Advertisement

12
தட்டிலிருந்த தாலியை கையில் எடுத்து “கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” என்று கூறிக்கொண்டு மணமகனிடம் நீட்டினார்.
அங்கிருந்த யாரும் எதிர்பார்க்காத நேரம் ஐயருடன் வந்திருந்த இருவரில் ஒருவன் அந்த தாலியை வெடுக்கென பிடுங்கி அகல்யாவின் கழுத்தில் கட்டினான்.
ஏற்கனவே நந்து வரவில்லை என்ற ஏமாற்றத்தில் இருந்தவள் ஒருநொடி என்ன நடக்கிறது என்று ஊகிக்கும் முன் அவள் கழுத்தில் மங்கள நான் ஏறி இருந்தது.
வெளியிருந்து கெட்டிமேளம் சத்தம் கேட்கவும் ‘இப்போ பாரு அவங்க கல்யாணமே முடிஞ்சிருக்கும் எல்லாம் இவர்களால் தான்’ என்று தீட்டியபடி உள்ளே நுழைந்தவன் மணமகளாய் தன் தங்கையும் மணமகனாய் வேறொருவனும் இருக்க அதிர்ந்து போனான்.
‘இங்க என்ன நடக்குது? அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தான கல்யாணம்னு சொன்னாங்க. ஆனா, இங்க அகல்யா கல்யாண பொண்ணா உட்கார்ந்துருக்கா. அப்படினா இவர் சும்மா என்கிட்ட பொய் சொல்லிருக்கார். அவ நந்துவை தான விரும்புறா. அப்புறம் எதுக்கு இங்க மனபெண்ணா உட்க்கார்ந்துருக்கா. எனக்கு முன்னாடியே சொல்லிக்குலாம்ல? ‘ என்று யோசித்தபடி அங்கிருந்தவர்களை ஒரு முறை சுற்றி பார்த்தான்.
அங்கே நந்துவை கண்கள் அடையாளம் கண்டுகொண்டன.
என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் தன் கழுத்தில் யாரென்று தெரியாத ஒருவன் தாலி கட்டியிருக்க, வெறிக்கொண்டவள் போல் பளாரென தன் கரத்தினை இறக்கினாள் அவன் கன்னத்தில்.
“ஆஹ்… எதுக்குடி என்னை அடிச்ச?” என்றான் ஐயராய் வந்திருந்த நந்து.
அவனின் குரலில் அவனை கண்டுகொண்டவள் “நந்து” என்று கண்ணீருடன் சிரித்தபடி அணைத்துக்கொண்டாள்.
“நீ தானடி சொன்ன. உனக்காக காத்திருப்பேன் கண்டிப்பா வான்னு. அதான் வந்துட்டேன். ஆள் கிடைக்கலன்னு ஐயர் வேணும்னாங்க. என் ப்ரென்ட் இந்த கோவில்ல தான் வேலை செய்றான். அவனோட ஹெல்ப்ல இங்க வந்துட்டேன். என் பட்டுகுட்டி கழுத்துல தாலி கட்டிட்டேன். இனி நீ என் பொண்டாட்டி. இப்போ உனக்கு சந்தோஷம் தானே” என்றான் கண்ணடித்து.
‘ஆம்’ என்று தலையசைத்தாள் சந்தோஷத்தில் அகல்யா.
“உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா இப்படி பண்ணிருப்ப? உன்னை..” என்று விஷ்ணு நந்துவை அடிக்க கை ஒங்க, அவர்முன் வந்து நின்றாள் அகல்யா.
“அவர் இப்போ என் புருஷன்.” என்றாள் கோபமாக.
“என்னடி அவன் உன் கழுத்துல தாலி கட்டிடான்ற திமிரா? இந்த கல்யாணத்தையும் என்னால ஏத்துக்க முடியாது. இவனையும ஏத்துக்க முடியாது.” என்று அகல்யாவின் கழுத்தில் இருந்த தாலியை பறிக்க பார்த்தார்.
“என்னோட மாமனார்ன்னு உங்களை சும்மா விடறேன்.” என்று அவர் கையை தட்டிவிட்டவன்.
“இவ என் பொண்டாட்டி. இனி என் வாழ்க்கையோட அரசி. எங்க வீட்டோட இளவரசி. அவளை அடிக்கிற உரிமை யாருக்கும் கிடையாது.” என்று முறைத்தான்.
