Varmanin Venmathi
18
மருத்துவர் வெண்மதியை தெரியும் என்று சொன்னதும் அவர் அவனை பார்த்து இவள் உங்கள் மனைவி தானா என்று கேட்டதும் யோசித்தவன் ‘ஒருவேளை இவர் கதிரோடு இவளை முன்பே பார்த்திருப்பாரோ’ அதனால் தான் என்னைப்பற்றி விசாரிக்கிறார் போலும் என்று நினைத்தான்.
அவன் எண்ணத்தை அப்படியே அவரிடம் சொல்லவும் செய்தான். “நீங்க மதியை கதிரோட பார்த்து இருக்கீங்களா?? மூணு...
17
“இப்போவும் நான் அதே தான் சொன்னேனா??” என்றான் அவளை உற்று நோக்கி. அவன் முகம் இப்போது அவளை காதலாய் பார்த்துக் கொண்டிருந்தது.
எந்த பார்வை அவனிடத்தில் இருந்து காண வேண்டும் என்று ஒரு காலத்தில் அவள் விரும்பினாளோ அந்த பார்வை இப்போது அவள் விரும்பாத நேரத்தில்.
விரும்பாத நேரமென்றாலும் அது விரும்பிய பார்வை தானே. கண்கள்...
16
“ஏன் மாமா அதுக்கும் அவங்க சம்மதிக்க மாட்டாங்களா??”
“தெரியலை மதி...” என்றவனின் குரலில் வேதனையின் சாயல்.
“மதி நமக்கு இப்போ நேரமில்லை, சீக்கிரம் போய் அவளை பார்க்கணும்... போகலாமா??”
“கண்டிப்பா மாமா...”
“ஆனா வீட்டில என்ன சொல்றது மதி??”
“நீங்க வேலை இருக்கு பிரண்ட் பார்க்க போறேன்னு சொல்லிட்டு கிளம்புங்க... நான் நர்சிங்ல ஒரு ட்ரைனிங்ன்னு சொல்லிட்டு சென்னை வர்றேன் மாமா...”
“மாமா...
15
வீட்டிற்கு வந்து அறைக்குள் நுழைந்தவள் தான் அப்படியே கட்டிலில் சாய்ந்துவிட்டாள். அவள் முகமே வாடியிருந்ததை உணர்ந்த சிபி அவள் பின்னோடே வந்திருந்தான்.
“மதி என்னாச்சு?? ஏன் டல்லாயிருக்கே??”
“ஒண்ணுமில்லை...”
“ஊடம்பு எதுவும் சரியில்லையா??”
“நான் தான் ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டேனே அப்புறம் ஏன் கேள்வி கேட்டுட்டே இருக்கீங்க... நீங்க கேட்டதுல தான் எனக்கு தலைவலி வந்திருச்சு, பேசாம போங்க வெளியில... நான்...
14
மணி பத்தாகியிருந்தது இப்போது. “மதி முடியலை ரொம்ப வலிக்குது, ஒரு எட்டு கூட எடுத்து வைக்க முடியாதுன்னு தோணுது... எதுவோ வெளிய வர்ற மாதிரி இருக்கு...”
“மாமா அக்காவை பார்த்துக்கோங்க ஒரு நிமிஷம்” என்றவள் மருத்துவரை அழைக்க சென்றாள்.
உடனே லேபர் வார்டுக்கு அவளை அழைத்துப் போக உள்ளே சென்ற சில நிமிடங்களிலேயே குழந்தை வீறிட்டு அழும்...
13
“சிஸ்டர் ஒரு நிமிஷம்” என்று உள்ளே சென்றுக் கொண்டிருந்தவளை மறித்து நின்றிருந்தான் சந்தியாவின் கணவன்.
“சாரி சிஸ்டர்...”
“எதுக்கு??”
“நான் சந்தியாவோட ஹஸ்பெண்ட்”
“தெரியும்”
“அவ பேசினது எல்லாம் மனசுல வைச்சுக்காதீங்க சிஸ்டர்... எனக்கு தெரியும் உங்களுக்கு எல்லாம் கேட்டுச்சுன்னு...”
“அவங்க சொன்னதுல எதுவும் பொய்யில்லையே...”
“சிஸ்டர் ப்ளீஸ்...”
“பரவாயில்லை...” என்றவள் தன் வேலையை பார்க்க சென்றாள்.
