கர்வம் அழியும் காதலில்
“ஏய் நாங்களும் மனுசங்க தான். நீயும் என் தங்கச்சி மாதிரி தான். நீ வா”
“வந்தா உள்ள விடுவாங்களா?”
“அதெல்லாம் விடுவாங்க. உன்னைப் பத்தி எங்க வீட்ல எல்லாருக்கும் தெரியும். நீ என் மகனைப் பாக்க வேண்டாமா? அன்னைக்கு தான் அவனுக்கு பேர் வைக்கிற பங்ஷன். அதனால நீ கண்டிப்பா வரணும்”
“சரிங்க...
அத்தியாயம் 18
தாரிகையின் பாதச் சுவடு
பட்டு சிலிர்க்கிறதே நெஞ்சம்!!!
மதிக்கு எட்டாம் மாதம் முடியும் தருவாயில் இருக்கும் போது ரேகா அவளை அழைத்தாள்.
“ஹலோ யாரு?”, என்று கேட்டாள். அது லேண்ட்லைன் நம்பர் எண் என்பதால் அவளுக்கு தெரிய வில்லை.
“மிஸ் நான் ரேகா பேசுறேன். வீட்ல போன் இல்லை. அதான் கடைல இருந்து பேசுறேன்...
“இல்லை மா, எனக்கு ராஜ வம்ஸம்னு கொஞ்சம் கௌரவம் உண்டு. அதான் உன் கிட்ட திமிரா நடந்துக்கிட்டேன்”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை பாட்டி. இந்த வீட்ல எல்லாரும் நல்லவங்க. நீங்க மட்டும் எப்படி கெட்டவங்களா இருக்க முடியும்? இப்ப என்னை பத்தி தெரிஞ்சு எவ்வளவு பெரிய ஆள் என் கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க?...
அத்தியாயம் 17
உயிரோடிருக்கும் நாள்
எல்லாம் உன்னருகே நித்திரை
கொள்வதும் வரம் தானே!!!
திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்திருந்தது. அப்போது யாருக்கோ ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தாள் அஞ்சனா,
“என்ன அஞ்சு பண்ணுற?”, என்று கேட்டாள் பார்வதி.
“அக்காவுக்கு ஜூஸ் போடுறேன்”
“என்னது?”
“என்ன பாட்டி? மதி அக்காவுக்கு ஜூஸ் போடுறேன். அவங்க ஸ்கூல்க்கு போகும் போது எடுத்துட்டு...
“தமா ஆதியை சீக்கிரம் கூப்பிடு. நாம உடனே மதியை இங்க கூட்டிட்டு வரச் சொல்லணும். அவன் போகலைன்னா நாம போய் கூப்பிடலாம்”, என்று ராயர் சொல்ல “ஏன் அவளா வர மாட்டாளா? அவளை அழைக்க வேற செய்யணுமா?”, என்று கேட்டாள் பார்வதி.
“அம்மா”, என்று கண்டிப்புடன் அழைத்தார் ராயர்.
“அம்மாவும் பையனும் எதுக்கு...
அவள் முத்தத்தை ரசித்தவன் “இவ்வளவு நாள் ஆச்சு உனக்கு எங்க முத்தம் கொடுக்கன்னே தெரியலை. டிரெயினிங்க் பத்தாது போல”, என்றவன் அவளுடைய உதடுகளைச் சிறை செய்தான்.
அவன் முத்தத்தில் மூழ்கிப் போய் அவள் இருக்க சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து விலகி “நம்ம வீட்டுக்கு போகலாமா டி? இல்லை இங்கயே இருக்கணுமா?...
“ஆன் அது... அது வந்து பா... இங்க... வேண்டாம் பா. நான் அங்கயே போறேன். மாமா என்னை நம்பி பொறுப்பைக் கொடுத்துருக்காங்க. நான் அவர் கூடவே போறேன் பா”, என்று சொல்ல வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “சரி மா”, என்றார்.
