Advertisement

விஷ்ணுவும் துவாரகாவும் கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே விஜயன் உள்ளே நுழைய தலையில் கை வைத்த வண்ணம் தன் அறையில் இருந்து வெளிப்பட்டாள் வைஷாலி வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்தவனை கண்டவள்  பார்த்தும் பார்க்காதது போல சமையலறைக்கு செல்ல 

அமைதியாக செல்பவளை கண்டவனுக்கு நேற்று இரவு நடந்த நிகழ்வு நினைவில் வர குற்றவுணர்வு மேலோங்கியது அவளை சமாதானம் செய்து விடலாம் என்ற திடமான எண்ணத்தில் பெருமூச்சை வெளியிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான்

 சமையலறைக்குள் நுழைந்தவள்அத்தை ஒரு காஃபி கிடைக்குமா ரொம்ப தலைவலிக்கிதுஎன்று தலையை கைகளால் தாங்கி பிடித்தபடி கூற

சரி நீ போய் உக்காரு நா கொண்டு வர்றேன்என்றவர்இன்னைக்கு எங்கயாவது போறயாம்மா?” என்று கேட்க

 “ஆமா அத்தை கொஞ்ச வேலை இருக்கு ஏன் கேக்குரிங்க!”, 

சும்மா தான் கேட்டேன்என்றதும் சரியென தலையாட்டிவிட்டு சோபாவில் வந்து அமர்ந்து கொண்டாள் வைஷாலி

விஜயன் அறைக்குள் நுழைய சபரி குளித்து முடித்து வெளியே வந்தான்வந்துட்டயாடா என்ன எழுப்பி விட்டுருக்கலாம்ல ரொம்ப நேரம் தூங்கிட்டேன்என்று சங்கடத்துடன் உரைத்தவனை கண்டு புன்னகைத்தவன்

அதனால என்னடா நைட்டு லேட்டா தானே படுத்த நல்லா தூங்கிட்டு இருந்த சரி இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்னு விட்டுட்டேன் ஆமா விஷ்ணு எங்க?”

அவங்க கிளம்பி அப்பவே போய்ட்டாங்க சீக்கிரம் போகணும்னு சொன்னாங்க உன்ன கால் பண்ண சொன்னாங்கடாஎன்றதும்சரி நீ போய் ஹால்ல உக்காரு நா கிளம்பி வறேன் ரெண்டு பேரும் போகலாம்என்று கூற

சரியென்றவன் உடை மாற்றி கொண்டு வெளியேறிட விஜயன் விஷ்ணுவிற்கு அழைப்பு விடுத்தான் பதில் எதுவும் இல்லை அழைபொலி முழுவதும் ஒலித்து அணைந்து போகடிரைவிங்ல இருப்பான்என்று எண்ணியவன் துவாரகாவிற்கு அழைப்பு விடுத்தான் முதல் அழைப்பிலேயே எடுத்தவன்சொல்லுடா!” 

எங்க இருக்கீங்க அவனுக்கு போன் பண்ணேன் எடுக்கல அதான் உனக்கு கால் பண்ணேன்

அவன் டிரைவிங்கல இருக்கான்டா அதான் அட்டன் பண்ணல, கமிஷ்னர் ஆபிஸ் போய்ட்டு இருக்கோம் வேலை முடிஞ்சதும் உனக்கு கால் பண்றேன்என்று கூறி அணைப்பை துண்டிக்கவும் அலைபேசியை கட்டிலில் கிடாசியவன் துண்டை எடுத்து கொண்டு குளியலறை புகுந்தான்

தலையில் கைவைத்து குனிந்த நிலையில் அமர்ந்திருந்தவளை புருவம் சுருக்கி பார்த்த சபரிவைசுஎன்று அழைக்க 

நிமிர்ந்து பார்த்தவள்என்னடா?” 

என்னாச்சு உடம்பு எதும் சரியில்லையா?” என்று பரிவாக கேட்க

இல்லப்பா தலைவலி அதான் வேற ஒன்னுமில்லஎன்றவள்அத்தை சபரிக்கும் சேத்து காஃபி போட்டு கொண்டு வாங்கஎன்று குரல் கொடுத்துவிட்டு

சாரி நைட்டு மனசு சரியில்ல அதான் உன்கிட்ட சரியா பேச முடியலை”  என்று முகத்தை சுருக்கி கூற

அதனால என்ன?” என்றவன்உனக்கும் அவனுக்கும் ஏதாவது பிரச்சனையா? நேத்து நைட்டு கூட அவன முறைச்சுட்டே போனேஎன்றவனுக்கு மௌனத்தை பதிலாய் அளிக்க

