Advertisement

13

    சென்னை  வந்து இறங்கியவன் தெரிந்தவர்கள் மூலம் காரை ஏற்பாடு செய்து கொண்டு அம்முவின் கல்லூரி என்று கிடைத்த விலாசத்திற்கு வந்து சேர்ந்தான்.,

               வந்தவனிடம் வாசலிலே எதற்கு ஏன் என்று கேட்ட பின்பே கல்லூரி முதல்வரை பார்க்க வேண்டும் என்ற காரணத்தைச் சொல்லிக் கொண்டு உள்ளே வந்து சேர்ந்தான்.,

             விசிட்டிங் கார்ட் கொடுத்து அனுப்பி விட்டு கல்லூரி முதல்வரை பார்ப்பதற்கு ஐந்து நிமிடம் காத்திருந்தான்., எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரியாமல்., ‘ஏதோ கல்லூரியில் அவர்கள் கம்பெனிக்காக கேம்பஸ் இண்டர்வியூ சம்பந்தமாக வந்து இருப்பார்களோ‘., என்ற எண்ணத்தோடு கல்லூரி முதல்வர் அழைத்து பேச தொடங்கியிருந்தார்.,

         அப்போதுதான் அவன் அவரிடம்நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கனும்., அதுக்காக தான் இப்ப வந்து இருக்கேன்“., என்று சொன்னான்.

      அவரோ யோசனையோடுஎன்ன விஷயம்“., என்று கேட்டார்.,

          “ஒரு டூ மன்த்ஸ் முன்னாடி உங்க காலேஜ்ல இருந்து டூர் போய் இருந்தாங்களா., போன இடத்தில இந்த மாதிரி ஆக்சிடென்ட் ஆச்சா“., என்று கேட்டான்.

          “ஆமா என்ன ஆச்சு., அது சம்பந்தமாக எதுவும் பேசணுமா“., என்று கேட்டார்.

               “நான் அந்த டிபார்ட்மெண்ட்ல உள்ளவர்களை பார்க்கலாமா“.,  என்று கேட்டான்.

            “ஒரு நிமிஷம் இருங்க“., என்று சொல்லி அமரவைத்து விட்டு பிரின்ஸிபல் மாணவ மாணவிகளோடு துணைக்கு சென்ற பிரபஸர்களை அழைத்து வர ப்யூனை அனுப்பினார்.,

          அது அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு பிரபஸர் மட்டும் அடி எதுவுமில்லாமல் காப்பாற்றப்பட்டு வெளியே வந்தாலும் மாரடைப்பின் காரணமாக இறந்ததை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

                “உங்களுக்கு எப்படி தெரியும்., இதை பற்றி எல்லாம்“., என்று சரவணனிடம் கேட்டு கொண்டிருந்தார்.

                  “இப்ப தான் டீடெயில்ஸ் கேள்வி பட்டேன்., அது மட்டும் இல்லாமல் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வந்தேன்“., என்று சொன்னான்.,

              அதற்குள் துணைக்கு சென்ற மற்ற பிரபஸர்கள் வந்து சேர., சரவணனை காட்டிஏதோ அந்த சுற்றுலா சென்றதை பற்றி பேசுவதற்காக வந்திருக்கிறார்“.,  என்று சொன்னார்.

           அனைவரும்என்ன சார் ஏதும் பிரச்சனையா“.,என்று கேட்டனர்.

                 “இல்ல., ஒரு டிடெயில்ஸ் கேட்கனும்“., என்று சொன்னவன்., அவனுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்துபயப்பட ஒன்னும் இல்ல., சும்மா ஜஸ்ட் க்ளாரிப்கேஷன் தான்என்று சொன்னவன் ஆக்சிடெண்ட் பற்றி கேட்டான்.

             அப்போது அங்கு நடந்த விபத்தை பற்றி அவர்கள் சொல்ல என்று கேட்டுக் கொண்டிருந்தான்.,

           அவனுக்கு மீரா விழுந்ததை பற்றி சொல்லும் போது சற்று அதிர்ந்து தான் போனான்., ஏனெனில் அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்து பிழைப்பது எப்படி சாத்தியமாகும்.,  அதிக அடிபடாமல் தப்பித்தால் என்பதே பெரும் கேள்வியாக அவனுக்குள் இருந்தது.,

         அப்போது அவனே நினைத்து கொண்டான்., ஒரு வேளை தேயிலைச் செடியின் மேல் விழுந்திருப்பாள்., அதனால் தான் அதிக அடிபடவில்லை., ஆனாலும் ஏதோ ஒரு இடத்தில் இடித்ததில் தான் கழுத்திலும் தலையிலும் அவளுக்கு நல்ல அடி என்பதை புரிந்து கொண்டவன்., “அந்த காணாமல் போன பொண்ணோட போட்டோ காட்ட முடியுமாஎன்று கேட்டான்.

