Advertisement

நான் உன் நிறையன்றோ!

24

மயூராவை, காலையில் கபாலிதான், அவளின் அகாடமியில் ட்ரோப் செய்தான். நேற்று நடந்ததை சொன்னான்.. இல்லை, உளறினான். அஹ..  இயல்பாக பேச வரவில்லை.. தன்னவளிடம். கபாலிக்கு, மேலும் எதையும் யாரிடமும் பகரந்ததில்லை அவன்.. கோர்வையாக மனையாளிடம் பேச தயக்கம் வந்து சேர்ந்தது “நான் போனேன் லேட் ஆச்சு.. அப்படி இனி.. ஆச்சுன்னா.. ஒன்பது மணி ஆச்சுன்னா.. நீ சாப்பிட்டுடு, இல்ல.. நான் வந்திடுவேன். இருந்தாலும் சொல்றேன்” என திணறி திணறி பேசினான்.

மயூரா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்.. முகம் மலர்ந்து இருந்தது.. உதடுகள் பதுக்கிய புன்னகையில்.. அழகாக மின்னியது. கபாலி மனையாளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டினான். மயூராவிற்கு அதில் கன்னமும் மின்ன தொடங்கியது. அந்த அரைமணி நேர பயணம் அவ்வளவு இனிமையாக இருந்தது இருவருக்கு.

மயூராவை, அகடாமியில் ட்ரோப் செய்தான்.. மனையாள் ஒலி எழுப்பாமல் உதடசைத்தாள்.. “உள்ள வாங்க” என. 

மனையாளின், உதடசைவை கச்சிதமாக படித்து கபாலி, பாவனையாக “நமக்கு என்ன வேலை அங்க.. ஒரே லேடீஸ்.. டான்ஸ்.. பாட்டு.. நமக்கு செட் ஆகாதே..” என்றான்.

இறங்கியிருந்த மனையாள் லேசாக முறைத்தாள், கணவனின் பதிலில். கபாலி தலையை  கோதிக் கொண்டே.. “இல்ல.. இல்ல.. நீ சூப்பர்.. நான் செட்டாகிட்டேன்.. சரியா. இது வேற.. விட்டுட்டேன்.” என்றான். 

மயூரா தன் வலது கையை எதோ மந்திரம் போடுவது போல சுழற்றி.. ஐந்து விரல்களையும் “போங்க.. போங்க..” என உதறினாள்.

மயூரா தலையசைத்து உள்ளே செல்ல.. கணவன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவளை.. ‘இன்னும் கொஞ்ச நேரம் அவளோடு இருந்திருக்கலாம்.. இனி நான்தான் ட்ரோப் செய்யனும்’ என மனம் செய்துக் கொண்டான்.

“அடி ஏய் என்ன எங்க நீ கூட்டி போற..

அடி ஏய் என்ன எங்க நீ கூட்டி போற..” என அவ்ன்காதுக்ளுக்கு மட்டும் பாடல் கேட்டது. தன்னையறியாமலே.. கண்ணாடியை பார்த்தான் கபாலி. முன் உச்சி முடியை.. இரண்டு விரல் கொண்டு.. சரி செய்தான்.. தன்முகமே புது  பொலிவோடு இருப்பதாக தோன்றியது அவனிற்கு.. ‘ம்.. கபில்.. ஸ்மார்ட் டா நீ.. ஆனா, என்னமோ சரியில்ல நீ..” என்றான் தனக்கு தானே.

பின் அவனே தன் வலது கைவிரல்களால் மீசையை நீவிக் கொண்டு இன்னும் கண்ணாடியை பார்த்து.. ‘நல்லாதான் இருக்குடா.. உன் பெண்டாட்டி.. நீ பேசு.. பிடிச்சும்தானே இருக்கு..’ என  சொல்லிக் கொண்டு.. வண்டியை எடுத்து அலுவலகம் வந்தான்.

