Advertisement

நான் உன் நிறையன்றோ!

34

மயூராவின் அகடாமி விடுமுறை என மாணவர்களுக்கும் அங்கு பயில்பவர்களுக்கும் போனில் நேரில் என தகவல் சொல்லிவிட்டனர். கபாலி மயூராவின் அக்டாமியைதான் முதலில் சரி செய்ய பணித்தான். அதன் வேலைகள் நடக்க தொடங்கியது.

கபாலி, என்னமோ மயூராவோடு அன்று மட்டுமே தங்கியிருந்தான். மறுநாள், அதிகாலையிலேயே சென்னை கிளம்பிவிட்டான். 

ஆதிகேசவன் “ஏன் மாப்பிள்ளை.. ஒருவாரம் பொறுத்துதான் போலாமே” என்றார்.

கபாலி “இல்ல மாமா.. இது அவசரம். எதுவும் ஸ்த்ம்பிக்காது மாமா. அவன் எதாவது செய்தால், நான் தடுமாறிடுவேன்னுதானே செய்தான். நான் இன்னும் ஸ்திரமா இருக்கேன் மாமா.. நீங்க இவளை பாருங்க.. நாளுநாளில் வந்திடுவேன்..” என்றவன் காரெடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

மயூராவிற்கு, கணவனின் பிரிவு வலிக்கவில்லை.. மாறாக, தேங்கி நிற்காமல்.. அடுத்து என அவன் ஓடுவது.. அவளுக்கு பிடிக்கவே செய்தது. அம்மாவீட்டில் இருந்துக் கொண்டாள்.

ப்ரைட் கம்பெனியின் மாப்பிள்ளை.. கபாலியை வந்து சந்திக்க.. எங்கு பார்க்கலாம் என கேட்டு ஆனந்துக்கு போன் செய்திருந்தார்.

கபாலி இதைதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ம்.. ஆதிகேசவன் இந்த பிரச்சனையை சங்கத்தில் எழுப்புவார். அதனால், ப்ரைட் கம்பெனி ஆட்களுக்கு நெருக்கடிதான்.. எப்படி இருந்தாலும் எங்கு சுற்றினாலும்.. இங்கே வந்தாக வேண்டும்.. எனதான் இந்த ஒருவாரமும் அமைதியாக இருந்தான், கபாலி.

இப்போது காலையில் ஆனந்த்.. கபாலியிடம் போனில் அழைத்து விஷயத்தை சொன்னார்.

கபாலி “நான் நாளை மறுநாள் வந்திடுவேன்.. அன்று காலை பதினோரு மணிக்கு பார்க்கலாம். நம்ம ஆபீசில். ம்.. சொல்லிடுங்க ஆனந்த்” என்றான்.

பின் ஆனந்திடம் கபாலி “அட்வகேட் அவர்கிட்ட பேசி.. பத்திரம் ரெடி செய்ய சொல்லுங்க.. ரெஜிஸ்டர் ஆபிசில் டைம் பேசிடுங்க.. இனி நாம என்ன சொல்றோமோ, அங்க கையெழுத்து மட்டும் போட அவர் வந்தால் போதும்.. பெரியவரை வர ஏற்பாடு பண்ணிடுங்க ஆனந்த்” என்றான் பழைய இரக்கமில்லா கபாலியாக.

ஆனந்த் மறுத்து ஏதும் பேசவில்லை. அவன் சொன்னதை செய்தார்.

மயூரா இரண்டுநாட்கள் சென்று மருத்துவரை பார்த்து வந்தாள். பரிசோதித்து.. மருந்து மாத்திரைகள்.. கொடுத்து அனுப்பினர். கையில் கட்டு பிரித்து.. மீண்டும் வேறு கட்டு போட்டிருந்தனர்.

ஜெயந்தினி மகேஸ்வரி இருவரும் வந்து பார்த்தனர் மயூராவை, மறுநாள். மயூரா அழாமல் பேசினாள். மகேஸ்வரிக்கு நிம்மதியானது. ஆனால், தன் மருமகளின் கலையில்லா முகம் அவரை வாட்டியது. நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பவள் இப்படி அமர்ந்தே இருப்பதை பார்க்க.. அவருக்கு சங்கடமாக இருந்தது. தானே.. மதிய உணவை, மருமகளுக்கு ஊட்டி விட்டார். இப்படி அவளிடம் பேசிக் கொண்டே அமர்ந்திருந்தார், மாமியார்.

இரவில்தான் கிளம்பினர். மகேஸ்வரி “சீக்கிரமா உடம்பை தேற்றிக் கொண்டு அங்க வாம்மா.. வீடு நீயில்லாமல் நல்லாவே இல்ல..” என்றார்.

