Advertisement

12

            அலுவலகத்திற்கு வந்தவனுக்கு மனம் முழுவதும் கிட்டத்தட்ட இந்த ஒரு மாதங்களில் நடந்தவைகளை அசை போட்டுக் கொண்டிருந்தது.,

               தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என பி விடம் சொன்னவன் அப்படியே அமர்ந்துவிட்டான்.,

           அம்மு கையில் கிடைத்த நாளிலிருந்து.,  அவள் தங்கள் வீட்டுக்கு ஒரு மாதங்கள் ஓடிவிட்டது., ஆனால் ஏதோ நேற்று தான் நடந்தது போல இருக்கிறது.,

         ஆனாலும்ஏனோ அவளைப்பற்றி அம்மா விசாரிக்க சொல்வதை., எத்தனை நாட்கள் தட்டிக்கொண்டே போயாச்சு.,  இனியாவது விசாரிக்க வேண்டும்‘.,என்று நினைத்துக் கொண்டான்‘.,

         இந்த ஒரு மாத காலத்தில் அவளது நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் வந்திருக்கிறத, ஏதோ அவள் வீடு போல சாதாரணமாக இருக்க தொடங்கியிருக்கிறாள்.,

         அவளுக்கு விபத்து பயம் என்ற அந்த எண்ணத்தைத் தவிர., வேறு எந்த எண்ணமும் இல்லை., பஸ்ஸில் ஏற மறுக்கும் குணம் வந்திருக்கிறது.,

       இதற்காகவே போன முறை மருத்துவ பரிசோதனை சென்றிருக்கும் போது., அவள் பஸ்ஸை பார்த்து பயப்படுகிறாள் என்ற சொன்னதில் தான்., டாக்டர்சும்மா பஸ்ல ஏத்தி ட்ரை பண்ணுங்க.,  அவளுடைய மென்டாலிட்டி எப்படி இருக்குன்னு பாப்போம்“., என்று சொன்னார்.

           அதற்காக பஸ்ஸில் கூட்டி செல்ல முயற்சி செய்யும் போது பஸ்சை பார்த்த உடனேயே ஏற  மாட்டேன்.,  என்று அடம் பிடித்தாள்.

         ஆனால் காரிலோ ஆட்டோவில் கூட்டி சென்றாள்., அமைதியாக இருந்து கொள்கிறாள்., நடந்து போவோம் என்று சொன்னால் எவ்வளவு தூரம் நடக்க வைத்தாலும் நடக்கிறாள்.,

       ஆனால் ஏனோ அவளுக்கு பஸ்சை பார்த்து மட்டும் பயம்., ட்ரெயினில் அழைத்தால் தாராளமாக வருகிறாள்., அவளுக்காகவே பெங்களூரில் இருந்து மைசூர் வரை சென்று விட்டு வந்தான்.,

         இப்படிசில விஷயங்களில் அவளை மாற்றுவது கடினம்“., என்று டாக்டர் சொல்லி இருந்தார்.,  “அவளது நினைவுகள் முழுதாக திரும்பினால் அவளிடம் இன்னும் மாற்றங்கள் வரும்“., என்று சொல்லியிருந்தார்.

              ஆனால் டாக்டர் சொன்ன ஒரு விஷயம் தான் அவனுக்கு பதட்டத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.,

        அவன் அம்மா சற்று அதில் கவலை கொண்டாலும்., ‘சரி நினைவு வந்தால் வரட்டும்., நல்லது தானே‘., என்று மனதை தேற்றிக் கொள்கிறார்.,

          ஆனால்இவனால் மட்டும் ஏன் அப்படி இருக்க முடியவில்லை.,  இதை அம்மாவிடம் காட்டாமல் அம்மாவுக்கு ஆறுதல் சொல்வது போல சொல்வது இன்னும் கடுப்பை தான் கிளப்புகிறது‘.,  இருந்தாலும் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல் நடமாடிக் கொண்டிருக்கிறான்.