கபாலி அமைதியாக அலுவலக அறையில் அமர்ந்தான். என்ன நடக்கிறது என வேடிக்கை பார்த்தான் நீண்ட வருடங்கள் சென்று. இதுநாள் வரை.. அலுவலகம் வந்தால், அமரமாட்டான் ஓரிடத்தில்.. ரிசப்ஷனில் சற்று நேரம் நிற்பான்.. அங்கு வரும் விசிட்டோர்ஸ், போன் கால்ஸ் என எல்லாவற்றையும் அங்கேருந்தே பேசுவான்.. பார்ப்பான். யார் வருகிறார்கள்.. என தானே எதிர்கொள்வான். சற்று நேரம் சென்று.. உள்ளே கட்டிங்  பாலீஷிங் செய்யுமிடம் செல்லுவான்.. வேட்டியை மடித்துக் கட்டிக்  கொண்டு.. ‘ம்.. போதும் இறக்கு.. வாட்டர் போர்ஸ் பத்தலை.. ம்.. இது கலர் கிளாச்சியாக இருக்கு..’ என அங்கே இறங்கி வேலை பார்ப்பான். மாலையில் அக்கௌன்ட்ஸ் செக்ஷன் சரியாக அலுவலக நேரம் முடியும் நேரம் சென்று அமர்வான்.. பாவம் வேலை செய்பவர்கள்.. ‘மிர்ரர் கம்பெனி செக் வந்தாச்சா.. இன்னுமா போர்ட்டி டேஸ் ஆகலை.. ஏன் இன்னும் வரலை..’ என கணக்குகளை கேட்பான். பதில் சொல்லி, அப்போதே அந்த கம்பெனிக்கு பேசி என அடுத்து இரண்டு மணி நேரம் விட்மாட்டான் கபாலி. அப்படி இருப்பவன் இன்று முழுவதும் அலுவலக அறையிலிருந்து எழுந்துக் கொள்ளவில்லை.. ஆனந்த்திடம்  எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டான். அலுவலகம் என்னமோ எதோ என பரபரப்பாக கபாலி கேட்ட விவரங்களை வந்து, அவனின் கேபினில் நின்று சொல்லி சென்றது.

கபாலிக்கு இபோதுதான் யோசிக்க தோன்றியது போல.. தன் மாமனாரின் பேச்சுகளை. எனவே, ஒரு இடத்தில் அமர்ந்தான். அவனிற்கு அது கஷ்ட்டமாக்தான் இருந்தது.. முதல் ஒருவாரம். பரபரவென கால்கள்.. கற்களை கிழிக்கும் சத்தம் கேட்டாலே.. ஒரு உத்வேகம் வந்திடும் அவனுள்.. அந்த கல்லின் திடமென்ன நிறமென்ன.. வைரமென் மின்னும் அதன் மினுமினுப்பென்ன என பார்க்கும் ஆவல் வரும்.. ஆனால், இன்று அமைதியாக அமர்ந்தான் முதலாளி.

மயூராவிற்கும் வேறு நிலை.. அடுத்து வந்த, நான்கு நாட்கள்.. எதோ நீர்வீழ்ச்சியின் கீழே நின்ற உணர்வு. உச்சி முதல்.. பாதம் வரை அவளுக்கு சில்லென்ற உணர்வை கொடுத்திருந்தான் கணவன். இரவில் எட்டுமணிக்கு வீடு வந்துவிடுவான். மனையாளோடு பேசுகிறானோ இல்லையோ.. நேரமாக வீடு வந்திடுவான். ஹாலில் அமர்ந்துக் கொண்டு செய்தி.. அதில் வரும் டிபெட் என ஏதேனும் ஒன்றை பார்த்துக் கொண்டும்.. போனில் பேசிக் கொண்டும் அமர்ந்திருப்பான்.

