Advertisement

ஆனந்த் “அங்க போலீஸ்காரங்க கிளம்பிட்டாங்களாம், கேஸ் பத்தி சொல்ல சொல்லிட்டு போயிட்டாங்க. கபில் கேஸ் கொடுத்து லீகலாக போய்டலாம்.” என்றார்.

கபாலி “எதுக்கு, அவன் பெயரில் இருக்கும் கேஸ்சையே இன்னும் நம்மால் நடத்த முடியலை. எனக்கு தெரிந்து, அவன்கிட்ட பணம் இருக்கு.. பாருங்களேன்.. கேஸ்க்கு சரியாக வரதில்ல.. பணம் கொடுத்து அந்த வக்கீலை வைத்து எதோ செய்கிறான். இப்போது அடிதடி.. ம்..” என யோசிக்க தொடங்கினான்.

ஆதிகேசவனுக்கும் அப்படிதான் தோன்றியது.

ஆனந்த் “நாம போய் ஆபீஸ் பார்க்கலாமே.. “ என்றார்.

மூவரும் கிளம்பினர்.

முதலில் மயூராவின் அகாடமி சென்றனர். ப்பா.. அதுதான் சர்வநாசம் ஆகியிருந்தது. பாவம் மேனேஜர் செக்யூரிட்டி என இருவருக்கும் நல்ல அடி. ஆதிகேசவன் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து பார்த்தார். கபாலி சென்று பார்க்கவில்லை. அவளின் அகாடமி நன்றாக சேதமாகி இருந்தது.

கபாலிக்கு அதை நினைக்கும் போதுதான் வருத்தமாக இருந்தது. அவனால் அந்த இடத்திலிருந்து எழவே முடியவில்லை.

ஆதிகேசவன், கபாலியை அழைத்துக் கொண்டு, அவனின் அலுவலகம் சென்றார். முன்புறம் இருந்த ரிசப்ஷன் ஏரியாவை அடித்து நொறுக்கி இருந்தனர். வாட்ச்மேன்க்கு அடி.. அங்கு நின்றிருந்த மார்க்கெட்டிங் ஆட்களுக்கும் அடியாம். மற்றபடி வேறு சேதம் இல்லை.

அங்கேயே அமர்ந்துக் கண்மூடிக் கொண்டனர்.. மூவரும்.

விடிந்ததும், ஆட்கள் வந்து அலுவலகத்தை சுத்தம் செய்தனர். கபாலி, மயூராவின் அக்டாமிக்கும் ஆட்களை அனுப்பி வைத்தான்.

கபாலி “மாமா.. நீங்க வீட்டுக்கு போங்க, நாங்க பார்த்துக்கிறோம்” என்றான்.

ஆதிகேசவன் எங்கும் செல்லவில்லை. அமைதியாக அவனின் அறையில் இருந்த பாத்ரூம் பயன்படுத்திக் கொண்டார்.. “மாப்பிள்ளை காபி பிஸ்கட் வாங்க வர சொல்லுங்க” என்றார்.

ஆனந்த் வெளியே சென்றார் ஆட்களை அனுப்பி தேவையானதை வாங்கி வர சொன்னார்.

காலை ஒன்பது மணிக்கே வக்கீல் வந்து சேர்ந்தார்.. ஆதிகேசவன் வக்கீல் இருவரும் பேசினார்.

கபாலி, வெளியே வந்து வேலையாட்களை பார்த்து பேச தொடங்கினான். அவர்கள் பயந்துவிட்டார்களா.. என கண்காணித்தான்.

ஆதிகேவன் போனில்.. போலீஸ்சாரிடம் பேசினார்.. “உங்கள் ஆதரவுக்கு நன்றி. சரியான நேரத்தில் வந்து சேர்ந்தற்கு நன்றி.. கேஸ் வேண்டாம்” என்றார்.

கபாலி இப்போது உள்ளே வர, ஆதிகேசவன் வக்கீல் இருவரும் கபாலியிடம் தாங்கள் பேசியதை சொல்லினர்.

கபாலி “மாமா, நீங்க அசியோசியேஷன்னில் இருக்கீங்க. எனக்கு ஏதாவது சொல்ல போய்.. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வரபோகுது” என்றான்.

