நான் என்பதே நாம் தானடி
ஆனாலும் 'எவற்றையும்., எதையும் தன் மனதில் ஏற்றுக் கொள்ளக் கூடாது., தன்னை நிதானித்து கொள்ளவேண்டும் இப்பொழுது நாம் படிப்பை முடிப்பது முக்கியம் என மனதுக்குள் தினமும் உரு போட்டுக் கொண்டு தான் இருக்கிறாள்.
ஆனாலும் மாத்திரையின் தாக்கமும் நினைவுகள் வந்த அதிர்வின் வலியும் இன்னும் அவளை விட்டுப் போகவில்லை., அதை எப்படி மற்றவர்களுக்கு சொல்வது...
19
பெங்களூர் க்கு வந்த பின்பு அவர்களுக்கு நாட்களை பிடித்து தள்ளுவது கடினமாக இருந்தது போலவே தோன்றியது.,
ஒவ்வொரு நாளும் விடியலில் அவரவர் வேலையை செய்து கொண்டாலும்., ஏனோ மனம் முழுவதும் அவள் நினைப்போடு இருந்தது.,
திலகவதியும் 'தன் மனதில் இப்படி ஒரு நினைப்பு இருப்பதை வெளியே காட்டிக் கொண்டாள் சரவணன் நிச்சயமாக திட்டுவான்'...
பின்பு சரவணன் அருகில் வந்தவன் இப்போது 'அவள் அம்மு இல்லை மீரா' என்பதை உணர்ந்தவன்., சற்று தள்ளி நின்றே "உங்க ஹெல்த் பற்றி மட்டும் யோசிங்க., வேற எதை பத்தியும் யோசிச்சி மனச குழப்பாதீங்க"., என்று சொன்னான்.,
அவனை நிமிர்ந்து பார்க்காமல் தலையை மட்டும் ஆட்டினாள்.,
பின் வந்த நர்ஸ் எடுக்கவேண்டிய டெஸ்ட்களை பற்றி சொன்னார்.,
...
18
மருத்துவமனையில் தூக்க மருந்தின் வீரியத்தில் தூங்கிக் கொண்டிருந்தவளை சுற்றி அத்தனை பேரும் நின்று பார்த்து விட்டே நகர்ந்து சென்றனர்.,
அவர்கள் வீட்டினரையும் அவளையும் சற்று நேரம் பார்த்துக் கொண்டே இருந்தவன்., பெருமூச்சுடன் அங்கிருந்து முதல் ஆளாக வெளியேறினான்.,
மற்றவர்கள் வெளியே வரும் ஹாஸ்பிடல் காரிடரில் நின்ற சரவணன் மனதிற்குள் தெளிவான முடிவு எடுத்திருந்தான்.
...
அப்போதும் "எனக்கு மனசு பதறுது., நான் முன்னாடியே உன்ன கல்யாணம் பண்ணிக்க ன்னு சொன்னேன் இல்ல., பேசாம அவளையே கல்யாணம் பண்ணியிருந்தா நாம எதுக்கும் பயப்பட வேணாம்னு சொன்னேன்., நீ தான் அது இதுன்னு சொல்லிட்ட"., என்றார்.,
" அம்மா அப்படி சொல்லாதீங்க மா., அம்மு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் ன்னு இல்ல., அம்முவ...
17
நாட்கள் கொஞ்சம் வேகமாக நகர்வது போல் இருந்தாலும்., அவர்களைப் பொறுத்தவரை எப்போதும் உள்ளது மாறாமல் நிதானமாக நகர்ந்து கொண்டிருந்தது.,
இப்பொழுதெல்லாம் அம்மு அவளறியாமல் சில காரியங்களைச் செய்யத் துவங்கி இருக்கிறாள்.
எப்போதும் இருப்பது போல தெரிந்தாலும்., சில நேரங்களில் குழப்பமான மனநிலையில் தலையை பிடித்தபடி அமர்ந்திருப்பாள்.,
பின்பு நாட்கள் சாதாரணமாக இப்படியே போய்க்...