மகேஸ்வரி, நாடகம் பார்க்க என தனத்றைக்கு சென்றிடுவாள். மயூரா சிலநேரம், தன் மாமியாரோடு நாடகம் பார்ப்பாள்.. இல்லையேல் மேலே தங்களின் அறையிலேயே அமர்ந்து தனது வேலை ஏதேனும் ஒன்றை கவனிப்பாள். ஒன்பது மணிக்குதான் கீழே வருவான்.. கணவனுக்கும் மாமியாருக்கும் உணவு பரிமாறுவாள்.. ஏதேனும் மூவரும் பேசியபடியே உண்பர். மயூராவும் அப்போதே உண்டு முடித்து.. தன் மாமியாருக்கு உதவுவாள். 

கபாலி உண்டு முடித்து, மேலே சென்றிடுவான். பின்தான் மயூரா மேலே வருவாள்.. கபாலிக்கு பேச்சு இயல்பாய் வராது என்றாலும், மனையாளை தனிமையில் பார்த்தால் இரண்டு வார்த்தை பேசுவான்.. “என்ன இன்னிக்கு க்ரெக்ட் டைமில் ட்ரோப் செய்துட்டேனா” என்பான்.

மயூரா “ம்..” என தலையசைப்பாள்.

கபாலி “ஏதாவது பேசேன்..” என்றான். 

மயூரா “எப்போ என் அகடாமிக்கு வரீங்க” என்றாள் கொஞ்சம் திக்கி திக்கி.

கபாலி சிரித்தான் “எனக்கு, எது வராதோ அதையே கேட்க்கிறீங்க எல்லோரும்..” என சொல்லி நடை பயின்றான் அந்த அறையில்.

மயூரா  சிரித்தாள்.. பின் “சரி, எப்போ என்னை நம்ம ஆபீஸ் கூட்டி போவீங்க” என்றாள்.

கபாலி “அஹ.. இது நல்லா இருக்கே.. நானும்  இப்படிதான் ஸ்கூல் படிக்கும் போது அப்பாகிட்ட கேட்டுட்டே இருப்பேன்.. நம்ம ஆபீஸ் போலாம் ப்பா’ன்னு.. உனக்கு இந்த இடமெல்லாம் பழக்கம் தானே.. என்ன இருக்கு.. புதுசா பார்க்க.. ம்..” என்றான்.

மயூரா “அஹ.. சரிதான், அப்போ வெளிய எங்காவது போலாமா” என்றாள், கணவனை கண்கள் சுருக்கி பார்த்துக் கொண்டு.. தயக்கமாக கேட்டாள்.

கபாலிக்கு யோசனைதான் வந்தது.. மனையாள் கேட்க்க.. சொல்ல வருவதன் அர்த்தம் புரியவில்லை, யோசனையோடு கணவன் “எங்க போறது.. எங்க போறது.. கோவில் போலமா.. இரண்டு தியேட்டர் இருக்கு.. ஆனால், படம் பார்க்கிற அளவு பொறுமை எனக்கில்லை.. அதான் எல்லா ottயும் இருக்கே.. இங்க பாரேன்” என்றான், எதோ வழி சொல்லிவிட்ட ஒளிர்ந்த புன்னகையோடு.

மயூரா, லேசாக புன்னகைத்தாள், ஏதும் பதில் மொழியவில்லை.. மயூரா கணவனை நன்றாக அறிந்துக் கொண்டாள்.. இந்த சிலமணி நேரத்தில், அப்படிதான் தோன்றியது பெண்ணுக்கு. அவருக்கு, என்மீது மட்டுமல்ல.. தொழில், தன் உரிமை.. தவிர வேறு எதிலும் நாட்டமில்லை என புரிந்தது இந்த நான்கு நாட்களில். அதனால் வந்த சிரிப்புதான் இது.

