரல் தழுதழுத்தது

நா நல்லா இருக்கேன் நீங்க எப்டி இருக்கீங்க மாமா?, அம்மா எல்லாம் சொன்னாங்க நீங்க வீட்டுக்கே போறதில்லையாமே ரொம்ப வருத்தபட்டாங்கஎன்று குறையுடன் கூற

நா என்னம்மா பண்றது நீயே சொல்லு? எந்த முகத்தை வச்சுக்கிட்டு அங்கன போவேன் அவள பாக்கும் போது எனக்கும் என்ன பாக்கும் போது அவளுக்கும் வெசனமா இருக்கும் அதான் போகல நீ வாரேன்னு நேத்து மாப்பிள்ளை சொன்னாருஎன்றவர்சரி சரி மாமாவுக்கு கொள்ள சோழி கிடக்கு நீ பிள்ளைங்க எல்லாரையும் கூட்டிட்டு உள்ள போ சாவகாசமா பேசிக்கலாம்என்று கூற 

இல்ல மாமா வீட்டுக்கு போய்ட்டு வர்றேன் இங்க வந்துட்டு அங்க போனா அம்மா மனசு கஷ்டப்படும்என்று சங்கடத்துடன் கூற

மருமவளே அம்மா இன்னும் எந்திருச்சுருக்க மாட்டா காபி தண்ணி குடிச்சிட்டு அஞ்சு மணி வாக்குல போஎன்று கூறவும் மேற்கொண்டு மறுத்து பேசாமல்சரிங்க அத்தைஎன்றவள் உடன் வந்திருந்தவர்களை அழைத்து கொண்டு உள்ளே சென்றாள் 

நீங்க உள்ள போங்க மாப்பிள்ளை எனக்கு கொஞ்ச வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துடுறேன்என்றவர் சாவித்திரியிடம் பேசி கொண்டிருந்த மனைவியை அழைத்துஇந்தா அன்னம் உள்ளக்க கூட்டிட்டு போ வாசல்லயே வச்சு பேசிக்கிட்டுஎன்றதும்

சாவித்ரியை உள்ளே அனுப்பி வைத்தவர் வர வேண்டியவன் வரவில்லையே என்று எதிர்பார்ப்பை தேக்கி பார்த்து கொண்டிருந்தார்அங்க என்னத்த பாக்குறவ போ போய் வந்தவங்களுக்கு காபி தண்ணி குடு” 

நா யார பாக்குறேன்னு தெரியாதாக்கும்என்று அலட்சியமாய் கூற

நீ எதிர் பாக்குற ஆளு உள்ளக்க தான் இருக்கான் நா இருக்கேனாம் அதான் ராசா இறங்காம இருக்காரு நீ உள்ள போய் வந்தவங்கள கவனி அவன் பின்னாடி வருவான் நா கிளம்புறேன்என்று சற்று உரத்த குரலில் உள்ளே இருப்பவனுக்கு கேட்கும் விதமாய் கூறினார் என்ன தான் காவல் அதிகாரியாக கம்பிரமான தோரணையில் வலம் வந்தாலும் பரமசிவத்தை காணும் போது தவறிழைத்த குற்றவாளியாய் கூனி குறுகி போவான் 

தந்தை சென்று விட்டார் என்று எண்ணி மெதுவாக தலையை மட்டும் நீட்டி எட்டி பார்த்தான் விஷ்ணுசொல்லல துறை உள்ள தான் இருக்கான்னுஎன்று ஏளனமாக மொழிந்தவர்வெரசா போய் வேலைய பாருஎன்று கூறிவிட்டு செல்ல முற்பட

ஏங்க பிள்ளைக்கிட்ட நல்லா இருக்கையான்னு ஒத்த வார்த்தை கேட்டா தான் என்னவாம்என்றதும் முறைத்து பார்த்தவர் எதுவும் கூறாமல் சென்று விட 

