Advertisement

நான் உன் நிறையன்றோ!

23

மயூராவிற்கு, அந்த இரவு கனவுகளோடு சென்றது. அவளின் பெரிய கண்களில் முழுவதுமாக நிறைந்து நின்றான், அவளின் கணவன். அவனை மீறிய உறக்கமென்பது அதிகாலையிலேயே கிடைத்து மயூராவிற்கு.

கபாலிக்கும் அப்படியே. மயூரா அளவிற்கு இல்லையென்றாலும்.. அவனின் கை விரல்.. அவளின் மென்மையை இன்னமும் மறக்கவில்லை.. ‘வெல்வெட் விரல்கள்’ என அவனின் ஆழ்மனம் ரகசியமாக அவனிடம் சொல்ல.. கபாலியின் முகத்தில் மென்மை  படர்ந்தது.. கற்களின் தரம் மட்டுமே தெரிந்தவனுக்கு.. பெண்ணவளின் விரல்கள்.. வெல்வெட்டாய் இடம் தந்தது.

அவளின் வேண்டுகோள்கள் எல்லாம் அவனின் காதுகளில் கேட்டாலும்.. அன்றுபோல..  கோவமெல்லாம் வரவில்லையே.. யோசனைக்கு சென்றான் ’எப்படி தன்னை கொஞ்சமாக மாற்றிக் கொள்வது’ என.. புன்னகை முகமாகவே உறங்கினான்.

கபாலி, காலையில் நேரமாக எழுந்துக் கொண்டாள். தன் அத்தை எழுந்துக் கொள்ளும் நேரம் வரை, காத்திருந்து.. அழைத்தாள் போனில், தன் அத்தைக்கு.

நேற்று நடந்ததை முழுவதுமாக மயூரா சொல்லி முடித்தாள்.. “காலையில் என்னை கூப்பிட வரேன்னு சொன்னார் அத்தை.. நான் வந்திடுவேன்” என வெட்கத்தோடு சொல்லி முடித்தாள் பெண்.

மகேஸ்வரிக்கு அத்தனை சந்தோஷம்.. மகன் இவ்வளவு இறங்கி பேசுவான் என எண்ணிவில்லை அன்னை. எனவே, ஆயிரம் முறை.. சொன்னார் “அவன் நல்லவன் ம்மா.. இப்போதான் இப்படி எல்லாம் இருக்கான்.. நீ பிடிச்சிக்கோ விட்டுடாத டா..” என்றார்.

இருவரும் பேசி முடித்துத்தும் அப்படியே அமர்ந்திருந்தனர் கபாலியின் நினைவில்.

மகேஸ்வரிக்கு, நேரம் வேகமாக ஓடியது.

 

அதிகாலையில் எப்போதும் போல எழுந்துக் கொண்டான் கபாலி. ம்.. முகத்தில் கடமைக்கு பதில்.. கொஞ்சம் புன்னகை சேர்ந்திருந்தது.. அத்தோடு வெட்கம் வேறு சேர்ந்துக் கொள்ள.. கண்ணாடியில் இரண்டு நிமிடம் நின்று தன் முகத்தை பார்த்துக் கொண்டான் கபாலி.

நேரம் செல்ல.. கிடுகிடுவென கிளம்பி சென்றான் ஜாகிங். அப்போதெல்லாம் ஒரே யோசனை ‘ஐயோ, காலையில் வரேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.. எப்படி போய் அவளை கூப்பிடுவது.. என்னான்னு சொல்லி அங்கே போய், நிற்பது..’ என ஒருமாதிரி சிரிப்பாகவும் வெட்கமாகவும் வந்தது கபாலிக்கு.

ஜாகிங் முடித்து.. வந்தான், குளித்து கீழே வந்தான். ‘எப்படி அங்கே தனியே செல்லுவது.. அம்மாவை கூட்டி போகனும்.. அப்போவே சொன்னாங்க, நான் கேட்க்கலை.. இப்போ போய் என்ன சொல்லி கூப்பிடுவது’ என எண்ணிக் கொண்டே.. பூஜை அறையில் கண்மூடி நின்றான்.

திருநீறு அணிந்துக் கொண்டு வெளியே வந்தான். அன்னையிடம் கிளம்ப சொல்ல வேண்டும் என எண்ணிக் கொண்டே வந்தான். வெட்கமாக வந்தது ‘என் பொண்டாட்டிய கூப்பிப்த் போனும் கூட வாம்மா’ன்னு எப்படி சொல்றது’ என வெட்கமாக வந்தது வளந்தவனுக்கு.

