Advertisement

நான் உன் நிறையன்றோ!

31

மயூரா கிளம்பிச் சென்றாள். அவளிற்கு, எதையும் யோசிக்க நேரமில்லை. கணவனை தெரியும்.. ஆனாலும் ஒரு நப்பாசைதான் இறுதியாக கூப்பிட்டால் வந்துவிடுவாரோ என.. அதனால் அழைத்தாள். கணவன் எப்போதும் போல.. வேலை எனவும் அமைதியாகிவிட்டாள்.

மயூராவிற்கு நேரம் சென்றது.

கபாலிக்கு, கீழே வசீகரனை பார்த்ததும் ஒருமாதிரி.. கோவமும் வருத்தமும் வந்து சேர்ந்துக் கொண்டது. வாரத்தில் இரண்டு மூன்று முறையாவது பார்ப்பான்தான். ஆனால், எல்லாம் மாலையில், தன் அக்காவை பார்க்க வரும்போது பார்ப்பான். ஆனால், இன்று காலையிலேயே வசீகரனை பார்த்தான், கபாலி. அதுவும், தன் மனையாளை அழைத்து செல்வதற்கு என வந்தவனை பார்த்ததும்.. டென்ஷன் ஆகியது. மயூரா உண்பதற்காக கணவனை அழைக்க “இல்ல, மயூ.. எனக்கு வேண்டாம்.. நீ கிளம்பு.. நல்லா பெர்போர்ம் பண்ணு..” என்றவன், வசீகரனிடம் ஒரு தலையசைப்போடு விடைபெற்று கிளம்பிவிட்டான்.

மயூராவிற்கு, கணவனின் கோவம் நன்றாக புரிந்தது.. ஆனாலும் கணவனை அழைக்காமல் “நீ வா அண்ணா சாப்பிடலாம், அண்ணி நீங்க வாங்க டைம் ஆச்சு” என்றாள், கணவன் செல்லும் வரை கூட பொறுக்காமல்.

கபாலி, திரும்பி பார்த்து பற்களை கடித்தான். மனையாளுக்கு கணவனின் செய்கை அப்பட்டமாக தெரிந்தது.. பற்களை கடிபடும் சத்தமும் கேட்டது. கணவனை காணாமல் அண்ணியோடு உண்ண சென்றாள், மயூரா.

எனவே, கபாலிக்கு அலுவலகத்தில் அமர்ந்தான். வேலை ஓடவில்லை. அரைமணி நேரம் சென்று ஆனந்த் வந்து கணக்குகள் பேசவும்தான்.. தன் கவனத்தை குவித்தான்.. அதில். ஆனாலும், மனதின் ஓரத்தில் மனைவி நின்றாள், முறைத்தபடியே.

சற்று நேரத்தில், நான்கு நபர்கள்.. தொழி சார்ந்து.. அலுவலகம், குவாரி என  பார்வையிட வந்தனர். எனவே ஆனந்த் கபாலி இருவரும் அதில் கவனம் வைத்தனர். 

நேரம் சென்றதே தெரியவில்லை கபாலிக்கு. லஞ்ச்.. அப்படியே பேச்சு வார்த்தை.. அடுத்து மாலை ஆகவும் ட்ரிங்க்ஸ்.. என பேச்சும் சிரிப்புமாக அந்த ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியது. வந்திருந்த காண்ட்ரக்டர்களுக்கு திருப்தி. முன்பே பேச்சு வார்த்தை எல்லாம் முடிந்திருந்தது. இறுதியாக அலுவலகத்தை பார்வையிடுவதும் நடைமுறையில் உள்ளது. அதை தொடர்ந்து ஒப்பந்தம். இந்த ஒப்பந்தம்  அடுத்த இரண்டு நாளில்.. கையெழுத்தாகும் நிலை. நல்ல நிகழ்வுகள் எனவே, கபாலிக்கும்.. இந்த நிகழ்வுகள் சந்தோஷத்தை தர.. இப்போது, நீண்ட நாள் சென்று கொண்டாடினான். மனதில் எந்த எண்ணமும் இல்லை.. எல்லாம்.. கரைந்து போனது.. அந்த மதுவின் முன்.

