Advertisement

அவனும் மனமும் ஒரு நிலையில் இல்லை அழுகை முட்டி கொண்டு வந்தது 

கண்ணீர் விடுவது அவனுக்கு அறவே பிடிக்காது வாழ்வின் பல கட்டங்களில் கண்ணீர் மட்டுமே துணையாய் இருந்ததாலோ என்னவோ வேகமாக அதேநேரம் அழுத்தமாக விழிகளை துடைத்து கொண்டவன் தரையில் ஒருக்களித்து படுத்து கொண்டான், மனமோ ஆற்று 

வெள்ளத்தில் நிலை கொள்ளாமல் அடித்து செல்லும் ஓடம் போல திசை தெரியாமல் தவித்தது, அவனையும் மீறி விழிநீர் வழிந்து தரையில் முட்டி கொள்ள அவனால் தடுக்க முடியவில்லை மனமும் எழவில்லை

விஜயன் வேகமாக மேலே செல்வதை கண்ட துவாரகா அவன் பின்னே செல்ல எத்தனிக்க கைப்பற்றி தடுத்துவிட்டான் விஷ்ணுஅவன் போகட்டும் கொஞ்ச நேரம் தனியா இருந்து எல்லாத்தையும் யோசிகட்டும்! இப்போ அவனுக்கு தேவை தனிமை, அவனா எப்போ கீழ இறங்கி வர்றான்னோ வரட்டும் நீ சஞ்சு வீட்டுக்கு போய் ஆன்ட்டி கிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டு வாஎன்று கூறிவிட

விஷ்ணு கூறுவது துவாரகாவிற்கு சரியென்றேபட்டது விஜயனுக்கு நல்வாழ்வு அமைய அவனுக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? சரியென தலையாட்டிவிட்டு அமிர்தாவின் இல்லம் சென்றான், உறங்கி அப்போது தான் எழுந்திருந்தாள் சஞ்சளா மகளுக்கு சாப்பாடு வைத்து கொடுத்துவிட்டு சாவித்திரியிடம் அமிர்தா பேசி கொண்டிருக்க 

ஆன்ட்டி!” என்று வெளியே இருந்தாவறே குரல் கொடுத்தவனின் குரலை கண்டு கொண்ட சாவித்ரிஉள்ள வாடாஎன்றதும் உள்ளே வந்தவன் அமிர்தாவை பார்த்து

ஆன்ட்டி இன்னைக்கு நைட் எல்லாரும் மதுரைக்கு கிளம்புறோம் சோ.. சஞ்சுவும் வந்தா நல்லா இருக்கும் அவளுக்கு நாளையிலிருந்து காலேஜ் லீவ் தானே அதுமட்டுமில்லாம அவ மட்டும் தனியா இருப்பா அவள விட்டுட்டு போக எங்களுக்கு மனசே இல்ல எங்க கூட அனுப்பி வைக்க முடியுமா?” என்று பணிவுடன் மரியாதை கலந்த குரலில் கேட்க

அமிர்தா அவனையும் சஞ்சளாவையும் மாறி மாறி பார்த்தார்சரின்னு சொல்லு அமிர்தா போன வருஷமே கூப்பிட்டேன் அடுத்த வருஷம் பாக்கலாம்னு சொல்லிட்ட! நீ வரலன்னா அவளும் வர மாட்டா சரின்னு சொல்லு ஒரு வாரம் தானே போய்ட்டு வரலாம்என்று அன்பாய் வற்புறுத்த

சாவித்ரியின் வற்புறுத்தலை மீற முடியவில்லை இதுவரை தனியே எங்கும் அனுப்பி வைத்தது இல்லை வயது பெண் அவளுக்கும் சில ஆசைகள் இருக்கும் தானே போய் வரட்டும் என்றும் மனம் அனுமதி அளிக்க