“மொதல்ல அதுக்கு அவ உன்கூட வரணும் இல்ல. என் பொண்ண உன்கூட அனுப்பி வைக்க முடியாது.” என்று அகல்யாவின் கையை பிடித்து இழுக்க.
“அப்பா! இங்க என்ன நடக்குது? நீங்க என்ன சொல்லி என்னை வரசொன்னிங்க?” என்று முறைத்தான் ஷ்ரவன்.
“டேய் நீ ஏன் இப்ப இப்படி பேசுற? உனக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்லி தான கல்யாணத்துக்கு வரசொன்னேன்” என்றார் வேண்டுமென்றே.
இவர்களின் பேச்சை கண்டு கோபமடைந்த நந்து.
“போதும் உங்க ரெண்டு பேரோட நடிப்பு. ஷ்ரவன் உன்னை என் உயிர் நண்பனா நினைச்சேன். ஆனா நீ என் கூட இருந்தே என் முதுகுல குத்திட்டல்ல? இனி நீ என் நண்பனே இல்லை என்னோட எதிரி.” என்றான் நந்து.
“இல்லடா நந்து. நீ என்னை தப்பா புரிஞ்சிகிட்டு இருக்க.” என்றான் ஷ்ரவன் வருத்தமாய்.
“இப்ப தான்டா உன்னை சரியா புரிஞ்சிகிட்டு இருக்கேன். உனக்காக எவ்ளோ செஞ்சிருப்பேன். உன் தங்கச்சியை நான் விரும்புறேன்றதை உன்னால ஏத்துக்க முடியலைல்ல” என்றான் நந்து.
“இல்ல நந்து. அண்ணனுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.” என்றால் ஆகலையா.
“நீ சும்மா இரு. உனக்கு ஒன்னும் தெரியாது. உனக்கு உங்க அப்பாவும் உங்க அண்ணனும் தான் முக்கியம்னா இங்கயே இருந்துக்க. இல்லன்னா என்கூட வா” என்றான் ஒரே மூச்சாய்.
அவன் ஏதோ தவறான புரிதலில் இருக்கிறான் என்பதை ஊகித்த அகல்யா இப்போழுது எது சொன்னாலும் அவனுக்கு புரியாது.
பொறுமையாக தான் எடுத்து கூற வேண்டும் என்று அமைதியாக இருந்துவிட்டாள் அகல்யா.
“அவ என்ன உன்கூட வரது? நான் விட்டாதானே உன்கூட வருவா” என்றார் விஷ்ணு.
“ஒரு நிமிஷம்” குரல் வந்த திசையை எல்லோரும் பார்த்தனர்.
அங்கே “இவங்க ரெண்டு பேரும் மேஜர். இவங்க ரெண்டு பேரும் விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதை உங்களால தடுக்க முடியாது.” என்றார் காக்கி உடையில் இருந்த காவல்துறை அதிகாரி.
“இவங்களை சேர்ந்து வாழ விடாம தடுக்கறிங்கன்னு உங்க மேல கம்ப்ளைன்ட் வந்துருக்கு. அவங்களை எதுவும் தொல்லை பண்ணாம கிளம்புங்க. இல்ல உங்க மேல கேஸ் போடவேண்டியிருக்கும்” என்றார் அவர்.
எதுவும் பேசமுடியாமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினார் விஷ்ணு.
நந்துவும் ஷ்ரவன் கூற வருவதை கேட்கும் மனநிலையில் இல்லாமல் அகல்யாவை அங்கிருந்து கூட்டி சென்றான்.
“அன்னைக்கு தான் நான் அவங்களை கடைசியா பார்த்தது. அதுக்கப்புறம் அவங்க வீட்டை வித்துட்டு வேற எங்கையோ போய்ட்டாங்க. அவன் கம்பனியும் வித்துட்டு போய்ட்டான். என்கூட இருந்த எல்லா ரிலேஷன்சிப்பையும் நிறுத்திட்டான்.
நானும் தேடாத இடமில்லை.” என்றான் விழிகளில் நீர் கசிய.
“நிச்சயமா நல்லா இருப்பாங்க. நீ கவலை படாத. அவங்களை கண்டுபிடிச்சிடலாம்” என்றாள் ஷன்மதி.
“இப்போ என்னால அவங்களை பார்க்க முடியுமே. அவங்க இருக்க இடத்தை கண்டுபிடிச்சிட்டேன். ஆனா என்னால அவங்கிட்ட பேசமுடியாது.” என்றான் ஷ்ரவன்.