           அவள் வந்த பிறகு அவனிடம் வந்த மாற்றங்களில் முக்கியமான ஒன்று.,  ‘அவனுக்கு அம்முவை அதிகமாக பிடித்தது.,  ஆனால் அதை இப்போது வரை அம்மாவிடம் காட்டி கொள்ளவில்லை.,  அவள் தன்னுடனே இருக்க வேண்டும்.,  என்ற எண்ணம் இப்போதெல்லாம் அதிகமாக தொடங்கிவிட்டது., இது நல்லதா கெட்டதா என்று தெரியவில்ல..,  ஆனாலும் இதற்கு ஒரு வகையில் காரணம் அவனுடைய அம்மா தான்., என்பதை அவனால் கூட மறுக்க முடியாத உண்மை தான்‘.,

      ஏனெனில் அவர் சும்மா இருக்காமல் போன முறை மருத்துவ பரிசோதனைக்கு சென்று வந்த  பிறகு..,  “அவளை திருமணம் செய்து கொள்கிறாயா“., என்று அவனிடம் கேட்டு இருந்தார்.

         முதலில்அவனுக்கு சம்மதமாக தான் தோன்றியது., ஏனெனில் எந்த உறவு முறையும் சொல்லாமல் வீட்டில் ஒரு பெண் கூடவே இருப்பது., எப்போது வேண்டுமானாலும்.,  அந்தப் பெண்ணுக்கே பிரச்சினையாகி விடக்கூடாது என்ற எண்ணம் தான்.,

        நாளை யாரும் அப்பெண் இத்தனை நாள் உங்கள் வீட்டில் இருந்தாலே‘.,  என்று கேட்டு விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருந்தது.,

      ஆனால் இதில் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை என்ற எண்ணமும் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது., ‘அவளை திருமணம் செய்து கொள்வது பெரிய விஷயம் இல்லை.,  நாளை அவளுக்கு நினைவு ஒருவேளை திரும்பிவிட்டால்.,  டாக்டர் சொன்னது போல அவள் நடந்து கொள்ள மாட்டாள் என்பதில் என்ன நிச்சயம்.,

       அதுமட்டுமல்லாமல் நினைவில்லாத.,  ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது நிச்சயம் சரி இல்லாத ஒரு செயல் தான்.,  அவள் ஒருவேளை யாரையும் விரும்பி இருந்தால் என்ன செய்யமுடியும்., அவள் சின்னப் பெண் தான் என்பதற்கு அவளை முதல் நாள் சோதனை செய்த மருத்துவரே சொல்லிவிட்டார்., இருந்தாலும் இது எப்போதும் ஒன்று போல இருக்காது என்ற எண்ணத்தில் தான் இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சு வேண்டாம்‘., என்று நினைத்திருந்தான்.,

         ஆனாலும் அவன் மனம் இப்பொழுதெல்லாம் திருமணத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருக்கிறது.,

     போனமுறை பரிசோதனைக்கு சென்றிருந்த போது மருத்துவர் சொன்னது இதுதான்.,

          “அவளுக்கு ஒரு வேலை நினைவு திரும்பினாலும்., இப்போது உள்ள நினைவுகள் அப்படியே இருக்குமா என்பதும் தெரியாது.,  சிலருக்கு இப்போது நடந்தது அப்படியே நினைவில் இருக்கும்., சிலருக்கு பழைய நினைவுகள் வரும் போது இப்பொழுது உள்ள நினைவுகள் மறந்து விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்., ஒருவேளை இதே நினைவுகள் இருந்தால் பிரச்சினை இல்லை., இந்த நினைவுகள் மறந்து போய்விட்டால் ஒன்றும் செய்வதற்கில்லை“.,  என்று சொல்லி இருந்ததார்.