இல்லக்கா என்னால வர முடியாதுஎன்று சாவித்ரியிடம் கூறியவர்அவள வேணா கூட்டிட்டு போங்க தம்பி எனக்கு தைக்க வேண்டிய துணி நிறைய இருக்கு சீக்கிரம் முடிச்சு கொடுக்கணும் ஒரு வாரம் தானே போய் இருந்துட்டு வரட்டும்என்று நம்பிக்கைக்கு பாத்திரமனவனை பார்த்து கூற

இல்லம்மா உங்கள விட்டு நா எங்கயும் போக மாட்டேன் நீங்க வர்றதா இருந்தா நாம போலாம்என்று இடையில் புகுந்து மறுப்பை தெரிவித்தாள் சஞ்சளா

அவர்கள் உடன் அதுவும் அவனுடன் செல்ல வேண்டும் என்று மனதில் ஆசை தான் ஆனால்! தாயை தனித்து விட்டு ஆசைக்கு முக்கியத்துவம் அளிக்க அவள் மனம் இடம் கொடுக்கவில்லை, நினைவு தெரிந்த நாள் முதல் தனியே எங்கும் சென்றது கிடையாது உறவுகள் என்று யார் வீட்டிற்கும் சென்று கொண்டாட்டங்களில் பங்கெடுத்ததும் கிடையாது நான்கு சுவர்களுக்குள்ளேயே அடக்கி அடங்கி போன வாழ்க்கையை வாழ்ந்து பழகிபோனவர்கள் அதனால் இருவரும் சேர்ந்தே செல்லலாம் என்பது அவளது எண்ணம்

ப்ச் அம்மா சொல்றேன்ல போய்ட்டு வா ஒரு வாரம் உன்னோட தொல்லை இல்லாம இருப்பேன் என்னோட வேலையும் சீக்கிரம் முடியும்! நீ இருந்தா ஒரு வேலையும்  நடக்காதுஎன்று கூறியதும் சஞ்சளாவின் விழிகளில் நீர் கோர்க்க

நா உனக்கு தொல்லையா தெரியிறேனா?” என்று கமரிய குரலில் கேட்டவள்நா அவங்க கூட போறேன் போ உன்கிட்ட பேச மாட்டேன்என்று முறுக்கி கொண்டவள் அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள்

தாய் மகள் இருவரும் பேசியதை கண்டு துவாரகாவிற்கு சிரிப்பு வர வந்தவன் நின்ற கோலத்தில் இருப்பதை கண்ட அமிர்தாஉக்காருங்க தம்பி தண்ணி கொண்டு வறேன்என்று சமையலறை செல்ல

சாவித்ரியின் அருகில் சென்று அமர்ந்தவன் வீட்டை பார்வையால் அலசினான் அடக்கமான சமையல் அறை அதற்குள்ளேயே செல்பில் பூஜை படங்கள் நிரம்பி வழிந்தன மூலையில் குடும்பத்திற்கு உழைத்து கொட்டும் தையல் இயந்திரம், ஒரே ஒரு படுக்கை அறைதாயும் மகளும் உறங்குவதற்கு அடங்கி கொள்ளும் இடம்என்று எண்ணமிட்டவன் அமிர்தா தண்ணீர் சொம்பை நீட்ட வாங்கி பெயருக்கு குடித்துவிட்டுதங்கஸ் ஆன்ட்டி அப்ப நா கிளம்புறேன்என்றவனுக்கு சரியென தலையாட்டிய அமிர்தா 

அம்மா எப்டிப்பா இருக்காங்க?” என்று கேட்க

நடைமுறை விசாரிப்பு என்று எண்ணி கொண்டவன்நல்லா இருக்காங்க ஆன்ட்டிஎன்று சாதரணமாக கூறிவிட்டு விடைபெற்றான் 

