Advertisement

நான் உன் நிறையன்றோ!

30

வளைகாப்பு முடிந்து ஜெயந்தினி, தாய் வீடு வந்து சேர்ந்திருந்தாள். அவளோடு, வசீகரனும் அடிக்கடி தன் மாமியார் வீடு வருகிறான். நேரம் எல்லோருக்கும் பறந்தது. 

கபாலி, எப்போதும் போல.. வீட்டில் அதிகம் முகம் காட்டுவதில்லை.. காலையில் 8:30க்கு வீட்டிலிருந்து கிளம்பினால்.. இரவு பதினொரு மணிக்குதான் வீடு வருவான்.

கபாலிக்கு தொழில் நல்லபடியாக சென்றது. அந்த ப்ரைட் கம்பெனியிடமிருந்து வர வேண்டிய பெரிய தொகை மட்டுமே அவனின் மூளையை குடையும் விஷயம். அவர்களை சட்ட ரீதியாகவும் நெருங்க முடியவில்லை. பேச சென்றாலும் சரியான பதில் சொல்லுவதில்.. எப்போது கேட்டாலும் முதலாளி வெளியூர். குவாரியின் லீஸ், வேறு கைக்கு மாற்றி விட்டனர். விற்பனையும் முன்போல ஓட்டமில்லை.. அதனால், கம்பெனியை விற்க போகிறார்கள் என பேச்சும் வர.. கபாலி.. அவர்களின் நிலத்தின் மேல் கண் வைத்து, ஆட்களிடம் சொல்லி வைத்திருக்கிறான். ஆனாலும் இவனின் தொகைக்கு, அந்த நிலம் காணாது. எனவே, விழி பிதுங்கி நிற்கிறான். அவர்களோ கஷ்ட்டபடுகிரார்கள்.. எப்படி பணத்தை வாங்குவது என கபாலி யோசனையில் இருக்கிறான். மற்றபடி.. கபாலி  தன்னுடைய நாட்களை ரசித்து வாழ்கிறான்.

மயூரா, ஜெயந்தினி, தங்கள் வீடு வந்ததிலிருந்து இன்னும் பிஸி. காலையில் எழுந்து கணவனோடு ஜாக்கிங் செல்லுவாள்.. அதை முடித்து வந்தால்.. அப்படியே கீழேயே இருந்து வேலைகளை பார்த்து.. மாமியாரோடு நின்றுக் கொள்வாள். எப்படி இருந்தாலும் பெரிதாக வேலைகள் இருக்காது, மயூராவிற்கு. ஆனாலும், தன் அண்ணியோடும் மாமியாரோடு சற்று நேரம் பேசிக் கொண்டே காபியை குடித்து முடிப்பாள். என்ன டிபன் என தன் அண்ணியிடம் கேட்டு, அதற்கு தக்க.. கணவனுக்கும் பிடிக்கும் படி இரண்டு வகை செய்ய சொல்லி மேலே வருவாள். கணவன் குளித்து கிளம்பியிருக்கவும், தான் குளித்து கிளம்புவாள். அதன்பின் தன்னுடைய அகடாமி சென்றாள்.. மாலையில்தான் வீடு வருவாள். அதன் பின் சின்ன அரட்டை.. ஸ்னாக்ஸ்.. அதன்பின் தன் அண்ணன் வீடு வருவான்.. அப்போதுதான் ஜெயந்தினியை விட்டு மேலே தனதறைக்கு வருவாள் மயூ. சற்று நேரம் தன் வேலையை பார்ப்பாள்.. அம்மாக்கு பேசுவது.. தங்களின் அகடாமி ஆட்களிடம் பேசுவது என நேரம் செல்லும்.. அதன்பின் தன் அண்ணன் இரவு உணவை முடித்துக் கொண்டு வீடு செல்லும் போதுதான் மயூரா கீழே வருவாள். 

பின் தானும் உண்டு முடித்து.. மேலே சென்றிடுவாள். மகேஸ்வரிக்கு தன் மருமகள் மகள் இருவரின் பிணைப்பும் அப்படி ஒரு நிம்மதியை கொடுக்கும். மயூரா வந்த உடன் மேலே செல்லாமல் கீழே அமர்ந்து பேசுவது.. அவ்வபோது “அண்ணி, வலிக்குதா.. ஜூஸ் குடிச்சீங்களா” என ஏதேனும் அக்கறையாக பேசுவதை எல்லாம் பார்க்கும் போது நெகிழ்ந்து போவார்.  

