Advertisement

மயூரா நிமிர்ந்து பார்த்தாள்.. கண்களில் மையில்லை.. முகத்தில் பொட்டில்லை.. ஆனாலும், நிலா போல ஒளிர்ந்தது அவளின் முகம். ஆனால், அவனை நெருங்கவிடவில்லை அந்த முகம்.

கபாலி ஏதும் பேசாமல் வந்து அமர்ந்துக் கொண்டான் கட்டிலில்.

மயூராவிற்கு, கணவனின் பாராமுகம் அவ்வளவு வலியை தந்திருந்தது.. ‘அலுவலகம் சென்றிருக்கிறேன்.. என்னை அமர்த்தி என்னவென விசாரிக்கக் கூட இல்லை அவர் என கோவம்.. அதே அலட்சியம்.. காலையிலும் விட்டு போகிட்டார், அதை மறந்து நான் சென்றால், அப்படியும் பேசாமல் வீடு கூட்டி வந்திட்டார். இப்போது, என் அண்ணனிடம் நான் பேசிவிட்டேன்.. அவரும் பேசிவிட்டார், அதனால் இப்போது நானும் பேசிடனுமா.. முடியாது’ என எழுந்து வந்து கட்டிலில் படுத்துக் கொண்டாள். எப்போதும் போல போர்வையை இழுத்து மூடி உறங்க தொடங்கினாள் மயூரா.

கபாலிக்கு, சிரிப்பாக வந்தது.. முதலில். ‘நான் உட்காருந்திருக்கேன் பேசனும்ன்னு இருக்கேன்னு தெரியாதா அவளுக்கு.. எப்படி போய் ஒழிஞ்சிகிட்டா..’ என தோன்றியது. ஆனால், தன் விருப்பத்தை சட்டென பேசிடவும் முடியவில்லை அவனால். அவளின் அருகில் நெருங்க என்னமோ போல இருந்தது. என்மேல் செம கோவத்தில் இருக்கிறாள்.. என புரிந்தது. அதனால், அவளாக தன்னிடம் வருவாள் என தோன்றவில்லை, கபாலிக்கு. அத்தோடு, அவளின் இந்த கோவம் இந்த ஆறுமணி நேரமாக அவனை என்னமோ செய்துக் கொண்டிருக்கிறது.. முதல்முறை.

கபாலி, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.. மனையாளின் அருகில் நெருங்கினான்.. அன்று போல, தன் செய்கையில் தன்னை தள்ளிவிட்டு விடுவாளோ என மனதுள் பயம் இருந்தாலும்.. இந்த கண்ணாமூச்சு ஆட்டத்தை தொடர அவனுக்கு தாங்கவில்லை. பேசிட வேண்டும்.. ‘இங்க பாரு உனக்கும் சிலது தெரியுது, அதனால், நானு உன்னை கேட்டு செய்கிறேன்’ என சொல்லி அவளை சமாதானம் செய்திடணும் என எண்ணிக் கொண்டே மனையாளின் அருகில் நகர்ந்து அமர்ந்து.. அவளின் போர்வையை விளக்கினான்.. கபாலி.

கருகரு மேகத்தில் மறைந்திருந்த வெள்ளி நிலவு போல.. மனையாளின் ஒலிமுகம் மெல்ல போர்வையின் விலகலில் தெரிந்தது கணவனுக்கு. பதட்டத்துடன் அந்த நிலவை.. தீண்டும் ஆவலோடு அப்படியே பார்த்திருந்தான். 

மனையாள் போர்வையின் விலகலில், கண்விழித்து பார்க்க.. கண்கள் சுருக்கி.. தாடியும் மீசையுமாய் கணவனின் முகம் கனவில் வருவது போல.. தனக்கருகில் இருக்கவும்.. அதிர்ந்து எழுந்தாள், பெண்.

கபாலி “இரு மெதுவா..” என சொல்லி, தன் முகத்தை  விலகிக் கொண்டு, அமர்ந்தான். மனையாள் எழுந்து அமரவும்.. கபாலி “என்ன தூங்கிட்டியா” என்றான்.

மயூரா ‘இல்லை’ என தலையசைத்தாள்.

கபாலி “ம்… என்ன கேட்க்கிறது.. இன்னும் கோவத்தில்தான் இருக்கியா” என்றான்.

மயூரா ‘ம்..’ என தலையசைத்தாள் ஸ்பஷ்ட்டமாக.

கபாலிக்கு அந்த உண்மை ஆறுதலாகவும் சிரிப்பாகவும்தான் இருந்தது.. “என்ன கோவம்” என்றான். தனக்கு தெரியுமே ஆனாலும் கேட்டான்.

