Advertisement

“ஏன் எனக்கென்ன மருதா? என் அகத்தில் குறை ஏதுமுள்ளதோ? இல்ல பிறப்பில் ஏதும் குறை உள்ளதோ? பின் இவ்வாறு எப்படி நடக்க கூடும்?” என்று கனியழகன் மீண்டும் அரற்ற ஆரம்பித்ததும், அவனை நெருங்கி அணைத்து கொண்ட மருதன்.
“நண்பா! கவலை கொள்ளாதே. உன் சின்னத்திற்கு காரணமானவனை அழிக்காமல் விடமாட்டேன்.” என்றான் மருதன்.
கனியழகன் மௌனமாய் மருதனை பார்க்க,
“உன் வினாவொன்றும் எனக்கு புரிந்திடாமல் இல்லை. ” என்று அவனை பார்க்க.
“பின் என்ன மருதா? நம் நாடென்று கூறிக்கொண்டால் மட்டும் போதுமா? எங்கு சென்றாலும் அவனுக்கு தானே பட்டுக்கம்பளத்தில் வரவேற்பு கிட்டுகின்றது. சிறுவயது முதல் அவனுக்கான இந்த முன்னுரிமை என் நெஞ்சத்தில் வெறுப்பெனும் வேர்கொண்டு ஆழ ஊன்றிவிட்டது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தார் போல்…” என்று முடிக்காமல் மருதனை பார்க்க.    
“என் உயிர் தோழனான உனக்கு சிறுவயது முதலே என் தங்கையை மணமுடிக்க ஆசைகொண்டேன். என் பொருட்டு நீயும் காதல் கொண்டாய். நம் இருவரின் கனவுகளும் பொய்யாகும் வண்ணம் திருமணக்கோலத்தில் வந்து நின்றனர் இருவரும். என்னால் அதை இன்று வரை மறக்க முடியவில்லை கனியழகா. எவ்வளவு துணிச்சல் இருந்தால் என்னிடம் கூறி அனுமதி பெறாமல் என் உடன்பிறந்தவளை மணமுடிதிருப்பான். நீ இருக்க வேண்டிய இடத்தில அவனை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை நண்பா” என்று முடித்தான் மருதன்.
“நீயும் நானும் கனவு கண்டால் போதாது என்பது போலல்லவா உன் தமக்கை அவனை நாடி சென்றாள்? மணமும் கொண்டாள். தன் அழகையும் ஆளுமையும் கொண்டு அவளை என்னிடம் இருந்து பறித்துவிட்ட அவனுக்கு என் கரங்களால் தான் முடிவு” என்றான் நரம்புகள் தெறிக்க கனியழகன்.
“விடு நண்பா! இன்னும் சிறிது காலம் பொறுத்துக்கொள் பின்பு அந்த அரியாசனம் உனக்கே சொந்தம் அதற்கு நான் பொறுப்பு” என்றான் மருதன்.
“ஹ்ம்ம்… இவனை நம்பிக்கொண்டிருந்தால்  இதுவும் கனவாகவே போகப்போகிறது மைத்துனரே. ” என்று உள்ளே வந்தாள் மலரிதழ் சிரித்தபடி.
“ஹ்ம்ம் .. எத்துனை முறை கூறுகிறேன் என்னை மைத்துனன் என்று கூறாதே என்று? கேட்க நாராசமாக உள்ளது.” என்று புகைந்தான் கனியழகன்.
“என் கணவரின் தம்பியை அவ்வாறு தானே அழைக்கவேண்டும் என்று கூறினார்கள்? சரியாக தானே அழைக்கிறேன்?” என்றாள் மலரிதழ்.
“உன்னை யார் இங்க  வரச்சொன்னது? இங்கிருந்து முதலில் வெளியேறு.” என்றான் மருதன்.
“என்ன அண்ணா? உன் தமக்கையை பார்த்தா இப்படி கூறுவது?” என்றாள் மலரிதழ்.
“யார் என் தமக்கை? என்று என்னிடம் அனுமதி பெறாமல் என் எதிரியின் கை பிடித்தாயோ? என்று தமக்கை மான்டுவிட்டாள்.” என்று வெறுப்புடன் கூறினான் மருதன்.