என்ன, மயூராவின் வாடிய முகமும்.. ஓய்ந்த தோற்றமும்தான் அவர்குக்கு என்னமோ போல இருந்தது. முன்பெல்லாம் மயூரா வகுப்பிலிருந்து வந்தால், சற்று நேரம் உறங்கி எழுந்து வருவாள். அதெல்லாம் இப்போது இல்லை.. அதனால் மகேஸ்வரியின் கண்களுக்கு.. மயூ அசந்து ஓய்ந்த தோற்றமாக தெரிந்தாள். மகேஸ்வரிக்கு எதோ நல்ல செய்தியாக இருக்கும் போல.. என எண்ணிக் கொண்டார். ஆனால், அதுபற்றி எது மயூவிடம் காட்டிக் கொள்ளவில்லை மகேஸ்வரி. ஆனால், அவ்வபோது மாடி ஏறும் போது.. காலையில் ஜாக்கிங் செல்லும் போதெல்லாம்.. சொல்லுவார் “ஏன் மயூ அவசரம், பொறுமையாக போ” என்பார். 

மயூரா சிரித்துக் கொண்டே கடந்திடுவாள். அவளுக்கு ஒன்றும் தோன்றாது. அத்தை எப்போதும் இப்படிதான் கீரை சாப்பிடு.. ஜூஸ் குடி என வகுப்பிற்கே எடுத்து வருவார். அதனால், இந்த அக்கறை அவளுக்கு புதிதாக தோன்றவில்லை. 

இன்றும் அப்படிதான் காலையிலேயே  5:30க்கு மகனும் மருமகளும் கீழே இறங்கி வந்துக் கொண்டிருந்தனர். மகேஸ்வரி அப்போதுதான் ஜெயந்தினிக்கு காபி கொடுக்க.. பால் எடுத்து அடுப்பில் வைத்து வெளியே வந்தார். இவர்கள் இருவரும் எதிரில் வரவும்.. மயூராவின் முகம் தூக்க கலக்கத்தில் இருப்பதாக தோனியது மகேஸ்வரிக்கு. மகன் நேற்று இரவு எத்தனை மணிக்கு வந்தான் என தெரியவில்லை.. மருமகள் முகத்தில் அசதி என்னமோ கோவமாக வந்தது மகேஸ்வரிக்கு.

தன் மகனிடம் இன்று கடிந்துக் கொண்டார் அன்னை “ஏன் டா, அவள் எவ்வளோ அலைவாள். கொஞ்சம் அவள் தூங்கட்டுமே. அவளுக்கு இரண்டு நாளில் டான்ஸ் ப்ரோக்ராம் இருக்கு.. இவளுக்கு ரெண்டு பர்ஃபாமான்ஸ் இருக்கு.. பாரு.. நேற்று அவள் வரும்போதே லேட். நீ காலையில் வேற அவளை இழுத்துட்டு வாக்கிங் போற.. அவளுக்கு எதுக்கு வாக்கிங்..” என பொரிந்தார் காலையிலேயே..

ஆனால், கபாலி நின்று கேட்க்காமல் “ம்மா.. டைம் ஆச்சு” என்றபடியே முன்னே சென்று விட்டான். 

மயூராவும்.. “அத்தை, அதெல்லாம் ஒண்ணுமில்ல.. எனக்கே முழிப்பு வந்திடுச்சி.. சீக்கிரம் வந்திடுவேன் அத்தை” என்றபடி வேகமாக கணவனோடு சென்றாள்.

மகேஸ்வரி இருவரையும் முறைத்தார்.

என்ன செய்வது.. இப்போதெல்லாம் கபாலி, மயூராவைதான்  அதிகமாக தேடுகிறான். தனக்கிருக்கும் ஒரே உண்மையான தோழி.. தோழன்.. இவள் மட்டுமே.. ம்.. தன் மனையாள் மட்டும்தான் தனக்கு என நம்புகிறான், கபாலி. ‘ம்.. எனது தனிமை அவளால் தீர்ந்து போகிறது. அவள் அருகில் இருந்தால்.. வேலை, குவாரி, கடன் நிலுவை.. என ஏதும் நினைவில் வருவதில்லை, என்முன். அஹ.. அதெல்லாம் மறைந்து விடுகிறது.. எங்கோ. என்னிடம் முன்பை விட குறைவாகத்தான் பேசுகிறாள்.. ஆனால், நான் பேசுவதை கேட்க்கிறாள். நான் ஏன் இவ்வளவு பேசுகிறேன் இவளிடம்.. ம்.. அப்படி என்னதான் பேசுகிறேன்..’  என தன்னுளேயே கேட்டுக் கொண்டு, முன்னால் நடந்தான் கபாலி.. தன் அன்னையின் கேள்வி மனதில் ஓட.. மயூவும் அவனுள் ஓடினாள்.