மயூரா முறைப்பதாக, எண்ணிக் கொண்டே தலை சாய்த்து கணவன் முகம் பார்த்தாள். கபாலி, மனையாளின் பார்வையை புன்னகையோடு எதிர்கொண்டு தலை குனிந்துக் கொண்டான். இருவருக்கும் ஏனென்றே தெரியாமல் முகம் மலர்ந்தது.. புன்னகைதான்.

கபாலிக்கு கைவரபெறாத அமைதி.. நிதானம்.. பொறுமை.. எல்லாம் இப்போது வந்தது.. தன்னவளுடன் பேசவேண்டும் என்பதால். கபாலி “அது நேற்று, நீ என்னிடம் பேசி, நகையை கொடுக்க வேண்டாம்ன்னு சொல்லத்தான்  வந்திருந்த, ம்.. அப்படிதானே” என மனையாளிடம் தன் கேள்வியை கேட்டு, உறுதி செய்ய எண்ணினான்.

மயூரா “ம்.. ஆனால், நீங்க என்னை எப்படி பார்த்தீங்க.. என்னிடம் கேட்கக்கூட இல்லை.. என்னை யாரும் அப்படி ட்ரீட் செய்ததேயில்லை. நான் அங்க வந்தது பிடிக்கலையா” என்றாள் முறுக்கிக் கொண்ட குரலில்.

கபாலி “எனக்கு உண்மையாகவே நீ அங்கே அந்த விஷயத்தை பேச  வந்தது பிடிக்கலை..” என்றான்.

மயூராவிற்கு, கணவனின் அருகாமை சட்டென வெப்பமாவதாக தோன்றியது பெண்ணுக்கு.. அமைதியானாள், கணவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே.

கபாலி “நீ யோசித்து பாரு, மயூ.. இந்த பாமிலியோட தலைவன் நான்.. என்கிட்டே உங்க அண்ணன் ஒரு வார்த்தை சொல்வதில் என்ன இருக்கு.. சொல்லணுமில்ல. இப்போது கூட உனக்காக அவர் பேசினார், நானும் அப்படிதான் என்ன சொன்ன உங்க அண்ணன்கிட்ட..” என்றான் கோவமாக.

மயூரா “அப்படி ஒன்னும் என் அண்ணன் செய்ய மாட்டார்.. அவருக்கு புரிந்துதான் வந்தார். என்கிட்டே சொன்னார்.. சொல்ல கூடாதுன்னு இல்ல, மறந்துட்டேன்’ன்னு  சொன்னார். உ..உங்களுக்கு.. எல்லாமே வியாபாரம்தான். அதே மாதிரிதான் என்னையும் பார்க்கிறீங்க.. நம்ம குடும்பத்தையும் பார்க்கிறீங்க.. நான்தான் முதல்..ன்னு” என அவள் சொல்ல சொல்ல.. கபாலியினால் அந்த வார்த்தையை ஏற்க முடியவில்லை. 

கபாலி “சும்மா.. உங்க அண்ணன் செய்ததை மறைக்க.. நீ என்மேல திருப்பி சொல்லாத” என்றான்.

மயூரா “அண்ணன் செய்தது தப்புதான், அது கவனக் குறைவு அவ்வளவுதான். அத்தைகிட்ட வீட்டின் பெரியவங்ககிட்ட சொல்லிட்டாங்க அண்ணன். அதனால், நான் திருப்பி சொல்லல.. உண்மையைத்தான் சொல்றேன்.” என்றாள்.

கபாலி “என்னால எல்லோர்கிட்டயும் இறங்கி போக முடியாது.. உன்கிட்ட எக்ஸ்ப்ளைன் செய்யறதே எனக்கு புதுசு.. போ.. உன்கிட்ட பேச வந்தேன் பாரு.. என்னை சொல்லணும்” என அவளுக்கு முதுகுக் காட்டி உறங்க சென்றான்.

மயூராவிற்கு, கோவமாக வந்தது “நான் அமைதியாக தானே, தூங்கினேன்.. நீங்கதான் பேசனும்ன்னு எழுப்பினீங்க, பாதியிலேயே திரும்பிக்கிறீங்க.. என் அண்ணனை அப்படி என்ன பிடிக்கலை உங்களுக்கு” என்றாள்.

கபாலி மனையாள் பக்கமாக திரும்பி, அவள் முகத்தை பார்த்தான்.. “அவன்..” என வசீகரனை பற்றி சொல்ல வந்தன்வன்.. சுதாரித்து  “நம்மை பற்றி பேசத்தான் எழுப்பினேன்.. நீ இன்னும் உங்க வீட்டு ஆட்கள் பற்றியே பேசினால், எனக்கு அப்படிதான் தோணும்.. போ.. போய் நல்லா நல்லா நிம்மதியா தூங்கு” என்றான்.

