Advertisement

Episode 29

“ஏன் இப்படி செய்கிறாய் மருதா? நான் உன் உடன்பிறந்தவளின் கணவன் அல்லவா?” என்றான் கவிந்தமிழன்.

“யாரடா கூறியது அவள் என் உடன் பிறந்தவள் என்று? ஏன் தந்தையின் இருபத்தியேழு மனைவிகளில் ஒருத்தியின் மகள் தான் அவள். என் தாய்க்கு மகள் வேண்டும் என்று பெறமுடியாதால் இவளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தத்து எடுத்து கொண்டனர். இல்லையென்றால் இவள் என் அரண்மனையினில் பணிப்பெண்ணாய் இருக்க கூட தகுதியற்றவள்” என்றான் கோபமாய் மருதன்.

“உடன் பிறந்தவள் அல்ல என்றால் அவளுக்கு இப்படி ஒரு அநீதி இழைக்க வேண்டுமா? உன்னை அண்ணனென்று மனதினில் பூஜிப்பவள் மலர். அவளை இப்படி தண்டிக்கலாமா?” என்றான் கவிந்தமிழன்.

“மேலும் அவள் என் நாட்டுக்கு அரசி. அவளை இனி ஒருமுறை தரம் குறைவாக பேசுவதைகூட  என்னால் பொறுத்து கொள்ளமுடியாது. உதிர்க்கும் சொற்களை பார்த்து பேசு மருதா? ஒரு திருமணமான பெண்ணின் விருப்பமில்லாமல் இன்னொரு கயவனின் ஆசைக்கு இணங்க நீ உதவுவது முறையா? அதுவும் உன் தங்கையாக வளர்றக்கப்பட்டவள் அல்லவா?” என்றான் கவிந்தமிழன்.

ஒரு சில நொடிகள் எதுவும் பேசாமல் இருந்த மருதன் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.

“தனக்கு இப்படி அநீதி இழைக்க தன் அண்ணனே துணை நின்றிருக்கிறான் என்று அவள் அறிந்தால் அவளின் மனம் என்ன பாடுபடும்?” என்றான் கவிந்தமிழன்.

வெளியில் இருந்து வந்த காவலாளி, “நாம் இருப்பிடத்தை சுற்றி வளைத்து விட்டார்கள்.” என்றான் பதட்டமாக.

“என்ன? யார்?” என்றான் அதிர்ச்சி கலந்த சினத்துடனும் மருதன்.

“செந்தமிழனாய் இருக்குமோ?” என்றான் சந்தேகமாய்.

“இல்லை அவர் அண்டை நாட்டுக்கு சென்றிருப்பதாக தகவல் ஒற்றர்கள் மூலம் கிடைத்துள்ளது” என்றான் காவலன்.

“அப்படி என்றால் இது யார்?” என்றான் மருதன்.

“இன்னும் சற்று நேரத்தில் நம்மை நெருங்கி விடுவார்கள் என்ற தகவல் கிட்டியுள்ளது. ஏற்கனவே நமது ஆட்கள் அவர்‌களுடன் போரிட்டு கொண்டு இருக்கின்றனர். அவர்களை மேலும் முன்னேறாமல் தடுக்க முயற்சிக்கின்றனர்.” என்றான் காவலன்.

“நீங்கள் அனைவரும் இங்கிருந்து பார்த்துக்கொள்ளுங்கள். நான் இவனை அழைத்து செல்கிறேன்.” என்றவன் கவிந்தமிழனிடம் நெருங்கி “அவ்வளவு எளிதில் உன்னை விட்டுவிடுவேன் என்று நினைத்தாயோ?” என்று மயக்கமுறும் மருந்தை நாசியில் வைத்து மயக்கினான்.

இருவிழிகளும் மூடும் முன்னர் தன் முன் நடக்கும் காட்சிகளை வைத்து தான் நிச்சயமாக பாதுகாக்கபடுவோம் என்று நிம்மதியில் மயங்கினான் கவிந்தமிழன்.

அடுத்து அவன் கண் விழிக்கும் பொழுது மிகப்பெரும் போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.

