Advertisement

 

வேறு எதுவும் சொல்லாமல் அவர்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டுரொம்ப ரிலேஷனா அத்தை இவங்க எல்லாம்“., என்று மீண்டும் கேட்டாள்.,

      “ஆமா டா“.,  என்று சொன்னார்.

       “உம்ம் அப்ப அடிக்கடி பார்த்திருக்கோமோ“.,  என்று அவர் சொன்னதையே திருப்பி கேட்டாள்.

     “ஆமாண்டாஎன்று அவரும் சொன்னார்.

        “அப்ப ஓகேஎன்று சொன்னாள்.

       “ஏன்டாமா“., என்று திலகவதி கேட்டார்.

       அவளும்இல்ல இவங்களை.,  நான் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு., அதனாலதான் கேட்டேன்“., என்று சொன்னவள்.

      அவள் மீண்டும் ஒவ்வொருவராக பார்த்தவள்.,  லேசாக தலையை பிடித்தபடி மீண்டும் தலையை உதறிக் கொண்டாள்.

       “என்னடா செய்துஎன்று திலகவதி கேட்டார்.

      “எனக்கு ஒரே குழப்பமா இருக்குஎன்றாள்.,

      “இவங்களை எல்லாரையுமே எங்கேயோ பார்த்து இருக்கேன்., நல்ல பார்த்து இருக்கேன்“., என்று சொன்னாள்.

        “நம்ம சொந்தம் தான் டா., அதனால தான் உனக்கு அப்படி தெரியுது“.,  என்று சொன்னார்.

          ம்ம்ம் ம்ம்ம் என்று சொல்லி விட்டு டைனிங் டேபிளுக்கு சென்றாள்.,

          அங்கு அவள் கிளாசில் பாதியில் விட்ட மீதி படத்தை வரைய அமர்ந்துவிட்டாள்.,  இது ஏற்கனவே திலகவதி பழக்கியிருந்த பழக்கம்.,

       உனக்கு குழப்பம் வருகிறது என்றால் அந்த நேரத்தில் உனக்கு பிடித்த ஏதாவது ஒரு வேலையைச் செய்யத் தொடங்கி விட்டால் அந்தக் குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும் என்று சொல்லிக் கொடுத்திருந்தார்.,

     அதையே பிடித்துக்கொண்டு அங்கு போய் அமர்ந்துவிட்டாள்., அதைப் பற்றி சொல்லி சரவணன் பேசிக் கொண்டிருக்க.,  “இப்பொழுது அவளுக்கு அதிகமான குழப்பம் வந்து இருக்கிறது.,  அதனால் தான் எதுவும் பேசாமல் போய்விட்டாள்“., என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

             அன்றும் மதிய உணவு அனைவருக்கும் அவர்கள் வீட்டிலேயே தயாராகியது.,  உணவு நேரத்தில் சரவணன் அருகில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருக்க.,  அவளுக்கு என வைத்த சில உணவுகள் பிடிக்கவில்லை என்று அவள் தட்டிலிருந்து எடுத்து எடுத்து சரவணனிடம் வைத்தாள்.

        சரவணன் தான்அம்மு எல்லாத்தையும் சாப்பிடணும் சொல்லியிருக்கேன்ல.,   சாப்பிட்டா சாக்லேட் வாங்கி தருவேன்“., என்று சொன்னான்.

        ” எனக்கு அது பிடிக்காது“., என்று அவனிடம் விவாதம் செய்து கொண்டிருந்தாள்.

      வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு தான் இவளுக்கு நினைவுகளை எப்பொழுது கடவுள் திருப்பிக் கொடுப்பான் என்று தோன்றியது.,

          ஆனாலும் நல்லவர்கள் கையில் கிடைக்கப் போய் அவள் பாதுகாப்பாக இருக்கிறாள்., என்ற மன நிம்மதியும் இருந்தது., உணவு உண்டு முடித்த பின்பு தான் அவர்கள் அம்மா செய்து கொண்டு வந்திருந்த சில ஸ்வீட் காரம்.,  அவளுக்கு பிடித்த வகைகளை எடுத்து வைக்க.,

         அதை ருசி பார்த்தவள்., அதை வாயில் போட்டு  கண்ணை மூடி கொண்டு கொண்டிருந்தாள்.,

      ‌ “அத்தை இந்த ஸ்வீட் எங்கே வாங்கினீங்க“.,  என்றாள்.

      “ஏன்டாஎன்று கேட்டார்.

       “இல்ல இந்த ஸ்வீட் இதுக்கு முன்னாடி சாப்பிட்டு இருக்கேன்.,  நீங்க எனக்கு இதுக்கு முன்னாடி வாங்கி தந்து இருக்கீங்களா“., என்று கேட்டாள்.

       “ஆமாடா உனக்கு பிடிச்சது தான்.,   உனக்காக செஞ்சது தான்“., என்று சொன்னார்.,

      “உம்ம் அப்ப சரி“.,  என்று மீண்டும் சாப்பிடத் துவங்கினாள்.,

       அப்போது அங்கிருந்த அவளுக்கு பிடித்த லாவண்டர் கலர் டிரஸை பார்த்தவள்., அதை எடுத்து பார்த்தாள்.,

      ” அத்தை அழகா இருக்குஎன்றாள்.