          அவன் எதை பற்றியும் யோசிக்கக் கூடாது என்று நினைத்திருந்தான்.,  ஆனால் அவன் அம்மா தான்அப்படி அவளுக்கு நினைவு வந்ததுனா., நம்மளை எல்லாம் மறந்து விடுவா இல்லடா“.,  என்று திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தார்.,

        இவனும்பேசாம இருங்க மா“.,  என்று சொல்லிக்கொண்டு இருந்தானே  தவிர., “மறந்தால் என்னஎன்று கேட்கவில்லை.,

       அவனுக்கும் மனதிற்குள் சிறு பயம் ஏற்படத்தான் செய்தது., ‘மறந்து விடுவாளோஎன்று.,  ஏனெனில் இந்த ஒரு மாதத்தில் அம்மாவுக்கும் மகனுக்கும் அவள் அத்தனை இன்றியமையாதவளாக மாறிப் போயிருந்தாள்.

               அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே.,  அவன் அம்மாவிடம் இருந்து அழைப்பு வரஎன்னமா சொல்லுங்க“., என்றான்.

      “விசாரிச்சையா“., என்று கேட்டார்.,

     “கேட்கலை.,  நான் இனிமேல் தான் கேட்கணும்.,  இப்போதைக்கு கேக்குற ஐடியா இல்ல.,  அப்பவும் முதல்ல இங்க உள்ள போலீஸ் வச்சுதான் விசாரிக்கணும்., இதுல டைரக்டா நம்ம இறங்க முடியாது.,  இறங்கி எதுவும் பிரச்சினை ஆயிடுச்சின்னாஏன் இத்தனை நாள் சொல்லலைன்னு கேட்பாங்க.,  கடத்திட்டுப் போனதா சொல்லுவாங்க.,  இந்த மாதிரி பிரச்சினைகள் வந்து விடக்கூடாது ம்மா.,  அதனால பொறுங்க.,

           “ஆள் வெச்சு தான் விசாரிக்கணும்.,  அங்கு நடந்தது உண்மையா பொய்யா ன்னு.,  உண்மையிலேயே அப்படி நடந்திருந்தா.,  அதைப் பத்தின டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண சொல்லணும்., நிறைய வேலை இருக்கு மா.,  சும்மா எடுத்தோம்., கவுத்தோம் ன்னு  எல்லாம் பண்ண முடியாது.,  அது மட்டுமில்லாம ஒரு பொம்பள புள்ளைய கூட்டிட்டு வந்து இருக்கோம்., நீங்க ஏன் பொண்ணு கிடைச்சா உடனே  சொல்லலை ன்னு போலீஸ் கேள்வி கேட்பாங்க., சோ வெயிட் பண்ணுங்க“.,  என்று சொன்னான்.,

        எஸ்டேட் மேனேஜர் அழைத்துஅங்கு இது போல அந்த தேதியில் ஏதேனும் விபத்து நடந்ததா“., என்று விசாரியுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

        அவரும் விசாரித்துவிட்டு அவனுக்கு அழைப்பதாக சொல்லியிருந்தார்..

          அம்மு இப்பொழுது மிக சாதாரண பெண் போல வீட்டில் நடந்து கொள்கிறாள்.,  அதிகமாக தொந்தரவு செய்வது கிடையாது அவளது வேலைகளை எப்போதும் போல அவளே செய்து கொள்கிறாள்.,

      தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாலும் வாசிப்பது அதிகரித்திருக்கிறது., ஆங்கிலம் சரளமாக வாசித்தாலும்., சரளமாகப் பேச வரவில்லை என்பதை கண்டு கொண்டவன் தான் இப்பொழுது அவளுக்கு வீட்டில் இருந்தபடியே ஆங்கிலம் பேச கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யலாம் என்ற எண்ணத்தோடு இருக்கிறான்.,

      அது  மட்டுமல்லாமல் அவன் இந்த ஒரு மாதத்தில் அவளிடம் கண்டு கொண்ட விஷயம்., எதையும் சொல்லிக் கொடுத்தால் உடனே கற்றுக் கொள்கிறாள்., அது அப்படியே இருக்கட்டும் என்று நினைத்திருக்கிறான்.