நீங்க ரெண்டுபேரும் இன்னும் மாறவே இல்லையா? காலேஜ் டைம்ல தான் டாம் அண்ட ஜெர்ரி மாதிரி சண்டை போட்டுட்டு இருப்பிங்க இப்பவுமா! அதுவும் ரெண்டு பேரும் ஒரே டிப்பார்ட்மெண்ட் வேறஎன்று சிரித்து கொண்டே சொல்ல

அது அப்டி தான் நாங்க ரெண்டுபேரும் சண்டை போடலன்னா அந்த நாளே நல்லா இருக்காதுஎன்றவள்என்னாச்சு திடீர்னு விஜிக்கு போன் பண்ணிருக்க என்ன விஷயம்னு என்கிட்ட சொல்ல கூடாதா என்ன?” என்று புருவம் உயர்த்தி கேட்க

உன்கிட்ட சொல்ல மாட்டேன்னு நா சொல்லவே இல்லையேஎன்றவன் விஜயனிடம் கூறியதை கூற

எப்பவும் நடக்குறது தானே! உங்களுக்குள்ள சண்டை வர்றதும் அப்றம் சமாதானம் ஆகுறதும், அவன் சின்ன பையன் சபரி நீ தான் கொஞ்சம் பொறுத்து போகணும் அவன் கோபபட்டானு நீ வீட்டை விட்டு வெளிய வந்துருவியா? உன்னோட அம்மாவுகப்றம் நீ தான் அவன நல்லா பாத்துக்கணும் நீயே அவன தண்ணி தெளிச்சு விட்ட மாதிரி விட்டுட்டு வந்துட்டனா அவன் இன்னும் மோசமா தான் நடந்துப்பான், அவனோட பிரச்சனை என்னன்னு கேட்டு சரி பண்றத விட்டுட்டு புது பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டு வீட்ட விட்டு வந்த மாதிரி வந்துருக்க?” என்று சற்று காரசாரமாக பேச

தன் தவறு என்னவென்று  உணர்ந்தவன் மனம் ஏனோ சாமதனம் அடைய மறுத்தது தமையன் நடந்து கொண்ட விதம் அவன் ஈகோவை அசைத்து பார்க்கநீ என்ன சொன்னாலும் அவன் அப்டி நடந்துருக்க கூடாது வைசு அண்ணன்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லாம என்ன மாதிரி பேசிட்டான் தெரியுமா?, என்னமோ அவனோட சம்பாத்தியத்துல உக்காந்து சாப்பிடுற மாதிரி நினைச்சிட்டு இருக்கான், இனி அந்த வீட்டுக்கு என்னால போக முடியாது அவனா வந்து மன்னிப்பு கேட்டா கூட போகவாவேணாமன்னு யோசிப்பேனே தவிர டக்குன்னு போக மாட்டேன்!” என்று அழுத்தமாக கூற

நீ பிடிவாதம் பண்ற உன்னோட ஈகோ உன்ன தடுக்குது அவன் இப்டி ஆனதுக்கு காரணம் உன்னோட அப்பா மட்டும் இல்ல நீயும் தான்என்றதும் 

என்ன நானா!” என்று அதிர்ந்தவன்நா என்ன பண்ணேன்என்று கோபமாக கேட்க

ஆமா நீ தான் காரணம் அவனுக்கு நீ எதுவுமே பண்ணலையே சபரி உன்ன பத்தி மட்டும் தான் யோசிச்சிருக்க, உண்மையான அன்பையும் பாசத்தையும் காட்டி பக்குவமா அவனுக்கு எடுத்து சொல்லி கண்டிப்போட இருந்திருந்தா அவன் இந்த மாதிரி நடந்துட்டு இருக்க மாட்டான் இப்போவும் நீ தப்பு பண்ணிட்டு தான் வந்துருக்க என்னைக்காவது அவன் கூட டைம் ஸ்பென் பண்ணிருக்கியா? வேலை வேலைன்னு ஓடினயே தவிர அவன கவனிக்கிறத விட்டுட்ட அவன் என்ன பண்றான் எங்க போறான் யாரெல்லாம் அவனோட பிரெண்ட்ஸ் இந்த மாதிரி ஏதாவது ஒன்ன கவனிச்சிறுக்கியா?” என்று வேகமாக பேசியவள்

