Advertisement

“அண்ணா! இங்க வாங்க. உங்க கைய காட்டுங்க” என்று நந்துவின் கரத்தினை இழுத்து அருகினில் அமரவைத்தாள்.
“என்னை ஏன் பார்க்கிறிங்க? உங்க பிரென்ட் எதிர்ல தான் இருக்கார். அவரை பார்க்க போறீங்க. சோ கண்ணை மூடிக்கோங்க” என்றாள் ஷன்மதி.
“சரி ஷன்மதி” என்று தன் பதட்டமான நெஞ்சோடு விழிகளை மூடி  நடுங்கும் கரங்களை  நீட்ட அவனின் கரங்களை எடுத்து ஷ்ரவனின் கரங்களில் வைத்தாள் ஷன்மதி.
ஜொலிக்கும் ஒளியில் ஷரவன் நந்துவின் விழிகளுக்கு விருந்தாக தோன்றினான்.
“அண்ணா! உங்க ஷ்ரவன்… கண்ணை திறந்து பாருங்க” என்றாள் மகிழ்ச்சியோடு ஷன்மதி.
விழிகளை திறந்து பார்த்தவன்.
“ஷ்ரவா!” என்று கண்ணீரோடு அவனை கட்டிப்பிடிக்க முயல முடியாமல் போயிற்று.      
“என்ன?” என்று தடுமாற்றமாய் நந்து கேட்க.
“நான் நிழல் தான் நந்து நிஜம் இல்ல.” என்று சிரித்தான் ஷ்ரவன்.
“அபப்டின்னா?” என்றான் புரியாமல் நந்து 
“அப்படின்னா…” என்று நந்துவின் கரங்களை மெதுவாய் தடவியபடி, “நான் வெறும் ஆத்மா தான். நான் உங்களை போல் உயிரோடு உடல்கொண்டு வரனும்னா அது இப்போ மதிகிட்டயும் உன்கிட்டயும் தான் இருக்கு.” என்றான் ஷ்ரவன்.
ஷ்ரவன் கூறியதை  அதிர்ச்சியாய் கேட்ட மதி.
“எ…ன்…ன… சொல்…றிங்…க…?” என்றாள் திக்கிக்கொண்டு.
“ஆமா மதிம்மா. உன்னால மட்டும் தான் இப்போ என்னை உன்கிட்ட கொண்டு வரமுடியும்.” என்றான் கரகரத்த குரலில்.
“அண்ணா!” என்றாள் அதுவரை அமைதியாய் இருந்த அகல்யா.
“நந்து… உனக்கு அண்ணன் தெரியராறா? அப்போ எனக்கு ஏன் தெரியலை?” என்றாள் அகல்யா வழியும் கண்ணீரை துடைக்காமல் ஏக்கமாய்.
“ஏன் ஷ்ரவா? அகல்யா உன் தங்கச்சி தான? அவளால உன்னை பார்க்க முடியாதா?” என்றான் நந்து  வருத்தமாய்.
“இல்ல நந்து. உண்மை என்னன்னா அகல்யா என் உடன்பிறந்த தங்கையாய்  இருந்தால் என்னை பார்க்க முடியும்” என்றான் ஷ்ரவன்.
“அப்படின்னா அகல்யா..???” என்றனர் ஷன்மதியும் நந்துவும் ஒரே நேரத்தில்.
“அகல்யா என் உடன்பிறந்தவ கிடையாது. நான் அவகூட அண்ணனா வளர்ந்தேன். அவளோ தான்.” என்றான் ஷ்ரவன் வேதனையை மறைத்து. 
“என்னடா சொல்ற? கொஞ்சம் புரியறமாதிரி சொல்லு?” என்றான் நந்து.
“நந்து உண்மை என்னன்னா? நான் அகல்யா அம்மாவோட அக்கா பையன்.” என்றான் ஷ்ரவன்.
“எனக்கு தலையே சுத்துது. என்னன்னு விவரமா  சொல்லுங்க” என்றாள் ஷன்மதி.
“மதிம்மா… எங்க அம்மா அப்பாக்கு நான் மட்டும் இல்ல நாங்க ரெட்டையர்கள் பிறந்தோம். எங்க வாழ்க்கை ரொம்ப இனிமையா தான் இருந்தது. என்னுடய இரண்டாவது பிறந்தநாள்  வரை எல்லாமே சரியாதான் போச்சு.” என்றவன் விழிகளில் வழியும் கண்ணீரை சுண்டிவிட்டு தொடர்ந்தான்.
