Advertisement

கபாலி “நிச்சயம் அப்போவே நாம சரியா ஏதும்.. ரிங் போட்டுக்கலை.. எனக்கு, நம்ம ரெண்டு பேருக்கும் கமானான.. ஒரு ஆர்நோமென்ட் இருந்தால்.. நல்ல இருக்குமேன்னு தோணுச்சி, அதான்.. நம்ம வெட்டிங்டே’க்கு.. முன்னாடியே ஆர்டர் கொடுத்திருந்தேன்.. தெரியுமா டூ டேஸ்ல நம்ம வெட்டிங்டே..” என நிறுத்தினான். அடுத்து என்ன சொல்லுவது என நிறுத்திக் கொண்டான்.

மயூரா “ஹோ.. ஆர்டர்.. சூப்பர்.” என்றவள்.. அமர்ந்தாள்.

பின் மயூரா “அம்மா, இன்னிக்குதான் கோவிலில் நம்ம எல்லோருக்கும் சேர்த்து பூஜைக்கு சொல்லிக் கொண்டு இருந்தாங்க.. உங்களுக்கு எனக்கு அண்ணனுக்கு அண்ணிக்கு.. என புடவை ட்ரெஸ் எல்லாம் எடுத்துட்டு வந்தாங்க.. ஞாபகம் இருக்கு. ஆனால், நீங்க ஞபாகம் வைச்சிருப்பீங்கன்னு நான் நினைக்கலை.. ம்.. என் ஆத்துக்காரார்.. சுப்பர்தான்.” என்றாள்.

கபாலி.. “ம்.. அதை அங்க இருந்து சொல்ல கூடாது.” என அவளின் அருகில் நகர்ந்து அமர்ந்துக் கொண்டான்.. தன்னவளை தோளோடு சேர்த்துக் கொண்டான். 

இருவருக்கும் நடுவில் அமைதி.. கபாலி, சற்று தூரத்தில் இருந்த அந்த மோதிரங்களை எடுத்தான்.. கை நீட்டி. அந்த சின்ன மோதிரத்தை.. தன்னவளின் வலது கையில் அணிவித்தான்.. பின் சின்ன முத்தம் ஒன்றை அங்கே பதித்தான்.. பெண்ணவள் ஏதும் பேசவில்லை. அடுத்து அவளின் கையில் தன்னுடைய மோதிரத்தை கொடுத்துவிட்டு, தன் கையை.. அவளிடம் நீட்டினான். ஏதும் பேசாமல்.. கணவனுக்கு அணிவித்தாள். 

மயூரா “என்ன அமைதியா இருக்கீங்க” என்றாள்.

கபாலி “இதுபோதும்.. அதான் அமைதி” என்றவன் அவளின் உச்சியில் முத்தம் வைத்தான்.

இருவருக்கும் பேசுவதற்கு ஏதுமில்லை.. ஒருவரை ஒருவர் உணர்ந்தபடியே அந்த இரவை கடத்தினர்.

“சொல்ல முடியாத காதலும்..

சொல்லிலடங்காத நேசமும்..

எண்ண முடியாத ஆசையும் 

உன்னிடத்தில் தோன்றுதே..

நீதானே பொண்சாதி..

நானே உன் சரிபாதி..”

அதிகாலையில் கபாலி எப்போதும் போல எழுந்து ஜாக்கிங் சென்றான். சீக்கிரமாக கிளம்பி, மயூராவிடம் சொல்லிக் கொண்டு, தன் வீட்டிற்கு சென்றுவிட்டு, அக்காவை பார்த்துவிட்டு.. அலுவலகம் சென்றான்.

அதன்பின் அவனிற்கு நேரம் சரியாக இருந்தது. வக்கீல்.. ஆதிகேசவன்..  ப்ரைட் மாப்பிள்ளை என ஓவ்வொருவராக வந்தனர். பேச்சு வார்த்தை நடந்தது. ஒருமுடிவை எட்டினர். இல்லை, எல்லோரும் சேர்ந்து அந்த ப்ரைட் மாப்பிள்ளையை, அந்த முடிவை எடுக்க வைத்தனர்.    

