Advertisement

விஜயன் கூறியதில் இருவரும் திகைத்து விழிப்பதை கண்டுஎதுக்கு இப்டி பாக்குறிங்க, ஊருக்கு போறத பத்தி யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு தானே பேசிட்டு இருந்திங்க?”என்று இருவரின் முகமாற்றத்தையும் கவனித்து சந்தேகமாய் இழுக்க

உண்மை தெரியவில்லை என்ற எண்ணமே இருவருக்கும் மூச்சு காற்றை இயல்பாக்கியது வைஷாலி எதுவும் பேசவில்லை இலக்கின்றி எதையெதையோ வெறிக்க தொடங்க விஷ்ணுவே  பேச்சை தொடர்ந்தான்கண்டுபிடிச்சிட்டயா யாருக்கும் தெரியாம சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன்என்றவன்சரி யார்கிட்டயும் சொல்லிறாதடா முக்கியமா அத்தைகிட்ட சொல்லிறாத நா பிளான் பண்ணேன்னு தெரிஞ்சா நிச்சயம் கோபப்படுவங்கஎன்று அச்சமயத்தில் சமாளிப்பாக கூறி பேச்சை திசை திருப்பியவன்அப்றம் நீயும் வரணும் வர மாட்டேன்னு மட்டும் சொல்லாத நீ வரலன்னா நானும் போக மாட்டேன்என்று கண்டிப்புடன் கூற

நா வராமலா? கண்டிப்பா வறேன் இங்க எனக்கு என்ன வேலை இருக்கு அதான் மூணு மாசத்துக்கு வெட்டியா உக்கார வச்சுட்டாங்களேஎன்றவன் பின்னால் திரும்பி பார்க்க சபரி அறைவாசலில் சங்கடத்துடன் டிராலியுடன் நின்று கொண்டிருந்தான் 

டேய் உள்ள வாடாஎன்று அழைக்க 

தயங்கி கொண்டே உள்ளே வந்தவன்டேய் விஜி நா வெளிய ஏதாவது ஹோட்டல்ல தங்கிக்கிறேனே ப்ளீஸ் டாஎன்று முகம் சுருக்கி இறைஞ்சும் விதமாய் கேட்க

ப்ச் சும்மா இரு இப்போ இந்த நேரத்துல நீ எங்க போவ சொல்லு! நாளைக்கே வேற வீடு பாக்கலாம் அதுவரைக்கும் மறுத்து பேசாமா இங்க இருஎன்று அடக்கியவன் விஷ்ணுவிடம் திரும்பி

டேய் இது என்னோட காலேஜ் பிரெண்ட் சபரிஎன்று அறிமுகபடுத்திய போது தான் அவனை பார்த்தாள் வைஷாலி ஆனால் அவனிடம் பேசவில்லை 

சரி விஷ்ணு நீங்க பேசிட்டு இருங்க எனக்கு தூக்கம் வருதுஎன்று செல்ல எத்தனித்தவளைஏய் வாயாடி பிரெண்ட் வந்துருக்கான் ஒரு வார்த்தை வான்னு கூப்பிட மாட்டயா! பாத்தும் பாக்காத மாதிரி பேசாம போறஎன்று சற்று முன் நடந்த நிகழ்வே நினைவில் இல்லாது இயல்பாய் பேசியவனை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்தவள் பார்வையை விலகி கொண்டு

முயன்று வரவழைத்து கொண்ட புன்னகையில்வா சபரி எப்டி இருக்கஎன்று பெயருக்கு நலம் விசாரித்துவிட்டு விஜயனை நோக்கிபோதுமா!” என்றுவிட்டு விறுவிறுவென அறையில் இருந்து வெளியேறிவிட்டாள்

எங்கே சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தால் தன் முகமே இன்னதென்று காட்டி கொடுத்துவிடுமோ என்ற பயத்தில் நகன்றுவிட அவளின் செய்கையை வினோதமாக கவனித்தவன்என்னாச்சு இவளுக்கு முகமே சரியில்லஎன்று எண்ணியபடியே விஷ்ணுவிடம்அவளுக்கு என்னாச்சுடா அழுதுருக்குற மாதிரி தெரியிதுஎன்று கேட்க

