Advertisement

நான் உன் நிறையன்றோ!

27

கபாலி, அலுவலகத்திற்கு சென்று ஒரு சுற்று சுற்றிவிட்டு, வந்தான் தன் அறைக்கு.. ஆனந்த் வந்து நின்றார், பேச வேண்டும் என. கபாலி என்ன என்பதாக பார்த்தான்.

ஆனந்த் “கபில், பல்க் ஆர்டர் ஒன்னு வந்திருக்கு.. ஒரு ஹோட்டல், அதற்கான ஆன்லைன் டெண்டர் இருக்கு..” என பேசத் தொடங்கினார். 

கபாலி கேட்டுக் கொண்டான்.. தலையசைத்தான். என்னமோ யோசனையில் இருந்தான் போல.. ஆனந்த், தொடர்ந்து விரிவாக சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால், கபாலிக்கு ஏதும் சரியாக மனதில் பதியவில்லை.  ஒரு கட்டத்தில் ஆனந்த் “உடம்புக்கு ஏதும் முடியலையா கபில்..” என்றார்.

கபாலி, அப்போதும் தன்னை மீட்டுக் கொள்ளவில்லை “ம்.. லேசாக தலைவலி ஆனந்த்.. நான் கிளம்பறேன், இப்போ ஏதும் மீட்டிங் இல்லைதானே.. நாளைத்தானே ஆடிட்டர் மீட்டிங்.” என்றான் யோசனையோடு.

பின் அவனே எதோ மறந்ததை நினைவுப்படுத்திக் கொண்டவனாக “அப்புறம் அட்வகேட் கூப்பிட்டனும்ன்னு, நினைச்சேன். ப்ரைட்  ஏஜென்சி கேஸ் என்ன ஆச்சுன்னு கேளுங்க.. மூணுமாசம் ஆகிடுச்சு.. அவன் இன்னும் ஆஜராகலைவில்லை தானே, கேளுங்க. நான் நாளை பேசுகிறேன். இப்போ, நான் கிளம்பறேன். ஆபீஸ் லாக் செய்திட்டு.. மெஸ்செஜ் செய்திடுங்க. மோர்னிங் பார்க்கலாம்” என்றவன் நிற்காமல் தன் வீடு நோக்கி கிளம்பினான்.

கபாலிக்கு, மனையாளை காலையில் ‘அண்ணனுக்கு சாதகமாக நடக்கிறாள்’ என எண்ணியிருந்தவனுக்கு, இப்போது அந்த வார்த்தையை திரும்ப பெற தோன்றியது.. அப்படி சொல்லியிருக்க கூடாது நான்.. என மனது அதிலேயே நின்றது. மதியமும் அவள் தன்னை பார்க்கவில்லை.. பேசவில்லை.. என உணர முடிகிறதே, அவனால். எனவே, தன்மீது கோவமாக இருக்கிறாள் என தெரிகிறது அவனுக்கு. அதுவே மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.. வாடிய அவள் முகம்.. என்னை காணாத பாவம்.. என்னமோ கபாலிக்கு பிடிக்கவில்லை.. இந்த நிலை. அதனால் வீடு வந்தான், அவளை பார்க்கும் ஆவலில்.

கபாலி வீடு வர, இன்னும் தன் அன்னையும் மனையாளும் வந்திருக்கவில்லை. தானே கதவை திறந்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான். மனையாளின் பாரா முகமே மனதில் நின்றது. 

சரியாக அந்த நேரம் ஜெயந்தினி, தன் தம்பிக்கு அழைத்தாள்.

மாலையில் ஜெயந்தினி மருத்துவரிடம் சென்றுவிட்டு, இப்போதுதான் தன் கணவனோடு காரில் வந்துக் கொண்டிருந்தாள். 

தன்னுடைய தாய்மையை உறுதி செய்துக் கொண்டவள்.. காரில், கணவனோடு வரும் வழியிலேயே தன் உடன்பிறப்பிற்குதான் முதலில் அழைத்தாள், ஜெயந்தினி.

