Advertisement

ப்ச் இப்போ என்னத்துக்கு அழுகுறவ விடு எதுவும் நம்ம கையில இல்ல நேரம் வரும் போது எல்லாம் நடக்கும்என்றவர்யார்கிட்டயும் சொல்லிட்டு இருக்க வேணாம் சரியா, வா வந்து சமையலுக்கு வந்து ஒத்தாசை பண்ணு உச்சி பொழுது ஆச்சு உங்க மாமா வந்தா சத்தம் போடுவாறுஎன்று அவள் மனநிலையை மாற்ற வேண்டி உடன் அழைத்து சென்றார்

மதிய உணவை அவசர அவசரமாக தயார் செய்திருந்தாலும் பக்குவமாக செய்திருக்க அந்த மட்டில் அன்னத்திற்கு திருப்தியே மதிய உணவை முடித்துவிட்டு பரமசிவம் சற்று தலை சாய்த்துவிட புவியரசன் உணவை முடித்து கொண்டு பணிக்கு சென்றுவிட்டான் சாவித்ரி அன்னம் தமயந்தி மூவரும் அரசல்புரசலாக கேட்ட விஷயங்களை பேசி கொண்டிருக்க பெண்கள் இருவரும் வைதேகியின் இல்லம் வரை சென்றுவிட  ஆண்கள் மூவரும் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது காலார நடந்துவிட்டு வரலாம் என்று சென்றுவிட்டனர்

மாலை நேரம் நெருங்க வந்தவர்களுக்கு பலகாரம் செய்ய வேண்டி உளுந்தை முன்னமே ஊற போட்டு வைத்திருந்தார் அன்னம் தமயந்தியை வெங்காயம் வெட்ட சொல்லி விட்டு மாவை பதம் பார்த்து ஆட்டுகல்லில் ஆட்டி எடுத்தவர் எண்ணெயை காய வைக்கஅத்தை இந்தாங்க வெங்காயம்என்று நீட்டவும்  

வாங்கி ஓரமாக வைத்தவர்சரி நீ போ நா பாத்துகிறேன்என்று அனுப்பிவிட்டு தன் வேலையை தொடங்கினார் வேலைக்கு சென்ற புவியரசன் வரும் வழியில் தன் தந்தையை பார்க்கவும் இருசக்கர வாகனத்தில் உடன் அழைத்து வந்துவிட அனைவரும் கூடத்தில் ஒன்றாக அமர்ந்து கதை வளாவி கொண்டிருந்தனர்  

பேச்சை மேலும் சுவரஸ்யமாக்க 

சூடாக வடையும் டீயும் வந்துவிட இன்னும் அமர்களப்பட்டது இல்லம் நீண்ட நாள் கழித்து அனைவரும் ஒன்றாய் அமர்ந்திருப்பது மனதிற்கு நிறைவே என்றாலும் விஷ்ணு வைதேகியை மணம் முடித்திருந்தால் இந்திராணியும் பெருமாள் சாமியும் வீட்டிற்கு வந்து அனைவருடனும் கலந்திருப்பார்கள் என்ற எண்ணம் அன்னத்திற்கும் சாவித்ரிக்கும் மனதில் குறையாய் தோன்றி மறைந்தது

மனைவியின் முகம் சற்று வாடியிருப்பதை கண்ட புவியரசன் இரவு பேசி கொள்ளலாம் என்று அமைதியாகவே இருந்தான், இதுவே போதும் இரவு உணவு வேண்டாம் என்று அனைவரும் மறுத்து விட வெறும் வயிற்றுடன் படுக்க கூடாது என்ற அன்னம் எளிமையாக ரசம் சாதம் மட்டும் வைத்து தொட்டுக்கொள்ள தேங்காய் துவையலும் தயார் செய்து இரவு உணவை முடிக்க சற்று நேரம் பேசி கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராய் கலைந்து சென்றனர்

வேலை செய்த களைப்பில் பரம சிவம் கூடத்தில் பாயைவிரித்து படுத்ததும் உறங்கவிட அடுப்படியில் வேலை இருபாதாக கூறிவிட்டு அன்னம் எழுந்து கொள்ளவும் தமயந்தியும் தன் அறைக்கு சென்றுவிட்டாள் இளந்தாரிகள் மட்டும் வெளி திண்ணையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர் 