இரவு நேரமாக அதாவது ஒன்பது மணிக்கே, ஆனந்த் வீட்டில் விட்டு சென்றார் கபாலியை. ம்.. கபாலி, வண்டியை ஓட்டும் நிலையில் இல்லை. வந்து சேர்ந்தான் வீட்டிற்கு. யாருமில்லை, எனவும்.. மேலே பக்கத்து அறையில் சென்று படுத்துக் கொண்டான்.

!@!@!@!!@!@!@!@!@

இங்கே, மாலை ஆறுமணிக்கு மேல்தான் மயூராவின், ப்ரோக்ராம் தொடங்கியது. ‘கபில்’லை நினைக்க கூடாது.. அவன் வரமாட்டான்.. அவன் வரமாட்டான்..’ என எண்ணிக் கொண்டேதான் தனது நடனத்தை தொடங்கினாள், மயூரா. ஆனால், ஜதிகளின் நடுவிலும்.. முத்திரைகளின் பாவத்திலும்.. கணவனை நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால்.. அவளையும் அறியாமல் ஒரு ஷனம் கண்கள் தேட தொடங்கி விடுகிறது, தன்னவனை.

தன்னை மீட்டுக் கொண்டு மீட்டுக் கொண்டு.. நடனம் ஆடி முடித்தாள் பெண். அடுத்து நன்றி உரை முடித்து.. பரிசுகள் வழங்கினர். உணவு அங்கேயே ஏற்பாடு செய்திருந்தனர். குழுவினரோடு உண்டு முடித்து அவர்களை பாதுகாப்பாக எல்லோரையும் வழியனுப்பி என மயூரா அடுத்து சற்று நேரம் பிஸி.

குடும்பத்தார் எல்லோரும் காத்திருந்தனர் இவளுக்காக. மயூராவின் பெற்றோர்.. அண்ணன்.. என அவர்கள் நேரகாக வீட்டிலிருந்து வந்திருந்தனர். மகேஸ்வரியும் ஜெயந்தினியும் தனியாக வந்தனர். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பார்த்து.. பேசி.. உண்டு முடித்து.. இன்னமும் பேசிக் கொண்டிருந்தனர். 

ஜெயந்தியை, சுமதி “நீ கிளம்பு ஜெயா, நாங்கதான் இருக்கோமில்ல நீ எவ்வளோ நேரம் உட்கார்ந்தே இருப்ப..” என்றனர்.

ஜெயந்தி “இல்ல அத்த.. எனக்கு எந்த கஷ்ட்ட்மும் இல்லை..” என சொல்லிக் கொண்டிருந்தாள்.

இப்படியே நேரம் கடக்க.. எல்லோருக்கும் ‘கபாலி ஏன் வரவில்லை’ என்ற கேள்வி இருந்தது. வசீகரன் பேச்சு வாக்கில்.. “இன்னிக்கு கபிலுக்கு எக்ஸ்போர்ட் காண்ட்ராக்ட் மீட்டிங் இருக்கு போல.. ரொம்ப பிஸி உன் தம்பி” என தன் மனையாளிடம் சொல்ல.. அது பெரியவர்களின் காதுகளுக்கும் பரவியது. என்ன இருந்தாலும் குறைதான்.. அவர்களுக்கு. ஆனாலும் முகத்திற்கு நேரே ஏதும் பேசிக் கொள்ளவில்லை அவர்கள்.

மயூரா வந்து சேர்ந்தாள். நாட்டிய அலங்காரத்திலேயே இருந்தாள். மயூராவிற்கு ஒன்றும் தெரியவில்லை.. ஆனால், ஜெயந்தினி அவளின் உடல்மொழியை அந்த உடையில் காணவும், ஆசை வந்தது அவளுக்கு “மயூ, எனக்கும் இதே மாதிரி மேக்கப் போடட்டு விடுறியா.. எனக்கு ஆசையா இருக்கு” என்றாள்.

மயூரா “அவ்வளவுதானே.. கண்டிப்பா போட்டுக்கலாம் அண்ணி, நான் அரேஞ் பண்றேன்” என்றாள்.

எல்லோரும் நேராக கபாலி மயூராவின் வீடு வந்தனர். மகேஸ்வரி மருமகளுக்கு தேங்காய் சுற்றிதான் உள்ளே செல்ல அனுமதித்தார்.