கபாலி போனை எடுக்க, ஜெயந்தினி “கபில், ஒரு குட் நியூஸ்..” என்றாள்.

கபாலி “சொல்லு க்கா..” என்றான் ஆசுவாசமான குரலில்.

ஜெயந்தினி “நீ மாமா ஆகபோற” என்றாள்.

கபாலி “யாருக்கு” என்றான் சோபாவில் வசதியாக சாய்ந்துக் கொண்டு.

ஜெயந்தினி “டேய்” என்றாள் அதட்டலாக.

கபாலிக்கு இப்போதுவரை ஏதும் புரியவில்லை.. “ம்.. சொல்லுக்கா..” என்றான்.

ஜெயந்தினி “டேய், நான் பெர்க்னட்டா இருக்கேன் டா, நீ மாமா ஆகபோற” என்றாள்.

கபாலி “ஓ.. ஜெய்.. காங்ராட்ஸ்” என்றான், அதிர்ந்த சந்தோஷக் குரலில்.

ஜெயந்தினி “தேங்க்ஸ், வீட்டுக்கு வா” என்றாள்.

கபாலி “இல்ல க்கா, நாளைக்கு வரேன், ஒருமாதிரி டயர்டா இருக்கேன்.. நம்ம வீட்டுக்கு வந்துட்டேன். நாளைக்கு கண்டிப்பா வரேன்” என்றான்.

ஜெயந்தினி “என்ன ஆச்சு” என்றாள். 

கபாலி “ஒண்ணுமில்ல தலைவலி.. வேற ஒண்ணுமில்ல” என்றான்.

ஜெயந்தினி “நான்தான் அம்மாவையும் மயூவையும் இருக்க சொன்னேன்.. இன்னும் அரைமணி நேரத்தில் வந்திடுவாங்க.. நாளைக்கு கண்டிப்பா நீ வரணும்” என்றாள்.

கபாலி “கண்டிப்பா வரோம். வேறென்ன சொன்னாங்க டாக்டர்” என்றான்.

ஜெயந்தினியும் அங்கு நடந்ததை சொன்னாள். 

கபாலி “மாமா இருக்காறா பக்கத்தில்” என்றான்.

ஜெயந்தினி பதில் சொல்லி, தன் கணவனுக்கு போனின் ஸ்பீக்கர் ஆன் செய்தாள். 

கபாலி “கங்க்ராட்ஸ் மாம்ஸ்..” என்றான், குரலில் இளமை இருந்தது.. என்னமோ இத்தனை நாள் இருந்த குரலுக்கும்.. இதற்கும் வேறுபாடு தெரிந்தது வசீகரனுக்கு.

வசீகரனும் “தேங்க்ஸ் கபில்..” என்றான் நிறைந்த குரலில்.

கபாலி “அக்காவை பத்திரமாக பார்த்துக்கோங்க” என்றான்.

வசீகரன் “ஐயோ.. இத்தனைநாள் இதை சொல்லவேயில்ல.. நான் வேற நிறைய கொடுமைபடுத்திட்டேனே” என்றான்.. பக்கவாட்டில் தன் மனையாளை ஆசையாக பார்த்துக் கொண்டே.

கபாலிக்கு இந்த விளையாட்டான வார்த்தை.. மனதை தைத்தது. ஏதும் பேசாமல் அமைதியாகிவிட்டான்.

வசீகரன் அதை  கவனிக்கவில்லை. வசீ “சரி கபில், டிரைவிங்ல இருக்கேன்.. நான் அப்புறம் பேசறேன்..” என்றான்.

ஜெயந்தினி தன் தம்பியிடம் பேசி விடைபெற்று போனை வைத்தாள்.

