Advertisement

நெடுஞ்சாலையில் சுங்கசாவடியை கடக்க வேண்டி வாகனங்கள் வரிசை கட்டி நிற்க சற்று நேரம் அவர்களின் வாகனம் நிறுத்தப்பட்டது திடீரென நினைவு வந்தவனாகடேய் வீட்டு சாவிய கொண்டு வந்துட்டோம் சபரி என்ன பண்ணுவான்என்று விஷ்ணு பதட்டத்துடன் கேட்க

சபரி நீங்க வர்றதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கிளம்பி போனான் நாளைக்கு போலாம்னு சொன்னான் நாம ஊருக்கு கிளம்புறதா சொல்லவும் இன்னைக்கே கிளம்பிட்டான்என்ற விஜி சபரி கூறியதை கூற 

அப்டின்னா சரி நல்ல முடிவு தான் எடுத்துருக்காறுஎன்றவன்செம்ம டிராபிக் போல எவ்ளோ தூரத்துக்கு வண்டி நிக்கிது இது எப்போ கிளியர் ஆகி நாம எப்போ கிளம்புறதுஎன்று அலுத்து கொண்டவன் விஜயனின் முகம் பார்க்க வாடி கூம்பி இருந்தது அடுத்தடுத்த ஒவ்வொருவரின் செயலையும் கவனிக்க தொடங்கினான் வைஷாலி வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, வைதேகி கைக்கு அடக்கமான சதுரங்க 

பெட்டிக்குள் தன்னையே தொலைத்திருந்தாள் துவாரகா விஜியின் அருகில் அமர்ந்து கொண்டு யோசனை செய்த வண்ணம் இருக்க சாவித்ரி வாகனம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே உறங்கி விட்டார்

சஞ்சளா மன கலக்கத்துடன் வைதேகி அருகில் அமர்ந்திருந்தாள்

எல்லாருக்கும் என்னாச்சு ஊர் திருவிழாவுக்கு போற மாதிரியே இல்ல ஏதோ துக்கம் விசாரிக்க போற மாதிரி இருக்கு இவங்கள என்ன பண்றதுன்னே தெரியலஎன்று நொந்து கொண்டவன் முன்னால் எழுந்து சென்று  டிரைவரிடம் பேச்சு கொடுக்க தொடங்கினான்  

இரவு இல்லம் வந்த கார்த்திக் சபரி ஹாலில் அமர்ந்திருப்பதை கண்டு புருவம் நெறிக்க ஏளனமாக பார்த்தவன் மூத்தவனின் அருகில் அமர்ந்திருந்த ராஜனிடம்உன்னோட பெரிய மகனுக்கு ரோஷம் அவ்ளோ தானா? பெருசாபேசிட்டு போனான் இந்த வீட்டுல இருக்க முடியாது மூச்சு முட்டுற மாதிரி இருக்குதுன்னு டயலாக் எல்லாம் விட்டான், இப்போ எந்த முகத்தை வச்சுக்கிட்டு இங்க வந்துருக்கான் கேட்டு சொல்லு ப்பாஎன்று வெறுப்பாக கேட்க

காலையில உன்கிட்ட பேசிட்டு போன முகத்தை வச்சுக்கிட்டு தான் வந்துருக்கேன்என்று தாழ்ந்த குரலில் கூறியவன்

தம்பி கிட்ட ரோஷம் பாக்க வேண்டியதில்லை நீ என்கூட பிறந்தவன் இதுவரைக்கும் உன்ன புரிஞ்சிக்காம இருந்துட்டேன் இனி அந்த மாதிரி இருக்க மாட்டேன் நா என்ன தப்பு பண்ணிருக்கேன்னு எனக்கு புரிஞ்சிருச்சு உன்கிட்ட நா கொஞ்சம் மோசமா தான் நடந்துகிட்டேன் சாரிடா இனிமே அந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்! நீ என்னோட பொறுப்பு உனக்கு செய்ய வேண்டிய சில கடமைகள் எனக்கு இருக்கு என்னவிட வயசுல சின்னவன் நீ பேசினத பெருசா எடுத்திருக்க கூடாது அம்மா இருந்திருந்தா உன்கிட்ட எப்டி நடந்திருந்திருபாங்கலோ அது மாதிரி உன் விஷயத்துல நானும் நடந்துப்பேன்என்று திடமாக பேசி முடித்தவன்அப்பா நா மேல போறேன்என்று சென்று விட