அவனிடத்தில் ஒன்றும் காட்டாதிருந்தாலும் அவளுக்கு உள்ளுக்குள் வலிக்க தான்...
12
மாசுக்கட்டுப்பாடாம் காலையில் ஒரு மணி நேரம் இரவில் ஒரு மணி நேரம் மட்டும் தான் வேட்டு வைக்கலாமாம்.
ஆயிரம் வாகனங்களினால் உண்டாகாத மாசு, ப்ரிட்ஜ், ஏர் கண்டிஷ்னரினால் உண்டாகாத மாசு, ஒரு நாளில் பட்டாசு வெடிப்பதில் தான் உண்டாகும் என்று கணிப்பதும் கட்டுப்படுத்துவதும் எவ்விதத்தில் நியாயமோ!!
பன்னாட்டு வியாபாரிகள் வாழ ஆயிரம் தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்பது தான்...
11
“பா... ப்பா...” என்று வானதி அவன் கால்களை பிடித்தாள். வீம்புக்காரனாயிற்றே!! குழந்தையை தூக்கவில்லை அவன்.
வானதிக்கு அழுகை பொங்கியது, அன்னையும் தூக்கவில்லை, இப்போது சிபியும் தூக்கவில்லை என்றதும் ஓவென்று அழ ஆரம்பித்தாள்.
“மதி என்னாச்சு... எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கே??” என்று அவளை பிடித்து உலுக்கவும் தான் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
கண்கள் அவசரமாய் அவனை தலை முதல்...
10
இரவு பத்து மணியாகியிருந்தது, சிபிவர்மன் உடல் அலுப்பினால் விரைவாகவே படுத்து உறங்கிப் போனான். திடீரென்று வீட்டின் பின்புறத்தில் இருந்து அய்யோவென்ற அழுகுரல் கேட்க பதறிக்கொண்டு எழுந்தவன் அருகே பார்க்க வெண்மதியும் வானதியும் அங்கில்லை.
வேகமாய் எழுந்து பின்னால் ஓட அங்கு வைத்திருந்த தண்ணீர் சேமிக்கும் தொட்டியில் இறங்கிக் கொண்டிருந்தாள் வெண்மதி.
“மதி என்னாச்சு?? என்ன பண்ணிட்டு இருக்கே...
9
பத்து நாட்கள் கடந்திருந்தது சிபிக்கு அந்த வீடே பிடிக்கவில்லை. வெறுப்பாய் இருந்தது, அவனை பார்த்து கன்னம் குழிய சிரிக்கும் பிஞ்சை அள்ளிக்கொஞ்ச முடியவில்லை.
தன் மேல் எப்போதும் கரிசனமாய் பாசமாய் அவ்வப்போது ஏசும் அன்னை கூட அவனிடம் அதிகம் பேசுவதில்லை இப்போது.
அவன் தந்தை பசுங்கிளி பகலில் பெரியகுளத்தில் இருக்கும் தோப்பை பார்க்க சென்றுவிடுவதால் இரவு உணவிற்கு...
8
அவர்கள் கிளம்பிச் செல்லும் வரையிலும்கூட அவள் சமையலறையில் இருந்து வெளியே வரவேயில்லை. வெளியே சென்றபின் சிபிவர்மன் சந்தியாவை அவள் பெற்றோரின் முன்னேயே எச்சரித்ததை அவளறியாள்!
தன் மேலேயே வெறுப்பாய்!! கோபமாய்!! ஆத்திரமாய்!! இயலாமையாய்!! என்று கலவையான உணர்வுகள் அவளுக்குள்.
அத்தனையும் சிபியின் மேல் திரும்பி எந்நேரத்திலும் அவனை குத்தி குதறி எடுத்துவிடும் அளவிற்கான கோபம் அவளுள் கனன்று...
7
சிபியின் இல்லம்
--------------------------------
வெண்மதி அவன் பின்னோடு கிளம்பியிருந்தாலும் அவன் வந்து சேர்ந்து ஐந்து நிமிடம் கழித்தே வீட்டை அடைந்தாள்.
“வர்மா என்ன நீ மட்டுமா வர்றே?? எங்க அவ?? அவ புள்ளைய உன்கிட்ட கொடுத்துட்டு எங்கன சுத்திட்டு வாரா??” என்ற அன்னையை கண்டிப்பாய் பார்த்தான்.