விஜயனும் வைஷாலியும் ஒருவர் பக்கம் ஒருவர் மறந்தும் திரும்பவில்லை விஜயன் உள்ளுக்குள் யோசனை செய்தபடி இருந்தானே தவிர வெளியே காட்டி கொள்ளவில்லை, மற்றவர்களின் பேச்சை கேட்பது போல அமர்ந்திருந்தான் ஊரே அடக்கிவிட்ட அரவம் உணர்ந்து அனைவரும் அவரவர் அறைக்கு சென்று கடையை சாத்திவிட 

அறைக்கு சென்றவன் விளக்கை ஒளிர விட்டு மனைவியை யோசனையாக பார்த்து கொண்டிருந்தான் புவியரசன்ஒருவேளை நாம பேசலன்னு நினைச்சு வெசனபடுறாளோ இல்ல வேற ஏதாவது இருக்கா! நாம பேசமா இருக்குறது ஒன்னும் புதுசு இல்லையேஎன்று மனைவியின் அருகில் அமர்ந்தவன் நெற்றியை தொட்டு பார்க்க காய்ச்சல் எதுவும் இல்லை என்று காட்டியது உடல்

பின்ன என்னவா இருக்கும்என்று அவளை திருப்ப, மூடிய இமைகளில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது 

பதறி அவளை மடியில் கிடத்தியவன்ஏய் என்னாச்சு இப்போ எதுக்குடி அழுகுறஎன்றதும் மடை திறந்த வெள்ளம் போல அவன் இடையே கட்டி கொண்டு அழ 

காரணம் என்னவென்று புரியாமல் தவித்தவன்சொல்லிட்டு அழுடி யாராவது ஏதாவது சொன்னாங்களா? ஆத்தாக்கு ரொம்ப முடியலையா? வேணா நீ நாளைக்கு கிளம்பி போய் ஒரு வாரம் தங்கிட்டு வாஎன்று பதற்றத்துடன் கூற

அதெல்லாம் இல்லஎன்றவள் எழுந்து அமர்ந்துஇன்னைக்கு டாக்டர் கிட்ட போனோம்என்றாள் தலையை தொங்க போட்டு கொண்டு

உடம்புக்கு என்ன?” என்று அதற்கும் பதற்றமடைய

உடம்புக்கு ஒன்னுமில்ல விசேஷம் ஏதும் இருக்கான்னு..” என்றவள் அவன் முகம் பார்க்க அதிகப்படியான ஆர்வம் முகத்தில் மின்னியது 

டாக்டர் கிட்ட போய் செக் பண்ணோம் அப்டி எதுவும் இல்லன்னு சொல்லிட்டாங்க உடம்புல ரத்தம் கம்மியா இருக்காம் மாத்திரை மருந்து எழுதி கொடுத்தாகஎன்று கவலை தேய்ந்த குரலில் கூற

இதுக்கு போய் எதுக்குடி அழுகுற நமக்கென்ன வயசா ஆகிருச்சு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் தானே ஆகுது அப்றம் என்ன? படுத்து தூங்கு நாளைக்கு சீக்கிரம் எந்திக்கணும்என்று இயல்பாய் ஏற்று கொண்டான்

இல்ல மாமா ரொம்ப எதிர்பார்போட இருந்தேன் அதுமட்டுமில்ல என்ன பத்தி யார் என்ன சொன்னாலும் நா இந்த அளவுக்கு கவலைபட்டுருக்க மாட்டேன், உங்கள பத்தி எங்கிட்டயே அட்வைஸ் பண்றேன்னு சொல்லி குறையா சொல்றாங்க அத தான் என்னால தாங்க முடியலஎன்று விம்ம

என்ன சொல்வதென்று தெரியவில்லை அவனுக்கு அவனிடமும் சிலர் கூறியது தான் அவனால் அதை கடந்து வர முடிந்தது ஆனால் அவள் நிலையில் யோசித்தவனால் மனம் தாளவில்லை மனைவியை அணைத்து ஆறுதல் படுத்தியவன்சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்கடி அதையெல்லாம் பெருசா எடுத்துக்க கூடாது எழும்பில்லாத நாக்கு சுருக்குன்னு என்ன வேணாலும் பேசும்,அதுக்கு எதுக்கு நீ வெசனபடுற நா உன்மேல கோபபட்டேன்னா இல்ல அம்மா அப்பா உன்கிட்ட சொல்லிகாட்டுனாங்களா? யாரோ ஏதோ சொன்னாங்கன்னு மூக்கு சீந்திக்கிட்டு இருக்குறவ பேசமா படு எல்லாம் வரும் போது வரும் எதுவும் நம்ம கையில இல்லஎன்றவன் அவளை ஆதரவாக அணைத்தபடி படுத்து கொண்டான் அவன் அணைப்பில் அமைதியை உணர்ந்தவள் கண்களை மூடி உறங்கலானாள்