         லேடி பிரபஸர்போன் டிபார்ட்மெண்ட்ல இருக்குஎன்று சொன்னார்.

              “நான் உங்க ஸ்டூடென்ஸ் பார்க்கலாமாஎன்று கேட்டான்.

           பிரின்ஸி யிடம்  பெர்மிஷன் வாங்கிக் கொண்டு சென்றனர்.,  பிரின்ஸி யும் ஆர்வம் தாங்காமல்நான் வருகிறேன்“., என்று சொல்லிவிட்டு பின்னாடியே சென்றார்.

         அனைவரும் சென்றனர்., டிபார்ட்மெண்ட் ல் இருந்த  அத்தனை பேரும் சேர்ந்து வருவதை பார்த்த மாணவ மாணவிகள் எழுந்து நின்றனர்.,

          அதை பார்க்கும் பொழுதே அவனுக்கு போன் வர வெளியே சென்று விட்டான்.

           அதன் பிறகே ஸ்டூடன்ஸை பார்த்த மேடம்.,

       “ஒன்னுமில்ல உட்காருங்கஎன்று சொல்லி விட்டு மீரா போட்டோ என்று பிரபஸர் கேட்டார்.

               டிபார்ட்மெண்ட் ல் அமைதி சூழ்ந்தது., பவி போனை எடுத்துக் கொடுத்தால்., அதே நேரத்தில் ஷ்ரவனும் உள்ளே வந்தான்.

            அவனிடம்  செல்லை கொடுத்தனர்., போட்டோவில் தெரிந்த உருவத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.,

         சரவணன் ஏனெனில் அதில் அவளுடைய அடர்த்தியான நீண்ட முடியும் அவள் விபத்து நேரத்தில் போட்டிருந்த உடையும்., கடைசியாக அவளும் பவியும் எடுத்த போட்டோவை தான் அப்போது பார்த்துக் கொண்டிருந்தான்.,

          “இவங்க பேரு“., என்று கேட்டான்.

            வகுப்பில் மொத்தமாக மீரா என்ற சத்தம் கேட்டாலும்.,  அனைவரது குரலும் வருத்தத்தோடு தான் இருந்தது., சற்று நேரம் புகைப்படத்தை பார்த்தவன்.,

             “ஓகே., இப்போ ஒன்னே ஒன்னு காட்டனும்“., என்று சொன்னவன்.

                 தன் செல்போனை எடுத்து தன்னோடும் தன் அம்மாவுடன் சேர்ந்திருக்கும் மீராவின் புகைப்படத்தை காட்டினான்.,

              “இதுஎன்று சொன்ன பவி.,  “மீரா மாறியே இருக்குஎன்று ஆளாளுக்கு சொன்னார்கள்.,

           அவன் அவர்களிடம்நான் உங்க எல்லார்ட்டையும் சில விஷயங்கள் சொல்லனும்.,  இங்கே டூருக்கு வந்தவங்க மட்டும்  யாரு., டூருக்கு வராதவங்க விட்டுருங்க“.,  என்று சொன்னான்.

           “இல்ல நாங்க கிளாஸ் ஸ்டூடென்ஸ்  கம்மி தான்.,  அதனால நாங்க அத்தனை பேருமே டூருக்கு வந்தோம்., இந்த வருஷம் கடைசி வருஷம் எதையும் மிஸ் பண்ண கூடாது என்பதற்காக நாங்க எல்லாரும் சேர்ந்து தான் வந்தோம்“.,  என்று மாணவர்கள் சொன்னார்கள்.

            அவனுடைய செல் அத்தனை பேரின் கைக்கும் சென்று வந்தது., பின்பு வாங்கியவன் அவள் போட்டோவை பார்த்த படி., “இந்த பொண்ணு இப்ப எங்க கூட தான் இருக்கிறா., அவளுக்கு பழைய ஞாபகம் எதுவுமே கிடையாது“., என்று சொன்னான்.

        அனைவருக்கும் அதிர்ச்சி ஆகியது., “அப்புறம் எப்படி காலேஜ கண்டு பிடிச்சீங்க“., என்று கேட்டனர்.