“எங்களுடைய பிறந்தநாள் விழாவை கொண்டாடறதுக்கு அம்மா அப்பா நாங்க எல்லோரும் பெர்த்டே பார்ட்டி நடக்கற இடத்துக்கு கார்ல போயிட்டு இருந்தப்ப, எங்க வண்டி மேல ஒரு ட்ரக் மோதி அந்த இடத்துலயே என்னை தவிர எல்லோரும் இறந்துட்டாங்க. கார்ல தூக்கி வீசப்பட்டதால நான் மட்டும் காயங்களோட உயிர்பிழைச்சேன்.” என்றான் ஷ்ரவன்.
“அப்போ… இப்போ உன்னோட அப்பா அம்மாவா இருக்கிறவங்க?” என்றான் நந்து.
“அவங்க அப்பா அம்மா இறந்தப்புறம் என்னை தூக்கிட்டு வந்துட்டாங்க. வெளிய எல்லாருக்கும் எங்க குடும்பம் மொத்தமும் இறந்துட்டாங்கன்னு சொல்லிட்டாங்க.” என்றான் ஷ்ரவன்.
“ஏன்டா?” என்றான் நந்து.
“ஏன்னா எங்க கார்மேல மோதின ட்ரக் எதேட்ச்சையா மோதினது இல்ல. அப்பாவோட பிசினெஸ் வளர்ச்சியை கண்டு பொறாமை பட்டவங்க செஞ்ச வேலை. அவங்ககிட்ட இருந்து என்னை காப்பாத்த எங்க சித்தி செஞ்ச வேலை” என்றான் ஷ்ரவன்.
“அப்போ இப்ப இவங்க வச்சிருக்க சொத்து எல்லாம்..?” என்றான் வாயில் கை வைத்து நம்பாமல்.
“எல்லாம் என் பேர்ல இருக்கிற சொத்துதான்.” என்றான்  ஷ்ரவன் வேதனையாய் சிரித்து.
“ஐயோ… இதெல்லாம் உண்மைதானா..?? ” என்றாள்  ஷன்மதி.
“உனக்கு சின்ன வயசுலேர்ந்தே இதெல்லாம் தெரியுமா?” என்றான் நந்து.
“இல்ல… எங்க சித்தி தனக்கு மகன் இல்லைன்ற பாசத்துல கூட்டிட்டு வந்துட்டாங்க. ஆனா சித்தப்பாக்கு என்னைக்கு இருந்தாலும் இவன் இந்த சொத்தை கேட்பாங்கற உண்மை உணர்ந்து. என் மேல பகையா வளர்ந்துருச்சு. அதனால என்னைக்கும் அவர் என்னை அவர் புள்ளையா மனசில கூட நினைச்சது இல்ல. எனக்கு இதெல்லாம் தெரியாது.  ஒரு பெத்த அப்பா  எப்படி பொண்ணுகிட்ட மட்டும் நல்லா இருக்கார். என்னைமட்டும் பிடிக்காம போகுதேன்னு வருத்தப்பட்டிருக்கேன்.” என்றான் ஷ்ரவன்.
“ஆனா இதெல்லாம் எதனாலன்னு ஒரு நாள் எனக்கு தெரிய வந்துச்சு. அன்னைக்கு என் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுச்சு.” என்றான் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல்.
“அன்னைக்கு உங்க வீட்டுல இருந்துட்டு லேட்டா வந்தேன். எங்க அப்பா பார்த்தா திட்டிருவாரோன்னு வேகமா என் ரூமுக்கு போயிட்டு இருக்கும் போது வழில இவங்க பேச்சு என்னை நிறுத்தியது.
அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க.
“எதுக்கு இப்போ நம்ம புள்ளைய எப்போ பாரு கறிச்சு கொட்டிடே இருக்கிங்க?” என்றார் ஷ்ரவனின் தாய்.
‘அம்மான்னா அமமா தான்.” என்று தனக்குள் முனகியபடி ஒரு அடி எடுத்து வைக்க முற்பட.