பின்ன நீ பேசுன பேச்சுக்கு சிரிச்சிட்டா இருப்பா உன்ன நினைச்சு தான் அழுதா இருந்தாலும் நீ அவ கிட்ட அவ்ளோ கடுமையா பேசிறுக்க கூடாது பாவம் ரொம்ப ஃபீல் பண்ணா தெரியுமா?” என்று முகத்தை சோகமாய் வைத்து கொண்டு விஷ்ணு கூற விஜயனுக்கு மனம் தவிப்பில் ஆழ்ந்து குற்றவுணர்ச்சியில் தத்தளித்தது

அவன் முகம் சுருங்குவதை கண்ட விஷ்ணுசரியான அழுத்தகாரண்ட மனசுல ஆசை இருந்தும் வெளிய காட்டிக்க மாட்டிங்கிற இருக்கட்டும் பாத்துகிறேன்என்று மனதோடு பேசிக்கொண்டவன்சரிடா காலேஜ் பிரெண்டுன்னு சொன்ன அவ்ளோ தானா! என்ன அறிமுகபடுத்தி வைக்க மாட்டியா?” என்று புன்னகை புரிய

அவளை எண்ணி மருகியவன் நினைவை ஒதுக்கிவிட்டுசாரிடா இது சபரி என்னோட காலேஜ் பிரெண்ட்” 

அத தான் முதல்லயே சொல்லிட்டயே அப்றம் திரும்பவும் சொல்ற! உன்னோட மனசு இங்க இல்ல வேற எங்கயோ…. இருக்கு!” என்று கேலி பேச

நீ நினைக்கிற மாதிரி இல்ல! எல்லாம் இருக்க வேண்டிய இடத்துல தான் இருக்குஎன்று வீம்பு செய்தவன் சபரியிடம்இது என்னோட க்ளோஸ் பிரெண்ட் விஷ்ணு, ட்ரைனிங் பீரியட்ல நா இவன் வைசு அப்றம் துவாரகா நாங்க நாலு பேரும் தான் எங்க போனாலும் ஒண்ணா போறது வர்றதுன்னு இருப்போம், அப்போ இருந்து ரொம்ப நெருக்கம் ஒருத்தருக்கொருத்தர் எதுக்காகவும் விட்டு கொடுக்க மாட்டோம்என்று நட்பின் பெருமையை கூற

டேய் போதுண்டா புகழாரம் பாடுனது பாவம் அவரு சாப்டாரா இல்லையான்னு கூட கேக்காம இப்டி நிக்க வச்சு பேசிட்டு இருக்கஎன்றவன்நீங்க உக்காருங்க சார்!” என்று மரியாதை நிமித்தம் பன்மையில் கூற

விஷ்ணுவை பார்த்து மெலிதாய் சிரித்தவன்சார் வேணாமே எனக்கும் விஜிக்கு ஒரே வயசு தான் சோ நீங்க பேர் சொல்லியே கூப்பிடலாம்என்றதும்ஓகே சபரிஎன்று சட்டென புது நட்பிடம் ஐக்கியமாக சபரியின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது 

சரி நீங்க ரெண்டுபேரும் பேசிட்டு இருங்க நா இவருக்கு போய் சாப்பிட ஏதாவது இருக்கான்னு பாத்து கொண்டு வறேன்என்று விஷ்ணு சென்றதும்

 சபரியின் முகம் கண்ட விஜயன்என்னாச்சு அங்க வச்சு கேட்டதுக்கு எதுவும் சொல்லாம வீடு பாத்து தர முடியுமான்னு கேட்ட வீட்டுக்கு போய் பேசிக்கலாம்னு தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன், அப்பா ஏதாவது சொன்னாரா?” என்று கவலையோடு கேட்க 

அமைதியாக இருந்தான் சபரிஇப்டி அமைதியா இருந்தா எப்டி! பிரச்சனைன்னு வந்ததும் என்னோட ஞாபகம் தானே வந்துச்சு! எனக்கு தானே போன் பண்ண, கஷ்டம்ன்னு வந்துட்டு இப்போ எதுவும் சொல்லாம இருந்தா எனக்கு எப்டி தெரியும்? உன்னோட ப்ராப்ளம் என்னன்னு வாய திறந்து சொல்லுடா” 