மீண்டும் சற்று நேரம் பேச்சு சென்றது. கபாலியின் கார் பார்த்து.. கபாலி வந்துவிட்டது தெரிந்தது மனையாளுக்கு. ஏதும் சொல்லிக் கொள்ளாமல் பெரியவர்களோடு நின்றாள், மயூரா. கணவனின் காரை இந்த நேரத்தில் காண்வும் முகமே வாடி போனது பெண்ணுக்கு.

பின் வசீகரனின் குடும்பம் விடைபெற்று கிளம்பியது.

மயூரா, மேலே தங்களின் அறைக்கு வந்தாள்.. கோவமாக வந்தாள்.. ‘எங்களுக்கு முன்னாடியே வந்திட்டு.. ஏன் என்னை பார்க்க கூட வரலை..’ என கேட்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டே கதவை திறக்க.. அங்கே, கணவன் இல்லை. மனையாளுக்கு ஓய்ந்து போனது ‘அப்போ.. அ..ப்போ.. ட்ரிங்க் பண்ணியிருக்கார்.. க்கும்..’ என அடக்கி அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது, பெண்ணுக்கு.

அவசமாக உள்ளே வந்தாள்.. எங்கே அழுவது.. இப்போது அழுவது கூட எதோ இயாமையாக தோன்ற.. அழுகையை அடக்கிக் கொண்டு.. தேங்காய் எண்ணை கொண்டு.. தனது மேக்கப் கலைந்தாள். மிதமான சுடுநீரில் தன் இயலாமை தீர குளித்து வந்தாள்.

உடைமாற்றி.. வந்து கட்டிலில் அமர்ந்துக் கொண்டாள். கண்களை இறுக மூடிக் கொண்டாள். என்னமோ ‘தன்னை, கணவன் வந்து ஏன் பார்க்கவில்லை.. நேரமாக வந்திருக்கிறாரே.. ஏன் வரவில்லை..’ என அதிலேயே நின்றது. கண்களில் என்ன முயன்றும் கண்ணீர் வழிந்தது. உறங்கவும் முடியாமல்.. அவனிடம் சண்டை போடவும் முடியாமல் தடுமாறினாள் பெண்.

எழுந்து நடந்தாள் இருட்டில்.. உடல் அசந்துதான் இருந்தது.. ஆனாலும், மனது ஓய்வை தேடவில்லை.. கணவனைத்தான் தேடியது. சென்றாள்.. கணவன் இப்படி ட்ரிங்க்ஸ் எடுத்தால் தன் அருகில் வரமாட்டான்.. அடுத்த அறையில்தான் உறங்குவான். அங்கே சென்றாள் பெண்.

கதவை திறக்க.. அறையின் வாசமே வேறாக அவளை வந்து தாக்கியது. மயூராவிற்கு, அழுகைதான் வந்தது ‘என்னை தவிர.. அவருக்கு இந்த ட்ரிங்க்ஸ் தான் முக்கியமாக போகிவிட்டது. இன்னமும் எதுவும் மாறவில்லை..’ என கோவமும் வந்தது. ‘இப்படியே தன் அன்னை வீட்டுக்கு சென்றிடலாமா’ என தோன்றியது. 

மயூரா, அப்படியே நின்றாள் கதவில் சாய்ந்து. 

விடிவிளக்கின் ஒளியில்.. அங்கே நன்றாக அசந்து உறங்கிக் கொண்டிருந்தான், கபாலி. பார்த்தவளுக்கு இன்னும் இன்னும் அழுகை வந்தது தன்னை நினைத்தே.. ‘ஏன் இப்படி ஆகிவிட்டேன் நான்.. என்னை மதிக்கவே இல்லாதவரை நான் ஏன் இவ்வளவு தேடுகிறேன்.. வேலையை பார்க்க்கத்தானே போனான்.. நான் ஏன் இப்படி ஆகிட்டேன்’ என யோசித்தபடியே கணவனை பார்த்தபடியே நின்றாள் இரண்டு நிமிடம்.

மயூரா, உள்ளே கூட செல்லவில்லை. கணவன் முகத்தை பார்க்கவில்லை.. என்னை பார்க்காமல்.. எப்படி நிம்மதியாக இருக்கிறான் நான்தான் புலம்புகிறேன்.. இவன் நிம்மதியாக உறங்குகிறான்’ என தோன்ற உள்ளே வராமல் அங்கேயே நின்றாள்.