       “உனக்கு பிடிக்கும் இந்த கலர்“., என்று திலகவதி சொன்னார்.

      “எனக்கு இந்த கலர் பிடிக்குமா“.,  என்று கேட்டவள்., “அழகா இருக்கு ரொம்ப அழகா இருக்கு“., என்று சொன்னாள்.

        “உனக்கு தாண்டாஎன்று சொன்னார்.,

     “நிஜமாகவே  இந்த கலர் பிடிக்குமா“., என்று மீண்டும் கேட்டாள்.,

   “ஆமா டா., உனக்கு இந்த கலர் ரொம்ப பிடிக்கும்“., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

       “ அப்படியா“.,  என்று கேட்டுக் கொண்டவள்., சற்று குழப்பத்திற்கு செல்வதை கண்டவர்கள் அதை பற்றி பேச வேண்டாம் என அவசர அவசரமாக அனைத்தையும் அங்கிருந்து இடம் மாற்றினர்.,

       சரவணன் தான் அவள் குழப்பத்தை போக்கும் பொருட்டு.,  வேறு பேச்சுக்கு தாவினான்.

        “உனக்கு நல்ல பாட வந்துருச்சு தானே.,  இப்போ என்ன பண்ற  ஒரு சின்ன பாட்டு பாடுருயாஎன்று கேட்டான்.

      “வேண்டாம் எனக்கு இப்ப பாடுற மூடே இல்லை“., என்று சொல்லிக் கொண்டிருந்தவள்., “நான் நைட் எப்பவும் போல பாடுறேன்., இன்னிக்கு இப்ப வேண்டாம்“., என்று சொன்னாள்.

             திலகவதி தான் அவளது மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வந்தார்., 

     “சாப்பிட்ட உடனே எவ்வளவு மாத்திரை தர்றீங்க அத்தை“.,  என்று சொன்னாள்.

       ” டாக்டர் அன்னைக்கு என்னடா சொன்னாங்க.,  இந்த ஒரு தடவை நெக்ஸ்ட் டைம் இதைவிட குறைச்சு தருவேன் சொன்னாங்களா., அப்ப நீ இதை சாப்பிட்டா தான் உனக்கு மாத்திரை குறைப்பாங்க“.,  என்று சொன்னார்.,

        எதுவும் பேசாமல் மாத்திரையை வாங்கிப் போட்டுக் கொண்டவள்., சற்று நேரத்தில் அவளது அறைக்கு சென்று படுத்து விட்டாள்.

        படுத்த சற்று நேரத்தில் தூங்கி இருந்தாள் அப்போது அவள் அம்மாவிடம் தூக்க மாத்திரை கொடுத்திருக்காங்க., அவ எவ்வளவுக்கு எவ்வளவு தூங்கி ஓய்வு எடுக்கிறாளோ.,  அந்த அளவிற்கு அவள் மூளைக்கு பலம் சேர்க்கும்., ஈவ்னிங் தான் எந்திரிப்பா.,  அவ எந்திரிக்க நேரத்தில் தான் அவளுக்கு ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ் க்கு வருவாங்க.,  அப்ப மற்றதெல்லாம் மறந்து விடுவா., குழப்பம் போய் பழையபடி ஆகிடுவா“.,  என்று சொன்னார்.

     தூங்கு மகளை குடும்பமே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது., அப்போது தான் அவளைப் பற்றி மற்றவர்களும் சாதாரணமாக பேச தொடங்கி இருந்தனர் ., அப்போது அவர்கள் மனதில் நினைத்ததை அவர்களும் சொல்லிக் கொண்டிருந்தனர்.,

         “நினைவு திரும்பனும் ன்னு தான் நாங்களும் நினைக்கிறோம் ஆனால் ஒவ்வொரு நிமிஷமும் குழப்பத்தில் கஷ்டப்படும் போது.,  அவ முகம் போறதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு..,  கடவுள் உங்க கைல ஒப்படைத்ததற்கு நாங்க கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்“.,  என்று அவள் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

         அக்காவோஉங்களுக்கு நாங்க எவ்வளவு தேங்க்ஸ் சொன்னாலும் அதெல்லாம் வார்த்தையில் அடங்குற ஒரு விஷயமே கிடையாது“., என்று சொல்லி அவர்கள் வீட்டுக் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.,

      அப்போது தான் அவன் அண்ணனை பார்த்துகல்யாணம் ஆயிடுச்சா தம்பிக்குஎன்று  கேட்டார்.

      ஆயிருச்சு என்று சொல்லி விட்டு பிரச்சினைகளையும் சொன்னான்.

      “வீட்டுக்கு ஒரு ஆளு இருக்கத்தான் செய்வாங்க கண்டுக்காதீங்க., இப்ப இது தெரிஞ்சா அதற்காக மேல மேல இந்த மாதிரி பேச தான் செய்யும்.,  அதனால இனிமேல் அதைப்பற்றி யோசிக்காதீங்க.,  உங்க வாழ்க்கை தம்பி நீங்க தான் வாழனும்“.,  என்று திலகவதி அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.