அந்த வீட்டுல இருக்க பிடிக்கலடாஎன்றவன் அண்ணன் தம்பி இருவருக்கும் நடந்த உரையாடல்களை கூறிவிட்டுஇனி ஒரு நிமிஷம் அங்க இருந்தாலும் நிச்சயம் நா செத்து தான் போவேன் மதிப்பே இல்ல பணம் வந்த பிறகு ரெண்டுபேரோட வாழ்க்கையே மாறி போச்சு இஷ்டத்துக்கு செலவு பண்றாங்க ரொம்ப மாறிட்டாங்கடா, பாசம் பெரிசில்ல பணம் தான் பெருசுன்னு இருக்கான்! அந்த வீட்டுல என்ன ஒரு மனுஷனா கூட மதிக்கிறதில்லை,மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா என்ன விட ஆறு வயசு சின்னவன் எடுத்தெரிஞ்சு பேசுறான் கண்டிக்கிறதுக்கு ஆள் இல்லாம ஊதாரியா திரியிறான் 

என்ன சொல்றதுன்னே தெரியல ரெண்டுபேரும் சேந்து ஏதோ தப்பு பண்றாங்க ஆனா என்ன பண்றாங்கன்னு தான் தெரியல மாசம் ஆனா லட்சம் லட்சமா கொண்டு வர்றாங்க இதெல்லாம் எப்டி வருதுன்னு கேட்டா அவனோட மூளைய யூஸ் பண்ணி சம்பாதிச்சேன்னு திமிரா சொல்றான், அங்க இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் மூச்சு முட்டுற மாதிரி இருந்துச்சு அதுவும் இன்னைக்கு கைகலப்பு வரைக்கும் வந்துருச்சு என்னோட மரியாதைய நான் தான் காப்பாத்திக்கணும் அதான் கிளம்பி வந்துட்டேன்என்று வருத்தத்துடன் இயம்ப

சரி சரி பீல் பண்ணாதஎன்று தோள் தட்டி அமைதிபடுத்தியவன்ஆனா கார்த்திக் இப்டி மாறுவான்னு நான் எதிர்பாக்கல அவன பத்தி சொல்றப்ப கேக்குற எனக்கே கஷ்டமா இருக்கு! கூடவே இருந்த உனக்கு எப்டி இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியிது கவலைப்படதா வயசு பையன் கொஞ்சம் அப்டி இப்டி தான் இருப்பான் போக போக சரியாகிரும் அவனும் புரிஞ்சு நடந்துப்பான்என்று நம்பிக்கை ஊட்ட

எனக்கு அந்த நம்பிக்கை இல்ல விஜி ஆணவத்துல திரியிறான் அவன் போற போக்க பாத்தா என்னைக்காவது ஒரு நாள் அனாதையா ஏதாவது ஒரு இடத்துல செத்து கிடப்பான்னு தான் தோணுது! இல்லன்னா நானே அவன கொன்னாலும் கொன்னுருவேன்என்று உக்கிரதோடு பேசியவனை கண்டு திகைத்தவன்

டேய் ஏண்டா இப்டி பேசுற உன்னோட தம்பிடாஎன்றதும் 

அந்த ஒரு காரணத்துக்காக தான் சும்மா இருக்கேன் அம்மா மட்டும் உயிரோட இருந்திருந்தாங்கன்னா அவன் இப்டி ஆகிருக்க மாட்டான்என்று மனம் வருந்தினான் சபரி

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே உணவை கொண்டு வந்த விஷ்ணுசாரி சபரி சப்பாத்தி மட்டும் தான் இருக்கு வேற எதுவும் இல்ல அதனால தொட்டுக்க மாங்கா ஊறுகாய் கொண்டு வந்துருக்கேன் காமினேஷன் நல்லா இருக்கும் எனக்கு பிடிக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” 

எதுக்கு விஷ்ணு இதெல்லாம்  இப்போ நா இருக்குற மனநிலையில சாப்பிட தோணல, சாரி விஷ்ணு கொஞ்சம் தண்ணி மட்டும் கொடுங்க போதும்என்றதும்