அவன் உன்னோட தம்பிடா உன்னோட பொறுப்பு ஆன்ட்டி இன்னேரம் இருந்திருந்தாங்கன்னா அவன் பேசுனதுக்கு எப்டியோ போகட்டும்னு விட்டுருப்பாங்களா?, பொறுமையா எடுத்து சொல்லிருக்க மாட்டாங்க! அங்கிள் அவனுக்கு நல்லது சொல்லி கொடுக்கல ஒரு அம்மா ஸ்தானத்துல இருந்து நீ தான் அவனுக்கு நல்லது எது கெட்டது எதுன்னு சொல்லி கொடுக்கணும் சொல்லற விதத்துல சொன்னா அவன் கேட்பான் எல்லாம் நம்ம கையில தான் இருக்கு, வேற வீடு பாக்குறதா விட்டுட்டு ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு போஎன்று கண்களை உருட்டி மிரட்டியவள்

உன்னோட பிரெண்டா சொல்லல ஒரு தங்கச்சியா சொல்றேன் உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு கூட பிறந்தவங்கன்னு யாரும் இல்ல அதுக்காக நா ரொம்ப வருத்த பட்டுருக்கேன் தனியா பிறந்து எல்லாத்தையும் தனியா அனுபவிக்கிறது ஒரு பக்கம் சந்தோஷம்னா அதே சமயம் ஒரு பக்கம் கஷ்டமாவும் இருக்கும் நமக்கு கூட பிறந்தவங்க யாருமே இல்லையேன்னு, அந்த மாதிரி நிறைய நாள் ஃபீல் பண்ணிருக்கேன் ஆனா உன்ன பாக்கும் போதெல்லாம் அந்த எண்ணமே வராது நீ ரொம்ப உரிமையா பேசுவ பழகுவ அடிப்ப சண்டை போடுவ இப்டி இருக்கணும் இப்டி இருக்க கூடாதுன்னு அட்வைஸ் பண்ணுவ, உன்ன ஒரு பிரெண்டா பாத்தத விட ஒரு அண்ணனா தான் பாத்துருக்கேன் அந்த மாதிரி நீ என்கிட்ட நடந்துருக்காஎன்று அவனை பற்றிய தன் மனதில் உள்ள அபிப்பிராயத்தை கூறி கொண்டிருக்க சாவித்ரி காஃபி கப்பை கொண்டு வந்து நீட்டினார் 

அவளுக்கு ஒன்றை எடுத்து கொண்டு மற்றோரு கப்பை சபரியிடம் நீட்ட புன்னகைத்து கொண்டு வாங்கியவன்நீ சொல்றது சரி தான் நான் தான் அவசரத்துல தப்பா முடிவெடுத்துடேன்! இனி கார்த்திக் என்னோட பொறுப்பு அவனுக்கு புரியிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா எடுத்து சொல்லி பாதியிலவிட்ட படிப்ப திரும்பவும் படிக்க சொல்லி ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வறேன் அவன் என்னோட தம்பி இனி இந்த மாதிரி எப்பவும் அவசர புத்திய காட்ட மாட்டேன்என்று நம்பிக்கையுடன் கூறியவன் உள்ளத்தில் புது தெளிவு பிறந்தது

இது தான் சபரி இது தான் உன்னோட குணம் தட்ஸ் குட்என்று பெருமையுடன் கூறியவள்சியர்ஸ்..” என்று கூறி காஃபியை அருந்த 

என்னடா கிளம்பலாமா!” என்று கை சட்டையை மடித்து கொண்டே வெளியே வந்தவனை கண்டவளின் முகத்தில் அத்தனை பிரகாசம் நிஜமா கனவா என்பதுபோல எட்டாவது அதிசயமாய் பிரம்மிப்பில் விழிகள் விரிய இமைக்காது பார்க்க தொடங்கினாள் அவனை அவளுக்கு பிடித்தமான நிறத்தில் சென்ற வருட பிறந்த நாள் பரிசாக தேடி அலைந்து முதன் முதலாக அவனுக்கு வாங்கி கொடுத்த இளம்நீல நிற சட்டையில் கம்பிரமும் கர்வமும் இளையோட வந்து நின்றவனை கண்டு வியந்து தான் போனாள் வைஷாலி மறுப்பு கூறாமல் அன்று வாங்கி கொண்டானே தவிர ஒரு முறை கூட அணிந்து காட்டியது இல்லை