கபாலிக்கு, தன் அக்காவின் சந்தோஷமான நிகழ்வு கூட மனதை நிறைக்கவில்லை. என்னமோ தன்னை தனியாக உணர்ந்தான்.. மனையாள் ஏன் இன்னும் வரவில்லை.. எவ்வளவு நேரம் ஆகிறது என கோவமாக வந்தது. அப்படியே படுத்துக்கொண்டான்.

மயூராவும் மகேஸ்வரியும் வந்து சேர இரண்டு மணி நேரம் ஆனது. கபாலி நன்றாக உறங்கியிருந்தான். அவர்கள் அங்கேயே உண்டு, கபாலிக்கு உணவு எடுத்து வந்திருந்தனர்.

மகேஸ்வரி மகனை எழுப்பினார்.

கபாலி, படுத்திருந்த வாக்கிலேயே கைகளை தூக்கி.. நெட்டி முறித்தவன்..  சிறு பையனாக “ம்மா.. எப்போ வந்தீங்க” என நிமிர.. மயூரா அமர்ந்திருந்தாள் அருகில் இருக்கும் இருக்கையில். 

கபாலி மனையாளை பார்த்ததும் புருவம் உயர்த்தி.. “வந்துட்டியா” என்றான் ஆசையாக.

மயூரா தலையை ‘ம்..’ என அசைத்தாள்.

மகேஸ்வரி “மயூம்மா, நீ பார்த்துக்க.. நான் போய் படுக்கிறேன்” என்றவர்.. கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்து நகர்ந்துக் கொண்டார்.

மயூரா உணவுகளை எடுத்து வைத்தாள்.

கபாலி மனையாளின் அருகில் வந்து நின்றான் “என்ன டிபன்” என்றான்.

மயூரா ஏதும் பேசவில்லை.

கணவன் மீண்டும் “அக்கா போன் செய்தாள்.” என்றான். 

மயூரா, தட்டம் எடுத்து வந்து சப்பாத்திகளை வைத்தாள்.. அவனின் பேச்சிற்க்கு பதில் சொல்லவில்லை.

கபாலி, மனையாளின் அருகில் நெருங்கி நின்றான் “மயூ..” என அழைத்தான், தன்பக்கம் அவளை பார்க்க வைக்கும் நோக்குடன். 

மயூரா தண்ணீர் எடுக்க உள்ளே சென்றுவிட்டாள். கணவன் அவளோடு பின்னாலேயே சென்றான். கபாலி “மயூரா.. என்ன ஆச்சு, என்னை பாரு” என்றான்.

மயூரா “சாப்பிடுங்க” என்றாள், முகம் இறுக்கமாக இருந்தது.

கணவனுக்கு, தான் கொஞ்சம் அதிகமாக பேசுகிறோமோ.. என தோன்ற அமர்ந்துக் கொண்டான் அவள் சொன்னது போல.. உண்ணத் தொடங்கினான்.

மயூரா பரிமாறிய படியே நின்றுக் கொண்டாள்.

கபாலி உண்டு முடித்தான். மேலே சென்றுவிட்டான்.

மயூரா பாத்திரங்களை ஒழுங்கு செய்துவிட்டு, பால் எடுத்துக் கொண்டு.. தங்களின் அறைக்கு வந்தாள்.

கபாலி குளித்து, வந்திருந்தான் அப்போதுதான்.

மயூரா, தானும் குளிக்க சென்றாள்.

கபாலி, அமைதியாக பால்கனிக்கு சென்றுவிட்டான்.

அரைமணி நேரம் சென்று உள்ளே வந்தான். மயூரா குளித்து வந்திருந்தாள். கண்ணாடியின் முன்னின்று  தலையை வாரிக் கொண்டிருந்தாள்.

கபாலி, இன்று மனையாளோடு பேசிட வேண்டும்.. என எண்ணிக் கொண்டே உள்ளே வந்தான். மயூரா அழகான பிங் வண்ண.. மென்காட்டன் நைட்டியில்.. கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள். கபாலி அவளின் அருகில் சென்று நின்றான்.

 

Advertisement