ஆமா இந்த வெட்டி வீராப்புக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல இம்புட்டு நாள் புலம்பிட்டு இருந்துட்டு இப்போ கவுரவம் பாக்குறாறுஎன்று  முணுமுணுத்தவர் 

டேய்.. விஷ்ணு எப்டிடா இருக்கஎன்றவருக்கு கண்களில் ஈரம் கோர்த்ததுஅப்பா கோவமா ஒத்த வார்த்த சொன்னா நீயும் போயிடுறதா? என்ன பத்தி கொஞ்சம் கூட யோசனை பண்ணலயேடா நா இருக்கேனா செத்தேனான்னு கூட கேக்கலையே? அப்டியென்ன எம்மேல உனக்கு கோபம் எம்புட்டு நாள் ஆகுது! அப்பனுக்கும் புள்ளைக்கும் நடுவுல நான்லே கிடந்து தவிச்சுக்கிட்டு கிடந்தேன் அந்த மனுஷன் என்னடான்னா சட்டுன்னு வீட்ட விட்டு போன்னு சொல்லிட்டாரு அவரு சொன்னா நீயும் போயிருவியா?” என்று சரமாரியாக கேள்விகளை கேட்டு மனதில் வைத்திருந்த பாரத்தை கொட்ட 

ப்ச் ம்மா இப்போ என்னாச்சுன்னு அழுகுறீங்க நான் தான் வந்திட்டேன்ல அப்றம் என்னம்மா அழுகுறத நிறுத்துங்கஎன்று அதட்டி கூறியதும் சேலை தலைப்பால் கண்களை துடைத்து கொண்டவர் 

சரி வா உள்ளக்க போலாம் நீங்க வருவீங்கன்னு தெரியும் ஆனா இம்புட்டு சீக்கிரம் வருவீங்கன்னு தெரியாதுடாஎன்றவர் மகனின் தயக்கத்தை கண்டுஎன்னடா என்னாச்சு நிக்கிற வா”  

இல்லம்மா அப்பா…” என்று மைந்தன் இழுக்க

அவரு கிடக்குறாரு மனுஷன் வந்த பிள்ளைய ஒத்த வார்த்தை வான்னு கூப்பிடமா போயிட்டாரு பிள்ளைக்கிட்ட என்ன ரோஷம் வேண்டி கிடக்கு நீ வா அவுக ஒன்னும் சொல்ல மாட்டாகா” 

அவருக்கு என்மேல இருக்குற கோபம் இன்னும் குறையலையோ?” 

கோபமெல்லாம் இல்ல கண்ணா வெசனபடுறாரு இப்டி பண்ணிட்டயேன்னு தங்கச்சி முகத்தை பாக்க முடியாம சங்கடப்படுறாரு அதான் இப்டி முகத்தை திருப்பிக்கிட்டு போறாரு, நீ எதுவும் நினைச்சுக்காத நீ போனதுல இருந்து மனுஷன் நல்லாவே இல்ல ஒங்கிட்ட கோபப்பட்டோமேன்னு எங்கிட்ட சொல்லி புலம்புவாரு நேத்து கூட உன்ன பத்திதான் பேசிட்டு இருந்தாரு, உனக்கு என்ன பிடிக்கும்ன்னு பாத்து பாத்து செய்ய சொல்லிருக்காரு எல்லாம் வெட்டி வீராப்பு அவ்ளோ தான், அப்டி பேசிட்டு உன்கிட்ட சகஜமா எப்டி பேசுறதுன்னு கொஞ்சம் சங்கோஜபடுறாரு வேற ஒன்னுமில்ல நீ உள்ளக்க போ அம்மா வந்துடுறேன்என்றதும் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான் விஷ்ணு  

தொழுவம் சென்று சாணம் எடுத்து வந்து கரைத்தவர் வாசல் தெளித்து கோலமிட பால்காரன் ராசு சைக்கிள் மணியை தொடர்ந்து அழுத்தினான் 