கபாலிக்கு, மனையாளின் உணர்வுகள் தாக்கியது போல.. அசைந்தான்.. லேசாக. மயூரா கணவனின் அசைவை கவனிக்கும் நேரம்.. கபாலிக்கு முழுதாக விழிப்பு வந்துவிட்டிருந்தது.. கண்திறக்க.. மயூரா, அப்போதுதான் உணர்வு வந்தவள்.. வைராக்கியமாக ‘உறங்கிவிட வேண்டும்.. இப்படி நினைவே இல்லாமல் இருப்பவரை.. நானும் கண்டுக்க கூடாது’ என எண்ணிக் கொண்டு, நகர்ந்தாள்.

கபாலி எழுந்து அமர்ந்தான்.. ‘என்னமோ நடந்திருக்கு.. என்னாச்சு’ என சுற்றிலும் பார்த்தான். என்னமோ சரியில்லை என தோன்றியது. மனது ‘எங்க அவ.. வந்திருப்பாளோ..’ என தோன்ற. கபாலி முழுதாக விழிப்புநிலைக்கு வந்துவிட்டான்.

கபாலிக்கு, மனையாளின் முகம் நினைவில் வந்ததும்.. அவனின் போதை முழுதாக தெளிந்தது போனது. மணியை பார்த்தான் 12:20 என காட்டியது. எழுந்து, முதலில் குளித்தான்.. நாலுமுறை ப்ரெஷ் செய்தான்.  மனையாளுக்கு, இந்த ஸ்மெல் ஆகாது என தெரியும் அவனுக்கு.. ‘வீகெண்டில் ட்ரிக்ஸ் எடுத்தாலே.. நான்கு நாட்கள் தன்னை முத்தமிடமாட்டாள்.. இப்போ என்ன சொல்ல போறாளோ..’ என அவளை செல்லமாக திட்டிக் கொண்டே வெளியே வந்தான். உடைகள் எல்லாம் தங்களின் அறையில்தானே இருக்கிறது அதனால், அப்படியே டவ்ளோடு தங்களின் அறைக்கு வந்தான், கபாலி.

அவனின் மயிலம்மா.. ஏசியை கூட ஆன் செய்யாமல்.. உறங்குவாள் போல.. அப்படி அந்த அறையே தகித்தது. க்கும்.. யார் சொல்லுவது, அவள் கோவமாக இருக்கிறாள் அதனால்தான், அண்ட் அறை தகிக்கிறது என. இவனின் எண்ணம் அப்படி.

ஆசையாக உள்ளே வந்தான் கபாலி. பின்தான் தெரிந்தது ஏசி ஆன் செய்துதான் இருக்கிறது.. என. இருந்தும் அந்த வெப்பம் தாக்கியது அவனை.

மயூரா, கணவனின் வரவை உணர்ந்தாள்.. திரும்பி படுத்துக் கொண்டாள்.. கபாலி ஆசையாக, மனையாளின் அருகில் வந்து.. சத்தமில்லாமல் அவளின் தோளோடு தோள் உரசி.. தன் இடக்கையை அவளின் இடையில் படரவிட்டபடி.. “மயிலம்மா.. தூங்கிட்டியா” என கேட்டுக் கொண்டே அவளின் காதோடு பேசினான்.

மயூரா உறங்கவில்லையே.. கதவை திறந்தது.. கணவன் அருகில் வந்தது என  எல்லாவற்றையும் அகக்கண்களால் உணர்ந்துதான் இருந்தாள்.. கணவன் கை போடவும்.. “கையை எடுங்க.. பக்கத்தில் வராதீங்க.. போங்க அந்தபக்கம்” என கரகரத்த குரலில்.. சின்ன ஒலியில் பேசினாள்.

கபாலி “ஹேய்.. டூ டைம்ஸ் குளிச்சிட்டு.. ஃபௌர் டைம்ஸ் ப்ரெஷ் பண்ணிட்டு வந்திருக்கேன்..” என்றான் கையை எடுக்காமல். அவளின் காதில் கிசுகிசுக்க.. பெண்ணவளுக்கு தேகம் இறுகியது.. ஏதும் பேசவில்லை அவள்.

கபாலி “என்ன கோவமா?. ஏற்கனவே நான் வரமாட்டேன்னு சொல்லிட்டேன். சோ, இந்த கோவம் வேஸ்ட். ஆனாலும், பரவாயில்ல.. எனக்கு இது ஓகேதான். சொல்லு எப்படி பெர்போம் செய்த..” என்றான்.