கபாலி “என்ன, என்ன சிரிப்பு.. ஏதாவது தப்பாகிடுச்சா.. எங்க போகனும்” என தான் எதோ சொதப்பிவிட்டேன் என உணர்ந்து, அவளின் அருகில் வந்து நின்றான், தொடர்ந்துமனையாளை சமாதானப்படுத்தும் விதமாக  “நாம் நெக்ஸ்ட் வீக் சென்னை போகலாமா.. நானும் எங்காவது போகணும்ன்னு நினைச்சிருக்கேன்.. போலாம்.. இல்ல, வேற எங்கேன்னு சொல்லு.. போகலாம்” என்றான், நிதானக் குரலில் கேட்டான்.

மயூராவிற்கு அவனின் சுதாரித்த நிலை தெரிந்தாலும், அதை வெளிப்படுத்தாமல்.. அலட்டாமல் அவன் கேட்டும் நிதானக் குரல்.. மிகவும்  பிடிக்க.. கண்மூடி  தலையசைத்தாள் ‘வேண்டாம்’ என்பதாக.

கணவன் “ஏன் வேண்டாம்.. அக்காவின் விழா முடியட்டும்..” என்றான், சமாதானக் குரலில்.

மயூரா “இல்ல, எனக்கு ப்ரோக்ராம் இருக்கு” என்றாள்.

கபாலிக்கு லேசான ஏமாற்றம் வந்தது சட்டென. ஆனாலும், அதை காட்டினால், அவன் கபாலி அல்லவே. மீண்டும் நடந்தபடியே “எப்போ ப்ரோக்ராம்” என்றான்.. அலட்டாக் குரலில்.

ஆனால், அவனின் பார்வை, சொல்ல போகும் அவளின் இதழ்களையே முற்றுகையிட்டது.

மயூரா தலையை குனிந்துக் கொண்டு தேதியை சொன்னாள்.

அழகாக அதை படித்துக் கொண்ட கபாலி “என்ன ஒருமாசம் இருக்கா” என்றான், கொஞ்சம் சத்தமானக் குரலில்.

மயூரா கண்சிமிட்டினாள். கபாலி அதை கண்டும் காணாதவன் போல..  நடைபயின்றான்.. மனதில் என்னமோ அழுத்தியது.. ஒருமாதிரி ஏமாற்றமாகவும் சிரிப்பாகவும் வந்தது அவளின் பதிலை கேட்டு, எனவே ஏதும் சொல்ல முடியாமல் நடந்தான்.

பின், கபாலி “சரி,  நீ நாளைக்கு, அந்த பங்க்ஷன் வீட்டுக்கு போயிட்டு வந்திடு அம்மா கூட” என்றான்.

மயூரா தலையசைத்தாள்.. 

கபாலிக்கு இப்போது அழைப்பு வர.. அவன் வெளியே சென்றான் பேசியபடியே.

மயூரா உறங்க தொடங்கினாள். ஆக, இருவரும் ஒருவரை ஒருவர் உணரத் தொடங்கியிருந்தனர். 

கபாலி, போன் பேசி முடித்தான். உள்ளூர் நண்பர்கள்.. அவனின் சகாக்கள்தான்  “என்ன உன்னை காணோம்” என கேட்க்க அழைத்திருந்தனர். அவர்களிடம்  மழுப்பலாக பேசி வைத்தான்.

ஆனால், தன்னுடைய பதில் அவனுக்கே சிரிப்பை தந்தது.. அதையே சிந்தித்துக் கொண்டிருந்தான்.. அப்படியே மயூரா வந்தால்.. காரணம் அவள்தான் என தெரிய வந்து நின்றாள் அவனின் சிந்தனையில்.. அவள் என்னை சாறுந்திருக்க.. எண்ணுகிறாள்.. அடிக்கடி என் கண்களை பார்க்கிறாள்.. என் முத்தத்தை ரசிக்கிறாள்.. அவள் நம்பிக்கையை இன்னும் கொஞ்ச நாட்களில் பெற்றிடுவேன்.. என எண்ணிக் கொண்டே இதமான மனநிலையில், பால்நிலவை பார்த்துக் கொண்டே.. பால்கனியில் உலவினான் இப்போது. இதெயெல்லாம் பார்த்து ரசித்ததே இல்லை அவன்.. என்னமோ மனது அந்த நிலவின் குளிரை.. ரசிக்க விழைந்தது.. அவனின் இறுகிய உதடுகள் ரகசிய புன்னகையில்  மின்ன நடையாக நடந்தான் கபில்.