ஆதவன் மயங்கி இருள் மயக்கம் தெளியும் நேரம் வீடு வந்து சேர்ந்த வைஷாலி அனைவரும் கிளம்பி கொண்டிருப்பதை கண்டு ஒரு வாரத்திற்கு  தேவையான உடைகளை எடுத்து வைத்துவிட்டு குளித்து தயாராகி வெளியே வந்தவள் விஷ்ணுவின் அறைக்கு சென்றாள், விஷ்ணு வேண்டாம் என்று மறுத்து கூறியும் பேச்சை கேட்காமல் அவன் உடைகளை வைதேகி எடுத்து வைத்து கொண்டிருக்கவிஷ்ணுஎன்று அழைப்பு குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர்

என்ன வைசு கிளம்பிட்டயா? நாங்களும் கிளம்பிட்டோம் இன்னும் கொஞ்ச நேரத்துல துவாரகா வந்துருவான்என்று படபடவென கூற

அது இல்லடா விஜி எங்க ஆளையே காணோம்…” என்று தயங்கி கேட்டவளை கனிவுடன் பார்த்தவன்

நீ பேசிட்டு போன பிறகு மேல போனவன் இன்னும் கீழ இறங்கி வரல நாங்களும் அவன டிஸ்டப் பண்ண வேணாம்னு இருந்துட்டோம் இரு அவனுக்கு போன் பன்றேன்என்றுவிட்டு விஷ்ணு வெளியேறிட

விஜயனின் உடைகளையும் விஷ்ணுவின் உடைகளுடன் சேர்த்து எடுத்து வைத்த வைஷாலி அவனுக்கு தேவையான இத்தியாதி பொருட்களையும் எடுத்து வைத்து விட்டு நிமிர வைதேகி அவளையே பார்த்து கொண்டிருந்தாள்என்ன அப்டி பாக்குற?” 

மாமா எல்லாத்தையும் சொன்னாரு கவலைபடாத கண்டிப்பா உன்னோட மனச விஜி அண்ணா புரிஞ்சுபாருஎன்று ஆறுதல் சொல்ல மெலிதாய் புன்னகைத்தவள் வைதேகியை அணைத்து கொண்டாள் 

மாடியிலிருந்து இறங்கி வந்த விஜயனின் முகம் சற்று வீங்கி கண்கள் சிவந்திருந்தது, அழுதிருக்கிறான் என்று யூக்கித்து கொண்ட விஷ்ணு எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல்என்னடா ஊருக்கு கிளம்பணும்னு தெரியாதா சாவகாசமா எழுந்து வர்ற சீக்கிரம் கிளம்புஎன்று அவசரப்படுத்த எதுவும் பேசமால் அமைதியாக அறைக்குள் நுழைய 

எதிரில் வந்த வைஷாலி “விஷ்ணு அவங்க ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணிட்டேன் குளிச்சுட்டு கிளம்பி வர சொல்லுஎன்று கூறியவள் கடைகண்ணால் விஜயனை பார்த்தாள் அவன் முகம் பிரதிபலித்த கோலம் அவளுக்குள் வேதனையை அளித்ததோடு கண்களில் ஈரம் கசிய செய்தது கண்ணீரை மறைக்க வேண்டி மேற்கொண்டு எதுவும் பேசாமல் விறுவிறுவென தன் அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள்

தன் இல்லம் சென்று தயாராகி வந்த துவாரகா இருவரின் நடவடிக்கையை கண்டு விஷ்ணுவின் தோளில் கை வைக்க யார் என்று திரும்பி பார்த்தவன்வாடா நல்லவனே எங்க நீ வர்றதுக்குள்ள நாங்க கிளம்பி போயிருவோமோன்னு நினைச்சேன் நல்லவேளை சீக்கிரம் வந்துட்டஎன்று கூற

மெலிதாய் புன்னகைத்தவன்இந்த காதல் என்ன மாதிரியானதுடா? புரிஞ்சுக்கவே முடியல சண்டை போட்டாலும் சரி கவலைபட்டாலும் சரி ரெண்டு பேரும் ஒரே மாதிரி வேதனைய அனுபவிக்கிறாங்க என்ன விசித்திரமான காதலோ!” என்று சிலிர்த்து கொண்டவன்விஜி மனசுல என்ன தான் இருக்கு எனக்கு ஒண்ணுமே புரியலடாஎன்று ஆற்றாமையோடு பேச

