Monday, April 29, 2024

    Karaiyum Kaathalan

    நாலடி முன்னே வைத்தால் தன்னை முழுங்கிவிடும் என்று பெரியவர்களே பயந்து நிற்க,  நாலே எட்டில் பின்னே ஓடும் தண்ணீரை தாவிபிடிக்க ஓடும் பயமென்றால் என்னவென்றே தெரியாத நாலு வயது குழந்தையின் விளையாட்டை ரசித்து கொண்டிருந்த நந்துவை கலைத்தது ஷ்ரவனின் குரல். “அணைக்கும் தூரத்தில் இருக்கும் உன்னை ஒரு முறையேனும் தொட்டு விடும் ஆசைகொண்டு ஓடி வரும் என்னை விட்டு விலகி ஓடும் உன்னை தீண்டும் வரை ஓயாமல் தொடர்ந்து...
    இவ்வளவு நடந்தும் எதுவுமே நடக்காதது போல் எதிரில் அமர்ந்து தன்னை பார்த்து சிரித்து கொண்டிருக்கும் ஷ்ரவனை முறைத்தவள். “டேய்! எரும பார்த்துட்டு தான இருக்க? நீ என்கூட தான் இருக்கன்னு நான் சொன்னா நம்பமாட்டேங்கிறாங்க. ஒழுங்கு மரியாதையா நீயே இவங்க முன்னாடி வந்து சொல்லு” என்றாள் ஷர்வனின் கண்களை நோக்கி. “ஹுஹஊம் ... நீயே தான் சொல்லணும்...
    14 “ஹலோ! நான் அகல்யா பேசுறேன்” என்றாள் மெதுவாக. சில நிமிடம் அமைதியாக இருந்த எதிர்முனை, “அம்மாடி அகல்யா. எப்படிடா இருக்க? இப்போ தான் இந்த அம்மா ஞாபகம் வந்ததா?” என்றார் கேவியபடி. “நான் நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள் கண்ணீருடன் இவளும் அன்னையின் குரலில் தெரிந்த ஆனந்தத்தை கண்டுகொண்டு.        “எனக்கென்ன இருக்கேன் நல்லா தான்.”...
    13 "ஹேய் பொண்டாட்டி ! பார்த்தியா அன்னைக்கு நான் உனக்கு கார் ஓட்ட கத்து கொடுத்தப்ப. நான் கத்துக்க மாட்டேன்னு சொன்ன? ஆனா இப்ப பாரு நீயே வண்டி ஒட்ற? " என்று பேசிக்கொண்டு வந்தான் ஷ்ரவன்.  "ஆமா ஷ்ருவ். அன்னைக்கு எனக்கு பயமா இருந்தது.  ஆனா நான் சொல்ல சொல்ல கேக்காம கண்டிப்பா கத்துக்கிட்டே ஆகணும்னு சொல்லி எனக்கு கத்துக்கொடுத்த....
    ஷன்மதி பயந்துகொண்டிருக்க அவளை தாங்கிப்பிடித்து கொண்டிந்தான் யார் விழிகளுக்கும் தெரியாத ஷ்ரவன். “மதிம்மா.. நான் சொல்றதை நல்லா கேளு. நடக்கிற எல்லாமே நல்லதுக்குதான். இங்க என்ன நடந்தாலும் நான் இருக்கேன் உனக்கு என்னைக்கும். புரியுதாடா” என்று அவளின் நெற்றியில் இதழ் பதிக்க, அந்நேரம் பார்த்து அவளின் நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்து தலையில் இருந்த பூவையும்...
    "உன்னோட இடத்துக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள்" என்று குரல் மட்டும் வந்தது. "ஆனா அங்க யாருமே இல்ல... எனக்கு உதறல் எடுத்துடுச்சு. அந்த பெரியவர் சொன்னதை கேட்டு அப்படியே போகாம விட்டுட்டோமேன்னு வருத்தப்பட்டேன். பயந்துட்டே "யாரு..? ன்னு கேட்டேன் " என்றான்  ஷ்ரவன். "நீ சொல்றதை கேட்டா எனக்கு பயமா இருக்கு ஷ்ரவன்" என்றாள் ஷன்மதி. "பயப்படாத மதிக்குட்டி. நான் தான் இருக்கேன்...