ஏனோ இன்று அந்த உடையை பார்த்ததும் அவனுக்கு அணிய வேண்டும் என்ற எண்ணம் உண்டானது ஆறடி உயரத்தில் வாட்ட சாட்டமாக நின்றிருந்தவனை பார்வையாலே அளந்தவள் அலை அலையாய் படிந்திருந்த கேசத்தை அளந்து பார்க்க வேண்டும் என்று பரபரத்த கைகளை முயன்று அடக்கி கொண்டாள், கண்களில் என்றும் இல்லாத ஒரு வித ஜீவன் அளிக்கும் பார்வை ஷேவ் செய்து பளிங்கு போல வழுவழுப்பான கன்னம் இதழில் அரை புன்னகை உதிர சபரியை பார்ப்பது போல அவளை ஒர பார்வையில் பார்த்து கொண்டிருந்தவனை மெய்மறந்து திறந்த வாயினுள் புகுவது கூட தெரியாமல் பார்த்து கொண்டிருந்தவளின் கவனத்தை கலைக்க வேண்டி தொண்டையை கனைக்க பெண்ணவள் சட்டென பார்வையை விலக்கி கொண்டதில் அரை புன்னகை நீண்ட புன்னகையாய் மாறியது

டேய்  என்ன அப்டி பாக்குற? கிளம்பலாமா டைம் ஆச்சு” 

இல்லடா வீடு பாக்க வேணாம்! நா என்னோட வீட்டுக்கே போறேன் இன்னைக்கு ஒரு நாள் இங்க இருந்துட்டு நாளைக்கு கிளம்புறேன் நா பண்ணது தப்புன்னு வைசு புரிய வச்சுட்டாஎன்றவனை புருவம் உயர்த்தி பார்த்தவன்

ம் இதே நா சொல்லிருந்தா கேட்டுருப்பயா சொல்றவங்க சொன்னா தான் எடுபடும் போலஎன்று மெச்சுதலாய் தலையாட்டி உதட்டை பிதுக்கியவன்ஆன்ட்டி எனக்கு ஒரு காஃபிஎன்று குரல் கொடுக்க

காபி குடிக்கிறது இருக்கட்டும் மணி என்னாகுதுன்னு பாத்திங்களா சாப்பாடு ரெடியாகிருச்சு வந்து சாப்பிடுங்கஎன்று கூறிவிட்டு சென்றுவிட்டார் சாவித்ரி

ஜெகநாதன் இருவேளைக்கான உணவை டப்பாவில் அடைத்து கொண்டு அலுவலகம் சென்றுவிட பள்ளி விடுமுறை என்பதால் வைதேகி மலர் வீடு வரை சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுவிட வீடே சற்று அமைதியை பூசி கொண்டது டைனிங் டேபிளில் மூவர் மட்டும் அமரந்தனர் வைஷாலி பார்வையை மறந்தும் அவன் புறம் திருப்பவில்லை கண்ணும் கருத்துமாக உணவில் கவனத்தை செலுத்தி கொண்டிருந்தாள் ஏனோ அவளின் அமைதி அவனுக்கு தவிப்பை உண்டு பண்ணியது அவ்வப்போது அவளின் அலைபாய்ந்து தவிக்கும் விழிகளை பார்த்து கொண்டே மனமில்லாமல் உணவை கொறித்தான் விஜயன்

கமிஷ்னர் அலுவலகம் சென்ற விஷ்ணுவும் துவாரகாவும் அனுமதி கேட்டு உள்ளே செல்லவாங்க என்ன விஷயம் இன்னைக்கு உங்களுக்கு விசாரணை இருக்கு தானே!” என்றவர்வெளிய வெய்ட் பண்ணுங்க இன்னும் கொஞ்ச நேரத்துல ஆபீஸர்ஸ் வந்துருவாங்கஎன்று கைலாசம் பள்ளி ஆசிரியர் போல கண்டிப்புடன் கூற

சார் உங்களுக்கு விஷயமே தெரியாதா.., அச்சோ பாவம் நீங்க என்ன பண்ணுவீங்கஎன்று அனுதாபம் கொண்டவனை பல்லை கடித்து கொண்டு முறைத்தவரின் அலைபேசி ஒலிக்க  

எடுத்து பேசுங்க சார் உங்களுக்கு தான் போன் முக்கியமான விஷயம், யாருக்கும் இப்டி ஒரு சர்ப்ரைஸ் நாங்க கொடுத்தது இல்ல அதுவும் கமிஷ்னர் நீங்க உங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்குறதுல எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு சார்என்று ஏளனத்துடன் பேசிய துவாரகேஷை முறைத்து பார்த்தவர்

Advertisement