அன்னை “சாப்பிட வா கபில்” என்றார்.

மகன் எப்போதும் போல அமைதியாகவே சென்றான். உண்டான், பேசுவதற்கு.. வார்த்தைகள் வரவில்லை அவனுக்கு.

அன்னை குறுகுறுப்போடு மகனையே பார்த்துக் கொண்டிருந்தார். காலையில் மருமகள் அழைத்து சொல்லியது.. சந்தோஷத்தை தர, உடனே தானே நின்று.. கேரமல் பாயசம் செய்திருந்தார். அது கபாலிக்கு மிகவும் பிடிக்கும்.. அவனின் பிறந்தநாள் அன்று மட்டும்.. அது ஸ்பெஷல் டிஷ். ஆனால், மகன் இன்று எதுமே சொல்லாமல் அந்த கப் பயாசத்தை இப்போது அருந்தவும் அன்னைக்கு முகமே வாடி போனது.  ’ஏதாவது சொல்றானா பாரு..’ என பரிமாறி முடித்தவர்.. ஹாலுக்கு சென்று அமர்ந்துக்  கொண்டார்.

இப்போதுதான், கபாலிக்கு அந்த பாயசத்தின் ருசி மகன் நாக்கில் தெரிய.. “அம்மா..” என அழைத்தபடியே கை கழுவிக் கொண்டு வந்தான்.

அன்னையிடம் “என்னம்மா, இன்னிக்கா என் பர்த்டே..” என்றான். அவனுக்கு உண்மையாகவே,  மயூரா சொல்லியிருப்பாள் என தோன்றவில்லை. எனவே, கேட்டான்.

மகேஸ்வரி முறைத்தார். மகன் ஏதும் புரியாமல் அன்னையே பார்த்தான். அன்னை இமைக்காமல் முறைக்க, மகன் தலை குனிந்துக் கொண்டான்.

மகேஸ்வரிக்கு, அவன் இப்படி அமர்ந்திருப்பதே.. எதையோ தயங்கி தயங்கி தன்னிடம் சொல்ல நினைக்கிறான் என புரிகிறது. மகன் அமர்ந்திருக்கும், நிலையையும்.. காலையில் மருமகள் சொல்லிய செய்தியும் புரிந்த அன்னைக்கு.. அவனின் நிலை நன்றாக புரிந்தது.. ஏன் தன்னிடம் அமர்ந்து பேசி கொண்டிருக்கிறான் என. இல்லையே, இந்நேரம் நடையை கட்டியிருப்பான்.. நிற்க மாட்டான், வீட்டில்.. அமர்ந்து, தன் வாய் பார்க்க மாட்டான், மகன்..  என அவனை முறைத்துக் கொண்டிருந்தார் பொய் கோவத்தோடு.

கபாலி அன்னை பதில் சொல்லாமல் போனதும் திணறினான்.. அவனிற்கு தெரியும் இப்போது தன் பிறந்தநாள் இல்லையென.. ஆனால், எப்படி, அன்னையிடம் பேச்சை ஆரம்பிப்பது என தெரியவில்லை அவனிற்கு. இப்போது அன்னை பேசாமல் முறைக்கவும் “அம்மா.. உன்கிட்ட ஒன்னும் சொல்லணும்” என்றவன், எழுந்து டிவியின் அருகே சென்று நின்றுக் கொண்டான். அன்னையின் முகம் பார்க்க.. திணறினான் வெட்கத்தில்.

கபாலி, வரவழைத்துக் கொண்ட ஏதுமில்லா குரலில்.. “ம்மா.. நேற்று, மயூராவை ரிஷப்ஷனில் பார்த்தேன்.. க்கும்.. பேசினேன்.. இன்னிகு நானும் அம்மாவும் வந்து கூப்பிட்டு போறோம்ன்னு சொல்லி வந்திட்டேன்.” என்றான்.

அன்னை எதும் பதில் சொல்லவில்லை.. ‘அடபாவி’ என பார்த்திருந்தார்.

கபாலி “அங்க, ஜெயாக்கும்.. தாலி பெருக்குவிழா.. இவள் அங்கே இருந்தால்.. நல்லா இருக்காதில்ல.. நமக்குதானே சங்கடம். அதான் பேசிட்டேன். அவ.. அவளும் ஒன்னும் சொல்லலை.. வரேன்னு சொல்லிட்டா.. நாம போய் கூப்பிட்டு வந்திடலாமா” என்றான்.. திரும்பி தன் அன்னையை கொஞ்சுதலாக பார்த்து.