இரண்டு நாட்களில் ஜெயந்தினி வசீகரனின் திருமணநாள். அதனை கோவிலில் அபிஷேகம் ஆராதணை.. என சிறப்பாக செய்து கொண்டாடினர். மயூரா செல்ல முடியவில்லை. அவளுக்கும் சேர்த்து குடும்பமே வேண்டுதல் வைத்து வந்தது. கபாலி, மயூரா சொன்னதால்.. கோவில் சென்று வந்தான். சும்மா எட்டி பார்த்துவிட்டு, மனையாளோடு வந்து வீட்டில் அமர்ந்துக் கொண்டான்.

கபாலிக்கு, இப்படிதான். தன்னுடைய தொழில் வட்டம் எத்தனை விஸ்த்தாரமாக இருந்ததோ.. அதற்கு நேர்மாறாக.. அவனின் தனிப்பட்ட வட்டம்.. மயூரா என்பவளோடு நின்றுக் கொண்டது. அந்த புள்ளியில் மட்டுமே அவனின் உலகம் நிறைந்து நின்றுவிட்டது. அதை தாண்டவோ.. மீறவோ அவன் நினைக்கவேயில்லை.

 

அடுத்த வார இறுதியில் ஜெயந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அமைதியாக இருந்த குடும்பம்.. இப்போதுதான் சிரிக்க தொடங்கியது.. அந்த குழந்தையின் வருகை எல்லோரையும் மாற்றியது. மயூராதான், முதலில் வாங்க வேண்டும் என வசீகரன்.. அவள் கையில்தான் முதலில் குழந்தையை கொடுக்க சொன்னான். அதை தனது கைபேசியில் புகைப்படமாக சேமித்துக் கொண்டான், தன் மனையாளிடம் காட்டுவதற்கு.

கபாலி அப்போதுதான் வந்தான்.. அவனுக்கு இதெல்லாம் இன்னும் புரியவில்லை.. பெரிதாக மகிழ்ந்தான் என இல்லை.. சந்தோஷமே என அளவாக சிரித்தான். தாய்மாமா ‘பௌவுன் கொண்டுதான் பெண்ணை பார்க்கனும்..’ என மகேஸ்வரி சொல்ல.. பொன் வாங்கிக் கொண்டு வந்து குழந்தையின் கையில் கொடுத்து.. பார்த்தான். தன் மாமாவிற்கு வாழ்த்துக்கள் சொன்னான்.. இனிப்பு வாங்கி எல்லோருக்கும் கொடுத்தான்.. ஹாஸ்ப்பிட்டலில் கணக்குகள் பார்த்து பணம் செலுத்தினான்.. ஆக, பொறுப்பாக கடமையை செய்தான். 

அடுத்த நாளே அந்த ப்ரைட் கம்பெனியில் இருந்து நல்ல செய்தி வந்தது.. நாளை ரெஜிஸ்ட்டர் வைத்துக் கொள்ளலாம் என. ஆக, கபாலி அன்றே தன் வேலையை பார்க்க கிளம்பிவிட்டான்.

மறுபடியும் கபாலி, மருத்துவமனை வந்தது.. தன் அக்காவை வீடு அழைத்து செல்லும் போதுதான். 

மயூரா தன் வீடு வந்து சேர்ந்தாள் இன்றுதான். அழகாக தன் அண்ணிக்கும் மருமகளுக்கும் ஹார்த்தி எடுத்து.. உள்ளே கூட்டி சென்றாள். வீடு பரபரப்பாகியது. 

அந்த குட்டி பெண்ணை சுற்றி.. அங்கிருந்த எல்லோரின் நிகழ்வுகளும் கட்டமைக்கப்பட்டது. சுமதி ஒருநாளில் பாதிநேரம் இங்கேயே இருந்தார். ஆக, எல்லோரையும் ஒரே இடத்தில் அந்த குட்டி ஜீவன் பிடித்து வைத்துக் கொண்டது. எல்லோருக்கும் எதோ ஒரு வேலை இருந்துக் கொண்டே இருந்தது. நாட்களும் சென்றது.

குழந்தைக்கு “அக்க்ஷையா” என பெயர் சூட்டினர். விழா சிறப்பாக நடைபெற்றது. 

நாட்கள் கடந்தது.

