Advertisement

நான் உன் நிறையன்றோ!

28

மயூரா, துணிகளையும் தனக்கு தேவையானதையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். கணவன் ‘எனக்கு நீ யார்’ என கேட்டு சென்றதிலிருந்து பெண்ணவளின் மனது அதே கேள்வியை, அவளிடமே கேட்டது. நான் தானே டைம் கேட்டேன்.. அவனை நெருங்கி பழக வேண்டும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என நான்தானே டைம் கேட்டேன்.. இப்போது, அவர் கேட்க்கிறார் நீ யார் எனக்குன்னு.. நான் அவரை நெருங்கி பழகவில்லையாவ் கனடுக் கொள்ளவில்லையோ..‘ என கை வேலைகள் செய்துக் கொண்டிருந்தாலும்.. மனது கணவனின் வார்த்தையிலேயே நின்றது.

மயூரா, இரவு உண்பதற்காக கீழே செல்லுவதற்கு முன் கணவனை காணாமல் போனில் அழைத்தாள். கபாலி அவளின் போனை ஏற்கவில்லை. இப்படி எல்லாம் அவள் கணவனை காணாமல் அழைத்ததில்லை, தேடியதில்லை. இன்று கணவனின் வார்த்தைகள் வலியை தந்திருக்க.. நான் அவனை கவனிக்க வில்லையோ என எண்ணம் வர.. அழைத்தாள்.

இரவு, பதினொன்று கபாலி வரவில்லை. மயூராவினால், அதற்குமேல் காத்திருக்க முடியவில்லை, காலையில்  நேரமாக கிளம்ப வேண்டும். அதனால், தன் அத்தையோடு உண்டுவிட்டு, மேலே வந்து படுத்துக்  கொண்டாள், மயூரா.

மயூரா, சரியாக உறங்கவில்லை.. கணவனின் ஞாபகமே அதிகமாக இருந்தது. ஆனாலும், அதிகாலையில் வேலையை கருத்தில் கொண்டதால்.. விழிப்பு வந்துவிட்டது. முதலில் கணவனைத்தான் தேடினாள் மயூரா. தன்னருகில் அவனில்லை எனவும், வாடி போனாள். 

கண்கள் கசியும் போல இருந்தது.. மயூராவிற்கு, நேற்றிலிருந்து இருந்த மனதின் பாரம் இறங்கவேயில்லை என உணர்ந்தாள்.. ‘இப்போவெல்லாம் வீடு வந்திடுவாரே’ என தோன்ற.. பக்கத்து அறைக்கு சென்று பார்த்தாள். அவளின் கணிப்பு பொய்யாகவில்லை.. கபாலி, அங்கே அசந்து உறங்கிக் கொண்டிருந்தான். ட்ரிங்க்ஸ் எடுத்திருந்தான். மயூராவிற்கு அழுகையாக வந்தது. கபாலி, அன்றே.. அதாவது,  மனையாளை வீடு கூட்டி வந்தபிறகு.. ட்ரிங்க்ஸ் எடுக்கவில்லை. அதனால், மயூராவிற்கு, தன்னால்தான் மீண்டும் இப்படி ஆகிவிட்டானோ என பெரிய பயம் வர.. அழுகையும் பெரிதாக வந்தது. அப்படியே நின்று கேவியவள்.. தன் அழுகை பெரிதாவதை உணர்ந்து.. அறையை விட்டு வெளியே சென்றாள்.

அந்த சத்தத்தில்.. கதவை சாற்றி சென்ற சத்தத்தில் கபாலி அசைந்தான். எழவில்லை. ஆனால், என்னமோ உறக்கம் அதன்பின் வரவில்லை. எழுந்து அமர்ந்தான். ‘ஏன் கதவு அடித்தது.. என்னவாக இருக்கும்..’ என யோசனை.

‘ஓ மயூவும் அம்மாவும் ஊருக்கு  போவாங்களே.. மணி எத்தனை’ என இயல்பாக எண்ணியபடியே எழுந்து பார்த்தான் கீழே. ஒரு சத்தமும் இல்லை.. தங்களின் அறையில் விளக்கு எரிவது  தெரிந்தது.. உள்ளே வந்தான். அவனின் மனதில் நேற்று தான் பேசியது எல்லாம் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. அதனால் இயல்பாக உள்ளே வந்தான்.