    "அண்ணா! இங்க வாங்க. உங்க கைய காட்டுங்க" என்று நந்துவின் கரத்தினை இழுத்து அருகினில் அமரவைத்தாள். "என்னை ஏன் பார்க்கிறிங்க? உங்க பிரென்ட் எதிர்ல தான் இருக்கார். அவரை பார்க்க போறீங்க. சோ கண்ணை மூடிக்கோங்க" என்றாள் ஷன்மதி. "சரி ஷன்மதி" என்று தன் பதட்டமான நெஞ்சோடு விழிகளை மூடி  நடுங்கும் கரங்களை  நீட்ட அவனின் கரங்களை எடுத்து...
    “இப்போ தான் என்னை உங்க தங்கச்சின்னு சொன்னிங்க. அதுக்குள்ள நீ யாரு பொய் சொல்றன்னு சொல்றிங்களே? நான் பொய் சொல்லி என்ன ஆகபோகுது? உங்ககிட்ட என் புருஷனுக்கு சேர வேண்டிய சொத்தை கேட்டா உங்க முன்னாடி வந்து நின்னுருக்கேன். இல்லையே?” என்றாள் அழுகையை கட்டுபடுத்தி. “நீ போலாம். என் நண்பன எங்க இருந்தாலும் நான்...
    அங்க நான் உள்ள போகும்போது நீயும் என்கூட தான வருவ?" என்றாள் பதட்டமாய். "நிச்சயமா நான் உன்கூட தான் இருப்பேன். நான் என் உடம்புக்குள்ள போறதை நீ பார்க்க வேண்டாமா?" என்றான் ஆசையாய். "நீ உயிரோட வர போறதை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு." என்றாள் ஷன்மதி. "ஆனா நான் உன்கூட வந்தாலும் என்னால எதுவும் பண்ண...
    "ஏன் எனக்கென்ன மருதா? என் அகத்தில் குறை ஏதுமுள்ளதோ? இல்ல பிறப்பில் ஏதும் குறை உள்ளதோ? பின் இவ்வாறு எப்படி நடக்க கூடும்?" என்று கனியழகன் மீண்டும் அரற்ற ஆரம்பித்ததும், அவனை நெருங்கி அணைத்து கொண்ட மருதன். "நண்பா! கவலை கொள்ளாதே. உன் சின்னத்திற்கு காரணமானவனை அழிக்காமல் விடமாட்டேன்." என்றான் மருதன். கனியழகன் மௌனமாய் மருதனை பார்க்க, "உன்...
    Episode 28 "எல்லாமே அதிகமாக இருக்கிறது கனி. ஒரே குறை அதனை நல்விழியில் உபயோகப்படுத்தினால் நீ என்னை விட உயர்ந்தவன் ஆவாய்" என்றான் கவிந்தமிழன். "எனக்கிந்த அறிவுரைகள் தேவையில்லை... உன் திறமைகள் வேண்டும் எனக்கு" என்றான் கனியழகன். "அது நீ நினைத்தால் நடந்துவிடுமா என்ன? மேலே ஒருவன்  இருக்கிறான் அவன் நம்மை ஆட்டி வைக்கிறான். அவன் நினைக்க வேண்டும்..."...
    10 "ஹை சூப்பர்! நந்துவும் உங்க தங்கச்சி அகல்யாவும் கல்யாணம் பண்ணிகிட்டாங்களா? அவங்களை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லையே? நந்துவை பத்தி நீங்க எதுவும் சொன்னதே இல்லையே? அப்போ ஏர்போர்ட்ல என்னை பார்த்துருகேன்னா? என்னை அதுக்கு முன்னாடிலர்ந்து காதலிக்கிறியா? எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு. எனக்கு எல்லாத்தையும் சொல்லு ஷ்ரவன்" என்றாள் மூச்சுவிடாமல். "நில்லு நில்லு......
    அடர்ந்த காட்டின் நடுவே இரையை வேட்டையாடும் வேகத்துடன் தன் புரவியில் சிங்கமும் அச்சம் கொள்ளும் வகையில் கம்பிரமாய் விழிகளை மட்டும் சுழற்றி தேடினான் கவிந்தமிழன். சிறு நொடிகள் கழிந்த பின் தன்னை நோக்கி வந்த அம்பை இரண்டென பிளந்தபின்  புன்னகையோடு அவ்விடத்தை நோக்கி சென்றான் கவிந்தமிழன். "எனக்காக தன் உயிரையும் துச்சமென நினைக்கும் என் உயிர் தோழா...
    "நானிருக்கும் பொழுது நீ எப்படி அரியணை ஏற முடியும் கனியழகா?" என்ற குரலில் இருவரும் உறைந்து நின்றனர். மலரிதழ் மகிழ்ச்சியில்... கனியழகன் அதிர்ச்சியில்... "தூரதேசம் செல்ல நேர்ந்ததால் தான் என் பொருட்டு கவியை நாட்டை ஆளவைத்துவிட்டு சென்றேன். இப்பொழுது அவனின் மரண செய்தி கேட்டு ஓடோடி வந்து நிற்கிறேன். நான் இருக்கும் பொழுது நீ எதற்கு ஆளவேண்டும்....