மயூராவின் அகடாமி தயாராகி இருந்தது. மயூரா இன்றிலிருந்து அகடாமிக்கு செல்லுகிறாள். கையில் அதிகம் அசைவு கூடாது. எனவே, மேற்பார்வைக்காக மட்டும் செல்லுகிறாள். 

கபாலி, அவளை கூட்டிக் கொண்டு சென்றான், இரண்டு நாட்கள்..

பின் அவனுக்கு, சென்னை செல்ல வேண்டிய வேலை வந்தது. இந்தமுறை.. மனையாளையும் கூட்டிக் கொண்டு சென்றான் கபாலி.

மயூரா, குழந்தையை விட்டு எப்படி வருவது என தயங்கினாள். மகேஸ்வரி “அவனே, எப்போவாதுதான் உன்கூட இருக்கான்.. நீ போயிட்டு வா..” என்றார். அன்னையும் “நாங்க இருக்கோம் நீ போயிட்டு வா..” என்றார்.

ஜெயந்தினி “ப்பா.. டா.. என் தம்பிக்கு இப்போதான் பொண்டாட்டி கண்ணுக்கு தெரிந்திருக்கா.. போயிட்டு ஜாலியா இருந்துட்டு வா..” என்றாள்.

ஆக, எல்லோருமாக சேர்ந்து இங்கிருக்கும் சென்னைக்கு அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தனர். 

கபாலி தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு ஒரு மாலை நேரத்தில் வந்தனர் இருவரும். சின்ன வீடு.. ஊரின் மத்தியில் இருந்தது. சின்ன டிவி.. கட்டில்.. தண்ணீர் கேன்.. முக்கியமாக ஏசி இருந்தது, ம்.. கபாலிக்கு ஓசூரிலேயே ஏசி வேண்டும்.. சென்னையில் அது இல்லையென்றால்.. முடியாது அவனால். 

ஆக, மயூரா முதல் இரண்டுநாள் அமைதியாக இருந்துக் கொண்டாள். புதிதாக இருந்தது.. பால்கனி வழியே தெரியும் அந்த உலகை மட்டும் ரசிப்பது. கண் இமைக்காமல் டிவி.. போன்.. என பார்ப்பது. எந்த நேரம் உறங்குகிறோம்.. உண்ணுகிறோம் என தெரியாமல்.. ஒரு மயக்க நிலையிலிருப்பது. கணவன் வரும் நேரம் கதவை திறப்பது என இதுவும் ஒருமாதிரி நன்றாகத்தான் இருந்தது. ஆனால், மூன்றாம் நாள்.. மயூராவிற்கு அழுகைதான் வந்தது.

ஆனால், அந்த நாள், கணவன் நேரமாக வீடு வந்தான். அவளோடு அமர்ந்து ஆர்டர் செய்தான் உணவுகளை.. இருவரும் பேசியபடியே உண்டனர். குட்டி தூக்கம். மாலையில் கபாலீஸ்வரர் கோவில்.. அடுத்து நேரே ரேசொர்ட்க்கு கூட்டி சென்றான் கபாலி.

ரம்யமான பீச் ரெசார்ட். ஆங்காங்கே.. சின்ன சின்ன குடில்கள்.. பெரிய கடல்.. அதற்கு தோதாதாய் மின்னும் நிலவு. இப்போதுதான் கடலிலிருந்து மேலெழும்பி இருந்தது.. அந்த பொன்னிலவு. அதனை ரசிக்கும் கண்கள்.. வேறென்ன வேண்டும், காதலிக்க. இருவரும் அதனை பார்த்துக் கொண்டே நின்றனர்.

தங்களின் அறையில் பாக் வைத்துவிட்டு.. நேரே கடலை நோக்கி சென்ற கால்களை.. கபாலி நிறுத்தினான் “மயூ பசிக்குது” என்றான்.

மயூரா, கணவனையும்.. அந்த ஜன்னல் வழி தெரிந்த பெரிய கடலையும் பார்த்தாள். கணவன் “சாப்பிட்டு போலாம்” என்றான். 

மயூரா “ம்..” என்றாள்.

