Advertisement

மனையாளின் கோவம் கொண்ட முகம் அவனுக்கு எப்போதும் பிடிக்கும்.. அத்தனை பாவம் அதில்.. ‘இவளுக்கு நடனம் தெரிவதால்.. இப்படி ப்வாம் வருகிறதா? இல்லை, இவளின் இயல்பான பாவத்தால் நடனம் எளிதாக வந்ததா?’ என சட்டென யோசனைக்கு தாவினான் கபாலி.

மயூரா, கணவன் தன் கோவத்தால் அமைதியாக இருப்பதாக எண்ணி மீண்டும் கேள்வி கேட்டாள்.. “ஆமாம், உங்களை நான் எங்க டென்ஷன் செய்தேன்” என்றாள், எதோ குழந்தை மிரட்டுவது போல நிமிர்ந்து கணவனை பார்த்து.. விசாரணை குரலில் கேட்டாள் பெண்.

கபாலி தன் வலிய உதடுகளில் சிரிப்பை மறைத்துக் கொண்டு  “இல்ல, நீ டென்ஷனா இருந்தால்.. நானாகவே டென்ஷன் ஆகிடுறேன்.. கரெக்ட்.. கரெட்க்ட்டா சொல்லிட்டேன். ஓகே வா, ப்பா.. உன் கூட இருந்தால்..” என சொல்லி மனையாளை பார்த்தான் கபாலி.

மயூரா குறுகுறுவென ‘என்ன சொல்ல போகிறார்’ என பார்க்க..

கபாலி “ரொம்ப ஜாலியா இருக்கேன்..” என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

மயூராவிற்கும் முகம் விகாசிக்க தொடங்கியது. 

கபாலி  “இனி தினமும் என்கூட நீ ஜாக்கிங் வரவேண்டாம்.. நீ உன் வேலையை சரியாக பாரு.. அப்போ அப்போ என்னையும் பார்க்கணும், அப்படின்னா மோர்னிங் நீ ப்ரீ” என்றான். எதோ இவன்தான் அவளை கஷ்ட்டபடுத்துவதாக எண்ணிக் கொண்டு.

மயூரா முறைத்தாள் “எ..போ உங்களை பார்க்கலை நான்.” என்றாள், மீண்டும் குழந்தையின் விசாரணை குரலில்.

கபாலி “நேற்று.. போன ஃப்ரைடே “ என கணக்கு சொல்ல..

மயூரா கன்னம் சிவக்க.. கணவனை அடித்தாள்.

அழகான பொன்வானம்.. சிவப்பாக சிவந்துக் கொண்டது.. இந்த கணவன் மனைவி உரையாடலில்.

கபாலி “சரி போலாம்” என்றான்.

மயூரா “எனக்கு தோணும் போது நானும் வருவேன். இந்த டூ டேய்ஸ்.. நான் கொஞ்சம் பிஸி. அப்புறம் நான் வருவேன்” என்றாள் திடமான குரலில்.

கபாலிக்கு அதுவே போதுமானதாக இருக்க.. கிளம்பினர் இருவரும் வீடு நோக்கி.

மயூரா அடுத்த ரெண்டு நாளும் பிஸி.. இரவில்தான் வீடு வந்தாள். லோக்கல் என்பதால்.. வேலை அதிகமில்லை என எண்ணி இருந்தவளுக்கு.. என்னமோ நிற்க நேரமில்லாமல் வேலை. இடம் பார்க்க.. உடைகள்.. மேக்கப்.. என எல்லாம் பார்த்து செய்யவே நேரம் சரியாக இருந்தது.

மயூராவின் நடன நாளும் வந்தது..

கபாலி காலையிலேயே கேட்டான் “நான் ஏதாவது ஹெல்ப் பண்ணனுமா” என பொறுப்பாக கேட்டான்..

மயூரா “ப்பா.. முத்துக்கள் உதிர்ந்துவிட்டது” என்றாள்.

கபாலி மனையாள் என்ன பாஷை பேசுகிறாள் என அப்படியே பார்க்க..

மயூரா “நான் எவ்வளோ டென்ஷனாக இருந்தேன் இந்த இரண்டு நாளும், என்னான்னு கேட்டீங்களா.. இப்போதுதான் ஹெல்ப் வேணுமான்னு கேட்க்க தோணுதா.. ப்பா.. சரியான.. சரியான..” என வார்த்தை தெரியாமல் நிறுத்தி யோசித்தாள் பெண்.