“அய்யய்யோ நெஞ்சு அலையுதடி

ஆகாயம் இப்போ வளையுதடி..

என்வீட்டில் மின்னல் ஒழியுதடி

என்மேல நிலா பொழியுதடி..”

அடுத்து வந்த நான்கு நாட்களும் இப்படிதான் கடந்தது இவர்களுக்கு.

அடுத்த ஒருவாரமும் கபாலி அலுவலகத்தில் கவனமாக தன் வேலையை எப்படி செய்வது.. தான் எப்படி வேலை வாங்குவது என்பதிலேயே கருத்தாக இருந்தான். 

நாளை ஜெயந்தினிக்கு தாலிபெருக்கு விழா என்ற நிலையில்.. கபாலி காலையில்த்ன் அன்னையிடம் “அம்மா.. எப்போ அக்காவிற்கு செயின் வாங்க போறீங்க” என்றான்.

மகேஸ்வரி மகனை முறைத்தார்.

கபாலிக்கு புரியவில்லை “என்ன ம்மா” என்றான்.

மயூராவும் மகேஸ்வரியும் காலை உணவை உண்டுக் கொண்டிருந்தனர், இப்போது மயூரா “அதான், அண்ணிக்கு.. அண்ணன் ஸ்பெஷலாக செயின் ஆர்டர் செய்திருக்காராம்.. அண்ணன் அப்போவே நம்மகிட்ட சொன்னாங்களே.. ஞபாகம் இல்லையா” என்றாள்.

கபாலிக்கு அக்கா தன்னிடம் பேசிய நினைவே இல்லை.. வசீகரனும் சொல்லியதாக தெரியவில்லை. கபாலி “யார் சொன்னாங்க என்கிட்டே யாரும் சொல்லையே, நான் அத்தை மாமா வந்த போதே முறை பற்றி கேட்டேன்.. அவர்கள் பொதுவாக பெண் வீடு செயின் போடுவாங்கன்னு சொல்லிட்டாங்க, இப்போது நான் அதை செய்யலைன்னா நல்லா இருக்காது.. நான் மாமாகிட்ட கேட்டுட்டேன்.. அப்போ, நான் எப்படி வெறும் கையோடு போவது.. என்கிட்டே யாரும் இதுவரை சொல்லல” என்றான்.

மகேஸ்வரி “என்கிட்டே சொன்னார் மாப்பிள்ளை.. அன்னிக்கு, மயூராவை விட வந்த போது.. சொன்னார். உனக்கு போன் செய்கிறேன்னு சொன்னார்..  ஜெயந்தினிக்கு தெரியாதாம்.. அதனால், அவள் சொல்லியிருக்க  மாட்டாள். இப்போ என்ன, விடேன், நாம் பணமாக கொடுத்திடுவோம்.. என்ன இப்போ..” என்றார்.

எல்லா இடத்திலும் நான்தான் நிற்பேன் என்ற கர்வமும், உரிமையும்  கொண்ட கபாலிக்கு, தன் மாமா தன்னிடம் சொல்லாதது என்னமோ போலிருக்க.. வீம்பு வந்தது அவனுள்.. “அதெல்லாம் எப்படி விடமுடியும்.. நான் முன்னமே ஆர்டர் சொல்லிட்டேன்.. “ என்றவன் எழுந்து சென்றான், கார் நோக்கி. கோவம் கனலாக உள்ளே எழுந்தது. நான்தானே கேட்டேன்.. நான்தானே முறை செய்வேன்.. என்னிடம் சொல்லாமல் எப்படி.. என அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது கோவம்.

