Advertisement

நான் உன் நிறையன்றோ!

32

ப்ரைட் கம்பெனி.. ஐந்து வருடங்களுக்கு முன்புவரை.. மார்கெட்டில் கொடிகட்டி பறந்த நிறுவனம். அவர்களின் மகன் தவறான பழக்க வழக்கத்தால் சூதாட்டத்தில் பணத்தை இழந்து.. கடனாளியாக.. நிலைமையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்துக் கொண்டார் கடந்த நான்கு வருடம் முன்பு.

அதுதொட்டு அவர்களின் தொழில் இறங்கு முகமானது. மகன் இறந்த துக்கத்தில் குடும்பம் நிலைகுலைந்து போனது. பெரியவர், கடன்களை.. ஊரை சுற்றி இருக்கும் சொத்துக்களை விற்று அடைத்தார். ஆனாலும், மகன் தொழிலில் அகலக்கால் வைத்திருபான் போல.. கடன்களும் வட்டியும் கூடிக் கொண்டே போனது. முன்போல தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தியோ.. புதிய திட்டங்களையும் வகுக்கவோ ஆர்டர்களையும் வாங்கவும்.. அவர்களிடம் பணமும் வேலையாட்களும் இல்லை.

அத்தோடு, மருமகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் பாதி சொத்தை கொத்தார். குவாரியை கைமற்றினார். ஆனாலும் தொடர் தொழிலில் வட்டி, நிலுவை.. வட்டி மேல் வட்டி என கடன்கள் கூடிக் கொண்டே போனது. சமாளிக்க முடியாமல் திணறினார். உடல்நலமும் பதிக்கபாடார். அதனால், பெங்களூரில் அவரின் மாப்பிள்ளை.. அவ்வபோது வந்து தொழிலை பார்த்தார். அவருக்கும் மீண்டும் இது பெரிதாக வளரும் என தோன்றவில்லை.. அதனால், விற்க நினைத்தார். அதிக கடன் மீதம் இருப்பவர்களில் இந்த கபாலி மட்டுமே, அதிக தொகை.. அதிலும் சிலபல கோடிகள் வரும் வட்டியோடு கணக்கிட்டால். அத்தோடு, முரண்டுபிடிக்கும் கடன்காரனாக அவர்களின் கண்களுக்கு தெரிந்தான். 

கபாலியின் அலுவலகத்திலிருந்து ஆட்கள் அவ்வபோது வந்து பேசும் போதெல்லாம் கபாலி தங்களை மிரட்டுவதாகவே தோன்றும். போனில் கபாலி பேசும் போதெல்லாம்.. என்னமோ அவன் மனதில் திட்டம் போட்டு போசுவதாகவே, அந்த ப்ரைட் மாப்பிள்ளைக்கு தோன்றும். அவர்களும், கபாலியின் கடனை அடைக்க நினைக்கிறார்கள்.. தொகை பெரியது, அதனால்.. அதைவிட சின்ன தொகையை அடைத்துவிட்டால்.. ஒரு கடன் முடியுமே என தள்ளி தளி போனது வருடங்கள் ஓடிவிட்டது. அவ்வபோது சிறிது சிறிதாக நடக்கும்.. வியாபாரத்திற்கு.. கபாலிதான் சரக்கு அனுப்புகிறான் இதுவரை. அதனால், அவனிடம் பகைத்துக் கொள்ளவும் முடியவில்லை.. அவனை அரவணைத்துக் கொள்ளவும் முடியவில்லை.

ஊரின் மத்தியில் இருக்கும் அந்த பெரிய நிலத்தை விற்று.. அவனின் கணக்கையும் நேர் செய்ய நினைக்கும் போதுதான். அவன் அந்த நிலத்தின் மேல் ஒரு கண் வைத்திருப்பது தெரிந்தது ப்ரைட் கம்பெனி ஆட்களுக்கு. அதனால்,  அவசரமாக நிலத்தை விற்க நினைக்க.. ‘கபாலி, அந்த நிலத்தை வாங்க போறாராம்.. நீங்க அவருக்குதான் கொடுப்பீங்களாம்.. எதோ உங்க கடன் பத்திரம் அவர்கிட்ட இருக்கு போல..’ என்ற செய்தி வெளிவந்தது. அதிர்ந்தனர் ப்ரைட் மாப்பிள்ளை. நாங்கள் கடன் வைத்திருக்கிறோம். ஆனால், நிலத்தின் பேரில் கடன் இல்லை என எடுத்துதான் சொல்லினர். ஆனால், கபாலி என்ற பெயரே அவர்களின் தொழில் வட்டத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற பொருள் கொண்டதாகிற்றே, அதனால் இதுவரை யாரும் அந்த நிலத்தை வாங்க வரவில்லை. 