மயூராவிற்கு கணவன் பேசுவதெல்லாம் சரிதானோ என தோன்றியது. நான் ஏன் இவ்வளவு பலகீனமாக இருக்கேன் என தோன்றிக் கொண்டே இருக்க.. மயூரா அமைதியானாள்.

கபாலி “தெரியும்.. உன் போட்டோஸ் வந்தது.. அக்கா அனுப்பினாள். சூப்பரா இருந்த.. டா இன்னிக்கு. நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வரேன். அப்புறம், முக்கியமான விஷயம்..” என்றான் மனையாளின் இடையை கைகளால் இறுக்கிக் கொண்டே..

மயூரா “நீங்க கையை எடுங்க” என்றாள்.

கபாலி “அப்படி எல்லாம் சொல்லாக் கூடாது.. டூ டைம்ஸ் குளிச்சிட்டு வந்திருக்கேன்” என்றான் எதோ ரைம்ஸ் சொல்லுவது போல ராகமாக சொன்னான், கணவன்.

மயூரா, நிமர்ந்து படுத்துக் கொண்டாள். கபாலியும் அவளுக்கு ஈடாக நிமிர்ந்து படுத்துக் கொண்டு கையை எடுத்துவிட்டு ரிலாக்ஸ்சாக பேசினான் “மயூ, இந்த மீட்டிங் வொர்க் ஆகிடுச்சி.. வெட்நெஸ் டே.. சைன் ஆக போகுது. கிட்ட தட்ட அட்வான்ஸ் பேமென்ட் மட்டும் இங்க லோகல் டேர்ன்ஓவரை விட ரெண்டு மடங்கு அதிகம். சென்னையில் ஒரு குடோன் பார்க்கணும்.. சின்ன ஆபீஸ் ஒன்னு போடணும்..” என் கனவுகள் பேச்சில் தெறிக்க சொல்லிக் கொண்டிருந்தான்..

மனையாளுக்கு, அந்த குரலில்தான்..  இப்போதுதான் கொஞ்சம் உணர்வே வந்தது போல.. “கங்கராட்ஸ் ங்க..” என்றாள் கரகரத்த குரலில்.

கபாலி “என்ன? என்ன ஆச்சு.. கோவம் போகலையா” என்றான்.

மயூரா “இல்ல, ஒண்ணுமில்ல.. நீங்க சொல்லுங்க” என்றாள்.

கபாலி “அழறீயா..” என மனையாளை பார்க்கும் வண்ணம்.. தன் முழங்கையை ஊன்றி, திரும்பி  நிமிர்ந்து பார்த்தான், தன்னவளை.

மயூராவின் இரு கண்களிலும் கண்ணீர் வழிந்தது.. இப்படி கணவன் தன் தொழில் சார்ந்த விஷயங்களை சொல்ல.. தான் இப்படி அழுதுக் கொண்டிருப்பது அவளுக்கே ஒருமாதிரி இருக்க.. கணவனுக்கு தன் முகத்தை காட்ட வெட்கமாக இருக்க.. தன் வலது கையால்.. தன் கண்களை மூடிக் கொண்டாள்.

அவளின் செய்கையில், கணவனுக்கு எதோ தவறாக தோன்ற.. கபாலி விரல்களால் அவளின் கண்ணீரை தேடினான்.. கிடைத்தது.. கண்களின் ஓரம்.. மெதுவாக அவளின் கண்ணீரை விரல்காளால் துடைத்தான். தன் கண்களை மூடியிருந்த, அவளின் கையை மெதுவாக எடுத்தவன்.. ஆழமாக அவளின் கண்களில் முத்தமிட்டான்.. அதில் மூச்சு காற்றுக் கூட காதலாக உள்சென்று வெளி வந்தது.. அப்படி இனித்தது பெண்ணுக்கு.. இன்னமும் அழுகதான் தோன்றியது. கணவனின் காதலை அமைதியாக உள்வாங்கினாள் மிச்சமில்லாமல்.

கபாலி “இங்க பாரு.. இது முக்கியமான மீட்டிங், அதான்.. அழாத..” என்றான், சமாதாமாக.