ம் பொறுப்பு பருப்புன்னு பெரிய தத்துவமெல்லாம் பேசிட்டு போறான் என்னமோ இவனே சொந்தமா யோசிச்சு பேசுற மாதிரி! என்னோட எதிரி வீட்டுல போய் தங்கிட்டு வந்துட்டு பேசுறான் பேச்சு, எல்லாம் அந்த வைஷாலி இல்ல விஜி சொன்னதா இருக்கும் அத அப்டியே இங்க வந்து கொட்டிட்டு போறான் முட்டாள்! யாருக்கு தெரியும்? உளவு பாக்குறதுக்கு இவன திரும்ப அனுப்பி இருக்கலாம் மைனர் சாருக்கு இந்த பேச்சு ஒன்னும் குறைச்சல் இல்ல, நல்லாதான் பேசிட்டு போறான் சொல்லி கொடுத்தத! அண்ணனாம் அண்ணன்!” என்று சிடுசிடுத்தவன் தந்தையின் அருகில் அமர 

டேய் கார்த்தி உன்னோட வீண் சந்தேகத்தை தூக்கி மூட்டை கட்டி வச்சிட்டு அவனுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுடா நாம முன்ன எப்டி இருந்தோம்னு நினைச்சு பாரு அப்ப அவன் தான் வேலைக்கு போய் நம்ம ரெண்டுபேரையும் பாத்துக்கிட்டான், உன்ன படிக்க அனுப்பினான் நீ என்னடான்னா படிக்கிறத விட்டுட்டு ஏதோ ஒரு பொண்ணு கிட்ட வம்பிலுத்து காலேஜ்ல டிஸ்மிஸ் பண்ற அளவுக்கு நடந்துகிட்ட இந்த சொகுசான வாழ்க்கை இப்போ வந்தது!, இதுல நிறைய ஆபத்து இருக்கு நான் பாத்துக்கிறேன் நீ படிக்கிற வேலைய மட்டும் பாருன்னு முன்னாடியே சொன்னேன் நீ கேக்கல ஏதேதோ சொல்லி என்னையவே பயமுறுத்திட்ட

பெரியவன் எது சொன்னாலும் செஞ்சாலும் அது உன்னோட நல்லதுக்காக தான் இருக்கும்! அவன் பேச்ச கேட்டு நடக்குற வழிய பாரு, நாம பண்ற வேலையில எந்த நேரம் என்ன நடக்கும்னு நமக்கே தெரியாது? அவ்ளோ ரிஸ்க் இருக்கு இந்த வேலையில, அவங்களுக்கு நம்மலாள வேலை முடியிற வரைக்கும் தான் வச்சுட்டு இருப்பாங்க வேலை முடிஞ்சாலோ இல்ல ஏதாவது தப்பு நடந்தாலோ அடுத்த நிமிஷம் யோசிக்க மாட்டாங்க நம்மள கொல்றதுக்கு, நா வாழ்ந்து முடிச்சிட்டேன் ஆனா நீ வாழ வேண்டியவன் பாத்து நடத்துக்கோ எனக்கு என்னோட பிள்ளைங்கள தவிர வேற எதுவும் முக்கியமில்ல புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன்என்று கவலையுடன் கூறிவிட்டு  எழுந்து சென்ற முதியவரின் நடை சற்று தள்ளாடியது மூப்பினால் வந்த தள்ளாட்டமா? அல்லது இளைய மகனை பற்றிய கவலையா? என்பது அவருக்கு தான் தெரியும்

ப்ச் வயசனாலே இப்டி தான் அட்வைஸ் பன்றேன் பேர் வழின்னு வந்துருவாங்க இவர குத்தம் சொல்லி என்ன பிரயோஜனம் சொல்ல வேண்டியவங்கள சொல்லணும் அவங்களுக்கே புரியல இவருக்கு எங்க புரிய போகுதுஎன்று இளகாரமாய் முணுமுணுத்துவிட்டு தன் அறைக்கு சென்றான் கார்த்திக்

ஒருவழியாய் வாகனம் சுங்க சாவடியை கடந்திருந்தது குறித்த நேரத்தில் சென்னையை கடந்து விட வேண்டும் என்று ஓட்டுநர் தனது கைதேர்ந்த கலையை காட்ட, வாகனம் வேகம் பெற்றது முன்னால் செல்லும் வாகனங்களை முந்தி கொண்டு லாவகமாக இடது வலது என வாகனத்தை திருப்பி ஓட்ட வேனில் அமர்ந்திருந்த அனைவரும் தத்தம் செயல்களில் மூழ்கி இருந்தனர் 

விஜயன் வைஷாலி இருவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்த விஷ்ணு சிந்தனையில் மூழ்கி இருந்த துவரகேஷை அழைக்க முன்னே வந்து அமர்ந்தவனிடம்என்னடா யோசனை பண்ணிட்டு இருக்க?” 