“அப்படியா அவங்க எல்லோரும் எப்படி இருக்காங்க? எங்க இருக்காங்க?” என்றாள் ஷன்மதி.
“நந்துவோட அம்மா ஊர் மதுரை பக்கத்துல ஒரு சின்ன கிராமம். அங்க இருக்காங்க.” என்றான் ஷ்ரவன்.
“அப்படியா? நந்து அண்ணன் இப்போ என்ன பிசினெஸ் பண்றாரு.” என்றாள் ஷன்மதி.
“அவன் அவனோட கம்பனியை விற்கலை. என்கிட்டே அப்படி சொல்லிருக்காங்க. ஆனா அவன் பிசினசை அப்பப்போ வந்து பார்த்துகுறான். அங்கயே விவசாயம் பண்றான். அவனும் என் தங்கச்சியும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. எனக்கு அது போதும்”  என்றான் ஷ்ரவன்.
“இல்ல. எனக்கு அது போதாது ஷ்ருவ்.” என்றாள் ஷன்மதி திடமாய்.
“என்னடா சொல்ற?” என்றான் புரியாமல்.
“ஷ்ருவ். நீ எந்த தப்பும் பண்ணாதப்ப உனக்கு எதுக்கு கெட்டபேரு. நீ தப்பு செய்யலைன்றதை நான் நந்துவுக்கு சொல்ல தான் போறேன். அவங்க இருக்க இடத்துக்கு நாம போகணும்.” என்றாள் ஷன்மதி.
“இல்லடா. வேண்டாம். இப்போ நான் நல்லவன்னு நிருபிச்சி என்ன நடக்க போகுது?” என்றான் ஷ்ரவன்.
“இல்ல என் புருஷன் நல்லவர்னு நிரூபிக்க வேண்டியது என்னோட கடமை. அதோட அது தான் எனக்கு பெருமை. அதனால நாளைக்கு அங்க போறோம். இப்போ எனக்கு ரொம்ப பசிக்குது ஷ்ரவன்” என்றாள் ஷனம்தி.
“சரி. அது தான் உன் விருப்பம்னா. நாம நாளைக்கு கண்டிப்பா போகலாம். ஆனா அதுக்கு முன்னாடி நீ நம்ம ஆபீஸ் பொறுப்பை ஏத்துக்குறேன்னு சொல்லு. “ என்றான் விடாமல்.
“ஷ்ரவன். நான் எப்படி இவ்ளோ பெரிய கம்பனிய பார்த்துக்க முடியும்?” என்றாள் கண்களில் பயத்துடன்.
“நீ எதுக்கு பயப்படற? நான் தான் உன்கூட இருக்கேன்ல? அதுமட்டுமில்ல என் சொத்து மொத்ததுக்கும் நீ மட்டும் தான் சொந்தம். “ என்றான் ஷ்ரவன்.
“என்ன சொல்ற ஷ்ரவன் நான் மட்டுமா?” என்றாள் விழிகள் விரிய மிரட்சியுடன்.
“ஆமா. அது இப்போதைக்கு உனக்கு தெரிய வேணாம். நேரம் வரும் போது நானே உனக்கு சொல்றேன்.” என்றவன் அவளை நெருங்க.
“இப்போ எதுக்கு என் பக்கத்துல வர? எனக்கு பசிக்குது போ. போய் எனக்கு எதாவது  சாப்பிட எடுத்துட்டு வா” என்றாள் வேண்டுமென்றே தந்தி அடிக்கும் உள்ளதோடு.
“சரி போறேன். ஆனா அதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவை…” என்று இழுக்க.
“என்ன ஒரே ஒருமுறை?” என்றாள் பட்டாம்பூச்சியை விழிகள் துடிக்க.
“அது “ என்று இன்னும் நெருங்கி அவளின் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு சிரித்தபடி சென்றான்.
‘என்னை மன்னிச்சிரு மதி. இதெல்லாம் உன்னோட நல்லதுக்கு தான் பண்றேன். நான் திரும்பி உன்கூட வாழ்வேன். அந்த நாள் ரொம்ப தூரத்துல இல்ல… அதுக்கு நான் நந்துவ பார்த்தே ஆகணும்.’ என்று நினைத்தபடி சமையலறை நோக்கி சென்றான் ஷ்ரவன்.         

Advertisement