Advertisement

“நானிருக்கும் பொழுது நீ எப்படி அரியணை ஏற முடியும் கனியழகா?” என்ற குரலில் இருவரும் உறைந்து நின்றனர்.
மலரிதழ் மகிழ்ச்சியில்… கனியழகன் அதிர்ச்சியில்…
“தூரதேசம் செல்ல நேர்ந்ததால் தான் என் பொருட்டு கவியை நாட்டை ஆளவைத்துவிட்டு சென்றேன். இப்பொழுது அவனின் மரண செய்தி கேட்டு ஓடோடி வந்து நிற்கிறேன். நான் இருக்கும் பொழுது நீ எதற்கு ஆளவேண்டும். நான் பார்த்துகொள்கிறேன். நீ எந்த கவலையும் இல்லாமல் இரு. என்ன  செய்துவிடுகிறார்கள் என்று ஒரு கரம் பார்த்துவிடுகிறேன்.” என்றான் மலரிதழின் அறை வாசலில் கம்பிரமாய் நின்ற செந்தமிழன். கவி கனி இவர்களுக்கு மூத்த அண்ணன்.(இப்போ நந்து)
“மலர் எபப்டியம்மா இருக்கிறாய்?” என்று அவளை நோக்கி வாஞ்சையாய் கரம் விரிக்க.  
“மாமா!” என்று அவனிடம் ஓடிவந்து தஞ்சம் புகுந்தாள் மலரிதழ்.             
“நான் இருக்கிறேனம்மா. எதற்கும் கலங்காதே. என் உயிரை கொடுத்தேனும் எல்லாவற்றையும் சரி செய்கிறேன்.” என்று அவளின் தலையை வருடிவிட்டான்.
கனியழகன் மலரிதழை வெறிகொண்டு முறைக்க.
அவன் பார்வையில் இருந்த அர்த்தத்தை புரிந்துகொண்டவள். செந்தமிழனிடம் இருந்து விலகி, “என்ன பார்க்கிறாய்? உன் போல் நீசன் இல்லை அவர். என் அண்ணனுக்கும் மேலானவர். என் தந்தை ஸ்தானத்தில் வைத்துள்ளேன் அவரை. தந்தையை காணாத குழந்தை வெகுநாள் கழித்து கண்ட தந்தையிடம் ஓடி செல்லும். அப்படி தான் இதுவும். என்னை தாங்க வேண்டிய அண்ணன், போ… என்று  தனித்துவிட்டபின், நானிருக்கிறேன் வாம்மா என்று விரும்பியவரோடு திருமணம் செய்துவைத்து என்னை இவ்வீட்டின் மருமகளாக செய்தவர். இனி எனக்கு எந்த கவலையும் இல்லை.” என்று வெற்றிப்புன்னகை வீசினாள் மலரிதழ்.
‘நாம் ஒன்று நினைத்தால் அது ஒன்று நடக்கிறதே? இவன் இப்பொழுது வருவான் என்று யாருக்கு தெரியும்? எல்லாம் நடக்கும் நேரம் கரடியை போல் நுழைந்துவிட்டான். இனி இவனை துரத்த ஏற்பாடுகள் செய்யவேண்டும். இல்லையென்றால் கவிந்தமிழனை விட அதிபுத்திசாலி இவன். நடந்ததை வெகு விரைவில் கண்டுபிடித்துவிடுவான்.’ என்று தனக்குள் பேசிய கனியழகன்.
“இல்லை அண்ணா! அண்டை நாட்டு அரசர் நம் நாட்டின் மீது போர் தொடுக்க போவதாக செய்தி கேட்டு, அதை பற்றி தான் கூறிக்கொண்டிருந்தேன்.” என்றான் கனியழகன்  மெதுவாக.
“நானும் புரிந்து கொண்டேன் கனி. இவற்றையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்.  நீ செல்.” என்றான் குரலிலும் பார்வையிலும் கடினம் காட்டி செந்தமிழன்.
விருட்டென்று அங்கிருந்து வெளியேறிய கனியழகனை கண்ட இருவரின் கவனமும் சிதறியது பணிப்பெண்ணின் குரலில்.
“அரசி! தாங்கள் மருந்து எடுத்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது” என்று மருந்துகளை நீட்டிய பணிப்பெண்.
“வைத்துவிட்டு நீ செல்” என்றாள் மலரிதழ்.
