Advertisement

நான் உன் நிறையன்றோ!

33

மயூராவை அறைக்கு மாற்றினர். அப்போதே மயூவிற்கு நினைவு வந்திருக்க.. வந்து பரிசோதித்த மருத்துவர் ‘நீங்க, கன்சீவா இருந்தீங்க.. ஆனால் அபாட் ஆகிடுச்சி.. நல்லா ரெஸ்ட் எடுக்கணும்..” என கூறி மற்ற விவரங்கள் எல்லாம் விரிவாக சொல்லி சென்றனர்.

மயூராவிற்கு, தான் கன்சீவாக இருந்ததே தெரியாமல் இருந்தது.. இப்போது மருத்துவர்கள் அதுபற்றி சொல்லவும்.. கண்ணில் நீர் நிற்காமல் வந்துக் கொண்டிருந்தது.

அவளை அறையில் விட்டதும்.. சுமதி உள்ளே வந்தார். 

தன் அன்னையின் கைகளை பற்றிக் கொண்டாள்.. தான் கன்சீவாக இருந்ததே தெரியவில்லை அவளுக்கு.. அது கலைந்தது அதைவிட அதிர்ச்சி.. பேச்சே வராமல் தன் அன்னையின் கைகளை பற்றிக் கொண்டு ஒரே அழுகை மயூரா.

சுமதிக்கும், அழுகைதான். ஆனால், அவருக்கு.. தன் பெண்ணை தேற்ற வேண்டிய கட்டாயம் இருக்க.. சுமதி அதட்டலாக “என்ன மயூ, இப்படி அழுற.. விடு பார்த்துக்கலாம். இப்படி அழுதால்.. கை வலிதான் அதிகமாகும்.. உடம்புதான் முக்கியம்.. எத்தனை பெரிய கண்ணாடி தெரியுமா.. எடுத்து வந்து காட்டினாங்க.. ப்பா.. ஏதாவது காம்ப்லீகேட் ஆகிட போகுது. அமைதியா இரு.. அழாத. மத்தது எல்லாம் அப்புறம் பேசலாம். நீ தைரியமா இரு” என்றார்.

மயூராவிற்கு, தன் அன்னை தன் பேச்சை கேட்கவில்லை எனவும் “எங்க ம்மா, அவர்.. எங்க..” என்றாள்.

சுமதி “இப்போ வந்திடுவாங்க.. அப்பாவும் அவரும் எதோ வெளிய போயிருக்காங்க.. வந்திடுவாங்க. நீயே அழுதால், யார் உன் வீட்டுக்காரார்கிட்ட பேசறது. உன்னை வந்து நைட் பார்த்தார். முகமே சரியில்ல.. அப்படியே யார்கிட்டவும் பேசாமல்.. அப்போவோட போயிட்டார்.. அண்ணன் டீ குடிங்கன்னான்.. அப்படியே வைச்சிட்டு போயிட்டார்.. நீ அழாத.. தைரியமா இரு” என அன்னை, அவளின் கணவனை காட்டி, பெண்ணின் மனதை மாற்ற எண்ணினார்.

ஆனால், தாய்மை என்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்டது அன்றோ… தான் அன்னை என்றே தெரியாமல்.. பறிகொடுத்த இளம் அன்னைக்கு.. கையின் வலி தெரியவில்லை.. இடுப்பின் வலி தெரியவில்லை.. கணவனின் தூரம் தெரியவில்லை.. மனதின் கனம் மட்டுமே இருந்தது.. உருவகமில்லா கனம். திருமணமாகி.. ஆகிற்று, அடுத்தவாரம் வந்தால் ஒருவருடம் நிறைவு வரபோகிறது.  தங்களின் அன்பை.. சொல்ல.. ஒரு ஜீவன் வந்துவிடும் எனத்தான் காத்திருந்தாள்.. தாமதமாகட்டும்.. ஆனாலும், எங்கள் அன்பின் சாட்சி.. நாங்கள் நன்றாக வாழ்கிறோம் பிணக்கில்லை என ஊருக்கு சொல்ல.. ஏன் எங்களுக்கே சொல்லிக் கொள்ள சாட்சி வந்துவிடும் என எண்ணியிருந்தாள். ஆனால், அந்த அன்பின் சாட்சி.. இப்படி நழுவி போகும்.. என் உயிர்கழுவி போகும் என அவள் எண்ணவேயில்லை. உதடுகளும் கண்களும் ரத்தநிறமென சிவக்க சிவக்க.. முகமும் அதே சிவப்பை தனக்குள் எடுக்க தொடங்க.. அன்னை சுமதிக்கு பயமானது.

சுமதி மருத்துவரை அழைத்தார்.