இரவின் அணைப்பில் குளிர்காய்ந்த நிலவு தன் வேலையை முடித்து கொண்டு செல்ல ஆயத்தமாய் இருந்தது அதிகாலை நேரமே கோவில் வாசலில் கூட்டம் அலைமோத மதுரை நகரமே ஸ்தம்பித்து போய் இருந்தது கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் வரை நடைபெறும் சித்திரை திருவிழாவின் ஆரம்பம் பட்டாபிஷேஹம் முடிந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் என்பதால் நான்கு கோபுர வீதிகளிலும் பெருந்திரளான ஜன கூட்டம் திருக்கல்யாணத்தை காண கூடியிருந்தனர் 

வீட்டில் இருந்த அனைவரும் ஆர்வத்துடன் திருக்கல்யாணத்தை காண கிளம்பி கொண்டிருக்க ஆண்கள் பட்டு வேஷ்டியில் கிளம்பி வெளியில் வந்து காத்து கொண்டிருந்தனர் அன்னம் தமயந்தி இருவரும் முதலில் கிளம்பி வெளியில் வர 

நீ போய் பாரு இன்னுமா இந்த புள்ளைங்க சீலை கட்டிட்டு இருக்குதுக நேரம் ஆகுதுஎன்று மருமகளை அனுப்பி வைக்க 

தமயந்தி சென்று கதவை தட்டவும்கதவு திறந்து தான் இருக்கு உள்ள வாங்கஎன்று குரல் வரவும் உள்ளே சென்றவள்

என்னம்மா இன்னும் கிளம்பளையா? நேரம் ஆச்சு உங்களுக்காக தான் காத்துட்டு இருக்காங்கஎன்று முகத்தில் அவசரத்தை காட்டி கூற

அய்யோ அக்கா எனக்கு இத கட்டவே வரல காலேஜ் படிக்கும் போது கட்டுனது அதுக்கப்றம் இப்போ தான் கட்டுறேன் எப்டி எங்க இருந்து ஆரம்பிக்கிறதுன்னு தெரியலைஎன்று வைஷாலி முகத்தை சுறுக்கி பாவமாய் உரைத்திட

இத முதலயே சொல்லறதுக்கு என்னவாம்என்றவள் வேகமாக மடிப்பேடுத்து பத்து நிமிடத்தில் புடவையை கட்டி விட்டுஇந்தா இந்த பூவை வச்சுக்கிட்டு சீக்கிரம் வாங்கஎன்று கூறி விட்டு செல்ல

பூவை வைத்து கொண்டு கிளம்பி வெளியே வந்த வைஷாலிஏய் சஞ்சு முன்னாடி தடுக்குது கொஞ்சம் எடுத்து விடுறியாஎன்ற குரல் கேட்டு திரும்பி பார்த்த விஜயன் தன் பார்வையை திசை திருப்ப முடியாது தவித்து போனான், இதுவரை காக்கி உடையிலும் சுடிதார் அல்லது பேண்ட் சட்டையில் பார்த்து பழகி இருந்தவனுக்கு கண்களுக்கு விருந்தாய் வெள்ளை நிறத்தில் புடவையின் ஓரத்தில் நீல நிறத்தில் இலைகள் கொடியை பின்னி தொடர்ந்தவாறு இழையப்பட்ட ஜரிகை வேலைப்பாடுகள் அமைந்த புடவையில் பெண்ணவளை காண தெவிட்டவில்லை அவனுக்கு, விழிகள் விரிய பேச்சற்று நின்றிந்தான் வாயில் கை வைத்து வியந்தபடி

புடவையின் மடிப்பை சரி செய்துவிட்டு நிமிர்ந்தவள் அவன் பார்வையை கண்டு கண்கள் இடுங்க பார்த்தவளுக்கு அவன் பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்றில் குப்பென்று முகம் சிவந்து விட நாணத்தை யாரும் அறியா வண்ணம் மறைக்க பெரும்பாடு பட்டாள் பெண்ணவள் 

தொடரும்..

புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமை அது சொல்லும்

மனம் ஏங்குதே மனம் ஏங்குதே

மீண்டும் காண மனம் ஏங்குதே

Advertisement