கபாலி “என்ன ஸெல்ப்பிஷ்.. ம்.. அப்படியா” என்றான்.

மயூரா சிரித்துக் கொண்டே “இல்ல.. இல்ல.. வேற, நோ வொர்ரி.. எப்படி சொல்றது.. அலட்டிக்கிறதே இல்லை.. டோன்ட் கேர்.. அப்படி..” என்றாள்.

கபாலி எதோ அவர்ட் வாங்கிய தோரணையில் தன் தாடையை தடவிக் கொண்டு, தயாராகிக் கொண்டிருந்த மனையாளை பின்னிலிருந்து அணைத்துக் கொண்டான் “இங்க பாரு, அதே டூ டேய்ஸா நான் உன் பக்கத்தில் வராமல் இருக்கிறேன்.. இப்படி முத்தம் கொடுக்காமல் இருக்கேன்.. இப்படி கடிக்காமல் இருக்கேன்..” என சொல்லி அவளுக்கு முத்தம் கொடுத்து.. லேசாக கன்னம் கடித்தவன்.. “இதில் என்னை அக்கறை இல்லாதவன்னு சொல்ற.. நான் உன்மேல கேர் எடுக்காமல் இருக்கேன்னு சொல்றீயா.. இப்படி சொல்றதுக்கு.. அந்த ஸெல்ப்பிஷ் பட்டமே பரவாயில்லை” என்றவன் மனையாளை இறுக்கி அனைத்துக் கொண்டான்.

மயூரா “ஹய்யோ.. கபில்.. விடு டா.. விடு” என கத்த.

கபாலி “ம்.. பயமே இல்லை.. மரியாதையே இல்லை..” என இன்னும் தன்னவளை தனக்குள் இறுக்கிக் கொள்ள..

மயூராதான் இறங்கி வரவேண்டி இருந்தது “விடங்க.. புடவை எல்லாம் கசங்கிடும்.. நேரம் ஆகிடுச்சு.. வேற புடவை கட்ட முடியாது ம்.. கபில்.. சமத்து இல்ல..” என செல்லம் கொஞ்ச.

கபாலி இன்னும் நாலுமுறை அவளை கொஞ்ச வைத்துதான் விடுவித்தான் அவளை.

மயூரா உடையை சரி செய்தபடியே “ஈவினிங் 6க்குதான்  ஆரம்பமாகும்.. எங்கன்னு தெரியமா.. வந்திடுவீங்களா..” என்றாள் தெரிந்தே கணவனை சீண்டும் குரலில் பேச தொடங்கினாள் பெண்.

கபாலி கண்ணாடியில் தன்னவளை பார்த்துக் கொண்டே “என்னை வான்னு சொல்றீயா.. உனக்கு திமிர் டி..” என்றான்.

மயூரா திரும்பி கணவனை பார்த்தாள்.. சட்டென மூக்கின் நுனி சிவந்தது.. கண்கள் கலங்கியது.. இமைக்காமல் பார்த்தாள்.. “என் டான்ஸ் பார்க்க உங்களுக்கு ஆசையே இல்லையா.. இங்கதானே.. உள்ளூரில்தானே நடக்குது.. எதோ வேலை.. மீட்டிங்ன்னு.. சொல்றீங்க, அக்கறையே.. இல்ல, காதலே இல்ல என்மேல” என்றாள் கணவனை எப்படியாவது பேசி கரைத்து.. வரவைத்து விடலாம் என பேசினாள் பெண்..

கபாலி இவளின் குரலுக்கும் கண்ணீருக்கும் இளகாமல் நின்றான்.. போன ஷனம் வரை இருந்த.. காதலன் இல்லை இப்போது.. என அவனின் உடல்மொழி, மனையாளுக்கு சொல்ல.. மயூரா இமைக்காமல் கணவனையே பார்த்தாள்.