அன்னைக்கு, மகனை பார்க்க.. இன்னும் சின்ன வயது குறும்புகாரனாகவே தோன்றியது.. மகேஸ்வரி புன்னகைத்து “ம்.. அவ வந்தாலா.. MLA விசேஷத்துக்கு. ம்.. “ என்றார் விசாரணையான குரலில்.

கபாலிக்கு அன்னையின் மலர்ந்த புன்னகை முகம்.. அவனின் மூளையில் பலப் எரிய செய்ய “ஐயோ.. ம்மா.. மயூரா பேசிட்டளா” என்றான், சிரிக்காமல், வெட்கமும் கோவமும் கலந்த குரலில்.

அன்னை “உண்மையை சொல்லுடா” என்றார்.

கபாலி “கிளம்பும்மா.. போலாம்..” என தலையை கோதிக் கொண்டு.. அமர்ந்தான்.

அன்னை, மகனை என்ன முறைத்தும் ஒரு வார்த்தை வரவில்லை.. மகன் வாயிலிருந்து.. ‘தான் வழிந்த கதையை எப்படி சொல்லுவான்’ அன்னையிடம்.. முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு.. அமர்ந்துக் கொண்டான் மகன்.

அன்னை அதே முறைப்போடு கிளம்ப சென்றார்.

காலையில் மயூரா வீட்டில் கபாலி வருவது பற்றி அன்னையிடம் சொல்லியிருந்தாள். எனவே, சுமதி இப்போது மகேஸ்வரிக்கு போன் செய்து.. விவரம் கேட்டுக் கொண்டார்.

இப்போது, இருவரும் கிளம்பி மயூரா வீடு சென்றனர். அங்கே, இவர்களை எதிர்பார்த்து குடும்பமே காத்திருந்தது. கபாலிக்கு, வெட்கமாக போனது. ஆனால், பார்ப்போர் அவனைவருக்கும் அவனின் வெட்கமுகம் அழகாக தெரிந்தது.

நல்லவேளை, யாரும் ஏதும் கேட்கவில்லை கபாலியிடம். ஆதிகேசவன் பொதுவாக பேசினார். மயூரா கணவனுக்கு தயிர்வடை எடுத்து வந்து கொடுத்தாள்.. பெண் பார்க்க வரும்போது கூட.. இவ்வளவு  திணறலும்.. படபடப்பும் கபாலிக்கு இல்லை.. ஆனால், இப்போது கணவனான கபாலிக்கு அத்தனை தடுமாற்றம்.

வசீகரன் தன் மனைவியிடம்.. அவனுக்கு நடக்கும் வரவேற்பை பார்த்து “எப்படி இருந்தாலும்.. உன் தம்பி ஹீரோ ஆகிடுராண்டி” என்றான் கேலியாக.

ஜெயந்தினி “ம்.. பொறாமை, பாவம் அவன்” என அங்கிருந்தே, தன் தம்பிக்கு திருஷ்டி எடுத்தாள்.

வசீகரன் கான்டான குரலில் “யாரு.. அவன் பாவம்.. எப்படி டி இப்படி நம்புறீங்க எல்லோரும்” என்றான் சிரித்துக் கொண்டே.

ஜெயந்தினி “அவன் பாவங்க.. அவனுக்கு இப்போதான், புரிய தொடங்குது எல்லாம்.. அவன் சிரித்து பேசி, நான் பார்த்ததேயில்லை.. எங்க அப்பாவோட.. அவனின் சிரிப்பே போயிருந்தது. இன்றுதான், இப்போதான்.. கொஞ்சம் உட்கார்ந்து பேசறான்.. இளகி இருக்கான். இனி பாருங்க, அவன் உங்க தங்கச்சியை நல்லா பார்த்துப்பான்..” என்றாள் ஆத்மார்த்தமான குரலில்.

வசீகரன் மனையாளையே பார்த்து “நடந்தால் சந்தோஷம்தான்” என்றான் நம்பும் நம்பா குரலில்.

உண்டு முடித்து. கபாலி “சரி மாமா.. நான் கிளம்பறேன்.. அர்ஜென்ட் மீட்டிங் இருக்கு.. நான் கிளம்பறேன்.. நீங்க, லஞ்ச் முடிச்சு.. அம்மாவோடு, மயூராவை அனுப்பி வைங்க..” என்றான்.