மயூரா கண்கள் கலங்க அமர்ந்திருந்தாள்..

கபாலி அவள் தயாராக இருப்பாள்.. வழியனுப்ப வேண்டும்.. என வந்தான். கதவை திறக்க.. மனையாள் கண்களை துடைத்துக் கொண்டிருந்த நிலைதான் அவனின் கண்ணில்பட்டது.

மயூராவும் கணவன் வந்ததை பார்த்துவிட்டு.. இன்னும் தன் கண்களை துடைத்தாள்.. என்னமோ கண்ணீர் பெருகி பெருகி வந்தது.

மனையாளின் கண்கள் சிவந்து.. முகமே எதோ போலிருந்தது, கணவன் “ஹேய்.. என்ன மயூ என்ன ஆச்சு.. ஏன் அழற” என்றான் பதறியவனாக. 

மயூரா அமைதியாகவே இருந்தாள்.

கபாலி மீண்டும் அதே கேள்வியை கேட்டான்.

மயூரா “ஒண்ணுமில்ல” என்றாள்.

கபாலி “என்ன ஆச்சு, ஏதாவது ட்ரவல்ல ப்ரோப்லம்மா.. உனக்கு, ஏதாவது முடியலையா” என்றான்.

மயூரா, கணவனையே இமைக்காமல் பார்த்து “இல்லை..” என தலையசைத்தாள்.

கபாலி மனையாளின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டு “பின்ன என்ன.. எதுக்கு அழற” என்றான் எரிச்சலானக் குரலில்.

மயூரா “க்கு.. அ..அது ஏன் நைட் வரலை.. ஏன், நான்” என அவள் பேச பேச..

கபாலி “ஏய் மயூ, என்னடி.. என்ன புதுசா கேட்க்கிற.. நீ கிளம்பு” என்றான் எரிச்சலாக, இதுவரை  நேற்று நடந்தது தான் பேசியது.. அதெல்லாம் அவனுக்கு தோன்றவில்லை. இப்போது மனையாள் கேள்வி கேட்டகவும்.. மீண்டும் அவனின் ஈகோ வந்து ஒட்டிக் கொண்டது போல.. எரிச்சலாக  பேசினான்.

மயூரா அவனின் தகிக்கும் கோவத்தை தாங்க முடியாமல்.. இன்னும் கண்ணில் நீர் பெருக அமர்ந்திருந்தாள்.

கபாலி அதை பார்க்க முடியாமல் எழுந்து வெளியே சென்றான்.

மயூரா இது தீரவே தீராத என அமர்ந்திருந்தாள். அவளால் கிளம்ப முடியவில்லை, ‘நான் சொல்லாமல் ஊருக்கு போவதால்.. அவரை அவாய்ட் செய்வதாக நினைக்கிறார்’ என தோன்ற.. அவளால் கிளம்ப முடியவில்லை. துரத்தி துரத்தி சென்று அவன் முன் நிற்கவும் பயமாக இருந்தது. எனவே, தனது போனை எடுத்து.. “சாரி ங்க.. நான் உங்களை அவாய்ட் பண்ணனும்ன்னு நினைக்கலை. ப்ளீஸ் ப்லீவ் மீ. எ..எனக்கு வேலையே ஓடலை.. நான் உங்க கூட கொஞ்சம் பேசணும்” என்றாள்.

கணவன் உடனே அதை பார்த்திடுவான் என எண்ணினாள், ஆனால், அவன் பத்துநிமிடம் வரை போனை எடுக்கவேயில்லை. 

கபாலிக்கு, பெண்ணவளின் அழுகை கோவத்தைதான் கொடுத்து.. ‘சீன் போடுறா.. போகிற நேரத்தில் எதுக்கு அழுகை, செய்வதெல்லாம் செய்தாகிவிட்டது. எல்லாம் சீன்’ என கோவமாக வந்தது.

இப்போது பத்துநிமிடம் காத்திருந்த மயூரா, கணவனை போனில் அழைத்தாள். கபாலி போனை பார்த்தான் எடுக்கவில்லை. கால் கட்டாக என்னதான் மெசேஜ் செய்திருப்பாள் என பார்த்தான் வேண்டா வெறுப்பாக.