சிறிது நேரத்தில் இருவரும் வீட்டுக்குள் வர மனதில் இருந்த சந்தோஷத்தை...
அத்தியாயம் 16
சிறகை விரித்துப் பறந்து திரிகிறது
எந்தன் காதல் நினைவுகள்!!!
அப்போது அங்கே வந்த டாக்டர் “பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லை. ரொம்ப யோசிச்சதுனால வந்த ஸ்ட்ரெஸ் தான். இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்களுக்கு ஸ்ட்ரெஸ் வரது இயல்பு தான். இன்னும் கொஞ்ச நேரத்துல கைனகாலஜிஸ்ட் வருவாங்க. அவங்க ஒரு ஸ்கேன் எடுத்துட்டு பேபி பத்தி...
பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல இருந்தது மணிமேகலை மற்றும் சுந்தரேஸ்வரருக்கு. அவர்கள் நன்றியோடு ஆதியைப் பார்க்க இதைக் கேட்ட பார்வதி மற்றும் சேதுராமன் முகமும் சந்தோசமாக இருந்தது.
மணிமேகலையின் ஆசை ஏற்கனவே ராயருக்கு தெரியும் என்பதால் இப்போதும் தங்கையின் புன்னகை முகத்தையே ஒரு நொடி பார்த்தவர்...
“நிஜமாவா அண்ணி?”
“என் மேல நம்பிக்கை இல்லையா?”
“இனியும் உங்களை நம்பலைன்னா நான் மனுசியே இல்லை. உங்களை நம்புறேன். எல்லாம் நீங்க பாத்துக்குவீங்கன்னு நம்பிக்கை இருக்கு”
“குட், இது அஞ்சனாவுக்கு தெரியுமா நந்து?”
“அவ என்னோட பிரண்டா மட்டும் இருந்திருந்தா சொல்லிருப்பேன். ஆனா அவ அத்தானோட தங்கச்சியாச்சே?”
“சரி சரி நீ ரெஸ்ட்...
அத்தியாயம் 15
எந்தன் காவியக் காதல்
கை கூடும் என காத்திருந்தே
காலம் செல்கிறதே!!!
மதி வெளியே வந்து நிற்க ஆதி காரை எடுக்கப் போனான். அப்போது அவள் அருகே வந்த பார்வதி “இதுக்கு தான் ஓவரா ஆடக் கூடாதுன்னு சொல்றது? இப்ப பாத்தியா உன் நிலைமை எப்படி ஆகிருச்சுன்னு?”, என்று கேட்டாள்.
“சும்மா வாய் இருக்குனு பேசக்...
மதிக்கும் அவனைக் கண்டு பயம் தான். ஆனால் வேறு பயம். அவன் ரிஷியைப் பற்றி அனைவரிடமும் சொல்லி திருமணத்தை நிறுத்துவான் என்று எதிர் பார்க்க அவனோ உணவிலே கவனமாக இருந்தான். உணவு முடிந்ததும் பேசலாம் என்று தான் அமைதியாக இருந்தான்.
“என்ன இவன் இப்படி இருக்கான்? ரிஷி பத்தி ஒண்ணுமே சொல்லலை? இவனே...
உடனே இப்படி செய்வான் என்று அவள் எதிர் பார்க்கவில்லையே? “ஏய் நான் பேச தான் வந்தேன். உன்னால முடிஞ்சா என் வீட்ல வச்சு என் கிட்ட வாலாட்டு டா. என்னமோ கிழிக்க போறேன்னு சொன்ன? அதைச் செய். இப்ப நானா வந்தா நீ அதை அட்வான்டேஜ் எடுத்துக்குவியா?”, என்று பதட்டத்தில் உளறினாள்.
“அப்படி...
அத்தியாயம் 14
ஒரு நாள் நானும் சுமந்தேன்
காதல் என்னும் சிலுவையை!!!
மதியின் போனைக் கண்டு சிரிப்புடன் அதை எடுத்த ரிஷி “சொல்லு பேபி, என்ன இன்னைக்கு இவ்வளவு ஆச்சர்யமெல்லாம் நடக்குது? நீயே எனக்கு கால் பண்ணிருக்க?”, என்று கேட்டான்.