ஆதிகேசவன் “நீங்களும் நம்ம சங்கத்தில் இருக்கீங்க.. அவரும் இருக்கார். இது நடைமுறைதான். எப்போது இப்படி வெளிப்படையாக நடந்ததோ.. அது என் கண்ணில் பட்டதோ.. அதை கேட்க வேண்டிய பொறுப்பு இருக்கு மாப்பிள்ளை. அத்தோட.. இது என் தனி பிரச்சனையும் கூட. அதனால், பிரச்சனை ஏதும் இல்லை” என்றார்.

கபாலி “ம்..” என்றான். பின் மீண்டும் எதோ அவர்களின் முடிவுகளை திருத்திக் கொண்டிருந்தான். வக்கீலும், ஆதிகேசவனும் அதைத்தொட்டு பேசி விளக்கிக் கொண்டிருந்தனர்.

கபாலி, தன் கருத்தை சொல்லி அமைதியாகிவிட்டான்.

மணி காலை 11க்கு மேல். ஆதிகேசவனுக்கு பசி வந்துவிட்டது. அதனால், “மாப்பிள்ளை, ஹாஸ்ப்பிட்டல்.. போகலாமா” என்றார்.

கபாலிக்கு உள்ளுக்குள் இருந்த குற்றவுணர்வு விழித்துக் கொண்டது.. ‘எப்படி என்னவளை எதிர்கொள்வேன்’ என. ஆனாலும், அவள் கண்களை பார்த்து மன்னிப்பை யாசிக்க கிளம்பினான்.

அப்போதுதான், சுமதி அழைத்து பேசினார். 

கபாலியும் ஆதிகேசவனும்.. அப்படியே தங்களின் வீடு, அதாவது ஆதிகேசவனின் வீடு சென்றனர். குளித்து உண்டு மருத்துவமனை வந்தனர்.

கபாலியும் ஆதிகேசவனும் மயூரா இருக்கும் அறைக்கு வந்தனர். 

கபாலி, மயூராவை பார்க்க.. மயூராவும் தன்னவனை பார்த்தாள். கண்ணில் நீர் திரளத் தொடங்கியது. கபாலி, தன் காய்ந்த உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான். 

கபாலி, உடனே பார்வையை தன் அன்னையிடம் திருப்பினான் “என்ன ம்மா.. சாப்பிட்டாளா” என்றான்.

ஆதிகேசவன் மகளின் அருகில் சென்றார்.. “எப்படி இருக்க ம்மா..” என பேசத் தொடங்கினார். மகளும் தந்தையிடம் கவனம் வைத்தாள்.

மகேஸ்வரி “இல்லடா, இனிதான்.. ரசம் கரைச்சு கொடுக்க சொன்னாங்க ப்பா” என்றார், 

கபாலி மனையாளின் அருகில் வந்தான். 

மகேஸ்வரி, எழுந்து வெளியே சென்றார். அவரை தொடர்ந்து சுமதி ஆதிகேசவன் வெளியே சென்றனர்.

மயூரா கண்ணில் நீர் திரள “உ..ங்களுக்கு.. தெரியுமா.. க்கும்” என கேவத் தொடங்கினாள்.

கபாலி, அவளின் அருகில் கட்டிலில் அமர்ந்தான்.. அவளின் இடது கையை தனக்குள் எடுத்துக் கொண்டான். அதை தட்டிக் கொடுத்தான்.

மயூரா அழுதாள்.

கபாலி “க்கும்.. அழாத மயூ.. அழாத. “ என்றான்.

மயூரா என்னமோ அழவே செய்தாள்.

கபாலி “மயூ..” என்றான் அதட்டலாக. அவனுக்கு என்ன சொல்லுவது என தெரியவில்லை. அவளுக்கு ஆறுதல் சொல்லுமளவு இவன் இன்னும் தேறவில்லை.

மயூரா அழுகையை நிறுத்தவேயில்ல.. 

கபாலி “அம்மா..” என அழைத்தான்.

இரு பெண்களும் உள்ளே வந்தனர்.

கபாலி “ம்மா.. அத்தை, இவளை பாருங்க, சாப்பாடு கொடுங்க..” என்றான்.