அவர்ளின் தொழிலில் புதிதாக வந்த மாப்பிள்ளையும் பொறுத்து பொறுத்து பார்த்தார்.. கம்பெனியும் சரியான விலை விற்க முடியவில்லை.. நிலமும் விற்பனை ஆகாமல் இருக்கிறது.. எங்கே சென்றாலும் கபாலி.. என்ற பெயர் எழ.. அந்த ப்ரைட் மாப்பிள்ளை நேரம் பார்த்திருந்தார்.. கபாலியை வீழ்த்த.

இதே, அந்த நேரம் என லட்டுவாக கிடைத்ததுதான் இந்த எக்ஸ்போர்ட் செய்தி. ஆக, கபாலி பாதிநாட்கள் ஊரில் இருக்கமாட்டான்.. என யோசிக்க தொடங்கினார். அவனின்  முதல் பயணத்தின் போது திட்டங்களை வகுத்தார். இரண்டாம் முறை அவனின் பயணத்தின் போது.. செயல்படுத்திவிட்டார்.

!@!@!@!@!@!@!@!@!

கபாலி.. 

ம்.. கபாலிக்கு, இன்று மதியம் மூன்று மணிக்கு சென்னை செல்லுகிறான் ஃப்ளைட்டில். காலையிலிருந்து மயூராவின் முகம் வாடித்தான் இருந்தது. கபாலியின் ஜாக்கிங் கூட செல்லவில்லை.. மனையாளோடு பேசிக் கொண்டே இருந்தான்.. மயூரா கணவனுக்கு தேவையான உடைகளை எடுத்து பெட்டியில் வைத்துக் கொண்டிருந்தாள்.. கபாலி மனையாளுக்கு, உதவும் வகையில் தன் உடைகளை கப்போட்டில் இருந்து.. எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தான்.. “அடியேய்.. கொஞ்சமாக சிரிச்சிட்டே எடுத்து வை.. இப்படி என்னமோ மாதிரி இருக்காத.. பார்க்க முடியலை. போனதரம்.. என்னோட ஹேர் ட்ரைய்யரை.. நீ எடுத்து வைக்கலை.. இந்த முறை கண்டிப்பாக மறந்திடாமல் வைச்சிடு.. நான் அதை சென்னை ரூமில் வைச்சிக்கிறேன்.. இங்க ஒன்னு புதுசா ஆர்டர் போட்டிடு..” என சொன்னான்.

மனையாள் கணவனை ஏறிட்டு பார்த்து முறைத்தாள்..

கபாலி “என்ன முறைக்கிற” என்றான்.

மயூரா “வேற எதெல்லாம், அங்க எடுத்துட்டு போறீங்க.. இப்போவே சொல்லிடுங்க, நான் ஆர்டர் போடணும்” என்றாள் ஒருமாதிரி குரலில்.

கபாலி உடைகளை எடுத்துக் கொண்டு, மனையாளின் அருகில் அமர்ந்தான்.. தன்னவளின் தோளை தன்னோடு சேர்த்துக் கொண்டு, இமைக்காமல் தன்னவளை பார்த்து.. முகத்தில் எந்த பாவமும் காட்டாமல்.. லேசாக உதடுகள் மட்டும் அசைய கனமான குரலில் “இத எடுத்துட்டு போகணும்ன்னு ஆசையாத்தான் இருக்கு.. அது ஒரு பீஸ்தான் இருக்கு.. ஆர்டர் எல்லாம் பண்ண முடியாது.. அது ஒரு ரிச் பீஸ்.. ஸ்பெஷல் மேட்.. போர் மீ. அதுவும் இல்லாமல், அது என் கூட வராது. ரொம்ப ஈகோ பார்க்கும்.. வேலை இருக்காம்.. வராது. ம்.. என்ன செய்றது.. அதனால, இப்போதிக்கு இவ்வளோதான்” என்றான் கணவன்.