ம்கூம்.. இப்போது, தன்னவளின் பார்வை, அவனை தளர்த்தவில்லை. கபாலி தன்னவளை பார்க்காமல்.. தலை வாரி முடித்தவன், தன் இடக் கையில் இருக்கும் வெள்ளி காப்பை முழங்கை நோக்கி தள்ளியவன் “நூறு தரம் சொல்லிட்டேன்.. இந்த மீட்டிங் முக்கியம்.. எனக்குனு. நீ கிளம்பு.. டென்ஷன் ஆகாத.. எனக்காக ஒருதரம்.. இங்க அடமாட்டியா என்ன” என்றான் முடிக்கும் போது விளையாட்டு குரலில்.

ம்கூம்.. கணவனின் இந்த விளையாட்டு வார்த்தை.. மயூராவின் ஆற்றாமையை குறைக்கவில்லை. அவளும், ஏதும் பேசாமல் கண்களை துடைத்துக் கொண்டு.. லிப்பாம் போட்டுக் கொண்டு.. கண்களுக்கு காஜல் போட தொடங்கினாள்.

கபாலிக்கு, மனையாளின் கோவம் புரிந்தாலும்.. அவனின் எக்ஸ்போர்ட் குறித்த மீட்டிங் இன்று மாலையில் ஒரு பெரிய ஹோட்டலில். மூன்று மாதம் முன்பே முடிவானது. இது வெளிநாடு தொடர்பான மீட்டிங், அதனால் மாற்ற முடியாது. அவனின் தொழில் குறித்த கனவுகளில் ஒன்று இது. அதனால், தவிர்க்க முடியாது. அது அவளிற்கும் தெரியும். ஆனாலும், ஏனோ தன்னவளால் ஏற்க முடியவில்லை.. எனவும் தெரிகிறது கபாலிக்கு. இப்போதும்.. இன்றும்.. இந்த கடைசி நேரத்திலும்.. வருவீங்களா.. என  கேட்கவும் கோவம் அவனுக்கு. ஏன், நடக்காதுன்னு தெரிந்தும்.. நான் கண்டிப்பாக வரமாட்டேன்னு தெரிந்தும் என்னை கஷ்ட்டபடுத்துகிறாள்.. என கோவம்.   

மயூரா ஏதும் பேசாமல் தன் பொருட்களை எடுத்துக் கொண்டு.. வெளியே செல்ல எத்தனித்தாள்.

கபாலி அந்த பெரிய பாக்.. பார்த்து “இங்கதானே விழா.. எதுக்கு இவ்வளோ பெரிய பாக்.. நாலுநாள் ஊருக்கு போகிற மாதிரி.” என்றான்.

மயூரா தன் அஞ்சனம் தாங்கிய விழியால் அவனை முறைத்தாள்.

கபாலி “என்ன டி முறைக்கிற, எங்க போனாலும் இங்கதான் வந்தாகணும்.. எதுக்கு இப்படி அப்செட்டாகி.. என்னையும் டென்ஷன்  ஆக்குற..” என்றான்.

 மயூரா “ம்.. அதான், அப்படியே எங்க அண்ணன் கூட போயிடுறேன். நீங்க சந்தோஷமா இருங்க..” என்றாள்.

கபாலி மனையாளின் கையை பிடித்தான் “எதுக்கு இவ்வளோ பெரிய பாக்” என்றான், அழுத்தம் திருத்தமான குரலில்.

மயூரா “விடுங்க.. டான்ஸ் காஸ்டியூம் எல்லாம் இருக்கு.. வெளியூர் என்றால், லக்கேஜ் உடன் போக்கிடும்.. இங்க என்பதால், நான் கொண்டு போறேன்..” என்றான்.

கபாலி வெளியே வந்த பெருமூச்சை.. தனக்குள்ளேயே செலுத்திக் கொண்டு.. மனையாளின் கையை விட்டான்.. “இப்போ, ட்ரோப் பண்றேன் வா” என்றான்.

மயூரா “வேண்டாம்.. உங்க கூட வரமாட்டேன்.. அண்ணன் வெயிட் பண்றான்” என்றாள்.

கபாலிக்கு முகம் வாடித்தான் போனது.

இருவரும் கீழே வந்தனர்.

“ஒரே ஒரு புன்னகை போதும் அன்பே..

உனக்கென காத்து கிடப்பேனே..

ஆயிரம் கோடி ஆண்டுகள் தாண்டி..

உன்னில் வாழ துடிப்பேனே..”

Advertisement