இந்தா.. எதுக்கு இப்போ பெல் அடிக்கிற காது நல்லா தான் கேக்குது அவுக தொழுவத்துலா தான் இருக்காகஎன்று வேகமாக கூறிவிட்டு உள்ளே சென்று விட பால்கறக்கும் சட்டியும் விளக்கெண்ணை பாட்டிலுமாக பின்பக்கம் சென்றான் ராசு

பழைய காலத்து மச்சி வீடு சமையலறை பூஜை அறை போக விசாலமான நான்கு அறைகள் இருந்தன விருந்தினர் வந்தால் தங்கி கொள்வார்களே தவிர மற்ற நேரங்களில் அறைபக்கம் யாரும் எட்டி கூட பார்ப்பதில்லை அவ்வப்போது அன்னம் தான் சென்று ஒட்டடை அடித்து பெருக்கி சுத்தம் செய்து வைப்பார் சென்னையில் இருந்து வர போகும் கூட்டத்தை பற்றிய விஷயத்தை முன்னமே தெரிவித்து விட அறையை துடைத்து அங்குள்ள பொருள்களை தூசி தட்டி வைத்திருந்தனர் மாமியாரும் மருமகளும்

பெண்கள் மூவரும் ஓர் அறையில் அடைந்து கொள்ள ஆண்கள் விஷ்ணுவின் அறையில் முடங்கினர் சாவித்ரி ஜெகநாதனுக்கு என்றுமே தனியறை தான், சாவித்ரி வீட்டின் கடைக்குட்டி என்ற காரணம் ஒருபக்கம் இருந்தாலும் ஜெகநாதன் மாப்பிள்ளை என்பதனால்  அதற்கான மாரியதையை  எள்ளளவும் குறைவில்லாமல் கொடுப்பார் பரமசிவம்

அதுமட்டுமல்லாது ஜெகநாதனின் நடவடிக்கை பொறுமையான பெருந்தன்மையான குணமே பெரிதும் காரணமாகி போனது! குழந்தை பிறக்காது என்று தெரிந்தும் இதுவரை யாரிடமும் விட்டு கொடுத்ததில்லை மனைவியை! எள்ளளவும் குறையாத அதே அன்புடன் தன் தங்கையை நடத்தி வருகிறார் என்ற எண்ணமே பெரும் மதிப்பை உண்டு பண்ணியது அவர் மீது 

அன்னம் குளித்து முடித்து அடுக்களை சென்று டீ போட்டு கொண்டிருக்கஎன்ன மதினி டீ போடுறீகளா!” என்றவாறே உள்ளே நுழைந்தார் சாவித்ரி 

ஆமா த்தா நீ செத்த நேரம் தல சாய்க்க வேண்டிய தானே? பாரு கண்ணெலாம் சிவப்பேறி போயிருக்கு” 

இல்ல மதினி தூக்கம் வரல முதல குளிக்கணும்” 

இரு நல்லெண்ண எடுத்தாரே எண்ண தேய்ச்சு குளி சூடு குறையும் தண்ணியும் பின்னாடி வெளாவி வச்சுருக்கேன் குளிச்சிட்டு போய் விளக்கேத்துஎன்று கூற 

சரிங்க மதினிஎன்றவருக்கு எண்ணையும் அரப்பும் எடுத்து கொடுத்து விட்டு அடுத்த பணியாக டம்ளரில் டீயை ஊற்றினார், பயண களைப்பில் உறங்க நினைத்தாலும் உறக்கம் கொள்ளவில்லை யாருக்கும் கட்டிலில் அக்கடா என்று படுத்த துவாரகேஷ்  “டேய் விஷ்ணு புவி அண்ணா எங்க ஆளையே காணோம் இங்க தானே படுப்பாரு ஒருவேளை நாம வர்றது தெரியாதோ?” என்று யோசனையாய் கேட்க

அவனுக்கு தெரியும் நாம வர்றது அந்த எரும எங்க படுத்துருக்கும்னும் எனக்கு தெரியும்என்றவன் விஜயனை பார்க்க வாடிய முகத்துடன் காணப்பட்டான்

Advertisement