மயூராவிற்கு இப்போதுதான் கண்ணில் நீர் திரண்டது,

மகேஸ்வரி “ஷ்.. அழக் கூடாது. நல்ல ரெஸ்ட் எடு.. உடம்பை பாரு.. நாங்க ரெண்டுநாள் கழிச்சு வந்து பார்க்கிறோம்.. எல்லாம் சரியாகிடும்” என கூறி மகளோடு வீடு வந்து சேர்ந்தார்.

வசீகரன், தன் மனையாளோடு, அங்கேயே தங்கிக் கொண்டான்.. ஜெயந்தினிக்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தது. அதனால், அவளோடு தங்கிக் கொண்டான்.

கபாலி ஊர் வந்து சேர்ந்தான். இந்த முறை பிளைட்டில் புக் செய்து வந்தான். நேராக மனையாளை பார்க்க சென்றுவிட்டான். தன் அன்னைக்கு அழைத்து சொன்னான் “ம்மா.. மயூ வீட்டுக்கு போறேன், காலையில் வரேன்” என தகவல் சொன்னான்.

மயூரா உறங்காமல் காத்துக் கொண்டிருந்தாள். ம்.. கிட்டத்தட்ட நடுயிரவில்தான் வந்தான். தங்களின் அறையின் கதவை திறக்க.. எதோ பாடல் ஓடிக் கொண்டிருந்தது.. 

சுதாரகுநாதன் குரலில் “தாயே யேசோதா.. 

உந்தன் ஆயர்குலதுதித்த.. மாயன்..

கோபால கிர்ஷ்ணன்.. 

செய்யும் ஜாலத்தை கேளடி..” என குழந்தை கண்ணின் லீலைகளை சொல்லும் பாடல் பாடிக் கொண்டிருக்க.. கபாலி உள் நுழைந்தான். 

மயூரா, கட்டிலில் கால்களை நீட்டி அமர்ந்துக் கொண்டு.. தன் அடிபட்டு கட்டு போட்டிருந்த கையின் அந்த வெள்ளை நிற பிளாஸ்டர்’ரை வருடியபடியே.. எதிரில் இருந்த கண்ணனின் சின்ன அழகு சிற்பத்தை பார்த்துக் கொண்டே.. அந்த பாடலோடு கலந்து.. கண்கள் கசிய பாடிக் கொண்டிருந்தாள் சின்ன குரலில்.

கபாலி, உள்ளே வந்தது கூட இன்னும் உணரவில்லை பெண். தன்னவள் முன்பே மென்மை.. இப்போது கனிந்து.. சர்வத்தையும் மறந்து.. எதோ கனவுலகில் இருப்பவள் போல.. லயித்து அமர்ந்திக்கவும்.. உள்ளே வந்தவனின் கண்கள்.. ரவிவர்மா ஓவியத்தை ரசிக்கும் ரசிகனாக.. அவளை கலைக்காமல்.. மீட்டாமல்.. தொடாமல்.. இதமாக மனதில் படமெடுத்துக் கொண்டான்.

கபாலி “மயூ” என்றான்.

மயூரா இமைதட்டி விழித்து பார்க்க.. கணவன் நின்றிருந்தான்.. “ம்.. வாங்க” என்றாள் பெண்.

கபாலி “என்ன பாட்டு இது.. அழறியா.. ம்..” என்றான் அவளருகில் வந்து நின்று..

அமர்ந்துக் கொண்டிருந்த மயூரா நிமிர்ந்து கணவனை பார்த்து “ம்கூம்.. அதுவா வருது.. குட்டி கண்ணன் பாட்டு.. நான் அழல.. சும்மா கேட்டுட்டு இருந்தேன்” என்றாள் லேசாக புனகைத்துக் கொண்டு.

அமைதியாக ஏதும் சொல்லாமல்.. நிமிர்ந்து பார்த்தவளின் கழுத்தில் கை கொடுத்து.. தன் வயிற்றி வைத்து அழுத்திக் கொண்டான்.. தன்னவள் முகத்தை, கணவன். அவளும்.. அவனின் இடையில் கை கொடுத்து அணைத்துக் கொண்டாள்.. தளும்பி நின்ற கண்ணீர் இமை தாண்டி வழிந்து கன்னத்தை நனைத்து அவளுக்கு.

கபாலி “நீ ஏன் இங்க தனியா இருக்க.. கீழ இருக்க வேண்டியதுதானே.. ஏன் இன்னும் தூங்கலை.. எனக்காக வெயிட் பண்ணியா.. ம்.. தனியா இருக்க..” என்றான்.

மயூரா “இல்ல.. தனியா இல்ல, க்கும்.. எப்படி எனக்கே தெரியாமல் என்னைவிட்டு போனேன்னு.. பாப்பா கிட்ட கேட்டுட்டு இருந்தேன்” என்றாள்.

கபாலி, தன்னவளை தன்னிடமிர்ந்து பிரித்தான் “மயூ..” என்றான் அதட்டலாக.