கோவில் செல்லுகிறோம் என்பதால்.. அழகான செட்டிநாடு காட்டன்.. பெரிய பார்டர்.. அதில் சின்ன சின்னதாக ஜரியில் யானைகள் அணிவகுக்க.. தன் கணவன் முதல்முதலில் வாங்கி தந்த.. அந்த பெரிய ஜிமிக்கைகள் அணிந்துக் கொண்டு.. பல்லவர் சிற்பங்களின் சாயலில் “ம்.. சரி” என்றபடி அறையின் கதவை திறந்துக் கொண்டே வெளியே சென்றவளை.. தன் நீண்ட கரங்களால் பற்றிக் கொண்டான் கணவன். அப்படியே கீ எடுத்துக் கொண்டு கதவை சாற்றிவிட்டு அவளோடு நடந்தான். கருப்பு வண்ண வேஷ்ட்டி.. மெரூன் ஷர்ட்.. கணவனது என்றால், அதே காம்பினேஷன் உல்டாவாக.. மெரூன் புடவையில்.. கருப்பு பார்டர் என அவள் அணிந்திருக்க.. ‘நாங்கள் புதுமணத்தம்பதி’ என முரசறையாத குறையாக.. இருவரும் கலகலத்தபடி சென்றனர் உண்பதற்கு.

உண்டுவிட்டு.. அந்த பரந்த கடலையும் அந்த உச்சி பொட்டு நிலவினையும் ரசிப்பதற்கு.. வந்தனர் இருவரும். கடற்கரை.. நிலா.. அப்போ, காதல் மட்டும் எங்கே போகும்.. அதுவும்.. வந்து அமர்ந்தது அவர்களோடு.

கபாலி தன்னவளை தோளில் ஏந்திக் கொண்டான்.. சின்ன குரலில் “மயூம்மா.. நீ அகடாமியில் எவ்வளோ பீஸ் வாங்கற.. பெர்ஹெட்..” என்றான் சீரியஸ்சான குரலில்..

மயூரா ரெண்டு நொடிகள் எடுத்துக் கொண்டாள், அவன் பேச்சை புரிந்துக் கொள்வதற்கு.. பின் “ஆ…ஆ… நீ ங்க.. ஏன் என்னை இங்க கூட்டி வந்தீங்க” என நிமிர்ந்தாள்.

கபாலிக்கு சிரிப்பே வந்தது.. “ஹேய்.. நீ ரொம்ப அழகா இருக்கியா.. என்னால் பொறுமையாகவே இருக்க முடியலை.. சொல்லேன், அடுத்து கதகளி டான்ஸ்சும் சொல்லி தருவியா.. ஆல்ஓவர் இந்தியா ஆட் கொடுக்கலாம்..” என்றான் விளையாட்டாக.

மயூராவிற்கு, கணவன் விளையாடுகிறான், தன்னை சீக்கிரமாக அறைக்கு அழைக்கிறான் என தெரிந்ததால்.. “ம்.. இப்போது காளியாட்டம் சொல்லித்தரன்..”  என்றவள் கடலை நோக்கி ஓடினாள்.

கபாலி பின்னாலேயே ஓடினான்.. ஒருவரை ஒருவர் பிடித்து கரைக்கு இழுப்பதும்.. மற்றவர் கடலை நோக்கி ஓடுவதுமாக நேரம் சென்றது.

இவர்கள் வாழ்வும் இப்படிதான். ஒருவர் நெகிழும் போது.. ஒருவர் தேற்றுவது.. மற்றவர் துவண்டால்.. மற்றொருவர் தேற்றுவது என இருவரும் பரஸ்பரம்.. காதல்பண் பாடிக் கொண்டனர்.

எனக்கானது என்ற ஒரு சின்ன வட்டத்தில், மயூரா என்ற மையப்புள்ளியில்.. அழகாக சுழல கற்றுக் கொண்டான் கபாலீஸ்வரன். 

“மனதை மயிலிடம் இழந்தேனே..

மயங்கி தினம் தினம் விழுந்தேனே..

மறந்து..

இருந்து..

பறந்து.. தினம் மகிழ..

உன் பார்வையில் ஓராயிரம் 

கவிதை நான் எழுதுவேன் 

காற்றில் நானே..”

$$சுபம்$$

Advertisement