மயூரா “ம்.. எத்தனை முறை சொல்லுவீங்க, எனக்கு புரியுது, ஆனாலும் ஏனோ தெரியலை.. நீங்க எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தீங்க.. நேராக அங்க.. ஹாலுக்கு.. வந்து பார்த்திருக்கலாமில்ல.. எனக்கு ஒருமாதிரி இருந்தது. அதான் இந்த அழுகை.. இப்போ நான் ஒகே. என்னமோ உங்ககிட்ட சின்ன பிள்ளையா ஆகிட்டே போறேன்” என்றவள்.. திரும்பி படுத்துக் கொண்டாள் கோவமும் காதலுமாக.

கபாலி பேச்சிழந்தான்.. எப்போதும் அவன்தான் பிதற்ருவான்.. அவள் அமைதிதான். கணவனுக்கு நெகிழ்ந்து போனது.. தன்னவளின்  இந்த சின்ன வார்த்தையில்.. தன்னவளை ஏதும் பேசாமல் தன் பக்கமான திருப்பி.. தன் மார்ப்பில் ஏந்திக் கொண்டான்.. மயூராவிற்கு கண்ணீர் வந்துக் கொண்டே இருந்தது. 

கபாலி “சரி, விடு.. சாரி டா.. நான் ட்ரிங்க்ஸ் எடுத்திருந்தேன் அதான், வரலை.. நீ இப்படி பீல் பண்ணுவேன்னு தெரியாது. விடு, இனி நானும் கொஞ்சம் ட்ரை பண்றேன். மயூம்மா..” என ஏதேதோ பேசினான் சமாதானப்படுத்தினான்.

தன்துணையிடம் பலகீனம்.. இயலாமை.. அழுகை.. மௌனம்..  அடிமைத்தனம்.. இதெல்லாம் நேசத்தின் அணிகலன்கள்.. ஆகசிறந்த விருதுகள்.

எதிரும் புதிருமான நேரம்தான்.. ஆனால், நேசம் என்ற பார்வை மட்டும் இருந்துவிட்டால்.. எல்லா கோணங்களும் நேரான சரியான விடைதான் சொல்லும்.

காலையில் மயூரா எப்போதும் போல இருந்தாள். கபாலி எங்கும் செல்லாமல் வீட்டில் அக்கா, மனையாளோடு பேசியபடியே இருந்தான். மாலையில்தான் ஒருமணி நேரம் அலுவலகம் சென்று வந்தான். மனையாளின் மனநிலை உணர்ந்து கபாலி வீட்டில் இருந்தான். ஜெயந்தினி கிண்டல் செய்தாள்.. அன்னையும் அவ்வபோது அதிசயமாக பார்த்தார் மகனை ஏதும் கேட்கவில்லை.

நாட்கள் பறந்தது.

கபாலிக்கு வேலை சரியாக இருந்தது. ஒப்பந்தம் கையெழுத்தானது. கபாலி ஒருவாரம் சென்னை சென்று வந்தான். மயூராவிற்கு அந்த ஒருவாரமும் கணவனை காணாமல் அடிக்கடி அழுகைதான் வந்தது. வெளியில் ஏதும் காட்டாமல் இரவில் கணவனிடம் அழுது தீர்த்தாள். 

கபாலிக்கு, இப்போதெல்லாம் மனையாளை சமாதானம் செய்து.. செய்தே பொறுமை வந்திருந்தது. எனவே, ‘பொறுமையாக நாளைக்கு வந்திடுவேன்.. என்ன சாப்பிட்ட’ என ஏதேனும் சம்மந்தம் இல்லாமல் பேசியே.. கேட்டே.. அவளை கொஞ்சம் இயல்புநிலைக்கு கொண்டு வருவான். 

அவனுக்கே ஆச்சர்யம் ‘என்ன ம்மா பேசறடா.. நீயு’ என. இந்த கல்யாணம் அவனுக்கு ஆக சிறந்த பொறுமையையும் கொண்டு வந்து சேர்த்துவிட்டது.

கபாலி அடுத்த மாதமும் சென்னை பயணமானான். இந்தமுறை அவன் சென்ற, அதே வேகத்தில் திரும்பி வந்தான் தன் ஊருக்கு. முகம் முழுவதும் ரௌத்ரமாக திரும்பி வந்தான், தன்னவள் மருத்துவமனையில் இருக்கிறாள் என்ற செய்தி கேட்டு..

Advertisement