    11 நள்ளிரவு மணி இரண்டை தான்டி இருக்கும். மொபைலின் ஒலி நந்துவை தூக்கத்திலிருந்து எழுப்பிட. ‘இந்த நேரத்துல யார் போன் பண்றாங்க? ஒருவேளை ஷ்ரவனா இருக்குமோ?’ என்று எண்ணியபடி தூக்கக்கலக்கத்தில் போனை எடுத்து பார்க்க அது அடிப்பதை நிறுத்திக்கொண்டது. “நம்பர் தான இருக்கு. யாரா இருக்கும்?” என்று தூக்கத்தில் இருந்து எழுந்து அதே நம்பருக்கு டையல் செய்தான். சுவிச் ஆப்...

    Karaiyum Kaathalan 32

    32 அங்கே நின்றிருந்தது மருதன். அவனை கண்டதும் குருதி கொதித்திட கவிந்தமிழன். "உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் அந்த துரோகியோடு சேர்ந்து கொண்டு எங்கள் அனைவரையும் கொல்ல திட்டமிட்டிருப்பாய்? வயிற்றில் சிசுவை சுமந்திருக்கும் உன் சகோதரியை கூடவா நீ  பார்க்கவில்லை? எவ்வளவு கல்மனம் உனக்கு?  உயிரோடு விடக்கூடாது" என்று தன் வாளினை உயர்த்த தடுத்தது செந்தமிழனின் குரல். "அவன் இல்லை...
    “சொல்லு… என்கிட்டே சொல்ல என்ன தயக்கம் ஷ்ரவன்? நீ என்ன சொன்னாலும் கேப்பேன்டா. தயங்காம சொல்லு” என்றாள் மதி. “நீ இங்க அங்க வேலை பாக்கிறதுக்கு பதில்..” என்று முழுவதும் கூறாமல் இழுத்தான். “அதுக்கு பதில்..?” என்றாள் நெற்றியை சுருக்கி. “அதுக்குபதில் பேசாம நம்ம கம்பனிக்கே வந்துறேன்.” என்று வேகமாய் சொல்லி முடித்தான். “என்ன சொல்ற ஷ்ரவன்? நான்...
    "நண்பா நீ சொல்வதும் சரி தான். ஆனால் அதற்காக நம் திட்டத்தை நிறுத்தக்கூடாது. அது தனியாக நடக்கட்டும்" என்றான் மருதன். சிறிதுநேரம் யோசித்த கனியழகன், "சரி நண்பா. அப்படியே ஆகட்டும்." என்றான். "அப்படியானால் முதல் படியாக, நம் வேலையை பக்கத்து மயிலேனி நாட்டில் ஆரம்பித்துவிடலாம்" என்று சிரித்தான் மருதன். "ஹ்ம்" என்று நண்பனை கட்டிக்கொண்டான் கனியழகன். ****** பஞ்சனையில் நிம்மதியாக உறக்கம்...
    9 “இல்லடா உன்னை நம்பி வேற என் பிசினெசை விட்டுட்டு வந்துட்டேன். ஒழுங்கா பார்த்துபேன்ற கவலை வேற எனக்கு அதிகமா இருக்கு” என்றான் போலியான வருத்தமாய். “ஆமா இவரு பெரிய அம்பானி. இவரு பிசினெஸ் இப்போ நம்பர் ஒன்ல இருக்கு. நான் தான் லாஸ் பண்ணப்போறேன். போடா பக்கி.” என்று திட்டினான் நந்து. “சரி. என் தங்கச்சியை கண்டுபிடிச்சிட்டியா?”...
    என்னதான் கணவனின் கரம் பிடித்து இங்கு வந்துவிட்டாலும் தனக்கிருக்கும் ஒரே சொந்தம் அண்ணன் தானே? இப்போதாவது கோபம் குறைந்திருக்கும் என்று நினைத்து சென்றவள். அவர்களின் பழிவாங்கும் எண்ணம் முழுவதுமாக அடங்கவில்லை என்பதை அவர்களின் உரையாடலில் தெரிந்துகொண்டாள் மலரிதழ். தங்களின் அறையில் ஓயாரமாய் சிறிய மதில் சுவர் மேல் பாதி அமர்ந்தபடி தீவிர யோசனையில் இருப்பவளின் எண்ணத்தை...
    error: Content is protected !!