மயூராவிற்கு என்னமோ போலானது.. ‘என்னை நினைப்பதேயில்லை இவர்’ என தோன்ற.. அப்படியே திரும்பி படுத்துக் கொண்டாள். யாரும் விளக்கை அணைக்கவில்லை.. அது பாவமாக ‘நான் சண்டைக்கு சாட்சி’ என ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.

மறுநாள் காலையில் கபாலி எழுந்து ஜாக்கிங் சென்றுவிட்டான். மயூரா எழுந்து சீக்கிரமாக கிளம்பி, கணவன் அறைக்கு வரும் முன்பே கீழே வந்துவிட்டாள்.

கபாலி ஜாக்கிங் முடித்து வந்தான்.. அன்னைதான் காபி கொண்டு வந்து கொடுத்தார். மனையாள் மேலே இருப்பாள் என எண்ணிக் கொண்டு, மேலே சென்றான்.

மயூரா, கிட்செனில் நின்றுக் கொண்டாள், கணவனை பார்க்கவில்லை. அவன் மேலே செல்லவும் தன் அத்தையிடம் “அத்த, நாளைக்கு காலையில்  நாம கிளம்பனும் மூணு நாள் சென்னை ட்ரிப்.. அதனால், உங்க பையன்கிட்ட எப்படி சொல்றது, நான் சொல்லல..” என்றாள்.

மகேஸ்வரி “அதெல்லாம் தப்பு, நீதான் சொல்லணும், எனக்கு ஒரு காதுகுத்து விழாவிற்கு போகணும், நான் கிளம்பறேன்” என்றார்.

டிபன் தயாராக இருந்தது. மகேஸ்வரி இருபது நிமிடத்தில் கிளம்பினார் விழாவிற்கு.

மேலே வந்த கபாலிக்கு, மனையாளை அங்கும் காணாமல் ‘என்ன டா இது, அவளை காணோம்.. அண்ணன்கிட்ட கம்ப்ளைன்ட் செய்ய கிள்ம்பிட்டாளா’ என எண்ணிக் கொண்டு, குளிக்க சென்றான்.

கபாலி கிளம்பி கீழே வந்தான்.. மயூரா ஹாலில் அமர்ந்திருந்தாள்.. கணவனை பார்க்கவும் “சாப்பிடுறீங்களா” என்றாள்.

கபாலி “எங்க இவ்வளோ நேரம்  உன்னை காணோம், சீக்கிரம் கீழ வந்துட்ட” என்றான்.

மயூரா “ம்.. “என்றாள்.

கபாலி “என்ன ஏதாவது சொல்லு.. நைட் பேசினதே ஓடுது எனக்குள்.. ப்ளீஸ்.. நமக்குள், யார் டாப்பிக்கும் நமக்கு வேண்டாம்..“ என்றான்.

மயூரா சிரித்தாள்.

கபாலி “அம்மா எங்க” என்றான்.

மயூரா விவரம் சொன்னாள்.

கபாலி கேட்டுக் கொண்டான். உண்பதற்கு வந்தான் “உட்கார், இன்னிக்குதான் உங்க அத்தை இல்லையே என்கூட சாப்பிடு” என்றான்.

மயூரா அமர்ந்தாள் உண்ணத் தொடங்கினர் மயூரா “என்னங்க, நானும் அத்தையும் நாளைக்கு சென்னை போறோம்” என்றாள்.

கபாலி நெற்றி சுருக்கி “எதுக்கு” என்றான்.

மயூரா தனது டான்ஸ் ப்ரோக்ராம் பற்றி சொன்னாள்.

கபாலி “இத்தனைநாள் சொல்லல..” என்றான்.

மயூரா “எனக்கும் தெரியலை.. என்ன செய்ய.. நானும் சொல்லன்னும்ன்னுதான் நினைச்சேன்.. சான்ஸ் கிடைக்கலை.. காலையில் கிளம்பறோம்.” என்றவள் தட்டோடு எழுந்து கைகழுவ சென்றாள்.

கபாலிக்கு, தன் தாங்கலே தீர்வதாக இல்லை.. ‘என்னை ஏன் புரிந்துக் கொள்ளவில்லை இவள்.. நான் என்ன அவ்வளவு கொடுமையா செய்கிறேன்’ எனத்தான் ஓடியது அவனுள். என்னிடம் எதுவுமே சொல்லுவதில்லை இவள்.. என  சரியாக உண்ணவில்லை, எழுந்துக் கொண்டான். 

 

Advertisement