அது அவன் தான் சொல்லணும்! அவனோட மனசுல என்ன இருக்குன்னுஎன்ற விஷ்ணுடேய் நல்லவனே உனக்கும் காதல் வரும் அப்போ புரிஞ்சுப்ப அது என்ன மதிரியானதுன்னு இப்போ எல்லாரோட திங்க்ஸையும் எடுத்துட்டு போய் வண்டியில வைஎன்று பணித்துவிட்டு நகர

விஷ்ணு இட்ட பணியை செவ்வேன செய்து முடித்தான் துவாரகேஷ், அனைவரும் கிளம்பி வாகனத்தில் ஏறிகொள்ள சஞ்சளாவும் அமிர்தாவும் சற்று தாமதமாக வந்தனர்பாத்து போய்ட்டு வா அம்மா சும்மா சொன்னேன் நீ என்னோட தங்கம் உன்ன தொல்லையா நினைப்பேனா? மனவருத்தம் இல்லாம போய்ட்டு வா அம்மா பத்திரமா இருப்பேன்என்று கூறி உச்சி முகர்ந்தார் அமிர்தா

சரிம்மாஎன்றவளுக்கு குரல் உடைந்ததுஎன்னடி இது இதோ இருக்கு மதுரைக்கு போய்ட்டு ஒரு வாரத்துல வர போற என்னமோ நீ போய்ட்டு வரும் போது நா இருக்க மாட்டேன்ற மாதிரி அழுகுறஎன்ற தாயின் வாயை வேகமாக கைகொண்டு மூடியவள்

அந்த மாதிரி பேசாதம்மா என்னன்னு தெரியல உன்ன தனியா விட்டுட்டு போக மனசே வரல என்னமோ மாதிரி இருக்குஎன்று விசும்பலுடன் கூற

அதெல்லாம் ஒன்னுமில்ல நீ ஏறு உனக்காக தான் எல்லாரும் காத்துட்டு இருக்காங்கஎன்றவர்அங்க போய் சேட்டை பண்ண கூடாது அவங்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது சரியாஎன்று சிறு பிள்ளைக்கு அறிவுரை அளிப்பது போல கூற

சரியென தலையாட்டியவள் அமிர்தாவை அணைத்து கொள்ள துவாரகாவிற்கு ஏதோ ஒரு இனம் புரியா உணர்வு மேலோங்கியது, தன் தாயும் கணவர் இல்லாமல் தன்னை வளர்த்தவர் தானே என்ற எண்ணமோ அல்லது வேறு என்னவோ சஞ்சளாவை எண்ணி அவன் மனதில் அவனையும் அறியாமல் விதையாய் துளிர்விட தொடங்கியது காதல், தாயிடம் மனமில்லாமல் விடை பெற்று வாகனத்தில் ஏறிக்கொள்ள அனைவருக்கும் கையசைத்து விடைகொடுத்து அனுப்பினார் அமிர்தா

அமிர்தாவின் வாய் மொழியும் சஞ்சளாவின் மன கலக்கமும் நடக்க போகிறது என்று அப்போது அவர்களுக்கு தெரியவில்லை விதி வர போகும் இழப்பை கண்டு பரிதாபமாக புன்னகைத்தது

தொடரும்

தொட்ட குறையாவும்

விட்ட குறையாகும்

வேண்டாம் காதல்!

எந்தன்  வழி வேறு

உந்தன் வழி வேறு

ஏனோ கூடல்!

உன்னுடைய வரவை எண்ணி

உள்ளவரை காத்திருப்பேன்

என்னை விட்டு விலகி

சென்றால் மறுபடி

தீக் குளிப்பேன்!

நான் விரும்பும் காதலனே

நீ என்னை ஏற்றுக்கொண்டாள்

நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்!

Advertisement