சுமதி அவசரமாக ரசம் சாதத்தை கரைத்தார்.

மயூரா உண்ணவே இல்லை. அழுகைதான்.

மகேஸ்வரி, அந்த கிண்ணத்தை வாங்கி தன் மருமகளுக்கு ஊட்டினார். ஒன்றும் சொல்ல முடியாமல் விழுங்கினாள் மயூரா.

கபாலி எழுந்து வெளியே சென்றான்.

அவனுக்கு மனதுள் நடுக்கம் எழுந்தது.. அவளை தாவி அணைத்து, ஆறுதல் சொல்ல நினைத்தாலும்.. ‘எப்படி நடந்தது’ என விளக்குவேன் அவளிடம். என்னிடம் எப்படி ஒன்றி நின்றாள்.. என்னால் இப்படி ஆகிவிட்டதே..’ என எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தான்.

மாலையில் வசீகரன் மட்டும் வந்தான்.

வசீகரன் கபாலியிடம் பேசினான். என்ன ஆகிற்று என கேட்டுக் கொண்டான்.

ஆதிகேசவன் மதியமே வீடு கிளம்பிவிட்டார்.

கபாலி மயூராவிடம் சொல்லிக் கொண்டு வீடு வந்தான். அக்காவின் துணைக்கு.

வசீகரன் இரவில்.. மாமியாரோடு வீடு வர, கபாலி மருத்துவமனை சென்றான்.

மயூரா உண்டு உறங்கியிருந்தாள். சுமதி அங்கேயே இன்னொரு கட்டிலில் உறங்கியிருந்தார்.

கபாலி, அவர்களை தொந்திரவு செய்யாமல் வெளியே அமர்ந்துக் கொண்டான். அப்படியே அங்கேயே படுத்து உறங்கிவிட்டான்.

கபாலி காலையில் எழுந்து மனையாளின் கைபிடித்து அமர்ந்துக் கொண்டான். மயூரா கொஞ்சம் தேறி இருந்தாள். யாரை பார்த்தாலும் கண்ணீர் வருவது நின்றிருந்தது.. நிஜம் இதுவென புரிந்திருந்தது. அமைதியாகினாள்.

மருத்துவர்கள் மாலையில் வீடு செல்லலாம் சென்றனர்.

இரவு, மயூராவை அழைத்துக் கொண்டு நேரே மயூராவின் வீடு சென்றான் கபாலி.

சுமதி, மகேஸ்வரியிடம் சொல்லி இருந்தார் “நாங்க பார்த்துக்கிறோம், நீங்க ஜெயாவை பாருங்க” என்றிருந்தார்.

மகேஸ்வரி ஒன்றும் சொல்லவில்லை. எனவே, கபாலி அங்கே கூட்டி சென்றான்.

சுமதி, அவளின் அறையை சுத்தமாக்கி வைத்திருந்தார். மகள் வரவும்.. “நான் உன்கூட படுத்தக்கவா மயூ” என்றார்.

மயூரா “இல்ல  ம்மா.. வேண்டாம் “ என்றுவிட்டாள்.

கபாலி “நான் பார்த்துக்கிறேன் அத்தை” என்றான்.

இருவருக்கும் வாய்த்திட்ட இந்த தனிமையில், கபாலிக்குதான் கொடுமையாக இருந்தது. அமைதியாக அவள் உறங்குவதற்கு ஏற்பாடு செய்கிறானாம்.., நேராக இருந்த தலையணையை மீண்டும் நேராக்கினான்.. தண்ணீர் இருக்கிறதா பார்த்தான்.. இன்னும் என்னமோ செய்தான்.. மனையாளை பார்க்காமல்.

மயூரா அமர்ந்து கணவனையே பார்க்க. கபாலி “உட்கார் மயூ குளிச்சிட்டு வரேன்” என ரெஸ்ட் ரூம்மில் புகுந்துக் கொண்டான்.

அரைமணி நேரம் சென்று வெளியே வந்தான். மயூ மருந்தின் தாக்கமோ என்னமோ உறங்கி இருந்தாள். கபாலி விளக்கை அணைத்து அமைதியாக அங்கிருந்த பால்கனியில், அவள் அமரும்.. ஜூலோவில் அமர்ந்து கொண்டான்.