“அண்ணா!” என்றாள் வேதனையாய் பொங்கிவரும் கண்ணீரை அடக்கி.
“போதும் நிறுத்து. எதற்காக இங்கு வந்தாய்?” என்றான் மருதன்.
“மருதா! என்ன ஆயினும் அவள் உன் தங்கை அல்லவா? அவளை கடிந்து கொள்ளாதே. அவளின் மலர்முகம் வாடுவதை பார்.” என்றான் கனியழகன்.
“இது என் அண்ணனுக்கும்  எனக்கும் நடக்கும் விவாதம். இதில் உம்மை யாரும் அழைக்கவில்லை அழையாவிருதாளியாய் நுழையாதே.” என்று கோபமாக கூறினாள் மலரிதழ்.
“மலர்” என்று அவளை அறைய கை ஒங்க, அதை தடுத்து வழிமறித்தான் கவிந்தமிழன்.
“நான் அப்பொழுதே உன்னிடம் கூறினேன் அல்லவா? தேவையில்லாமல் அங்கு செல்லாதே என்று . நீ தான் என் வார்த்தையை மீறி அண்ணனை காண ஆவல்கொண்டு ஓடிவந்ததாய்.” என்று அவளை வலக்கரம் கொண்டு அணைத்து மருதனை முறைத்தான் கவிந்தமிழன் .
“உடன்பிறந்தவளைவிட மற்றவர் பெரியாதாகியதோ உமக்கு?” என்றான் அனல் தெறிக்கும் விழிகளில்.
“நீரே உம்மை முதலில் அக்கேள்வியை கேட்டுக்கொள்ளும். பின்பு என்னை கேட்கலாம்.” என்றான் மருதன் நக்கலாய்.
“மூளையற்ற மடயரை போல் பேசாதீர். இவள் எண்ணில் சரி பாதி. என் மனையாள். இவளுக்கு பின் தான் எல்லோரும். அதற்காக என் உடன்பிறப்புக்கு என்றும் தீங்கு இழைக்க நினைத்தில்லை.”  என்றான் கவிந்தமிழன்.
“என்னிடத்தில் வந்து எம்மையே மடையன் என்கிறாயோ? உனக்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும்?” என்றான் மருதன் கோபக்கனலில் மிதந்து.
“உண்மையை கூறினால் உமேக்கு கோபம் வருகிறதோ? திருமணமான மங்கை ஆசையோடு அன்னை வீடு தேடி வந்தால் இப்படி தான் பேசச்சொல்லி தந்திறிக்கிறார்களோ? எமக்கு தெரியவில்லையே? என் குலவழக்கப்படி வீடு தேடி வரும் என் தமக்கையை மனம்மகிழ செய்து தான் அனுப்புவது தான் வழக்கம். ஹ்ம்ம்.. பிறகு உமக்கு என் துணிவில் ஐயம் உள்ளது போல் தெரிகிறதே? ” என்றான் குரலில் ஏளனம் காட்டி கவிந்தமிழன்.
“எம் குலவழக்கத்தை நீர் ஒன்றும் எனக்கு சொல்லி தரத்தேவையில்லை. வந்த வழியே திரும்பி செல்லும்” என்று முகத்திலடித்தார் போல் கூற அவ்வளவு நேரமும் அமைதியாய் இருந்த மலரிதழ் வெகுண்டெழுந்தாள்.
“போதும் நீயும் உன் குலமும்.. மறந்துவிடாதே நானும் இம்மண்ணின் மைந்தினி தான். என்னை என்ன பேசினாலும் பொறுத்துக்கொள்வேன். என் மணாளனை பற்றி பேசினாள் பேசிய நாவை துண்டிக்க யோசிக்க மாட்டேன்.   உமக்கு எவ்வளவு உரிமையோ அதே எமக்குமுண்டு. என் கணவரை பற்றி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை.கவனத்தில் கொள். வாருங்கள் போகலாம். உம பேச்சை கேட்காதறகு எங்கு இது வேண்டும் தான்.” என்று கவிந்தமிழனை கரம் பற்றி வெளியே இழுத்து சென்றாள்.
அவரகள் போவதை நான்கு விழிகள் கொலைவெறியோடு பார்த்துக்கொண்டு தான் இருந்தன.

Advertisement