மருத்துவர் வந்து மயூவிடம் தனியாக பதினைந்து நிமிடம் பேசினார்.. ஆசுவாசப்படுத்தினார். ‘இதெல்லாம் பெரிய விஷயமில்லை.. நீ யெங்.. சீக்கிரமாக இன்னொன்று கிடைக்கும்..  மூன்றே மாதம்.. அதுக்கு நீ சரியா இருக்கணும்.. ஸ்டைன் பண்ண கூடாது.. அப்புறம் உனக்குத்தான் காம்ப்ளீகேட் ஆகும்.’ என பேசினார்.

மயூ, அதில் அமைதியாகவில்லை.. வருங்கலாத்தை ஏற்க அவள் தயாராகவில்லை. இன்னும் அழுதால்.. வாய் பேசவில்லை.. கண்ணீரும் நிற்கவில்லை. கேவல் வெடித்துக் கொண்டிருந்தது.

மருத்துவர்கள் அவள் உறங்குவதற்கு மருந்து கொடுத்து சென்றனர்.

சுமதி வெளியே அமர்ந்துக் கொண்டார். வசீகரன் வீடு சென்று குளித்து, தன் மனையாள் மாமியார்.. கூட்டிக் கொண்டு வந்தான். தன் அன்னைக்கு உணவு.. தங்கைக்கு தேவையானது என எல்லாம் எடுத்து வந்தான்.

மகேஸ்வரி ஜெயந்தினி இருவரும்.. மயூரா உறக்கத்தில் இருக்கும் போதே பார்த்து வந்தனர். ஜெயந்தினியை.. அதிக நேரம் அங்கே இருக்கவிடவில்லை சுமதி. மகனோடு அனுப்பி வைத்துவிட்டார்.

மகேஸ்வரியும் சுமதியும் அடிக்கடி சென்று மயூராவை பார்த்து வந்தனர். சுமதி அப்போதுதான் கபாலி இங்கு வந்தது பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.. தன் சம்பந்தியிடம் “மாப்பிள்ளை.. நிமிர்ந்து கூட எங்களை பார்க்கலை அண்ணி, யார்கிட்டவும் பேசவேயில்லை.. மயூவின் அப்பாகிட்ட மட்டும் எதோ பேசினார்.. வசீ, டீ வாங்கி வந்தான்.. ரூமில் அப்படியே இருக்கு.. குடிக்கவேயில்ல.. என்னமோ” என புலம்பினார்.

மகேஸ்வரி “அவன் அப்படிதான் அவங்க அப்பா இறந்ததிலிருந்து. எங்ககிட்ட கூட பேசறதில்லை. இப்போதான் மயூ வந்ததும் கொஞ்சம் சரியானான்.. திரும்பவும், இப்படி.. என்னமோ, அவனுக்கு மட்டும் ஒன்னு மேல ஒன்னு, அடியா விழுகுது..” என்றார்.

இப்படியே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இன்னமும் ஆதிகேசவனும் கபாலியும் வரவில்லை. போன் ஏதும் செய்யவில்லை. சுமதிக்கு, மகள் எழுந்தாள்.. மீண்டும் அழுவாளே.. எப்படி சமாளிப்பது என தோன்ற.. தன் கணவருக்கு.. அழைத்து பேசினார்.

இருவரும்.. நேரே மருத்துவமனைக்கு வந்துக் கொண்டிருக்கிறோம் என்றார் ஆதிகேசவன்.

சுமதி “நீங்க.. நம்ம வீட்டுக்கு போய் குளிச்சிட்டு.. சாப்பிட்டு வாங்க.. மாப்பிள்ளை ஏதும் சாப்பிடலை போல.. நீங்க சொன்னால் கேட்ப்பார். அப்புறம் இங்க வாங்க” என்றார்.

 

மயூரா, மதியம்தான் கண்விழித்தாள். தன் மாமியாரை பார்த்து ஒருபாடு அழுதாள். மகேஸ்வரிக்கும் அதே நிலைதான். சுமதியால் ஏதும் பேசமுடியாத நிலை. என்னவென ஆறுதல் சொல்லுவது.. என அமர்ந்திருந்தார்.

மகேஸ்வரியே சுதாரித்து, மயூராவிற்கு ஆறுதல் சொன்னார். மயூராவிற்கு என்னமோ நினைத்து நினைத்து அழுகைதான். அவளின் மனம் கேட்கவேயில்லை.

மயூரா “எங்க ம்மா.. அவர்” என்றாள்.

சுமதி “வந்திடுவார்.. அப்பாவும் அவரும்.. கொஞ்சம் வெளிய போனாங்க.. இப்போது நம்ம வீட்டுக்கு போயிட்டு குளிச்சிட்டு.. சாப்பிட்டு வரோம்ன்னு சொன்னாங்க..” என விளக்கி கொண்டிருந்தார் மகளுக்கு.