       அதற்காகவே  அவளுக்கு வேறு ஏதேனும் படிப்பில் ஆர்வம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு.,  அதன் பிறகு அவளை மற்ற ஏதாவது வகுப்பில் சேர்த்து விடவேண்டும் என்ற எண்ணமும் அம்மாவிற்கு மகனுக்கும் அதிகம் உள்ளது.,

          வீட்டில் சும்மா அடைத்து வைத்திருப்பது என்பது மிகவும் கொடுமையான காரியம்.,  அது மட்டுமல்லாமல் இப்பொழுது அனைத்தையும் மறந்து நிற்பவளுக்கு ஏதாயினும் சொல்லிக் கொடுத்தால் தான் அவளுக்கும் ஏதோ ஒரு விஷயத்தில்.,  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவளுடைய பழைய நினைவுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.,

     நம்மை விட்டுப் பிரியக் கூடாது என்று உள்மனம் ஆசை கொண்டாலும்., பாவம் அவளை இழந்த பெற்றவர்களின் நிலை என்ன.,  எப்படி பறிதவிப்பார்கள் என்று நினைக்கும் போதே அம்மாவிற்கும் அவனுக்கும் சற்று வருத்தம் ஏற்பட தான் செய்யும்., அதற்காகவாவது அவளுக்கு நினைவு திரும்ப வேண்டும் என்று நினைத்துக் கொள்வார்கள்.,

        அவளுடைய வேண்டுதல் எல்லாம் இப்பொழுது அவளுக்கு நினைவு வந்தாலும்.,  தங்களுடைய நினைவுகளும் சேர்ந்து இருக்கட்டும் என்ற வேண்டுதலோடு இருந்தனர்.

        உடை விஷயத்தில் அவள் அதிக மாடல் ஆன உடைகளை விரும்புவதில்லை என்பதை பார்த்த உடனே தெரிந்து கொள்ள முடிகிறது ஏனெனில் அது போன்ற உடைகளை எடுப்பதற்காக கையில் எடுத்துப் பார்த்தால் கூட., “இல்லை வேண்டாமேஎன்று சொல்லத் தொடங்கியிருக்கிறாள்.

      அதை பார்த்தவுடனே திலகவதி தான்.,  “ஒருவேளை அந்த பொண்ணு இந்த மாதிரி ட்ரெஸ்லாம் போடமாட்டாளோ என்னவோடா., அதனால தான் பார்த்த உடனே வேண்டாம் ன்னு சொல்லுறா போல“., என்று சொன்னார்.,

            வீட்டிற்கு அவள் எப்பொழுதும் சுடிதார் தான் அணிவாள்., அந்த அளவிற்கு அவளுடைய பழக்கவழக்கங்கள் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது.,

       ஆனால் என்ன தான் யார் என்பது மட்டும் தான் அவளுக்கு இப்போது நினைவிலில்லை.,  மற்றபடி அவளது பழக்கம் இதுவாகத்தான் இருக்கும் என்னும் என்று சொல்லும் அளவிற்கு அவள் என் நடத்தையில்  நல்ல மாற்றங்கள்  படித்த பெண் நல்ல குடும்பத்தில் வளர்ந்த பெண் என்பதற்கு சாட்சி ஆகவே அவளது நடவடிக்கைகள் இருக்கிறது.,

        அதை வைத்தே சரி அவள் இப்படித்தான் என்று சொல்லுமளவிற்கு மாறி இருக்கிறாள்., அதை பார்க்கும் போது இருவருக்கும் சந்தோஷமாக இருந்தாலும்., அவளுடைய பின்புலத்தை விசாரிக்கச் சொல்லி தினமும் திலகவதி கேட்டுக் கொண்டே தான் இருக்கிறார்.,  இவன்தான் இதோ அதோ என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறான்.

