Monday, July 14, 2025

    நான் உன் நிறையன்றோ!

    நான் உன் நிறையன்றோ! 32 ப்ரைட் கம்பெனி.. ஐந்து வருடங்களுக்கு முன்புவரை.. மார்கெட்டில் கொடிகட்டி பறந்த நிறுவனம். அவர்களின் மகன் தவறான பழக்க வழக்கத்தால் சூதாட்டத்தில் பணத்தை இழந்து.. கடனாளியாக.. நிலைமையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டார் கடந்த நான்கு வருடம் முன்பு. அதுதொட்டு அவர்களின் தொழில் இறங்கு முகமானது. மகன் இறந்த துக்கத்தில் குடும்பம் நிலைகுலைந்து...
    நான் உன் நிறையன்றோ! 31 மயூரா கிளம்பிச் சென்றாள். அவளிற்கு, எதையும் யோசிக்க நேரமில்லை. கணவனை தெரியும்.. ஆனாலும் ஒரு நப்பாசைதான் இறுதியாக கூப்பிட்டால் வந்துவிடுவாரோ என.. அதனால் அழைத்தாள். கணவன் எப்போதும் போல.. வேலை எனவும் அமைதியாகிவிட்டாள். மயூராவிற்கு நேரம் சென்றது. கபாலிக்கு, கீழே வசீகரனை பார்த்ததும் ஒருமாதிரி.. கோவமும் வருத்தமும் வந்து சேர்ந்துக் கொண்டது. வாரத்தில் இரண்டு...
    மனையாளின் கோவம் கொண்ட முகம் அவனுக்கு எப்போதும் பிடிக்கும்.. அத்தனை பாவம் அதில்.. ‘இவளுக்கு நடனம் தெரிவதால்.. இப்படி ப்வாம் வருகிறதா? இல்லை, இவளின் இயல்பான பாவத்தால் நடனம் எளிதாக வந்ததா?’ என சட்டென யோசனைக்கு தாவினான் கபாலி. மயூரா, கணவன் தன் கோவத்தால் அமைதியாக இருப்பதாக எண்ணி மீண்டும் கேள்வி கேட்டாள்.. “ஆமாம், உங்களை...
    நான் உன் நிறையன்றோ! 30 வளைகாப்பு முடிந்து ஜெயந்தினி, தாய் வீடு வந்து சேர்ந்திருந்தாள். அவளோடு, வசீகரனும் அடிக்கடி தன் மாமியார் வீடு வருகிறான். நேரம் எல்லோருக்கும் பறந்தது.  கபாலி, எப்போதும் போல.. வீட்டில் அதிகம் முகம் காட்டுவதில்லை.. காலையில் 8:30க்கு வீட்டிலிருந்து கிளம்பினால்.. இரவு பதினொரு மணிக்குதான் வீடு வருவான். கபாலிக்கு தொழில் நல்லபடியாக சென்றது. அந்த ப்ரைட்...
    சுமதி, தன் கணவருக்கும், மகனுக்கு அழைத்து சொன்னார். சமையல் தனியாக கபாலிக்கு என நடக்க தொடங்கியது. ஜெயந்தினியால் அந்த வாசனைக்கு அமர முடியவில்லை.. மேலே சென்றாள். ஆதிகேசவன் வந்துவிட்டார். கபாலியும் அவரும் பேச தொடங்கினர். மயூரா மேலே சென்றாள். ஜெயந்தினியும் இவளும் பேசியபடியே அமர்ந்திருந்தனர். ஜெயந்தினி “சண்டை ஏதும் இல்லையே.. கபில் அன்னிக்கு வந்தது பற்றி ஏதாவது...
    நான் உன் நிறையன்றோ! 29 மறுநாள், தாமதமாகத்தான் எழுந்தனர் கபாலியும் மயூராவும்.. கபாலிக்கு, எழவே மனதில்லை போல.. அப்படியே மயூராவின் நடமாட்டத்தை கவனித்தபடி படுத்திருந்தான். மயூரா வெட்கமாகவும்.. முரைப்பாகவும் “எதுக்கு இப்படி பார்க்கிறீங்க” என கேட்டபடியே.. தலைமுடியை உதறிக் கொண்டிருந்தாள். கபாலி பதிலே சொல்லவில்லை.. இதமான மனநிலை அவனுக்கு. அதை பேச்சில் சொல்லி விளங்க வைக்க அவனுக்கு தெரியவில்லை.. அதனால்,...