‘சாரி’ என தொடங்கி அவளின் திணறலான குரலில் அந்த  செய்தி அவனை தாக்கியது. ‘சீன்தான்..’ என உதடுகள் முணுமுணுத்தது.

கீழே, அன்னையின் நடமாட்டம் தெரிய தொடங்கியது.. ஹாலின் விளக்கு ஒளிர்ந்தது. இப்போது அவளின் அழுது சிவந்த முகம் கண்ணில் தெரிய.. இந்த வாய்மொழியும் மீண்டும் அவனை நேற்று மதியம் போல அவனையும் அறியாமல் அசைத்தது.. ‘தலையில் கை வைத்துக் கொண்டான்..’ எதோ ஒன்று அவனை செலுத்த.. தங்களின் அறைக்கு சென்றான், கபாலி.

சாம்பல் நிற.. மென் காட்டன் நைட்டி போட்டுக் கொண்டு.. முகம் சிவக்க.. அமர்ந்திருந்தவளை பார்த்தவன்.. “மயூ.. போ ரெடியாகு.. முகமே நல்லா இல்ல.. நீ போ.. நான் எதுவும் நினைக்கலை.. நீ போ” என்றான்.

மயூரா மூக்கை உறிஞ்சிக் கொண்டு அமர்ந்திருந்தாள், அசையாமல். 

‘படுததறாளே‘ எனத்தான் தோன்றியது,  கபாலிக்கு.

மயூரா “கபில்..” என்றாள் மழலை மொழியில்.

கபாலிக்கு அவள் அழைத்தது இனித்தது.. கொஞ்சம் சாந்தமானான் “பேர் சொல்லி கூப்பிடுற” என்றான், அப்போதும் அழுத்தமாக.

மயூரா எழுந்து நின்றாள்.. “பிடிக்கலையா..” என்றாள்.

கபாலி சிரித்துக் கொண்டே  கட்டிலில் வந்து அமர்ந்தான்.. “இல்ல இல்ல அதெல்லாம் நல்லா இருக்கு.. நீ நான் சொல்றதை கேளு.. குளிச்சிட்டு வா பேசலாம்” என்றான்.

மயூரா நின்று கணவனை பார்த்தாள்.

கபாலி “விளையாடாத, டைம் இல்ல.. அம்மா கிளம்பிட்டாங்க.. போ..” என்றான், கொஞ்சம் குரல் மாறியிருந்தது.

மயூராவிற்கு கணவனை கோவப்படுத்த தோன்றவில்லை.. இங்கே வந்து பேசுவதே அதிகம் என தோன்ற “இங்கேயே இருக்கணும்..” என சொல்லி குளிக்க சென்றாள்.

கபாலி அங்கே படுத்து உறங்கினான்.

மயூரா, கிளம்பி வெளியே வந்தாள்.. அழகான பெர்ப்பில் பிங் காமினேஷன் செட்டிநாடு காட்டன் புடவை.. மடிப்புகளை நீவியபடியே வந்து பார்க்க.. கணவன் உறங்கியிருந்தான். கணவனின் உறக்கத்தை பார்க்க.. மனைவியின் மனம் சமன்பட்டிருந்த்து. ‘கடகடவென பேசிவிட்டுதான்  போகணும்.. அவர்கிட்ட என்னை சொல்லிடனும்’ என எண்ணிக் கொண்டே தனது சிகை வாரி பின்னிக் கொண்டாள்.

கணவனின் அருகில் சென்றாள்.. ட்ரிங்க்ஸ் எடுத்திருகிறான்.. என தெரியும். கணவனின், நேற்றைய கேள்வியே இன்னமும் மனதில் ஓடிக் கொண்டிருக்க “என்னங்க.. என்னங்க..” என கணவனின் உச்சி முடிகளை கோதினாள்.

கபாலி, அவளின் இரண்டாவது அழைப்பில் கண்விழித்தான். 

மயூரா “கபில்” என்றாள் ஹஸ்கி வாய்சில்.. அந்த குரல் மழலையின் குரல் போலவே அவனுள் கேட்டது. முயன்று..  விழித்தான்.