நடு இரவில் ஆதிகேசவனும் கபாலியும் கிளம்பி, கபாலியின் குவாரி சென்றனர். அங்குதான், ஆனந்த் அந்த ஆட்களை பிடித்து வைத்திருந்தான். போலீஸ், இங்கே அலுவலகத்தில் விசாரித்துவிட்டு “கேஸ் எடுக்கனும்மான்னு.. சொல்லுங்க” என சொல்லி சென்றுவிட்டனர்.

ஆனந்த அந்த ஏஜென்ட் ஆட்களிடம் விசாரித்ததில் ப்ரைட் ஆட்கள் என தெரிந்து கொண்டார். எனவே, கபாலியை அழைத்து வர சொன்னார்.

ஆதிகேசவன் கபாலி இருவரும் குவாரி வந்தனர். ஆட்கள் பதினைந்து நபர்கள் இருப்பார்.., கட்டி வைத்திருந்தனர்.

கபாலிக்கு ஏதும் தோன்றவில்லை, ஆனந்திடம் ஏதும் கேட்க கூட இல்லை.. அமைதியாக அந்த ஆட்களை பார்த்துக் கொண்டே அமர்ந்தான். ஆதிகேசவன் ஏதும் பேசவில்லை. 

ஆனந்த் வந்து விரவம் சொன்னார் “அந்த ப்ரைட் கம்பெனிதான்.. அவர் பேர்தான் சொல்றாங்க..” என்றார்.

ஆதிகேசவன் அந்த ஆட்களிடம் எச்சரித்தார் “சரியா சொல்லுங்க யாருன்னு..” என்றார்.

அவர்களும் ப்ரைட் கம்பெனி மாப்பிள்ளையின் பெயர்தான் சொல்லினர். உடனே ஆதிகேசவன் எல்லோரையும் விடுவிக்க சொல்லிவிட்டார்.

கபாலி ஏதும் பேசாமல் அமர்ந்துக் கொண்டான்.

ஆதிகேசவன் “என்ன மாப்பிள்ளை” என்றார்.. கேள்வியாக.

கபாலி “மாமா.. அங்க, மயூவோட அகாடமி போய் பார்க்கணும்.. மாமா. நம்ம ஆபீஸ் போகணும்.” என்றான்.

ஆதிகேசவன் “அதில்ல மாப்பிள்ளை, அந்த ப்ரைட் கம்பெனி மகேந்திரந்தன்தான் எல்லாம் செய்ததாக சொல்றாங்க.. என்ன பண்ணலாம் சொல்லுங்க..” என்றார்.

கபாலி “தெரியலை மாமா” என்றான்.

ஆதிகேசவன் என்ன சொல்லுவது என தெரியாமல் கபாலியை பார்த்தார்.

கபாலி “மாமா.. என்கிட்ட அவங்களின் கிரெடிட் நோட் நிறைய இருக்கு. இப்போ வரை.. அவர்களுக்கு ஸ்டாக் போட்டுகிட்டுதான் இருக்கு. அதனால், எனக்கு தெரியாமல் ஏதும் நடந்திட கூடாதுன்னு அந்த லேன்ட்டில் என் பெயர் அடிபடும் போல செய்திருந்தேன். ஆ..ஆனால், இவ்வளவுதூரம் அவன் இறங்கியிருக்க வேண்டாம்.. நாட் ஃப்பேர்.. ம்..” என தலையை பிடித்துக் கொண்டு எழுந்து அங்கும் இங்கும் நடந்தபடியே சொன்னான்.

ஆதிகேசவன் கேட்டுக் கொண்டார்.

கபாலி “மாமா.. மயூவிற்கு, என்னால்தான் இப்படி நடந்துதுன்னு தெரியும் போது.. நான் என்ன பண்ணுவேன் மாமா..” என்றான், பேச்சின் போக்கையே மாற்றிக் கொண்டு.. தானும் மாறி ஒரு கேள்வியை கேட்டான்.

ஆதிகேசவன், மாப்பிள்ளையின் இந்த கேள்வியில் நெற்றியை சுருக்கி பார்த்தார்.

கபாலி தான் பேசியது உணர்ந்து அமைதியாக இங்கும் அங்கும் நடந்தான்.

ஆதிகேசவன் “நம்ம பிள்ளை அப்படி எல்லாம் யோசிக்காது. நீங்க தைரியமா இருங்க.. பிஸ்னெஸ்’ன்னா, இப்படி தவிர்க்க முடியாமல் எதோ நடந்திடும். என்ன பணத்தோட போய்டும்.. இப்போது, பொண்ணுக்கு, வந்திடுச்சி. நீங்க தைரியமா இருங்க.” என்றார்.

கபாலி ஏதும் பதில் சொல்லவில்லை.

 

 

 

Advertisement