ஆதிகேசவன்க்கு ஒன்றும் இதில் தவறு தெரியவில்லை. ஆனால், பெண்கள் என்ன சொல்லுகிறார்கள் என கேட்கும் கடமை.. குடும்ப தலைவருக்கு உண்டே எனவே, “சுமதி” என அழைத்து.. வினவினார்.

சுமதி, மகளையும்.. சம்பந்தி மகேஸ்வரியையும் பார்த்தார்.

மகேஸ்வரி “ஏன் ப்பா.. மதியம் சாப்பிட வந்திடேன்.” என்றார்.

கபாலி “ம்மா.. மணி 11:30 நான் போயிட்டு எப்போ திரும்ப வரது. முடியாது. இது நார்த்திலிருந்து.. வந்திருக்காங்க.. ஈவ்னிங் ஆகும்.. நீங்க வாங்க..” என்றான்.

ஆதிகேசவன் “சரி மாப்பிள்ளை நீங்க பாருங்க.. நாங்க ஈவினிங் கொண்டுவந்து விட்டுடுறோம்.. நீங்க வேலையை பாருங்க” என்றார்.

கபாலி, மயூராவிடம் தலையசைத்து விடைபெற்றான். மயூராவிற்கு.. அந்த பார்வையும் தலையசைப்பும் இன்னும் இன்னும் அவளை வசமிழக்க செய்தது. அழகாக தானும் தலைசைத்து விடைகொடுத்தாள் பெண்.

கபாலி வேலையை பார்க்கத் தொடங்கினான்.

வசீகரனும், ஆதிகேசவனும் வேலையை பார்க்க கிளம்பினர். மயூராவும் ஜெய்ந்தினியும் இன்று, வேலைக்கு செல்லவில்லை. எனவே, பெண்களின் கூட்டணி பேச்சை தொடங்கியது.

மதியம் உண்டு முடித்து.. மகேஸ்வரி தன் மருமகளோடு பேசியபடியே இருந்தார்.. அவளின் அறையில். மயூரா அவரின் பேச்சில் உறங்கிவிட்டாள். அதன்பின்தான் மகேஸ்வரி உறங்கினார்.

மாலையில் வசீகரனும் ஜெயந்தினியும் மயூராவோடும்.. மகேஸ்வரியோடும் சென்றனர். மயூராவை, வீட்டில் விட்டுவிட்டு, அவர்கள் இருவரும்.. வெளியே கிளம்பினர்.

நேரம் சென்றது.. கபாலி வரவில்லை. மயூரா, தன் அத்தையிடம் பேசினாலும்.. கண்கள் வாசலை நோக்கியே இருந்தது.

மகேஸ்வரிக்கு பயம் பிடித்துக் கொண்டது. ஆனாலும் ஏதும் காட்டாமல் “வா மயூ சாப்பிடலாம்..” என உண்பதற்கு அழைத்துச் சென்றார்.

மயூரா உண்டாள்.. அத்தையிடம் “அத்தை, நான் அவருக்கு பேசறேன்..நீங்க தூங்குங்க” என்றவள் மேலே தங்களின் அறைக்கு சென்றுவிட்டாள்.

மகேஸ்வரி, தன் மகனுக்கு அழைத்துக் கொண்டே.. மறுமகளிடம் தலையசைத்தார். 

மகன் போனை எடுக்கவில்லை. அன்னைக்கு கோவமே வந்தது. நாடகம் பார்க்க தொடங்கினார்.

மயூரா விழித்திருந்தாள்.. எதோ செய்துக் கொண்டிருந்தாள்.. இன்று என்ன நடந்தது என தன் ஸ்டாஃப்பிடம் பேசினாள்.. பின், தன்னுடைய கப்போர்ட்டில் உடைகளை சரி செய்தாள். ஏனோ நேரமே கடக்கவில்லை.. கணவனையும் காணவில்லை. இப்போது அவளின் போனில்.. செய்தி வந்ததற்கான அறிகுறியாக சின்ன சத்தமா வந்தது. அசித்ரையாக அதை பார்த்தாள் மயூரா.. கண்கள் சிவந்து.. கலங்கியது.. முகம் மலர்ச்சியை தொலைத்து வாடி போனது.