"அழகா இருக்கடா தங்கம்"., என்று கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர்., "போவோம் வா" என்று அவளை அழைத்து அவளை முன்னே விட்டு பின்னே நடந்து வந்தார்.,
வெளியே வரவும் அவளை முதல் முதலாகப் புடவையில் பார்க்கும் சரவணன் தான் சற்று சுற்றுச்சூழலை மறந்து நின்றது போல் நின்றவன்., பின்பு தன் தலையை உலுக்கிக் கொண்டு...
16
மாலை நேரம் எப்போதும் போல அன்று சரவணன் வந்த பிறகு பாடல் பாட வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருந்ததில்., திலகவதி அன்று பாடலை செலக்ட் செய்து கொடுத்திருந்தார்.
அத்தை சொன்ன பாடலை கேட்டுக் கொண்டிருந்தால்., அது ஒரு பழைய பாடல் அதை யூ ட்யூப் ல் பார்க்கவும் செய்திருந்ததால்., அதையே யோசித்து அதை...
வேறு எதுவும் சொல்லாமல் அவர்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு "ரொம்ப ரிலேஷனா அத்தை இவங்க எல்லாம்"., என்று மீண்டும் கேட்டாள்.,
"ஆமா டா"., என்று சொன்னார்.
"உம்ம் அப்ப அடிக்கடி பார்த்திருக்கோமோ"., என்று அவர் சொன்னதையே திருப்பி கேட்டாள்.
"ஆமாண்டா" என்று அவரும் சொன்னார்.
"அப்ப ஓகே" என்று சொன்னாள்.
"ஏன்டாமா".,...
15
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இரண்டு நாட்கள் என்னவோ போல் இருந்தவள்., குழப்பமா இருக்கு என்று அடிக்கடி திலகவதி யிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்., பின்பு சாதாரணமாக மாறிப் போனாள்.
அவளுக்கு தான் மறந்துவிடுமோ அந்த எண்ணத்தோடு பயத்தில் அமைதியாக இருந்து கொண்டாள்.
இப்படியே இரண்டு நாட்கள் செல்ல அவளுக்கு ஓவிய வகுப்பிற்கு அழைத்து சென்றாலும்., வீட்டில்...
14
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை
ஆழ்ந்த குரல் அவன் காதுக்குள் இன்னும் ஒலிப்பது போன்ற பிரமை.,
இதை எப்படி சொல்வது என்று அவனுக்கு புரியவில்லை., அனைத்து பாடல்களுமே கேட்டு முடித்திருந்தான்., ...
ஒருவனின் ஆசைக்காக அத்தனை பேரின் வேண்டுதல்களும் ஆசைகளும் நிறைவேறாமல் போவது எந்த விதத்திலும் நியாயமில்லை., என்று நியாயவாதியாக யோசித்த திலகவதி.,
'தன் மகனை மெதுமெதுவாக இதிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும்' என்று நினைத்துக் கொண்டார்.
அவனுடைய பாசமும் அன்பும் அவருக்கு புரிந்தது தான்., அவன் வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும்., தன் மகனின்...
" அவ ரொம்ப இன்ட்ரஸ்ட் ஆன வேலையில இருக்கிறா., நீ சொல்லு"., என்று சொன்னார்.
"இல்லம்மா எல்லாரும் அவளை பார்க்கணும் ன்னு., அவளுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க"., என்று சொன்னான்.
"இருடா அம்மு ட்ட கொண்டு போறேன்" என்று போனை எடுத்துக் கொண்டு செல்ல., அவர்களது வீடு நன்றாக மற்றவர்களின் பார்வைக்கு தெரிந்தது.,
அவர்களது...