மயூராவிற்கு, கணவனின் பேச்சில் கோவத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை.. தன்னவனின் தோளில் சாய்ந்துக் கொண்டாள், கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

கபாலியும் ஏதும் கேட்க்காமல் தன்னவளை தன் தோளில் ஏந்திக் கொண்டான். அமைதியாக அமர்ந்திருந்தான். 

நேரம் சென்றது இருவரும் மெல்ல விலகி வேலையை பார்க்க தொடங்கினர். குளித்து கிளம்பினர் இருவரும். 

கபாலி “நான் ட்ரோப் பண்ணவா” என்றான்.

மயூரா “இல்ல, அண்ணன் வருவான். சொல்லிட்டேன்” என்றாள்.

கபாலி “எப்போதும் அண்ணனையே கூப்பிட்டுகிற.. இன்னிக்கு நான் ஊருக்கு போவேன்னு தெரியும்.. உன் கூட வருவேன்னு தெரியும்.. உங்க அண்ணனை கூப்பிட்டிருக்க.. ம்.. பார்த்துக்கிறேன்..” என்றான் அழுத்தமான குரலில்.

மயூரா “பார்த்துக்கோங்க என்ன இப்போ” என்றவள்.. அவனின் ட்ராலியை நகர்த்திக் கொண்டு வெளியே சென்றாள்.

கபாலி, ஏசி ஆஃப் செய்து.. ஃபேன் ஆஃப் செய்து கதவை சாற்றி வந்தான். மயூரா பெட்டியோடு நிற்க.. கபாலி பெட்டியை எடுத்துக் கொண்டு படி இறங்கினான்.

இருவரும் கீழே வந்தனர். உண்டு முடித்து.. வசீக்ரனுக்காக காத்திருந்தாள் மயூரா. ஜெயந்தினி வீட்டில் இருப்பதால்.. எப்போதும் ஒரு கார் வீட்டில் இருக்கட்டும் என.. கபாலி சொல்லி இருந்தான். அதனால், வசீகரனோ கபாலியோ.. மயூராவை பிக்கப் ட்ரோப் செய்வது இந்த நாட்களில் வழக்கமாகி இருந்தது. அதனால், இன்று தன் அண்ணனை  வரசொல்லி இருந்தாள் பெண். எனவே, உண்டு முடித்து, காத்திருந்தாள் மயூரா.

கபாலி, அலுவலகம் செல்லாமல்.. தன் மனையாளை முறைத்தபடியே அமர்ந்திருந்தான்.

மயூரா, ஜெயந்தியோடு பேசிக் கொண்டே கணவனை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், கணவனோடு போகும் எண்ணம் வரவில்லை அவளுக்கு.

வசீகரன் வந்தான்.. தன் மாமியார் கையால் ஒரு காபி குடித்துவிட்டு, மனையாளோடும்.. அவளின் வயிற்றில் கை வைத்து பிள்ளையோடும் பேசினான்.

மயூரா, கபாலியின் எதிர் சோபாவில் அமர்ந்திருந்தவள்.. தன் அண்ணின் பேச்சில் தன் கணவனையே பார்த்தாள்.. ஏக்கமாக. கபாலிக்கு அதெல்லாம் ஏதும் தெரியாமல், வசீகரனின் ஆர்ப்பாட்டத்தை உளுக்குள் கிண்டல் செய்துக் கொண்டே மனையாளை முறைக்க.. இப்போது மனையாளின் பார்வை.. என்னமோ சொன்னது அவனிடம்.

அஹ.. தன்னவள் பார்வையின் ஏக்கம் புரியவில்லை கபாலிக்கு. 

இப்போது வசீகரன் “போலாமா மயூ” என்க..

மயூரா, எழுந்துக் கொண்டாள் அமைதியாக.. கணவனை தன் கண்களால் வம்பிழுக்காமல்.. அழகாக தலையசைத்து விடைபெற்றுக் கொண்டு தன் அண்ணனோடு கிளம்பினாள்.