     “யாரும் எதுவும் சொல்றதால யாருக்கும் எதுவும் ஆகிற போறது கிடையாது., வார்த்தைகளுக்கு  நிறைய சக்தி இருக்குனு எல்லாருக்கும் தெரியும்.,  ஆனால் அதை புரிஞ்சுக்காம வார்த்தைகளை விட்டுட்டாங்க.,  ஒன்னே ஒன்னு மட்டும் தான் அவ எங்க வீட்ல  இருக்கிற வரைக்கும் அவளை நாங்க பத்திரமா பாத்துக்குவோம்.,  நீங்க பயப்படாம இருங்க.,

    அவளுக்கு நினைவு திரும்புவதற்கான சின்னம் அறிகுறி தெரிந்தாலோ.,  இல்ல கொஞ்சம் நினைவு திரும்பிட்டு அப்படிங்கிற மாதிரி தெரிஞ்சாலோ உடனே உங்களுக்கு போன் பண்றேன்.,  பயப்படாமல் இருங்கள்.,  பயப்படாம போங்க.,

   தம்பி  நீங்க தான் அம்மா அப்பாக்கு உங்க அக்காக்கு எல்லாருக்கும் ஆறுதலா இருக்கணும்.,  இங்க தான் அம்மு பத்திரமா இருக்கா இல்ல.,  அப்புறம் எதுக்கு நீங்க யோசிக்கிறீங்க“.,  என்று சொல்லி ஆறுதல் அளித்தார்.

     பின்பு அவர்கள் பேசி விட்டு செல்லும் முன் மீராவை பார்த்துவிட்டு சென்றனர்.,

      அவள் அக்காவும் அண்ணனும் தலையை தடவி விட்டு., நெற்றியில் முத்தம் கொடுத்து கண் கலங்க அவளையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு தான்., அந்த அறையை விட்டு வெளியே வந்தனர்., அதை பார்க்கும்போது சரவணனுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.,

      அவள் எழும்பும் வரைக்கும் இருங்கள் என்று சரவணன் சொல்ல.,  அவர்கள் தான்இல்ல வேண்டாம் அவளோட குழப்பத்தை பார்க்கும் போது கஷ்டமா இருக்கு.,  குழம்பும் போது அவ முகம் அப்படி ஒரு வலியைக் காட்டுது.,  அதை ஒரு அம்மாவா என்னால உணர முடியுது.,  என் பிள்ளை முகத்தில் அந்த வலி கூட வரக்கூடாது ன்னு நினைக்கிறேன்., அவளுக்கு நினைவு திரும்பிய பிறகு அவ வரட்டும்“., என்று சொல்லிவிட்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

        அவர்களை வழியனுப்பி விட்டு வந்த சரவணன் தான் அம்மாவிடம் உட்கார்ந்து.,  “அவளுக்கு நினைவு திரும்புவதற்கு நீங்கள் சொன்னது போல அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டது“., என்பதை சொல்லிக் கொண்டிருந்தான்.

              இதற்கிடையில் அடுத்த மாதம் கல்லூரிக்கு அவளை அழைத்து வருவதாக சொல்லி இருப்பதை சொன்னவுடன்.,

       அவன் அம்மா தான்., “ஏதாவது பிரச்சனை வரக்கூடாதேஎன்று சொன்னார்.,

       “இல்லமா பாத்துக்கலாம் போயிட்டு வருவோம்., அப்ப தான் ஒருவேளை அவளுக்கு பிரண்ட்ஸ் பார்த்ததுக்கப்புறமோ.,  காலேஜ் அட்மாஸ்பியர் பார்த்ததுக்கு அப்புறமோ.,  அவளோட ப்ரபஸர்ஸ் இவங்க எல்லாம் பார்த்த பிறகு நினைவு வர ஏதாவது ஒரு வாய்ப்பு இருக்கு., 

        அதுக்கு நூத்துல ஒரு சதவீதம் கூட  வாய்ப்பு இருக்குமா ன்னு., அப்படி தான் யோசிக்கணும்.,  அதனால போயிட்டு வரலாம்“.,  என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.,  மாறும் சூழ்நிலை அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது என்று தெரியாமல்.,

       ஆழ்மனதில் ஒளிந்து கிடக்கும் நினைவுகள்., ஆழத்தில் அமிழ்ந்தே கிடக்கும்.,  கடலின் ஆழத்தை கூட அறிந்து விட முடியும்., மன ஆழத்தை??  

ஆனால் இந்த ஆழ் மனதில் ஒளிந்திருக்கும் எண்ணங்களையும் தான் அளக்க முடிவதில்லை., நம்மால் மன எண்ணங்களை தட்டியெழுப்ப முடியும்., தட்டியெழுப்ப  தொடங்கினாள் ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு பிரளயமே ஒளிந்திருக்கும்.,

பிறருக்கு எதையும் கொடுக்க முடியவில்லை என்றாலும் மனதார வாழ்த்துங்கள்.

Advertisement