      “காலேஜ் கண்டு பிடிக்கல.,  அவளை ட்ரீட்மென்ட் கொடுத்து அவளோட ஞாபகங்களை கொண்டு வருவதற்காக முயற்சி பண்ணும் போது.,  அவளால் அந்த ஆக்சிடெண்ட்ல தவிர வேற எதுவும் சொல்ல தெரியல.,  ஏன் அவப்பெயரே அவளுக்கு தெரியல.,  நாங்க அவளை அம்மு ன்னு கூப்பிட்டுட்டு இருக்கிறோம்.,

      இப்ப யாராவது அவங்க வீட்டுக்கு போன் பண்ணி சொல்லி அவங்கள வர சொல்லுங்க.,  பட் அவளை இப்ப நான் யார் கையில் ஒப்படைக்க முடியாது., ஏன்னா அவளை பொறுத்த வரைக்கும் அவளுக்கு தெரிஞ்சவங்க அப்படின்னு பார்த்தா.,  நானும் எங்க அம்மாவும் மட்டும் தான்.,  அவளை என்னால அனுப்பி வைக்க முடியாது., அதை சொல்லிடுங்க.,  அவ நல்ல ஆனதுக்கு அப்புறம் தான்., நான் அனுப்புவேன்

         சில நேரங்களில் அவள் ஒவ்வொரு விஷயத்துக்கும் யாரையாவது டிப்பன் பண்ற மாதிரி  இருக்கிறா., அது மட்டும் இல்லாமல் சில நேரம் அவளுக்கு பயம் அதிகமாகும்., அந்த சூழ்நிலையில் அவளை டக்குனு யார் கையில் ஒப்படைக்க முடியாது., இதை எல்லாரும் புரிஞ்சிப்பீங்க ன்னு நினைக்கிறேன்.,

             அவ எனக்கு கிடைச்சது குன்னூரில்., எங்க எஸ்டேட் ., அவளோட  முடி  ஃபுல்லா தேயிலை செடில சுத்தி கிடந்தது., அவளை காப்பாத்தணும் அப்படிங்கிறது காக அவள் முடியை கட் பண்ணி தான் வெளியே எடுத்தோம்“., என்று சொல்லி நடந்தவைகளை சொன்னவன்.,

            இதுக்கு அப்புறமும் அவள நான் உங்க கிட்ட கூட்டிட்டு வரணும் அப்படின்னு நினைக்கிறேங்களா., டாக்டர்  அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமா யோசிச்சு அவளா வெளியே வந்தா மட்டும் தான் நார்மலா ஆக முடியும்.,

              இப்ப நான் அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிறோம் அப்படின்னு சொல்லி நாங்க ஒரு தடவ முயற்சி பண்ணிட்டோம்.,  அதிலே ஒரு மாதிரி ஆகி ஒரு வாரம் பயந்து போய் சோஃபா   உட்காரும் போது கூட காலை கீழே வைக்காமல் இருந்தாள்.,

                 இப்ப  நீங்க தான் முடிவு பண்ணணும்“., என்று பிரபஸர்களிடமும்., அவளுடைய பிரண்ட்ஸ் இடமும் சொன்னான்.

           அனைவரும்இல்ல அவ நல்ல க்யூர் ஆனா எங்களுக்கு அது போதும்“., என்று சொன்னார்கள். “ஆனா ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா சார்., எங்களுக்கு காலேஜ்ல அடுத்த மாசம் பேஃர்வல் ஃபங்ஷன் இருக்கு., சும்மா ஜஸ்ட் நீங்க அவள கூட்டிட்டு வந்தா போதும்., எங்க கூட ஒரே ஒரு போட்டோ அவ்வளவு தான் சார்., எங்களுக்கு அவ எங்க கூட இருக்கிறதே எங்களுக்கு சந்தோஷமான விஷயம்., அவ உயிரோட இருக்குறத  கேட்கும் போதே எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு“., என்று சொல்லி கடைசி நேரத்தில் அவள் இறந்து விட்டாள் என்று நினைத்து  புலம்பிய மாணவனும்., அவள் தோழியும் சொன்னார்கள்.

           “நிச்சயமா கூட்டிட்டு வரேன்“., என்று சொல்லிக் கொண்டு இருந்தவன்.

        “அவங்க வீட்ல சொல்றீங்களாஎன்று கேட்டான். பவியும் அவளது மற்றொரு தோழியும் சேர்ந்து அவர்கள் வீட்டிற்கு அழைத்தனர்.

       அவள் அண்ணனிடம் சொல்லிஇப்படி வந்து இருக்காங்க“., என்று சொல்லி விஷயத்தை அனைத்தையும் சொன்னார்கள்.

                “ஆனால் வீட்டில் அம்மா அப்பாவிற்கு அவளுக்கு நினைவு  எதுவுமில்லை என்பதை சொல்ல வேண்டாம்., அவர்களை கூட்டி வாருங்கள்“., என்று மட்டும் சொல்லியிருந்தனர்.

                     அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் பெற்றோர்களும் வர., இவனும் அவர்கள் வகுப்பறையில் தான் உட்கார்ந்திருந்தான்.