கபாலியின் கண்கள் விண் நோக்கி இருந்தது.. குழந்தையை விட.. அவளின் ஏக்கம் தாங்கிய கண்கள்.. ‘அன்று காலையில் இதைதான் தன்னிடம் சொல்ல எண்ணியதோ.. அவன் அண்ணன் பேசும் போது. நேற்றும் அதே கண்கள்.. அதே ஏக்கம் தாங்கி என்னை பார்த்ததே. குழந்தை அவளுக்கு அவ்வளவு முக்கியமோ.. என்னால்.. அவளுக்கு என்ன பதில் சொல்ல முடியும். எங்கும் அவளை தவிக்க விடுவதே வேலை..’ என எண்ணிக் கொண்டிருக்க.. எதோ அசைவு.. என்னவென அவன் நிகழ்காலம் பார்க்க.. மனையாள்.. எதிரில் நின்றாள்.. அவனையே பார்த்துக் கொண்டு.

கபாலி, நடுங்கும் தன் வல்லிய கரங்களை அவளை நோக்கி நீட்டினான்.. மயூரா தன் இடக் கையால் அதனை பற்ற.. உடைந்தழுதான் நல்ல அரக்கன்.

தலைகுனிந்து குலுங்குபவனை.. மயூரா கண்ணில் நீர் வழிய.. பார்த்தாள்.

கபாலி எழுந்து தன்னவளை உள்ளே கூட்டி வந்தான்.. அவளின் வலக் கையை.. தன் இடக்கையால் பிடித்து, கீழ் நோக்கி விட்டவன்.. தன்னவளின் இடையில், கை கொடுத்து அணைத்துக் கொண்டான் இறுக்கமாக. ஏதும் பேசத் தெரியவில்லை.. தான் பேசி அது தவறாகிடுமோ என பயம்.. மனம் நடுங்கியது.

மயூரா தன் மார்பிள் உணர்ந்தது.. அவனின் படபடக்கும் இதயத் துடிப்பை.. அவளின் காதுகளில் முனுமுனுப்பாக “சாரி சாரி மயூம்மா.. சாரி.. என்னால்தான்..” என்ற எதோ புலம்பல். 

மயூரா, நிமிர்ந்து பார்த்தாள்.. கணவன் முகம் தெரியவில்லை.. புரிந்தும் புரியாமல்.. அமைதியாக தானும் அணைத்துக் கொண்டு “கபில்.. ப்ளீஸ்..” என்றாள்.

கபாலி அவளை தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தினான்.. “வா, உட்கார்.. வலிக்கிறதா” என்றான்.

மயூரா “ம்கூம்..” என்றாள்.

கபாலி “க்கும்.. ஏன் தூக்கம் வரலையா.. ஏன் முழிச்சிட்ட” என்றான்.

மயூரா “என்கூடவே இருங்க.. எனக்கு என்னமோ மாதிரி இருக்கு” என்றாள்.

கபாலி “தூங்கலாம்” என்றான்.

கபாலி, மயூராவை படுக்கவைத்து அவளின் இடையில் கைவைத்து.. வயிற்றில்.. தன் கையை படரவிட.. பெண்ணவளின் தேகம் நடுங்கியது. கபாலி “ஷ்.. நமக்கு தெரியாமலே எல்லாம் நடந்துடுச்சி, இனி அதைபற்றி யோசிக்க கூடாது.. ம்.. இனி என் தொழிலின் தாக்கம் எதுவும் உன்னை நெருங்காமல் பார்த்துக்கிறேன். நீ தைரியமா இருடா.. நீதான் என் தைரியமே.. ம்..” என்றான். தன்னவளின் வயிற்றை ஆதரவாக வருடியபடியே.

மயூரா “ம்.. நீங்களும்” என்றாள்.

கபாலி “ம்.. தூங்கு.. கூடவே இருக்கேன்.. தூங்கு” என்றான் ஆழமான குரலில்.

“ஒரு கானம் குறைந்துவரும்..

மௌன திருவளியில்

ஒரு ஞானம் வளர்த்திருந்தேன்..

இதயம் எரித்திருந்தேன்..

நான் இயற்கையில் திளைத்திருந்தேன்..”

 

Advertisement