    இன்று அம்மா போன் செய்து நினைவு படுத்தியதால் இதோ மேனேஜருக்கு போன் செய்து சொல்லியாயிற்று.,  எப்படியும் விசாரித்து சொல்லியே ஆக வேண்டும் இல்லை என்றால் அம்மாவின் கோபம் அதிகரிக்கும்.,

        ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு தான்நீ விசாரிக்கியா இல்ல., நான் குன்னூருக்கு போகட்டுமா டா”  என்று கேட்டுக்கொண்டிருந்தார்.,

         ஏன்மா இப்படி கோபப்பட்டு.,  அவசரப் படுறீங்க என்று சொன்னதற்கு.,

          திலகவதி தான்ஒரு அம்மாவா யோசிச்சு பாருடா.,  அவளை இழந்து அவங்க வீட்ல உள்ளவங்களுக்கு எவ்வளவு பரிதவிப்பு இருக்கும்., உயிரோட இல்ல அப்படின்னு சொல்லி உடம்பு கிடைச்சிருந்தா கூட அந்த துக்கம் ஆறிபோயிருக்கும்., இப்போ பிள்ளை இருக்கா இல்லையா., எங்க இருக்கா.,  எப்படி இருக்கா., வேற ஏதும் பிரச்சினையில் மாட்டிக் கொண்டாலா ன்னு ஒவ்வொரு நிமிஷமும் ஒரு பெத்தவங்களா.,  கூட பிறந்தவங்களா.,  அவங்க வீட்டுல பயந்துகிட்டு இருப்பாங்க., அந்த பயம் எனக்கு புரியுதுடா.,  நான் சொல்றது புரியுதா“., என்று கேட்டார்.,

         “புரியுது மா இருங்கஎன்று சொன்னவன் அதன் பின்பே விசாரிப்பதற்கு முடிவெடுத்திருந்தான்.,  இதோ இன்று மேனேஜருக்கும் சொல்லியாயிற்று., இப்போதாவது தகவல் ஏதாவது வரவேண்டும்.,

    இன்று மாலை வீட்டிற்கு போகும் போது ஏதாவது தகவல் கொடுத்தால் தான் அம்மா நிம்மதியாக இருப்பார்., என்பது அவனுக்குப் புரிந்தது.,

           அவன் அம்மா சொன்ன பிறகு  யோசித்துப் பார்த்தால்உண்மை தானே அவளது வீட்டினரை நினைத்து பார்த்தால் அவர்களது எண்ணம் இப்படித்தானே இருக்கும்., தவிப்பாக தானே இருக்கும்.,  அவள் நினைவு வந்து அவள் வீட்டிற்கு தான் போகப் போகிறாள்., என்று நினைக்கும் போதே அவளை பிரிவை நினைப்பதே இந்த ஒரு மாதத்தில் இத்தனை வருத்தமாக இருக்கிறது., என்றால்  அவளை வளர்த்தவர்கள் கூட வளர்ந்தவர்கள் என்று அத்தனை பேருக்கும் இந்த எண்ணங்கள் வருத்தத்தை தரும்., அதற்காகவே தேட வேண்டும்‘., என்று நினைத்துக் கொண்டான்.

              மாலை வீட்டிற்கு சென்றவுடன் திலகவதி கேள்வியாக பார்த்தார்.

        ” மேனேஜர் ட்ட பேசி இருக்கேன் மா.,  சாயங்காலத்துக்குள்ள நியூஸ் கிடைக்கும்“.,  என்று மெதுவாக சொன்னான்.,

       ” இப்பவே சாயந்திரம் தான் டா“.,
என்றார்.,

       “நான் போன் பண்ணும் போது தான் போயிட்டு இருக்கேன்னு சொன்னார்.,  திரும்ப திரும்ப முடியாது., நீங்க நினைக்குற நேரத்திற்கு பதில் வாங்க முடியாது“., என்று சொன்னான்.,

      

Advertisement