               அவள் அம்மாவை பார்க்கும் போதே தெரிந்தது மகளை இழந்த துக்கத்தில் சோகமே உருவாக இருந்தவர் கண்ணீரோடு கை கூப்பினார்.,

            சரவணனுக்கு தான் தாமதித்து மனதில் உறுத்தியது.,  அவள் அக்காவும் அண்ணாவும் அவன் அருகே வந்து கையெடுத்து கும்பிட., “ஐயோ என்னது நீங்கஎன்று சொன்னவன்., அவர்கள் குடும்பத்தையே பார்த்து கொண்டிருந்தான்.

         “அவ எப்படி இருக்கா“., என்று மட்டுமே வீட்டிலுள்ளவர்கள் கேட்டனர்.,

        அப்போது தான் அவன் அம்மா அப்பாவிற்கு தெரியும் படி அவன் சொன்னான்., “அவளுக்கு பழைய ஞாபகம் எதுவுமே இல்ல., அவளை பொறுத்த வரைக்கும் அவ எங்க வீட்டு பொண்ணு.,  அப்படித்தான் அவன் நினைச்சிட்டு இருக்கா.,  அவள நாங்க அம்மு ன்னு கூப்பிட்டுட்டு  இருக்கோம்., அவ பெயர் கூட அவளுக்கு தெரியாது.,

             அவளுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து அவளை குணப்படுத்திவிடலாம் சொல்லி ஃபேமிலி டாக்டர் சொன்னாங்க ன்னு.,  தான் கூட்டிட்டு போனோம் அவளுக்கு ஞாபகப் படுத்த முடியல“., என்று சொல்லி அவள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தவன்.,

         இப்போது வரைக்கும் பஸ்ஸில் ஏற அவள் பயப்படுவதை சொன்னவுடன்.,  அனைவருக்குமே பயமாகத்தான் இருந்தது.

          மற்றவர்கள்இல்ல அவள ரொம்ப கஷ்டப் படுத்த வேண்டாம்“., என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே

          அவன் தான் மருத்துவர் சொன்னதையும் சொல்லிக்கொண்டிருந்தான்.

             “ஏதாவது அதிர்ச்சியில அவளுக்கு நினைவு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு.,  ஆனா நினைவு வந்தால் இப்படியும் ஆகலாம்., அப்படியும் ஆகலாம் என்று டாக்டர் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் சொன்னான்.

         அனைவருக்கும் வருத்தமாகத்தான் இருந்தது., “அவளை நாங்க பார்க்க முடியுமா“., என்று கேட்டனர்.

        எப்படிப் பார்க்க வைக்கிறது., இப்ப நான் ஏன் செல்லுல வீடியோ கால் போட்டாலும்.,  என்னோட வீடியோ தெரியும்., சோ நான் எங்கே இருக்கிறேன் ன்னு தெரியும்., அவளுக்கு உங்களை காட்டுறதுல  ஒன்னும் பிரச்சனை இல்ல.,

        ஆனா அவளுக்கு சில விஷயங்கள் தானா வரணும் ன்னு டாக்டர் சொன்னதால  நான் யோசிக்கிறேன்.,  அப்புறம் நான் எங்க இருக்கேன்.,  எதுக்கு இங்க வந்தான்னு அவ கொஸ்டின் கேட்பா., என்ன பண்றது ன்னு நீங்களே முடிவு பண்ணுங்க“., என்று சொல்லும் போது.,

      மாணவர்கள் தான்சார் ப்ளுடூத் மூலமா டிவில செல்லை  கனெக்ட் பண்ணிடலாம் சார்., நீங்க  பேசுங்க எங்களுக்கு டிவி தெரியுற அவளோட ஃபேஸ் மட்டும் நாங்க பார்த்துக்கிறோம்.,  இப்ப அவ எப்படி இருக்கா ன்னு தெரிஞ்சா போதும்“., என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.,

        “ஓகேஎன்று சொன்னான்., வீடியோ காலில் அம்மாவிற்கு அழைத்து டிவிக்கு ப்ளூடூத் மூலமாக டிவியில் கனெக்ட் செய்தான்.,

             கல்லூரியின் பிரின்ஸிபல் அறையிலிருந்த டிவியில் கனெக்ட் செய்ய அவர்கள் வகுப்பு முழுவதும் காலி செய்து விட்டு பிரின்ஸிபல் அறையில் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.,

         அவன் கனெக்ட் செய்தவன்யாரும் சத்தம் போடாதீங்கஎன்று சொல்லியபடி அவன் அம்மாவிடம் பேச தொடங்கினான்.,

            அவள் அம்மாவும் எடுத்தவுடன்சரவணா பாத்தியாடா., விசாரிச்சியா“.,  என்று கேட்டார்.

            “பார்த்து பேசியாச்சி மா., அம்மு எங்கஎன்று கேட்டான்.

           

Advertisement