கபாலியின் குறுஞ்ச்செய்திதான்.. அது “மயூரா, கொஞ்சம் லேட் ஆகும் வருவதற்கு.. பையர்ஸ்கிட்ட மாட்டிகிட்டேன்.. நீ தூங்கு.. குட் நைட்.” என வந்து சேர்ந்தது அவளிடம். அதை பார்த்து கலங்காமல் எப்படி இருப்பாள் பெண்.. ஒருபோன், செய்யவில்லை இதுவரை. இப்போது இப்படி ஒரு செய்தி.. என்ன நினைப்பாள் பெண்.. ‘எனக்கு இன்னும் புரியாதா.. இவனை’ எனதான் தோன்றியது. பால்கனியில் சேன்று நின்றுக் கொண்டாள்.. எதிரில் தெரிந்த தோட்டத்தின் இருள்.. அவளையும் சூழ்ந்துக் கொண்டது. கண்கள் மௌனமாக.. அவனுக்கான காத்திருப்பை கண்ணீராக சிந்தியது.

அரைமணி நேரம் சென்று.. கால்கள் வலிக்கத் தொடங்க.. வந்து படுத்துக் கொண்டாள், மயூரா. 

கபாலிக்கும்,  மனதேயில்லை.. அந்த மீட்டிங்கில். இப்போது ட்ரிங்க்ஸ் வேறு.. தவிர்க்க முடியவில்லை.. அதனால், மனையாளுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு.. அவர்களோடு கலந்துக் கொண்டான். அதிகம் எடுக்கவில்லை.. என்றாலும்.. இரண்டு ரவுண்டு சென்றது. ஒருவழியாக.. பனிரெண்டு மணிக்கு, அவர்களை ரூமில் விட்டு.. தான், வீடு வந்தான் கபாலி. 

சாவி தன்னிடம் இப்போதெல்லாம் இருக்கிறது. அதனால், சத்தமில்லாமல் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான். நேரே மாடிக்கு சென்றான். கண்ணில் அலைபுறுதலுடன்.. தங்களின் அறைக்கு சென்றான்.. அவனுக்கும் மனது சரியில்லை.. ஆனால், இரண்டு வருடம் சென்று வந்திருக்கும் இந்த பையர்ஸ்’சை கவனிக்க வேண்டும். ஆனால், அது இன்றே நடந்தது அவனுக்கும்.. சங்கடமாக போனது.

கபாலி, கதவை திறந்து பார்க்க.. அப்படியே கையை தலைக்கு வைத்து, கட்டி வந்த காட்டான் புடவையில்.. அப்படியே ஒருக்களித்து உறங்கிக் கொண்டிருந்தாள் மனையாள். ஏசி போடவில்லை.. அருகில் செல்ல முதல்முறை பயம் வந்தது கபாலிக்கு.. ‘அவள்  ட்ரிங்க்ஸ் வேண்டாம்’ என்றுதான் சொன்னாள்.. இந்த வாசனை அவளை தாக்கிவிட போகிறது என பயம் வந்தது. ஏசியை  ஆன் செய்தான்.. அடுத்து அவளை நெருங்காமல்.. தொடாமல்.. இரண்டு நிமிடம் தள்ளி நின்று அந்த பெரிய கண்களை பார்த்துவிட்டு, அடுத்த அறைக்கு சென்றுவிட்டான், கணவன்.

உறக்கமே வரவில்லை கபாலிக்கு.. மனையாளின் பெரிய விழி.. லேசாக மூடாமல்.. விழித்தபடி உறங்கிக் கொண்டிருந்தாள்.. ‘நல்லா தூங்கல அவ.. என்னை தேடியிருப்பாள்..’ என தன் நெஞ்சை நீவிக் கொண்டான். மனது ரணமானது.. ‘போதும் தூங்குடா..’ என அவனின் மூளை சொன்னாலும்.. மனது வலித்தது.. மனையாளை நினைத்து. உறக்கம் அவ்வளவு சீக்கிரம் அவனை அணுகவில்லை.

காலையில், நேரமாக எழுந்துக்கொண்டான்.. கபாலி. முதலில் குளித்து.. கட்டிய டவலோடு தங்களின் அறைக்கு வந்தான்.

மயூரா, அப்போதுதான் எழுந்து அமர்ந்துக் கொண்டிருந்தாள்.. அருகில் கணவன் இல்லாமல்.. மனது காலையிலும் வருத்ததோடு சுணங்கிக் கொண்டது. அவனின் இடத்தை தன் விரல்களால் வருடினாள்.. 