மயூரா விக்கித்து அமர்ந்திருந்தாள்.. இந்த நான்கு நாட்களாக.. அவனின் இளகிய முகத்ததைதான் பார்த்தாள்.. இப்போது மீண்டும், பழைய முகம் நொடியில் வந்து அமர்ந்துக் கொண்டதாக தோன்றியது மனையாளுக்கு.  நான்கு நாட்கள்.. அவளையும் கூட்டிக் கொண்டு அகடாமிக்கு செல்லுவான், அவளை அங்கே விட்டுவிட்டுதான் தன் அலுவலகம் செல்லுவான். இன்று, பழையபடி.. வேதாளம் காலேரியது போல சென்றுவிட்டான் கணவன். பெண்.. இன்னும் என்ன கதை வரபோகிறதோ என எண்ணிக் கொண்டு நின்றாள்.

மயூரா, கைகழுவிக் கொண்டு ஹாலில் வந்து  அமர்ந்தாள். மகேஸ்வரிக்கு, இப்போது மருமகளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என தெரியவில்லை. பாதி உணவில் எழுந்தவளை தடுக்கும் வழி தெரியாமல் நின்றார்.

மயூரா, தேற்றிக் கொண்ட குரலில் “அத்தை, நான் கிளம்பறேன்” என்றாள்.

மகேஸ்வரி கண்ணாடி குவளை நிறைய பூஸ்ட் எடுத்து வந்து கொடுத்தார்.. 

மயூரா “வேண்டாம்“ என தலையசைத்தாள். ஆனாலும், கண்கள் எதற்கோ கலங்கியது.

மாமியார் “விடு ம்மா, நான் பேசறேன். நீ இதையெல்லாம் மனதில் எடுக்காத, நான் பேசிக்கிறேன்.. கபில் கிட்ட. நம்மோட உறவு ஒன்னுக்குள் ஒன்னு.. அதனால், சின்ன விஷயமும் பெருசாகிடும்.. நான் பேசிக்கிறேன்,  நீ இதைகுடி..” என மருமகளை சமாதானம் செய்து, கையில் கொடுத்தார்.. அந்த குவளையை.

மயூரா ஒன்றும் சொல்லாமல்.. அமர்ந்து குடித்தாள். அவளுக்கு, இந்த மாமன் மச்சான் சண்டையை விட, ம்.. தன் தந்தையிடம் சொன்னால்.. நொடியில் இது தீர்ந்திடும், ஆனால், கணவன் தன்னை விட்டு சென்றது என்னமோ.. பள்ளியில் முதல்நாள், தனியேவிட்டு சென்ற குழந்தையின் நிலையென அழுகையாக வந்தது, பெண்ணுக்கு. கணவனின் குணம் புரிந்தும் அழுகை வந்தது மனையாளுக்கு. அதை தடுக்க முடியவில்லை அவளால்.

பூஸ்ட் குடித்து.. தன் அழுகையை விழுங்கினாள். பத்து நிமிடத்தில் கிளம்பினாள், தன் பணியை கவனிக்க.

மகேஸ்வரியும் அன்பாக வழியனுப்பி வைத்தார்.

மயூராவிற்கு, வேலை ஓடவில்லை. அடுத்த மாதம் ஒரு பக்தி உஸ்த்வ்.. அதில் பங்குபெருகிறது.. இவர்களின் நடனப் பள்ளி, எனவே, அதற்கான பயிற்சியில் இருந்தனர், குழுவினர். 

மயூரா நேரே சென்று, வகுப்பெடுத்தாள் முதல் ஒருமணி நேரம். அதன்பின் என்னமோ மனது சோர்ந்து போனது.. இந்த பதினோரு மணிக்கு வருபவர்கள்.. பெரியவர்கள்.. அதாவது திருமணம் ஆனவர்கள் எனவே “நீங்க ப்ராக்டீஸ் பண்ணுங்க” என்றவள், தனதறையில் சென்று அமர்ந்துக் கொண்டாள். 

Advertisement