    மயூராவிற்கு, மனது இப்போதுதான் நிம்மதியானது. கணவன் தன்னிடம் புன்னகை முகமாக வழியனுப்பி வைத்து அவ்வளவு சந்தோஷம் அவளுக்கு.. ‘இந்த விழா முடித்து, சென்னை வந்ததும்.. எல்லாவற்றையும் பேசிடனும்..’ என எண்ணிக் கொண்டே சென்றாள் சென்னைக்கு. அடுத்த நான்கு நாட்களும், அவனுக்கு, நத்தையாக நகர்ந்தது. அலுவலகத்தில் தங்குவதில்லை.. குவாரிக்கு என முன்பே ஒரு ஆட்களை வேலைக்கு அமர்த்திவிட்டான்....
    நான் உன் நிறையன்றோ! 28 மயூரா, துணிகளையும் தனக்கு தேவையானதையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். கணவன் ‘எனக்கு நீ யார்’ என கேட்டு சென்றதிலிருந்து பெண்ணவளின் மனது அதே கேள்வியை, அவளிடமே கேட்டது. நான் தானே டைம் கேட்டேன்.. அவனை நெருங்கி பழக வேண்டும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என நான்தானே டைம் கேட்டேன்.. இப்போது, அவர்...
    மயூரா “என்மேல் கோவம்ன்னா திட்டுங்க, அதுக்காக சாப்பிடாமல் போகாதீங்க” என்றாள். கபாலி “ம்.. எனக்கு யார்மேலும் கோவம் இல்லை” என்றவன் கிளம்பினான். மயூரா “என்னை அகடாமியில் நீங்கதான் ட்ரோப் பண்ணும். அத்தை வண்டி எடுத்து போயிருக்காங்க” என்றாள் சத்தமாக. கபாலி ஏதும் பேசாமல் அமர்ந்தான் சோபாவில். மயூரா டேபிள்மேல் இருந்த உணவுகளை மூடி வைத்துவிட்டு, வேலை செய்பவரிடம் “ஏதாவது ஒரு...
    மயூரா நிமிர்ந்து பார்த்தாள்.. கண்களில் மையில்லை.. முகத்தில் பொட்டில்லை.. ஆனாலும், நிலா போல ஒளிர்ந்தது அவளின் முகம். ஆனால், அவனை நெருங்கவிடவில்லை அந்த முகம். கபாலி ஏதும் பேசாமல் வந்து அமர்ந்துக் கொண்டான் கட்டிலில். மயூராவிற்கு, கணவனின் பாராமுகம் அவ்வளவு வலியை தந்திருந்தது.. ‘அலுவலகம் சென்றிருக்கிறேன்.. என்னை அமர்த்தி என்னவென விசாரிக்கக் கூட இல்லை அவர் என...
    நான் உன் நிறையன்றோ! 27 கபாலி, அலுவலகத்திற்கு சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டு, வந்தான் தன் அறைக்கு.. ஆனந்த் வந்து நின்றார், பேச வேண்டும் என. கபாலி என்ன என்பதாக பார்த்தான். ஆனந்த் “கபில், பல்க் ஆர்டர் ஒன்னு வந்திருக்கு.. ஒரு ஹோட்டல், அதற்கான ஆன்லைன் டெண்டர் இருக்கு..” என பேசத் தொடங்கினார்.  கபாலி கேட்டுக் கொண்டான்.. தலையசைத்தான். என்னமோ...
    நான் உன் நிறையன்றோ! 26 கபாலியும் மயூராவும் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர். பெற்றோர் அன்பாக வரவேற்றனர். சுமதி இருவரின் முகத்தை உற்று உற்று பார்த்தார்.. இருவரின் முகமும் புன்னகையை தொலைத்திருந்தது. கபாலி, வண்டியில் வரும் போதும் பேசவில்லை.. ஏன் மனையாள் அருகில் வருகிறாள் என்ற ப்பாவம் கூட காட்டவில்லை. காலையில் என்ன முயன்றும் மனையாள் தன் பேச்சை...
    நான் உன் நிறையன்றோ! 25 மயூரா வகுப்பிற்கு கிளம்பி சென்றதும், மகேஸ்வரி வேலை செய்பவரிடம் சமையலுக்கான வேலையை சொன்னார். பின்னர் தனது மகனுக்கு அழைத்தார் தொலைபேசியில். கபாலி, குடோன் கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான்.. அன்னையின் அழைப்பை கட் செய்து சைலெண்டில் போட்டுவிட்டு தன் வேலையை தொடர்ந்தான். அன்னையும் விடாமல் மகனை அழைத்துக் கொண்டிருந்தார் குறிப்பிட்ட இடைவெளியில். அன்னைக்கு பயம் ’வீம்பாக...
    நான் உன் நிறையன்றோ! 24 மயூராவை, காலையில் கபாலிதான், அவளின் அகாடமியில் ட்ரோப் செய்தான். நேற்று நடந்ததை சொன்னான்.. இல்லை, உளறினான். அஹ..  இயல்பாக பேச வரவில்லை.. தன்னவளிடம். கபாலிக்கு, மேலும் எதையும் யாரிடமும் பகரந்ததில்லை அவன்.. கோர்வையாக மனையாளிடம் பேச தயக்கம் வந்து சேர்ந்தது “நான் போனேன் லேட் ஆச்சு.. அப்படி இனி.. ஆச்சுன்னா.. ஒன்பது...