சரியாக அந்த நேரம்.. கதவை திறந்துக் கொண்டு.. உள்ளே வந்தான் கணவன். மயூரா நிமிர்ந்து பார்த்தாள்.. கபாலி, அவளை பார்த்துக் கொண்டே, கதவை சாற்றினான்.

மயூரா, எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டாள். 

கபாலி, தன்னுடையை எடுத்து அணைந்துக் கொண்டான்.. 

நீண்ட நேரம் சென்றுதான் வெளியே வந்தாள் பெண்.. அழுதிருப்பாள் போல.. கண்கள் இரண்டும்.. வீங்கி,  ரத்தமென சிவந்திருந்தது.

மயூரா, எப்போதும் எழுந்ததும் குளித்திடுவாள். ஆனால், இன்று, அப்படியே பல்துலக்கி வந்தாள்.. அவ்வளவே.  முகத்தை துடைத்துக் கொண்டே.. கணவனை கடந்து வெளியே செல்ல எத்தனித்தாள்.

கபாலி “மயூ..” என்றான் தடுமாற்றமான சின்ன குரலில்.

அவள் நிற்கவில்லை.

கணவன், தன்னை தாண்டி சென்றவளின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டே.. “மயூம்மா.. கொஞ்சம் நில்லேன்” என்றான்.

மயூரா கையை உதறிக் கொண்டு, அவனை பார்க்காமல் அப்படியே நின்றாள்.

கபாலி “உண்மையாகவே, சீக்கிரமாக வரணும்ன்னுதான் நினைச்சேன்.. சாரி மயூரா” என்றான்.

மயூரா அமைதியாக நின்றாள்.

கபாலி, மனையாளின் அருகில்.. எதிரில் வந்து நின்றான்.. மயூரா, இரண்டடி பின்னால் சென்றாள்.

கபாலி ஒருபெருமூச்சு விட்டான்.. அவனுக்கு என்ன செய்வது என தெரியவில்லை..  “என்கிட்டே ஏதாவது பேசு” என்றான்.

மயூரா நிமிர்ந்து பார்த்தாள் “அஹ.. இன்னும் என்ன பேசணும்.. எனக்கு காலையில் வேலை இருக்கு, நேற்றே நான் லீவ், நா..ன் தான் தேவையில்லாமல்.. லீவ் போட்டுட்டேன்.. க்கும்.. எ.. எனக்கு புத்தியே இல்லை..” என முனகியபடியே மயூரா, கணவனை தாண்டி செல்ல முயன்றாள்.

கபாலி அவளின் கைகளை பிடித்துக் கொண்டான் “ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு டென்ஷன் ஆகாத.. இன்னிக்கு நான் ப்ரீ.. வெளியில் போலாம் வா” என்றான், பிடி இரும்பாக இறுகியது..

மயூரா “இப்போ எனக்கு வேலை இருக்கு..” என்றாள், கடுப்பான குரலில்.

கபாலி, பிடித்திருந்த அவளின் முழங்கையிலிருந்து.. தன் பிடியை விரல்களுக்கு நடுவில்.. த் விரல்களோடு கோர்த்துக் கொண்டான் என கோர்த்துக் கொண்டான் “நான் உன்னை ட்ரோப் செய்யவா..” என்றான், அவளை சமாதனாப்படுத்தும் எண்ணத்துடன்.

மயூரா வேண்டாம் என தலையசைத்தாள்.. 

கபாலி அவளின் விரல்களில் தன்பிடியை அழுத்தி “கண்டிப்பா வருவேன்.. சரி, கிளம்பு போலாம்” என்றவன்.. அவள் எதிர்பாக்கா வண்ணம்.. அவளின் உள்ளங்கையை எடுத்து முத்தமிட்டான்.. மயூரா தன் கையை இழுக்க.. விடவில்லை கணவன் “இன்னும் ஒன்னே ஒன்னு” என்றான், மயூராவின் சம்மதத்தை எதிர்பாக்கவில்லை அவன்.. இப்போது ரசனையோடு.. அவளின் உள்ளங்கையில்.. தன் மீசைமுடிகள் உரச.. வன்மையான இதழ்களால்.. மென்மையாக முத்தமிட்டான் கணவன். மயூராவின் தேகம் சிலிர்க்க.. வெடுக்கென அவன் அசந்த நேரத்தில் கையை உதறிக் கொண்டு சென்றுவிட்டாள்.

 

Advertisement