Advertisement

மயூரா “என்மேல் கோவம்ன்னா திட்டுங்க, அதுக்காக சாப்பிடாமல் போகாதீங்க” என்றாள்.

கபாலி “ம்.. எனக்கு யார்மேலும் கோவம் இல்லை” என்றவன் கிளம்பினான்.

மயூரா “என்னை அகடாமியில் நீங்கதான் ட்ரோப் பண்ணும். அத்தை வண்டி எடுத்து போயிருக்காங்க” என்றாள் சத்தமாக.

கபாலி ஏதும் பேசாமல் அமர்ந்தான் சோபாவில்.

மயூரா டேபிள்மேல் இருந்த உணவுகளை மூடி வைத்துவிட்டு, வேலை செய்பவரிடம் “ஏதாவது ஒரு பொரியல் ரசம் மட்டும் செய்ங்க க்கா” என்றவள், கணவனை பார்த்தபடியே வெளியே வந்தாள்.

மனையாள் வரவும், கபாலி எழுந்தான்.. இருவரும் கிளம்பினர். மயூராவிற்கு, கணவனை பார்க்கவே தெம்பில்லை, தான் செய்தது தவறு என புரிகிறது.. ஆனாலும், இதெல்லாம் கன்பார்ம் ஆகும்வரை எதுவும் சொல்ல முடியாது. அத்தோடு, கணவன் தினமும் தன்னோடு பேசவில்லையே, நேரமும் சரியாக அமையவில்லை, அதனால் சொல்லியிருக்கவில்லை.

பயணம் அமைதியாக சென்றது.

மயூரா இறங்கும் போது “சாரி, ஷெட்டியூல், சரியா தெரியாததால் சொல்லலை. நீங்க ஏதும் நினைக்காதீங்க.. அத்தோட நீங்க பிஸி, அதான் மறந்துட்டேன்” என்றாள்.

கபாலி ஏதும் சொல்லாமல் விருட்டென வண்டியை கிளம்பிக் கொண்டு சென்றான்.

மயூராவிற்கு எதையும் யோசிக்க நேரமில்லை. வகுப்பில் நின்றாள் மதியம் மூன்று மணிக்குதான்.. அமர்ந்தாள்.

வீடு கிளம்பனும்.. கால் டாக்ஸி புக் செய்துக் கொண்டாள். அப்போதுதான் கணவனுக்கு அழைத்தாள்.

கபாலிக்கு ஆடிட்டர் மீட்டிங்க என வெளியில் வந்துவிட்டான். இப்போதுதான் எல்லோருடனும் உண்டுக் கொண்டிருந்தான். மனையாள் அழைக்கவும் எடுக்கவில்லை.

மயூரா கடையில் நிறுத்தி ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வீடு வந்தாள்.

கபாலிக்கு மீண்டும் அழைத்தாள்.. கபாலி வீடு வந்துவிட்டான். அவளின் அழைப்பை கட் செய்தவன் ஹாலில் அமர்ந்தான்.

மயூரா, மேலிருந்து கீழே இறங்கி வந்தாள்.. உண்பதற்கு.. எனவே, கணவன் கோவத்தில் இருப்பான் என தெரியும், எனவே, உண்பதற்கு வீடு வர சொல்லலாம் என அழைத்தாள். கணவன் எடுக்கவில்லை எனவே, பயம்தான் வந்தது அவளுக்கு.

மயூரா கீழே வர கபாலி அமர்ந்திருந்தான்.

மயூரா “வந்தாச்சா.. சாப்பிடலாமா”  என்றாள்.

கபாலி “நீ சாப்பிடு, நான் சாப்பிட்டேன்” என மேலே செல்ல எத்தனித்தான்.

மயூரா அவசரமாக “இருங்க இருங்க.. உங்களை கூல் பண்ண ஐஸ்கிரீம் வாங்கியிருக்கேன்.” என்றவள், பிரிட்ஜ் இருந்து எடுத்து வந்து அவன்முன் பரப்பினாள்.

கபாலி ‘நான் குழந்தை.. இவள் எல்லாம் செய்திட்டு.. எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்திடுவா’ என தோன்ற, மனையாளை எரிப்பது போல பார்த்தான். ஆனால், அப்படி பார்க்க முடியவில்லை.. மனையாளின் முகம் இளகி இருந்தது.

மயூரா உண்மையாகவே இவனை குழந்தையென நினைத்து.. கர்நெட்டோ தொடங்கி.. கப்.. சக்கோபார்.. மினி சாக்லேட் கேக்.. என எல்லா வெரைட்டியும் வாங்கி வந்திருந்தாள். முகத்தில் ஆசையோடு எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் பெண்.

கபாலி, அசால்ட்டாக சென்றவன், மனையாளின் முகம் பார்த்து.. நின்றான்.

மயூரா “உங்களுக்கு என்ன பிடிக்கும்” என்றாள் நிமிர்ந்து கணவனை பார்த்து.

கபாலி “நானென்ன கிட்டா..” என்றவன் சிரித்தான்.. ஆனாலும் அந்த ஐஸ்கிரீமும்.. அவளும்.. அவனை நிற்க வைத்தனர்.

மயூரா “ஒருநாள், உங்களுக்காகதான் வாங்கினேன்..” என்றாள்.

கபாலி அமர்ந்தான்.. சாக்கோபார் எடுத்துக் கொண்டான்.