இப்போதும் அவனிடம் மாற்றமில்லை.. ஆனால், தன்னவளிடம் மனது ஒன்றி நிற்கிறது என அவனுக்கு புரியவும் செய்கிறது. எனவே, மனதை, யாருக்கும் காட்டக் கூடாது என எண்ணுகிறான். அதனால், இயல்பாக இருப்பது போல.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை தன்னோடு வைத்துக் கொள்கிறான் கணவன். இன்று, இப்படி அன்னை, இந்த நேரத்தையும் வேண்டாம் என சொல்லவும்.. அதை கபாலியினால் ஏற்க முடியாமல் போக.. என்னமோ போலாக.. அமைதியாக வந்தான் வழி முழுவதும்.

இருவரும் கிரௌண்ட் சென்றனர். ஜாக்கிங் செல்ல தொடங்கினர். கபாலி இப்போது மனைவியிடம் “என்ன சொன்னாங்க உன் அத்தை” என கேட்டபடி.. மெதுவாக ஓட தொடங்கினான்.

மயூரா ‘ஒன்னுமில்லை’ என தலையாட்டியபடியே தானும் மெதுவாக ஓட தொடங்கினாள். அவளுக்கு சொல்லி கொடுத்திருந்தான். மேல் பாதங்கள் மட்டும் அழுத்தி மிதமான வேகத்தில் ஓட வேண்டும் என. இப்போதும் மயூராவும் அப்படியே தொடங்க.. கபாலி வேகமெடுத்து முன்னே சென்றான்.

மயூரா மெதுவாகவே வந்தாள். இவளும் எப்போதும் கணவன் வேகம் செல்லமாட்டாள் என்றாலும்.. சராசரி வேகத்தில் செல்லுவாள். இன்று என்னமோ மனம் ஒத்துழைக்கவில்லை.. அதனால் உடலும் சோர்ந்து போக.. மெதுவாக சென்றாள் பெண். கூடவே யோசனை வேறு.. தாங்கள் ஒரு ஆறு பெண்கள் மட்டும்தான் ஆட போகிறோம்.. உள்ளூர்.. இன்னும் ஹால் சென்று பார்க்கலை.. இன்னும் ஒரு நடனம் சரியாக முடிவாகவில்லை..’ இப்படி நிறைய அவள் மண்டையை குடைய.. அதில் அவளின் யோசனை செல்ல.. அப்படியே மெதுவாக காலை பனி காற்று முகத்தில் இன்பமாக வீச.. மெல்ல ஓடிக் கொண்டிருந்தாள் பெண். 

கபாலி இரண்டு ரவுண்டு சென்றிருக்க.. மயூரா இன்னமும் முதல் சுற்றே முடிக்கவில்லை. கபாலிக்கு அன்னை சொன்னது இப்போது தாக்க மனையாளின் அருகே நின்றான்.. “என்ன இன்னிக்கு இவ்வளோ ஸ்லொவ்” என்றான்.

மயூரா நின்றாள் மூச்சு வாங்க.. “ஸ்லொவ் இல்ல, யோசித்துக் கொண்டே வந்தேனா.. அதான். நீங்க போங்க..” என்றாள்.. கீழே குனிந்துக் கொண்டு மூச்சு முட்ட.. திக்கி திக்கி சொல்லி முடித்தாள்.

கபாலி புன்னகை முகமாக “என்ன யோசனை, உட்கார்.. வரேன்” என்றவன் இன்னும் நான்கு சுற்று முடித்துதான் அவளின் அருகில் வந்து அமர்ந்தான்.

கபாலி “நான் உன்னை கஷ்ட்டப்படுத்தறனா” என்றான் தன்னவளை பார்க்காமல் எங்கோ எதிர்பக்கம் பார்த்துக் கொண்டு கேட்டான் கபாலி. 