“மலர்! எதற்காக இது?” என்றான் மருந்துகளை பார்த்து.
அவனை பார்த்து “மாமா! தாங்கள் எப்படி இங்கு?” என்றாள் பாசத்துடன்.
“இல்லையம்மா! ” என்று சுற்றும்முற்றும் பார்த்தான்.
“அவருக்கு எதுவும் தவறாக நடக்கவில்லை அல்லவா?” என்றாள் தவிப்புடன் மலரிதழ்.
சுற்றிமுற்றி தன் கழுகு பார்வையை செலுத்திய செந்தமிழன் மலரிதழின் காதருகே குனிந்து, “என்னை இங்கு வரவைத்ததே அவன் தான். எல்லாவற்றையும் அறிந்து தான் வந்துள்ளேன். உன் வாழ்க்கையை உன்னிடம் சேர்ப்பது என் பொறுப்பு. நீ துயரம் அண்டாமல் இன்பமாக இரு.” என்று புன்னகையுடன் கூற, புன்முறுவல் பூத்து தலையசைத்தாள் மலரிதழ்.  
******
“நம் திட்டம் பாழாகிடும் போல தெரிகிறது.” என்று  கோபமாய் உள்ளே வந்த  கனியழகன்.
“என்ன சொல்கிறாய்?” என்றான் அதிச்சியாய் மருதன்.
“நாம் எதிர்பாரா வண்ணம் என் மூத்தவன் செந்தமிழன் வந்துவிட்டான்.” என்றான் கனியழகன்.
“இது எப்படி நடக்க கூடும்?” என்று மீண்டும் மருதன் வினவினான்.
“ஆம்! எல்லாமே குழப்பமாகிவிடும் போல் உள்ளது. நம் திட்டத்தின்படி மலரை அச்சுறுத்தி கொண்டிருக்கும்போது நேராக உள்ளே வந்துவிட்டான். அதோடு நான் இருக்கும்பொழுது நீ எதற்கு கவலை கொள்கிறாய் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று என்னையும் அனுப்பிவிட்டான்.” என்றான் கனியழகன்.
“இங்கே ஏதாவது முன்னேற்றம் உண்டா? இல்லை. இங்கேயும் நமக்கு சரிவு தானா?” என்றான் கனி.
“இங்கே? ஒன்றுமே இல்லை” என்று எதிரில் சங்கிலியால் கரம் கால்கள் இரண்டையும் காட்டப்பட்டு நிற்கும் கவிந்தமிழனை நோக்கினான் மறுத்தான்.
“அடேய் கவி! ஏனடா உதை வாங்கி சாகிறாய்? நான் கேட்டதை கேட்டவற்றை சொல்லிவிட்டு போகலாம் அல்லவா?” என்றான் கனியழகன் கவின்தமிழனின் விழிகளை நேராய் நோக்கியபடி.
அவனின் விழிகளை இரு நொடி உற்று நோக்கிய கவிந்தமிழன், மெல்ல சிரித்து, “கனி மிகுந்த உணர்ச்சிவசப்படாதே! அது உடலுக்கும் உன் உயிருக்கும் ஆபத்து . உனக்கான மருந்தை நான் கொடுக்கிறேன்” என்றான் கவிந்தமிழன்.
அவனின்  வார்த்தைகளில் மிகுந்த கோபம் கொண்ட கனியழகன் ஓங்கி ஒரு அரை விட்டான் கவிந்தமிழன் கன்னத்தில்.
“இங்கே அந்த திறமைகளை பற்றி நான் கேட்டால்? நீ அதே திறமைகளை வைத்து எனக்கு மருத்துவம் கூறுகிறாயா? இறுதியாக கேட்கிறேன். எனக்கு அந்த திறமைகளின் ரகசியங்களை போதிக்க முடியுமா முடியாதா? ” என்றான் கனியழகன்.
“முடியாது” என்றான் திண்ணமாக கவிந்தமிழன்.
  “ஏன் எனக்கென்ன குறை? உன்னை போல தானே நானும் இருக்கிறேன்? என்னை விட நீ ஓன்றும் நாள் கணக்கில், மாதாக்கணக்கில் வருட கணக்கில் மூத்தவன் அல்லவே? வெறும் மூன்று நாழிகை முன்னாள் பிறந்தால் மூத்தவன் ஆகிவிடுமா?” என்றான் கனியழகன்.               

Advertisement