“ஹே என்னடி சும்மா சும்மா நம்ம பையன் நம்ம பையன்னு சொல்ற?  இவன்  உங்கக்கா பையன். எனக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான். எனக்கு அவனை சுத்தமா பிடிக்காது. உங்க அக்காவும் மாமாவும் உயிரோட இருக்கும் போது என்னை எவ்ளோ தரக்குறைவா பேசிருப்பாங்க? அது எல்லாத்தையும் மறக்க மாட்டேன். அப்புறம் ஏன் அவனை இந்த வீட்ல வச்சிருக்கேன்னு பார்க்குறியா? ” என்றார் அதிர்ச்சியாய் சிலையென உறைந்து நிற்கும் மனைவியை பார்த்து.
“எல்லாம் அந்த சொத்துக்காக தான்.” என்று சிரித்தார் அப்பா.
“அவங்க என்னைக்கும் உங்களை குறைச்சு சொன்னதே கிடையாது. நல்ல உழைப்பாளி நல்லா உழைச்சா இன்னும் முன்னேறலாம்னு தான மாமா சொன்னார். அதுக்கு தேவையான பணத்தை நான் கொடுக்கிறேன்னு சொன்னார். நீங்க தான் அவங்க பணம் அவங்களோட இருக்கட்டும்னு சொன்னிங்க. என்னால சொந்தமா உழைச்சு முன்னேற முடியும்னு சொன்னப்ப உங்க வீட்டுகாரர் உண்மையா ரொம்ப நல்லவர். அவரால கடுமையா உழைக்கமுடியும்னு என்கிட்டே தனியா சொன்னார் மாமா” என்றார் அம்மா.    
தன் மனைவி தன்னை முறைப்பதை கண்டு, “ஏய்! என்னை உடனே வில்லன் மாதிரி பார்க்காத. நான் அந்த சொத்துக்காகன்னு சொன்னது. ஏற்கனவே அவங்க அப்பா அம்மாவை கொன்னுட்டாங்க. இவன் சின்ன புள்ளைன்னு எவனாவது இவன் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தினா என்ன பண்றது? இவன் பெரியவனாகற  வரைக்கும் நான் இப்படி தான் கடுமையா இருப்பேன். இவன் ஒரு நிலைமைக்கு வந்தப்புறம் இந்த சொத்தை இவன்கிட்டையே கொடுத்திருவேன். புரியுதா? எனக்கு யாரோட சொத்தும் தேவையில்ல.” என்றார்.
அதுக்கப்புறம் தனியா எனக்கு நேரம் கிடைச்சப்ப சித்திகிட்ட எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுகிட்டேன். 
ஆனா சித்தி இந்த விஷயம் உனக்கு தெரியும்னு யார்கிட்டையும் சொல்லக்கூடாது. எப்பவும் போல தான் இருக்கணும்னு சொன்னாங்க.
“சரின்னு அதுக்கப்புறம் நானும் அதை பெருசா எடுத்துக்கலை.  சொத்துக்காகன்னு சொன்னாலும் அவருக்கு என்மேல ஒரு மறைமுக பாசம் இருந்துக்சு. வெறுப்புன்ற போர்வைக்குள்ள நான் ஒரு நல்ல மகனா வளர எனக்கு உதவி செஞ்சார்.” என்றான் கண்ணீரை துடைத்து.  
“அப்புறம் ஏன்டா நானா உதவி செய்யும் போது எதுவும் சொல்லாம வாங்கிகிட்ட?” என்றான் நந்து.
“நீ என் பிரென்ட். என்னோட நிலைமைய பார்த்து எனக்கு ஒரு சகோதரனா உதவின. எனக்கும் என்னோட சொந்த உழைப்புல உயரனும்னு நினைச்சேன். அதான். அதுவுமில்லாம என் சித்தப்பா கிட்ட தான சொத்து இருக்கு அவர் அந்த  சொத்தை பத்திரமா பாதுகாத்து இன்னும் நிறைய சம்பாரிச்சிருக்கார்.” என்று சிரித்தான் ஷ்ரவன்.
“ஷ்ரவா.. நீ ரொம்ப க்ரேட் டா” என்று தன் நண்பனை ஆர்ததுழுவிக்கொண்டான் நந்து.
               .

Advertisement