எழுந்துக் கொள்ளாமல், கபாலி “கிளம்பிட்டியா” என்றான்.

மயூரா “ம்.. பேசலாமா?” என்றாள் அவனின் சிகையை தன் விரல்களால் கோதியபடியே.

கபாலி “ம்..” என்றான்.

மயூரா “நாளையோட த்ரீ மன்த் முடியுது..” என்றாள்.

கபாலி, புன்னகைத்தான்.. ஏதும் சொல்லவில்லை.

மயூரா “க்கும் ஏதாவது சொல்லுங்க” என்றாள்.

கபாலி “சரி, கிளம்பு.. ரீச் ஆகிட்டு மேசெஜ் செய்திடு. அம்மா பத்திரம்” என்றான்.

மயூரா புன்னகைத்தபடியே  “ம்.. ஆனா, எனக்கு ஏதும் சொல்லல” என்றாள்.

கபாலி நன்றாக விழித்தான் இப்போது.. மனையாள் நேற்று நான் எதோ பேசிவிட்டேன், அதனால்தான் என்னிடம் பேச வந்திருக்கிறாள் என எண்ணிக் கொண்டு இருந்தான். ஆனால், அவள் முகமும் கண்ணும் இப்படி சீரியசாக.. செல்லும் நேரத்தில் இருக்கும் என நினைக்கவில்லை. போகும் பரபரப்பில் சொல்லிக் கொள்ள வந்தாள் என எண்ணியிருந்தவன்.. மனையாளின் முகம் பார்த்து.. எழுந்து அமர்ந்தான்.

மணி அதிகாலை ஐந்து.

கபாலி “இன்னும் என்ன.. கிளம்பும் நேரத்தில்” என்றான்.

கபாலிக்கு என்னமோ போலானது “என்ன டி.. கிளம்பு.. வந்து பேசிக்கலாம்” என்றான்.

மயூரா “நா..ன் உங்களை ரொம்ப கஷ்ட்டப்படுத்துறனா.. மதிக்கலைன்னு நினைக்கிறீங்களா..” என்றாள்.

கபாலி கட்டிலிருந்து எழுந்தான் “கிளம்பு மயூ” என்றான், அதட்டலாக.

மகேஸ்வரி “மயூ ரெடியா” என சத்தம் கொடுத்தார் சரியாக அந்த நேரம்.

கபாலி “மயூ, நான் எதுவும் நினைக்கலை.. நீ பீல் பண்ணாத.. கிளம்பு, வந்து எவ்வளோ வேணா பேசு.. கேட்ட்கிறேன். இப்போது கிளம்பு” என்றான் தளர்ந்த புன்னகை முகமாக.

மயூரா கணவனை நெருங்கி.. அவனின் தாடையை பற்றி “போனில் பேசுவேன்..” என்றாள்.

கபாலிக்கு மனையாளின் நெருக்கம் வேறு எந்த யோசனையையும் தரவில்லை.. அவள் பேச்சுக்கு தலையசைத்தான்.

அனிச்சையாய் கபாலி தன் தாடையை பிடித்திருந்தவளின் கையை பற்றினான் “ஹேய்.. மயில், க்கும்.. என்ன எ..” என இவன் தடுமாறினான் இப்போது. தன்னவளை அணைக்க கைகள் பரபரத்தது.. என்னமோ செய்தது தன்னவளின் அருகாமை.. மனதும் இந்த அருகாமையை இழக்க விரும்பவில்லை.. ஆனால், அவளின் அலங்காரமும்.. தன் அன்னையின் அழைப்பும் அவனை பின் வாங்க செய்ய.. கபாலி தன்னை மீட்டுக் கொண்டான்.

அடுத்த அரைமணி நேரத்தில் மகேஸ்வரியும் மயூராவும் கிளம்பினர், சென்னை நோக்கி. கபாலி, அழுத்தமாக நின்று அவளை வழியனுப்பினாலும், மனது.. கணக்கத்தான் செய்தது. வீட்டில் நிற்கவில்லை.. அலுவலகம் கிளம்பிவிட்டான்.

 

Advertisement