மயூரா “சாரி உங்ககிட்ட சொல்ல.. டைம் இல்ல.. அத்தோட, எதுவுமே சரியாக தெரியலையில்ல, அதான் சொலல்ல.. சாரி.” என்றாள்.

கபாலி “ஓ.” என்றவன் ஐஸ்கிரீம் சுவைத்தபடியே மேலே சென்றான்.

மயூரா ‘இவரை..’ என தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

கபாலிக்கு, அந்த ஐஸ்கிரீம் வேறு நினைவுகளை.. அவனுள் கொடுத்தது.. தன் தந்தையின் நினைவுகளை. அவர்தான் ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பார்.. மேலும், இந்த வருடங்களில்.. அவன் வளர்ந்தவன்.. எதானாலும் அவனாகவே செய்துக் கொள்ள வேண்டும்.. யாரும் அவனிடம் இப்படி ஏதேனும் ஒன்றை கடைபரப்பி என்ன வேண்டும் என கேட்டதில்லை.. தந்தையை தவிர.. இன்றுதான் இப்போதுதான் தன் மனையாள் இப்படி கேட்டகவும்.. மேலே வந்துவிட்டான்.

அந்த ஐஸ்கிரீம் முடியவும்.. மனது இதமானது.. அவள் மேலிருந்த  கோவத்தை விட.. அவள் கொடுத்த ஐஸ்கிரீம் அவனை சாமாதனப்படுத்தியிருந்தது போல… கபாலி “மயூ” என அழைத்தான் சத்தமாக.

மயூராவிற்கு சந்தோஷமாக எழுந்து மேலே சென்றாள்.

உடை மாற்றி அமர்ந்திருந்தான்.. கபாலி “ம்.. சொல்லு, எத்தனைநாள் சென்னை” என்றான்.

மயூரா, கட்டிலில் அமர்ந்துக் கொண்டு பேசினாள். கபாலி எதிரில் இருந்த சின்ன சோபாவில் அமர்ந்துக் கொண்டு.. கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தான், மனையாளிடம்.

மயூரா, பொறுமையாக “சென்னை போறோம்.. மூணுநாள் ப்ரோக்ராம்.. அப்புறம் அத்தை ஒரு ரெண்டுநாள் சென்னையை பார்க்கனும்ன்னு சொன்னாங்க.. அங்க உங்க அம்மாவோட சித்தி பேத்தி இருக்காங்களாம்.. போய் பார்க்கணும்ன்னு சொன்னாங்க. அப்புறம் நான் பீச்.. போகணும்ன்னு சொன்னேன்.. அதனால் இருந்துட்டு வருவோம்.. ஒருவாரம் ஆகும்” என்றாள் தயங்கி சின்ன குரலில்.

கபாலிக்கு அவள் ஒருவாரம் இருக்கமாட்டாள் என்றதே என்னமோ போலாக.. “என்னிக்குதான் வருவீங்க” என்றான் நிதானமான குரலில். எழுந்து நின்றுக் கொண்டு.

மயூரா எழுந்து நின்று “இல்லைங்க.. வெட்னஸ்டேங்க” என்றாள்.

கபாலி மனையாளின் அருகில் வந்தான் “குழந்தையாக இருக்க சிலநேரம்.. என்னை சமாதானம் செய்ய ஐஸ்கிரீம் வாங்கி வந்திருக்க.. என்கிட்டே சொல்லாமல் சென்னை போற” என்றான்.. தன்னை சொல்லும் குரலில்.

மயூரா கணவனை நிமிர்ந்து பார்த்து “இல்லைங்க..  அது” என்றாள்.

கபாலி “என்னை நீ.. எனக்கு நீ யாருன்னு புரியவேயில்லை” என்றான், மிகவும் தளர்ந்த குரலில்.

மயூரா அனிச்சையாய் கணவனின் வலது கையை பாற்றிக் கொண்டாள்.. “இல்லங்க” என்றாள்.

கபாலி “எனக்கு, உன்னை யோசிக்கவே முடியலை.. ஹோல்ட் ஆகிடுறேன். வேலை ஓடலை.. நான் என்ன செய்ய..” என்றான்.. அவனின் கூர் நாசி விரிந்து.. அவளையே கேள்வி கேட்க்க.. அதை, அவளுக்கு கடத்தி, தன்னை காட்டிக் கொள்ள கூடாது என.. கண்களை இறுக மூடிக் கொண்டான்.. தன்னவளை பார்க்காமல்.

மயூரா, சட்டென எம்பி.. கணவனின் மூடிய கண்களில் தன் தளிர் விரல்களை.. வைத்தாள். ஒருநொடி.. எதோ இறங்கியது அவனுள்..

அடுத்த நொடி கபாலி, தட்டிவிட்டு, வெளியே சென்றான்.. “நீ கிளம்பு, போ.. என்கிட்டே யாரும் வராதீங்க..” என்றான், கோவமாக.

மயூரா என்ன செய்வது என தெரியாமல் நின்றாள்.

கபாலிக்கு, தன்னை நினைத்தே கோவமாக வந்தது.. ‘அவளே ஊருக்கு போறா.. நீ ஏன் புலம்பற..’ என தோன்ற.. வெளியே செல்ல பிடிக்காதவன், அங்கிருந்த மற்றொரு அறையில் படுத்துக் கொண்டான்.

“ஒருநிமிடம் ஒருநிமிடம் 

எனை நீ பிரியாதே..

எனதருகில் நீ இருந்தால்..

தலைகால் புரியாதே..”

Advertisement