‘இவளை ஒரு வார்த்தை சொல்லக் கூடாதுங்கறானே...’ என்று மனதிற்குள்ளாகவே சொல்லிக்கொண்டார்.
“பாப்பாக்கு சாப்பிட என்ன...
6
தான் அழைத்து வராதவள் மகன் அழைத்து வரவும் செல்விக்கு வெண்மதி தன் மகனை இப்போதே தன் கைக்குள் வைத்துக் கொண்டாள் என்றே தோன்றியது.
அவர் கொஞ்சம் யோசித்தால் அதெல்லாம் தன் பிரமை என்று தோன்றும் என்றறிந்தவர் அதை யோசிக்க கூட நினைக்கவில்லை அக்கணம்.
ஆகாத மாமியார் கைப்பட்டாலும் கால்ப்பட்டாலும் குற்றமே என்பது தான் ஆகிப்போனது. மகன் முன்னிலையில்...
5
அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ பெண் வீட்டிற்கும் மாப்பிள்ளை வீட்டிற்குமான பொதுவான சில வரைமுறைகளை மட்டும் இருவீட்டினரும் செய்து முடித்தனர்.
வெண்மதியின் வீட்டினருக்கு இதெல்லாம் செய்ய அதிக விருப்பமில்லாவிட்டாலும், சிபிக்கு இது முதல் முறை என்பதால் அவன் வீட்டினரின் விருப்பத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்திருந்தனர்.
சிபியின் அன்னை செல்விக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் மகனுக்காய் முடிந்த வரை அனைத்தும் சிறப்பாகவே...
4
வெண்மதி அடிப்பாள் என்று அவன் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு நொடி அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விறைப்பாய் நின்றான் அவன்.
அதற்குள் மற்றவர்கள் அவனை நோக்கி வந்திருந்தனர். “சொல்லுடா என்னோட குழந்தை எங்கே??” என்றவளின் குரலில் அழுகையின் சாயை ஆரம்பமாகியது.
அவளுக்கு பதிலொன்றும் சொல்லாமல் அமைதியாகவே நின்றான் அவன். “வர்மா பாப்பா எங்கேடா?? நீ தானே தூக்கிட்டு...
3
வெண்மதியை பற்றி
வெண்மதி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவள் பின் நர்சிங் பயிற்சியை முடித்து தேனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியில் இருக்கிறாள்.
சொந்த அத்தையின் மகனான கதிர்வேலனை தான் மணந்திருந்தாள் இரண்டு வருடங்களுக்கு முன்பு. இராணுவத்தில் பணிபுரிந்தவன் விடுமுறை முடிந்து ஊருக்கு செல்லும் முன்னே விபத்து ஒன்றில் உயிர் பிரிந்து போனது.
வெண்மதியும் அவனுடன் சென்றிருந்தாள்,...
2
சிபியை பற்றி
தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அவன் ஊர். பெயருக்கு ஒரு டிகிரி வேண்டும் என்று படித்து முடித்தான். படித்து மதிப்பெண்களை அள்ளிக்குவிப்பதில் அவனுக்கு எப்போதும் விருப்பமிருந்ததில்லை.
ஜெயவர்மன் இவனுக்கு நேர்மாறாய் நன்றாக படித்தான். அரசுத்தேர்வு எழுதி தற்போது திண்டுக்கல் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்தில் பணியிலிருக்கிறான்.
சிபிக்கு படித்து மதிப்பெண்கள் எடுப்பதில் நாட்டமில்லையே தவிர நிறைய படித்து...
1
திருமண மண்டபம்
இன்று அவனுக்கு திருமணம், அதற்கான மகிழ்ச்சியோ மலர்ச்சியோ எதுவும் அவனிடத்தில் இல்லை இறுக்கம் ஒன்றைத் தவிர.
பிடிக்காத திருமணமோ அவனைக் கேட்காமல் செய்ததுவோ என்ற எண்ணம் நமக்கு எழலாம். திருமண பேச்சு ஆரம்பத்தில் அவனுக்கு பிடித்தம் இல்லையென்றாலும் மறுப்பு என்று எதுவுமில்லை அவனுக்கு.
வீட்டில் பார்த்து வைத்த பெண் தான் அவள், நல்ல அழகான படித்த...