13
சென்னை வந்து இறங்கியவன் தெரிந்தவர்கள் மூலம் காரை ஏற்பாடு செய்து கொண்டு அம்முவின் கல்லூரி என்று கிடைத்த விலாசத்திற்கு வந்து சேர்ந்தான்.,
வந்தவனிடம் வாசலிலே எதற்கு ஏன் என்று கேட்ட பின்பே கல்லூரி முதல்வரை பார்க்க வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லிக் கொண்டு உள்ளே வந்து சேர்ந்தான்.,
விசிட்டிங் கார்ட் ஐ கொடுத்து அனுப்பி...
"உனக்கு இது ஒரு சாக்கு"., என்று சொல்லிக் கொண்டவருக்கு மகனின் மனம் லேசாக புரிய தான் செய்தது., ஆனாலும் என்ன செய்ய முடியும் சரி விசாரிப்போம் என்று நினைத்துக் கொண்டார்..
அதுபோலவே சரியாக இரவு உணவு உண்டு கொண்டிருக்கும் போது அழைப்பு வர., எடுத்து காதில் வைத்தவன் "சொல்லுங்க மேனேஜர் சார்"., என்று கேட்டான்.
...
12
அலுவலகத்திற்கு வந்தவனுக்கு மனம் முழுவதும் கிட்டத்தட்ட இந்த ஒரு மாதங்களில் நடந்தவைகளை அசை போட்டுக் கொண்டிருந்தது.,
தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என பி ஏ விடம் சொன்னவன் அப்படியே அமர்ந்துவிட்டான்.,
அம்மு கையில் கிடைத்த நாளிலிருந்து., அவள் தங்கள் வீட்டுக்கு ஒரு மாதங்கள் ஓடிவிட்டது., ஆனால் ஏதோ நேற்று தான் நடந்தது...
"இப்போ உங்களுக்கு கிடைச்ச விஷயம்., மண்சரிவு., மண் சரிந்து பஸ் சரிஞ்சது ன்னு சொல்லுறாங்களே தவிர ஃபுல் டீடெயில் அந்த பொண்ணால சொல்ல முடியல"., என்று சொன்னார்.
மற்றவர்களும் 'ஆமா அப்படித்தான்' என்று நினைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை., எப்படியோ அவள் நினைவு வந்துவிடும் என்று நினைக்க.., அவள் மீண்டும் பயந்து...
11
மருத்துவமனையில் சோதனை அறைக்கு சென்றவள்., சற்று பயந்தது போலவே இருந்தாள்.
அவளை சோதனை அறையின் படுக்கையில் அமர வைக்க.., அப்போதும் சரவணன் கையை பிடித்துக்கொண்டு தான் ஏறி அமர்ந்தாள்.,
டாக்டர் "அம்மு படுத்துக்கோ"., என்று சொன்னார்.
அவளோ பயந்து போய் திலகவதியை பார்த்தாள்., திலகவதியோ "ஒன்னும் இல்லடா., அத்தை பக்கத்துல தானே...
"இங்க வந்த முதல் நாளே அவளை புக்கை எடுத்து படின்னு சொன்னா இன்னும் பரிட்சைக்கு படிக்கிற பிள்ளை மாதிரி அவ பீல் பண்ணக்கூடாது இல்ல., அதனால தான் சொல்லல"., என்று சொன்னார்.,
அவளும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தவள்., "நான் இங்க வந்தது முதல் நாள் தானா" என்று கேட்டாள்.
அவரோ., 'ஐயோ வாய் விட்டு...
10
பெங்களூர் வந்து சேர்ந்தவளை வீட்டில் நல்லபடியாக பார்த்துக் கொண்டனர்.,
அவள் உடையை மாற்றியவுடன் அப்படியே படுத்து தூங்கி விட்டாள்., வந்த அவள் தூங்குவதைப் பார்த்து விட்டு அறையில் லேசாக ஏசி வைத்து கதவை மெதுவாக சாத்தி வைத்தவர்., வீட்டில் பத்து நாள் இல்லாததற்கு சேர்த்து வீடு எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விட்டு...