அதுவா…” என்று இழுத்து நிறுத்திய துவாரகேஷ்இந்த காதல் எப்டி வருதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன் ஆனா விடையே கிடைக்க மாட்டேங்கிது உனக்கு தெரிஞ்சா சொல்லேன்என்று தீவிர பாவனையுடன் கேட்டவனை தணலாய் முறைத்து பார்த்தவன் 

உன்ன எல்லாம் திருத்தவே முடியாது இங்க என்ன நடந்துட்டு இருக்கு நீ இத ஒரு பெரிய விஷயமா யோசிச்சுட்டு இருக்கஎன்று சிடுசிடுக்க

இங்க என்ன நடக்குது எல்லாரும் உக்காந்துட்டு அவங்க வேலைய பாத்துட்டு இருக்காங்க

கொஞ்சம் பின்னாடி திருப்பி பாரு அவன் பக்கத்துல தான உக்காந்திருந்த இத கூட கவனிக்கலையா?” என்று முறைப்புடன் கூற 

பின்னே திரும்பி பார்த்தான் துவாரகா விஜயனின் முகத்தை பார்த்துவிட்டு வைஷாலியை கவனிக்க வெளியில் வேடிக்கை பார்ப்பது போல சத்தம் வராமல் கண்ணீர் வடித்து கொண்டிருந்தாள்என்னடா என்னாச்சு? இவ எதுக்கு அழுகுறா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லா தானே இருந்தா!” என்றவன் 

விஜயனை பார்த்துஅவ இருக்கட்டும் இவனுக்கு என்னாச்சு என்னைக்கும் இல்லாம இன்னைக்கு சோகத்தை மூட்டை மூட்டையா முகத்துல கட்டி வச்சுருக்கான் ரெண்டு பேருக்குள்ள என்ன தான் நடக்குது இவள ஏத்துக்க வேண்டியது தானே? இன்னும் எத்தனை நாளைக்கு தான் விட்டுட்டு போனவள நினைச்சுட்டு இருக்க போறானாம்! அவன் கிட்ட கேட்டே ஆகணும் விஷ்ணுஎன்று கோபத்துடன் எழுந்தவனைஅமைதியா இருஎன்று அடக்கியவன் 

இரு என்ன நடக்குதுன்னு பாப்போம் இப்போ எதுவும் பேச வேணாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் அத்தை மாமா தூங்கிட்டு இருக்காங்க சத்தம் கேட்டு எந்திரிச்சிட்டாங்கன்னா என்ன ஏதுன்னு கேள்வி கேட்பாங்க பொறுமையா இரு போனதும் இருக்கு அவனுக்கு கச்சேரிஎன்று அடக்கப்பட்ட கோபத்துடன் விஷ்ணு கூற துவாரகாவும் கோபத்தை மட்டுப்படுத்தினான் 

விஜயனின் எண்ணம் என்னவென்று பாவம் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லைதன் காதலின் அளவு அவனுக்கு புரியவில்லையா? அல்லது புரிந்தும் புரியாது நடிக்கின்றானா? ஏன் இந்த கண்ணாம்மூச்சி ஆட்டம் எத்தனை நாள் எத்தனை வருடம் இதற்கு முடிவில்லையா?” என்று பாவையின் மனம் வேதனையில் துவள அவனின் முகம் பார்த்தாள் அவன் கண்களும் லேசாக கலங்கியிருந்தது 

ஏன்டா இந்த மாதிரி வேதனைய தர்ற என்னை விரும்புறேன்னு  ஒரு வார்த்தை சொன்னா போதும் ஆயுசுக்கும் உன்னை தாங்குவேன் அது ஏன்டா உனக்கு புரிய மாட்டிங்கிதுஎன்று கண்களில் வலியுடன் விஜயனை பார்த்து கேட்க

வைஷாலி பார்த்த பார்வையில் குற்றவுணர்வு மேலோங்கியது அவனுக்குதயவுசெய்து அப்டி பாக்காதடி என்னால் தாங்க முடியல நீ பேசிட்டு போனதே மனசுல ரணமா வலிச்சிட்டு இருக்கு! இதுல குற்றவாளி மாதிரி பாக்காத என்னால தாங்கிக்க முடியாது, உன்னோட அன்பு எனக்கு புரியாம இல்ல ஆனா அதை ஏத்துக்க தான் இன்னும் எனக்கு மனசு வரலஎன்று பார்வையாலேயே கெஞ்சினான்

Advertisement