உனக்காக கொண்டு வந்துருக்கான் வேணான்னு சொல்ற வாங்கி சாப்பிடுஎன்ற விஜிஎன்ன தான் மனவருத்தம் இருந்தாலும் சாப்பாட ஸ்கிப் பண்ண கூடாது நைட்டு எதுவும் சாப்பிடாம படுப்பயஎன்று கண்டிப்பு காட்டியவன் விஷ்ணுவிடம் இருந்து தட்டை வாங்கி சபரியின் கையில் திணித்தான்

அன்றைய களைப்பினாலும் மாத்திரையின் வீரியத்தினாலும் உறக்கம் விழிகளை கிறங்கடிக்கடேய் விஜி நாளைக்கு கமிஷ்னர் ஆபிஸ் போகணும் நானும் துவாரகாவும் கமிஷ்னர பாக்க போறோம் நீ வர வேணாம் சபரிக்கு ஹெல்ப் பண்ணு!, பொறுமையாவே வீடு பாருங்க ஒன்னும் அவசரமில்லஎன்றவன்டேய் நல்ல வீடா இருக்கணும் ரெண்ட் எவ்ளோ என்னென்ன தெளிவா கேட்டு அவருக்கு ஒத்து போற மாதிரி பாத்து கொடுஎன்றுவிட்டுசரிடா எனக்கு தூக்கம் வருது அவன் சாப்பிட்டதும் லைட் ஆப் பண்ணிட்டு படுங்கஎன்று கூறிவிட்டு கட்டிலின் ஓரத்தில் படுத்து கொள்ள

உணவருந்தி முடிக்கும் வரை அவனையே பார்த்து கொண்டிருந்தவன் தட்டை வற்புறுத்தி வாங்கி கொண்டுநீ தூங்கு நா கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்என்று கூறிவிட்டு செல்ல சோபாவில் சென்று  உடலை குறுக்கி படுத்து கொண்டான் சபரி

சமையலறை சென்று தட்டை கழுவி வைத்தவன் வைஷாலியின் அறையை தயக்கத்துடன் பார்த்தான் கோபத்தில் பேசிய வார்த்தைகள் நினைவில் இல்லை ஆனால் அவளின் வாடிய முகம் அழிக்க முடியாத அச்சாய் பதிந்து போனது தயங்கி தயங்கி அறைக்குள் சென்றவன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவளை அரை வெளிச்சத்தில் பார்த்ததும் மனம் கனிவுற்றது, அழுது கொண்டே உறங்கியிருக்கிறாள் என்பதை கன்னத்தில் வரிவரியாய் தெரிந்த கண்ணீர் வடுக்களே காட்டி கொடுத்தன அவள் அருகில் சென்று தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன் தலையை பரிவாக கோதியபடிசாரி வைசு ரொம்ப ஹார்ஸா பேசிட்டேன் நீ இந்த அளவுக்கு பீல் பண்ணுவன்னு எனக்கு தெரியாதுடி எப்பவும் போல விளையாட்டா எடுத்துப்பன்னு தான் நினைச்சேன்என்றவன் பெருமூச்சை வெளியிழுத்து 

என்னன்னு தெரியல நீ அழுதா மனசு ஒரு மாதிரி இருக்கு உன்ன தாண்டி வேற விஷயம் எதையும் யோசிக்க முடியலை நீ லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டு பின்னாடியே சுத்துறது தான் எனக்கு பிடிக்கல ஏற்கனவே ஒருத்திகிட்ட மனச கொடுத்துட்டேன் இப்போ அவ என்னோட மனசுல இல்லைன்னாலும் உன்ன என்னால ஏத்துக்க முடியல சாரிடி கோபத்தை அடக்க முடியாம அப்டி பேசிட்டேன் இந்த அளவுக்கு நா முன்னேறி இருக்கேன்னா அதுக்கு காரணம் என்னோட வைஷ்ணவி தான் அவ எனக்கு தேவதைன்னா நீ எனக்கு….?” என்று நிறுத்தியவன் அவள் முகம் பார்க்க 

Advertisement