மயூரா இல்லை என தலையசைத்தாள்.. புன்னகை முகமாக.

கபாலிக்கு, என்னவென தெரியாமல் போக.. மனையாளின் முகம் பார்த்தான்.

மயூரா “ரொம்ப யோசிக்காதீங்க” என்றாள்.

கபாலி அமைதியாக இருந்தான்.. அதிகாலையின் சாம்பல்நிற மேகம் எல்லாம் விலகி.. வானம் தெரிய தொடங்கியது.

மயூரா “டூ டேய்ஸ்ல.. ப்ரோக்ராம்.. இங்கதான் ரோட்டரி ஹாலில். இன்னமும் நான் போய் பார்க்கலை.. ஏற்கனவே பர்ஃபோர்ம் செய்திருக்கேன். இப்போது அண்ணன் நிறைய சேன்ஞ் ஆகியிருக்குன்னு சொன்னான். அப்புறம் ஒரு.. ஒரு பெர்போமன்ஸ் இன்னும் பைனால்  ஆகலை.. ஒரே டென்ஷனா இருக்கு.. அதான் யோசனை.. இன்னமும் அப்படியே ஓடிட்டு இருக்கு.. நீங்க என்னமோ இப்படி பீல் பண்றீங்க.. என்ன என்னமோ கேட்க்கிறீங்க” என்றாள்.. மெல்லிய குரலில் முயன்று கவனமாக பேசி முடித்தாள் பெண்.

கபாலி இப்போதும் அவளை பார்த்து கிண்டலாக சிரித்தான் “ஹேய்.. நான் கூட என்னமோன்னு பயந்துட்டேன்.. இங்கிருக்கு ஹால்.. வா, ஆபீஸ் போகும் போது.. உன்னை கூட்டி போய் காட்டி போறேன் அவ்வளவுதானே. அப்புறம் என்ன சொன்ன.. ஒரு பெர்போமன்ஸ் முடிவாகலையா. முடிந்ததை ஆடுங்க போது, என்ன இப்போ.. இதுக்கெல்லாம் கவலை பட்டால் எப்படி, நானெல்லாம் அப்புறம் சிரிக்கவே முடியாது.. நீ பீல் பண்றத பார்த்தால்.. என்னை போல.. எதோ லக்ஸ் கணக்கில் லாஸ் வரும் போல பீல் பண்ற.. போடி போடி நான் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.” என்றான் வருத்தமாக.

மயூரா “ஹலோ.. இன்விடேஷன்ல.. டீட்டைல்ஸ் போட்டாச்சு.. இது ஆர்ஃபனேஜ்க்கு.. மெடிக்கல் ஃபண்ட் கலெக்ஷன் ப்ரோக்ராம். நான் அசால்ட்டாக இருக்க முடியாது. எந்த சின்ன விஷயமும் பெருசா தெரியும். இது ஒன்னும் பண கணக்கில்ல.. ஏன் உங்களுக்கு பணத்தை தவிர மற்றது எதுவும் பெருசா தெரியாதா. போங்க.. என்னோட வொர்க் பணம் சார்ந்தது இருந்தாலும்.. பணம் மட்டுமே பிரதானம் இல்லை..” என்றாள் கோவமாக.

கபாலி “ஹேய் இவ்வளோ கோவப்படாத.. எனக்கு என்ன தெரியும். எனக்கு பணம்தான் தெரியும். அதான் சொன்னேன். உனக்கு பணம் தெரியலன்னா.. காசு வாங்காமல் டான்ஸ் ஆடு, காலையில் கூட வந்திட்டு.. நீ டென்ஷன் ஆகி, என்னையும் டென்ஷன் ஆக்குற..” என கடிந்தான்.

மயூரா முறைத்தாள்.

கபாலி “என்ன முறைக்கிற” என்றான்.

மயூரா “ஆமாம்.. இது சாரிட்டி.. நான் இந்த ப்ரோக்ராம்க்கு காசு வாங்கலை. புரியுதா, அதுக்காக என் குவாலிட்டியை குறைக்க முடியாது ம்..” என்றாள் பற்களை கடித்துக் கொண்டு.

கபாலிக்கு மனையாளின் விரிந்த உருளும் விழிகளும்.. கோவத்தின் சிவக்கும் மூக்கின் நுனியும்.. “ஓ..” என சத்தமில்லாமல் சொல்ல வைத்து அவனை.

Advertisement