மயூரா, அப்படியே நிமிர்ந்து கணவனின் கண் பார்த்து “புரியுதுதான். ஆனால், ஏத்துக்க முடியலை.. கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு.. யார்கிட்டவும் பேசவே சங்கடமாக இருக்கு. அதான் நீங்க வந்ததும் சொன்னேன்..” என பெண்ணவள்.. மெல்லிய குரலில் பேசிக் கொண்டே அழுதாள்.

சற்று நேரம் ஏதும் சொல்லாமல் அவளை பேசவிட்டவன்.. பின் மெல்ல அவளின் தலை கோதினான்.. அவளின் கண்களை துடைத்துவிட்டான். பின்  “போதும்.. நிறைய பேசிட்டோம் அன்னிக்கே. இன்னியோட இது போதும்.. உனக்கு ஒரு விஷயம் சொல்லணும்.. இரு வரேன்..” என்றவன், உடைமாற்ற சென்றான்.

இருவரும் முயன்று தங்களை தாங்களே வெளிக்கொணர நினைத்தனர். அது.. கொஞ்சம் மெனகெட்டதும் நடந்தது..

ம்.. மயூரா “சாப்பிட்டீங்களா.. யார் ட்ரோப் செய்தாங்க.. அண்ணாவா..” என்றாள்.. அவன் உடைமாற்றும் நேரத்தில்.

கபாலி “க்கும்.. உங்க அண்ணனை எப்படி கூப்பிடுவேன், அக்கா அங்க தனியா இருப்பாளே.. ஆனந்த்தான்.. அப்போவே, காரெடுத்து வந்துட்டார் பெங்களூர். வரும் போது சாப்பிட்டுதான் நாங்க டிரைவ் ஸ்டார்ட் பண்ணோம். நீ என்ன சாப்பிட்ட” என பேசியபடியே.. உடை மாற்றிக் கொண்டு.. தனது ட்ராலியை தேடி எடுத்தான்.

மயூரா “இட்லிதான் அம்மா இன்னமும் ஊட்டி விட்டாங்க.. கையை அசைக்க கஷ்ட்டமா இருக்கு.. எல்லோரையும் படுத்தறனோ.. தெரியலை..” என்றாள்.

கபாலி “ப்பா.. யாரு நீயா.. இப்படி தனியா உட்கார்ந்திருக்க. நீ படுத்திறியா.. நீ ரொம்ப நல்லவடி.. அதான் உனக்கு ஸ்பெஷல்.. கண் மூடு” என்றான் ஆசையாக.

மயூராவிவை சட்டென ஒரு பரபரப்பு தொற்றியது.. கணவனின் வார்த்தைகளில்.. வாய்கொள்ள புன்னகையோடு “என்னை இப்படி எல்லாம் செய்ய சொல்லிட்டு சாக்லெட் எடுத்து கொடுப்பீங்க, அதானே.. ஒருகையாலேயே எங்கிட்ட அடி வாங்க போறீங்க..” என்றாள்.

கபாலி “ஷ்.. லவ் மூட் ஆன்.. உன் ஆத்துக்காரான் அவ்வளோ தத்தி கிடையாது.. எங்க.. பாரேன்..” என சின்ன நகை பெட்டி ஒன்றை திறந்து அவள் முன் வைத்திருந்தான்.

கப்ள்ஸ் ரிங்.. அழகான ஒற்றை வைரங்கள் கடுகத்தனைதான்.. மினுக்மினுக்கென மின்ன.. அவளின் முன் இருந்தது.

மயூராவின் கண்கள்.. அதை பார்த்து.. நீண்டநாட்களுக்கு பின்.. ஒளிர்ந்தது.. மின்னியது.. ம்.. இந்த ஒளியை அவளின் கண்களில் காணத்தான்.. கணவன் இப்போது, இந்த பரிசு கொடுக்க  எண்ணினான். அது நடந்தே விட்டது. கபாலி அவளின் நீர் கோர்த்துக் கொண்டு தளும்பிய.. ஒளிபொருந்திய.. கண்களை தனக்குள் படமெடுத்துக் கொண்டான்.

அவளின் பழைய கண்களை பார்த்தவன்.. “மயூ இப்டியே இருடா.. எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம்.. ம்.. அதுக்குதான் இது.. இப்போது இந்த கண்.. மின்னிகிட்டே இருக்கணும்.. சோர்ந்து சோகம் கொண்டாட கூடாது.. ம்.. அதுக்குதான். எப்படி இருக்கு” என்றான், அவளின் எதிரில் அமர்ந்துக் கொண்டு ஆழ்ந்த குரலில்.

மயூரா “கபாலி கொஞ்சம் கொஞ்சமாக காதலனாகிட்டே இருக்கீங்க.. அழகா இருக்கு.. லவ் யூ கபில்” என்றவள்.. எழுந்து தன்னவனை அணைத்துக் கொண்டாள்.

Advertisement