தன் உடல் சோர்வை பொருட்படுத்தாமல் தன்னவளை காணவேண்டும் என்ற ஆவலில் தானும் களம் இறங்கினான் கவிந்தமிழன்.

அனைவரையும் வீராவேசம் கொண்டு வீழ்த்தி முன்னேற அருகில், “தோழா!” என்ற குரலில் கண்கள் பணித்தது.

“கருவா” என்று இருவரும் தழுவிகொண்டனர்.

“உங்களின் ஊகம் சரியானது. என்னை பின் தொடர சொன்ன நீங்கள் மிக விரைவாக என்னைவிட்டு முன்னேறி விட்டீர்கள். காட்டு தீயில் சிக்கிய உங்களை மீட்க வந்த பொழுது இந்த இருவரும் உங்களை வீரர்களுடன் தூக்கி செல்ல நான் பின் தொடந்து வந்தேன்.

உடனே மீட்க முடியாததால் வீரர்களை திரட்டி திட்டம் தீட்டி உங்களை மீட்க வந்துவிட்டேன் நண்பா” என்றான் கருவா.

“நன்றி தோழா. நாம் இங்கிருந்து விரைந்து செல்லவேண்டும். மற்றதை பிறகு பேசிக்கொள்வோம்” என்று முன்னேறினான் கவிந்தமிழன்.

“சரி தோழா” கருவனும் வேறு திசையில் சென்றான்.

முடிந்தவரை எல்லோரையும் வீழ்த்தி முன்னேறிய கவிந்தமிழன் அவனை நோக்கி வரும் அம்பை கவனிக்க தவறினான்.

அதை சரியான நேரத்தில் தடுத்த கறுவன் மீண்டும் போரிட்டான்.

எல்லோரையும் வீழ்த்தியாயிற்று என்று இருவரும் கிளம்ப, எந்தகிருந்தோ வந்த அம்பு கவிந்தமிழனின் நெஞ்சில் சரியாய் பாய்ந்தது.

“ஹா” என்று சரிந்தான் கவிந்தமிழன்.

“தோழா” என்று புரவியில் இருந்து இறங்கிய கருவன் அவனை நோக்கி ஓட, யார் அம்பை எய்தது என்று முன்னே நோக்கினான் கவிந்தமிழன்.

“நீயா?” என்றான் அதிர்ச்சியில்.

“ஆமாம்… நானே தான் கவி. பராவாயில்லை என்னை மறக்காமல் இருக்கிறாயே?” என்றாள் அவள்.

‘ஏன் இப்…ப…டி செய்…தா…ய்?” என்றான் திணறியபடி கவிந்தமிழன் .

“உன்னை முடியும் வரை என்னை உன் வாழ்க்கை துணையாக ஏற்கும் படி கெஞ்சி மிரட்டி எல்லாம் கேட்டு பார்த்தேன். நீ இசைவதாக இல்லை. அதோடு நில்லாமல் இன்னோருவளை மனைவியாக்கி வாழ்ந்து வந்தாய். இதோ என் வாழ்வில் நான் நினைத்தது கிடைக்காவிட்டால் அதுவேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று நினைப்பவள் நான். அதற்கு நீயும் விதி விளக்கல்ல?..” என்றாள் அவள்.

“நான் இன்னொரு பெண்ணின் கணவன்.” என்றான் கவின்தமிழின்.

“ஆமாம். ஆனால் இப்பொழுது உன் உயிர் பிரியப்போகிறது. கலவை போதாதே உன்னை மட்டும்கொன்று விட்டு நான் இந்த உலகில் உன்னை பிரிந்து என்னால் வாழமுடியாது அதனால் நானும் வருகிறேன். ” தன கருத்தினில் இருந்த வாளை தனக்குள் இறக்கினாள்.

சிரித்தபடி உயிரும் துறந்தாள்.

“மதுரஞ்சினி…” என்று கூவலோடு கவிந்தமிழனும் விழிமூடினான்.

“தோழா” என்று அவனை தூக்கி புரவியில் போட்டவன் காற்றில் கரைவது போல் வேகமெடுத்து தன் இருப்பிடம் செலுத்தினான் கருவன்.

Advertisement