மயூரா, எப்போது தன் அண்ணனோடு சென்றாலும், தன் கணவனை கிண்டலாக பார்ப்பாள். எனவே, கபாலி.. நக்கலாக தன்னை மனையாள் பார்ப்பாள்.. என தலை குனிந்து சத்தமில்லாமல் தன்னவளை பார்த்தவன்.. ஆனந்தமாக நிமிர்ந்தான். இந்த அமைதியான மனையாளின் தலையசைப்பை ஏற்று, தானாகவே தன் தலை அசைய விடை கொடுத்தான், கபாலி.

ஜெயந்தினி “எப்போ கிளம்பற நீ கபில்..” என கேட்ட்க தொடங்கவும்தான். கவனம் இங்கே வந்தது கபாலிக்கு.

அடுத்த பத்துநிமிடத்தில்.. கபாலியும் கிளம்பிவிட்டான்.

மயூராவிற்கு மதிய உணவு.. அகாடமிக்கே வந்தது. எப்போதும் வரும் அவளின் சீனியர் டீச்சர்.. வரவில்லை, விடுமுறை. அதனால் இவள் இங்கேயே இருந்தாள்.. மாலையில் ஏழு மணி வரைதான் அவர்களின் வகுப்புகள் இருக்கும். எனவே, மாலை ஏழு மணி.. வகுப்புகள் முடிந்தது. தன் அண்ணனுக்காக காத்திருந்தாள் பெண். 

அகாடமி, தனி வீடு போன்ற அமைப்பு.. மெயின் ரோட்டின் சின்ன திருப்பத்தில்.. குடியிருப்பு பகுதியில்தான் இருக்கிறது. எனவே, பயமில்லை. ஆனால், சற்று அமைதியான குடியிருப்பு பகுதி. அதிகம் நடமாட்டம் இருக்காது.

மேனேஜர்.. செக்க்யூரிட்டி.. இவள் என மூவர்தான் இருந்தனர். எட்டு மணியை நெருங்கும் நேரம்.. திடுதிடுவென ஆட்கள், பத்து நபர்கள் இருப்பர். உள்ளே நுழைந்தனர். நடன பள்ளியை கேள்வியே கேட்க்காமல் சேதப்படுத்தத் தொடங்கினர்.. போர்ட்.. லைட்.. அங்கிருந்த போன்.. பெரிய நடராஜர் சிலை.. டேபிள்.. சேர்.. பூஜை படங்கள்.. ஜன்னல் கதவு.. மேனேஜர்.. செக்கியூரிட்டி.. என கண்ணில் படுவதை எல்லாம்.. உயிர் உள்ளது.. இல்லாதது.. என அனைத்தையும்  நொறுக்கினர்.. அதில் தன் அறையில் இருந்த மயூராவும் ஒருவள்.. அவளின் அறையில் நுழைந்த நால்வரும்.. டேபிள்.. சேர்.. சலங்கை.. மேக்கப் அலமாரி.. பூக்கள் நிரம்பிய தட்டு.. ஸ்பீக்கர்.. உடைக்க.. சட்டென பேச்சு வராத மயூரா, கண்களை உருட்டி உருட்டி பின்னால் செல்ல.. ஜன்னலை உடைத்துக் கொண்டிருந்தவன்.. மீண்டும் உடைக்க கட்டையை தூக்க.. அதில் தெரியாமல்.. பெண் வர.. அவளின் முதுகும்.. அடியை வாங்கியது.. கூடவே.. கையில் கண்ணாடி பெரிய பீஸ் ஒன்று இறங்க.. மயூரா கத்த முடியாமல் இருந்தவள்.. அதிர்ச்சியில்.. “அம்மா…” என அலறினாள்.

ஆட்கள் சுதாரித்து.. அங்கிருந்து நகர்ந்தனர்.

மேனேஜர்.. செக்கியூரிட்டி இருவருக்கும் அடி என்றாலும், மறைந்து தங்களை காத்துக் கொண்டனர். உடனே வசீகரனுக்கும் கபாலிக்கும் அழைத்து சொல்லிவிட்டனர்.

Advertisement