“நான் உன் கிட்ட பேசணும் ரிஷி”
“பேசு, நீ பேச தானே நான் காத்துருக்கேன். உன்...
“எங்க அண்ணன் சாகச் சொன்னா கூட என் மருமகன் சாவான் டி”, என்று மணிமேகலை சொல்ல “அது எல்லாம் முன்னாடி. ஆனா இப்ப இருக்குறது என் ஆதி. எனக்காக வாழ்ற ஆதி. அப்பா பேச்சைக் கேப்பார் தான். ஆனா என்னை விட்டுக் கொடுக்க மாட்டார். எனக்காக வாழ்றவர் மாமா சொன்னா கூட சாக...
அவன் இழுத்த இழுப்பிற்குச் செல்ல அவளை அவளது பெர்சனல் அறையில் இருந்த சோபாவில் அமர வைத்தவன் கையில் வாங்கி வந்திருந்த தக்காளி சாதத்தை பிரித்து ஊட்ட ஆரம்பித்தான்.
அவனை வியப்பாக பார்த்தாலும் அவன் தன்னை கண்டு கொள்ளாதது நினைவில் வர “எனக்கு ஒண்ணும் வேணாம்”, என்று சொல்லி முறுக்கி கொண்டாள். “இப்ப நீ...
“தப்பு தான் ஆதி”, என்றவர் தமயந்தியைப் பார்க்க அவள் அழுத கண்களுடன் “என்னை மன்னிச்சிரு ஆதி. நான் செஞ்சது தப்பு தான்”, என்றாள்.
“இன்னைக்கு இந்த மன்னிப்பு உண்மைன்னா அன்னைக்கு கேட்ட மன்னிப்புக்கு என்ன அர்த்தம்?”, என்று கேட்க தமயந்தியால் பதிலே சொல்ல முடிய வில்லை.
“என்ன டா அவளுக்கு ரொம்ப சப்போர்ட்...
அத்தியாயம் 13
நெஞ்சுக்குள் மாமழை
பொழிகிறதே பெண்ணே
காதலென்ற மேகத்தால்!!!
காலையில் முதலில் கண் விழித்த ஆதி மதியை படுக்கையில் படுக்க வைத்து விட்டு தன்னுடைய வேலைகளைக் கவனித்தான். அவன் கிளம்பி முடித்ததும் தான் அவள் எழுந்தாள். எதுவும் பேசாமல் அவன் கிளம்பிக் கொண்டிருக்க அவள் அவனையே பார்த்தாள். அவன் வேறு ஒரு யோசனையில் இருக்க அவளை கண்டு...
“நீயெல்லாம் அரக்கன். உனக்கு ஒரு உயிர் போனது எல்லாம் பெரிய விஷயம் இல்லை. இங்க பாரு. நான் பழைய விஷயங்கள் எல்லாத்தையும் மறந்துறேன். நீயும் வேற நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோ. நந்துவையும் என்னையும் விட்டுரு. தயவு செஞ்சு என் வாழ்க்கைல இருந்து விலகிரு”
“அதுக்கு நீ அப்பவே விலகிருக்கணும் டி”
“நான் என்ன செஞ்சேன்?”
“நான்...
அனைவரும் திகைத்து விழிக்க ஆதி “ப்ச்”, என்ற சலிப்புடன் பாட்டியை முறைக்க பார்வதியை உக்கிரமாக முறைத்த மதி “பாட்டி வார்த்தையை கொஞ்சம் யோசிச்சு பேசுங்க. யாரும் எனக்கு பிரண்டு கிடையாது. அப்படி புதுப்பிக்கிற அளவுக்கு அவன் கூட பிரண்ட்ஷிப் எனக்கு அவசியமும் கிடையாது. நிச்சயதார்த்த மோதிரம் வாங்குறது பத்தி கேக்க தான் அவன் நம்பர்...