    நான் உன் நிறையன்றோ! 23 மயூராவிற்கு, அந்த இரவு கனவுகளோடு சென்றது. அவளின் பெரிய கண்களில் முழுவதுமாக நிறைந்து நின்றான், அவளின் கணவன். அவனை மீறிய உறக்கமென்பது அதிகாலையிலேயே கிடைத்து மயூராவிற்கு. கபாலிக்கும் அப்படியே. மயூரா அளவிற்கு இல்லையென்றாலும்.. அவனின் கை விரல்.. அவளின் மென்மையை இன்னமும் மறக்கவில்லை.. ‘வெல்வெட் விரல்கள்’ என அவனின் ஆழ்மனம் ரகசியமாக அவனிடம்...
    சுமதி, எதேதோ பத்து நிமிடம் பேசினார். எதற்கும் அசையவில்லை பெண். கீழே வந்துவிட்டார்.. தன் கணவரிடம் “அவளுக்கு கொஞ்சம் முடியலையாம்.. கிளம்பலை” என்றார். கபாலி சங்கடமாக பார்த்தான், பின் “மாமா, நான் மேலே போய் பேசிக்கிறேன், நீங்க கிளம்புங்க” என்றவன் பதிலை எதிர்பாராமல் மேலே சென்றான். ஆதிகேசவன் தலையசைக்க.. அதை பார்க்க அவன் அங்கில்லை. மேலே சென்றான் கபாலி.....
    நான் உன் நிறையன்றோ! 22 ஜெயந்தினிக்கு, தாலி பெருக்குவிழா நடத்த முடிவெடுத்திருந்தனர். நேற்றே பெரியவர்கள் வசீகரனின் வீட்டில் தங்களுக்குள் பேசி.. ஜோதிடரை பார்த்திருந்தனர். அதனால், காலையில் ஆதிகேசவன், கபாலிக்கு அழைத்தார். கபாலி,  தன் மாமனார் காலையில்.. ஏழுமணிக்கே அழைக்கவும், நேற்றுதான் மயூராவிடம் பேசியிருந்தானே, அதனால்.. ‘அன்னிக்கு மாதிரி எழறைய கூட்டிட்டாளா?’ என மனையாளை சபித்தபடியே அந்த திரையை பார்த்திருந்தான், கபாலி. அதே...
    ம்.. அப்படிதான் நடந்தது.. மயூரா ஒருநாள், நடனவகுப்பு செல்லவில்லை.. முகம் வீங்கி இருந்ததால்.. அடுத்தநாள் கிளம்பிவிட்டாள். ஆக, மகேஸ்வரியும்.. மதிய உணவோடு.. மருமகளை வந்து பார்த்தார்.  மயூராவிற்கு, அவர் மீது எந்த வருத்தமும் இல்லை.. அதனால், நன்றாக பேசினாள். அப்போதெல்லாம் மகேஸ்வரி மகன் குறித்து வருத்தம் கொண்டார்.. ‘அவன் ஒருவாரம் ஆச்சு வீடு வந்தது. கல்யாணத்துக்கு...
    நான் உன் நிறையன்றோ! 21 கபாலி, இரவு முழுவதும் அந்த ஒட்காவோடுதான் இருந்தான்.. அதையும் முழுதாக குடிக்கவில்லை.. மொட்டை மாடியில்தான் இருந்தான். ஏனோ, முதல்முறை.. கொஞ்சம் வலித்தது, அது வலி என அவன் உணரவில்லை.. ‘என் கௌரவம் போகிற்று.. நான் தோற்றேன்’ எனதான் சிந்தனை அவனுக்கு. இவன் கீழே வரவில்லை.. அதனால், அன்னை அந்த அர்த்த ராத்திரியில் அவனின்...
    நான் உன் நிறையன்றோ!.. 2௦ அன்று முழுவதும் மயூராவும் கபாலியும் அங்கே, மயூ வீட்டில் இருந்தனர். கபாலியின் வீட்டு பெரியவர்கள் எல்லோரும் மதியமே உண்டு முடித்து கிளம்பிவிட்டிருந்தனர்.  கபாலி மாலையில் எல்லோருடனும் இயல்பாக பேசினான். வசீகரன் அலுவலகம் கிளம்பிவிட்டான். ஆதிகேசவன் வீட்டில் இருந்தார். மருமகனோடு தனியே பேசிக் கொண்டிருந்தார் நிறைய நேரம்.. ஆதிகேசவனுக்கு, தவிர்க்க முடியாமல் பெண்ணை கொடுத்தோமே...
    error: Content is protected !!