Advertisement

பின்பு சரவணன் அருகில் வந்தவன் இப்போதுஅவள் அம்மு இல்லை மீராஎன்பதை உணர்ந்தவன்.,  சற்று தள்ளி நின்றேஉங்க ஹெல்த் பற்றி மட்டும் யோசிங்க.,  வேற எதை பத்தியும் யோசிச்சி மனச குழப்பாதீங்க“., என்று சொன்னான்.,

அவனை நிமிர்ந்து பார்க்காமல் தலையை மட்டும் ஆட்டினாள்.,

          பின் வந்த நர்ஸ் எடுக்கவேண்டிய டெஸ்ட்களை பற்றி சொன்னார்.,

       “மற்ற ரிப்போர்ட் வர வர டாக்டரை கன்சல் செய்ய வேண்டும்என்று சொன்னவர்.

      ” யாராவது ஒருத்தங்க மட்டும் ஹாஸ்பிடல் தங்கிக்கலாம்என்று சொன்னார்.,

        அவர்கள் குடும்பத்தில் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போது திலகவதி தான்., “நீங்க எங்க வீட்டில இருக்கீங்களாஎன்று கேட்டார்.,

       “இல்ல அப்படியே கிளம்பி வந்தோம் அது தான் இப்போ பேசிட்டு இருந்தோம்என்றார்.

       அப்போது தான் திலகவதிமீராவோட அம்மா.,  பொண்ணு கூட  இருக்கட்டும்.,  நாங்க பாத்துக்குறோம்., நீங்க வேணா உங்க வேலையை போய் பாருங்க., அங்கேயும் தெரிய படுத்தனும் இல்ல.,  டெஸ்ட் எல்லாம் முடிச்சு நாங்களே கொண்டு வந்து சென்னையிலே விட்டுறோம்“.,  என்று சொன்னார்.

             பின்னர் அவர்களும்வீட்டிலும்., உறவினர் மற்றும் அங்கிருப்பவர்கள் இடமும் எல்லாவற்றையும் சொல்லி தயார் நிலையில் இருக்க வேண்டும்‘., என்ற எண்ணத்தோடு சரி என்று சம்மதித்தனர்.

      அதன் பிறகு அங்கிருந்த இரண்டு நாட்களும் வேகமாக சென்றது.,  ஒவ்வொரு டெஸ்ட் எடுத்து முடிக்கும் போதும் திலகவதி உடன் இருந்தாலும்., சரவணன் தள்ளி நின்று மட்டுமே பார்த்துக் கொண்டான்.

   அருகில் வருவதே இல்லை., திலகவதிக்கு புரிய தான் செய்தது.,  ‘என்ன செய்வது இப்படி தான் நடக்கும் என்பது தெரிந்தது தானே., சரி கடவுள் என்ன வைத்திருக்கிறானோ அதுபடி நடக்கட்டும்‘., என மனதை தேற்றிக் கொண்டவர் வேறு எதுவும் சொல்லாமல் அவர்களோடு கூடவே இருந்தார்.

           அதுபோலவே அனைத்து டெஸ்ட் முடித்து டாக்டரை கன்சல்ட் செய்த பிறகு ஊருக்கு கிளம்பினார்கள்., அவர்களை அழைத்துக்கொண்டு சரவணனும் திலகவதியும் சென்றனர்.

       எப்போதும் சரவணன் தான் கார் டிரைவ் செய்வான் என்றாலும்., சில நாட்களில் அவனுக்கு ஓட்டக்கூடிய மனநிலை இல்லை என்றால் டிரைவரை கூடவே அழைத்துச் செல்வான்.,  அன்றும் அப்படி தான் என்று சென்றனர்.

       காரின் பின்புற சீட்டில்  மீரா அவளுடைய அம்மா.,  திலகவதி மூவரும் அமர்ந்தனர்.

அவன் முன்புறம் டிரைவரோடு அமர்ந்திருந்தான்.,  மீராவின் அம்மாவும் திலகவதியும் பேசிக்கொண்டே வர.,  மீரா ஏதோ ஒரு மோன நிலையில் அமைதியாக இருந்தாள் என்றால் சரவணன் எதுவுமே பேசவில்லை.,

      ஆனால் அவர்களை கவனிப்பதிலும் குறை வைக்கவில்லை.,  ஆங்காங்கே நிறுத்தி உணவு., குடிக்க பானங்கள் என வாங்கிக் கொடுப்பதோடு அவளை அழைத்துச் செல்வதால்  மெதுவான பயணமாகவே இருந்தது.,

       5 மணி நேர பயணம் 6 மணி நேரமாக மாறியது., பத்திரமாக அவளை வீட்டில் கொண்டு சேர்த்தனர்.

       அங்கு வீட்டிலுள்ளவர்கள் உறவினர் என அனைவரும் மகிழ்வோடு அவளை வரவேற்றனர். அவளது முகத்தில் லேசான மாற்றம் வந்தது.,  அவளது கல்லூரி நண்பர்கள் சேர்ந்து இருக்க அனைவரும் அவரை கட்டிக்கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர்.

            அவர்கள் கேட்பதற்கு மட்டுமே பதிலளித்தாள் எப்பொழுதும் உள்ளது போல வளவள என்று பேசாமல் அமைதியாக கேட்பதற்கு மட்டும் பதில் சொன்னாள்.

        நண்பர்கள் தான் சரி இப்பொழுது தானே அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்திருக்கிறாள்., இனி கொஞ்சம் கொஞ்சமாக தான் சரியாகும் என்று நினைத்துக் கொண்டனர்.,

அவளிடம் பேசிய பின்பு அனைவரும் வந்து சரவணனிடம் பேசிவிட்டு சென்றனர்.

அதன்பிறகு திலகவதியும் சரவணனும் கிளம்புகிறேன் என்று சொல்லிக் கொண்டு கிளம்பும் போது திலகவதி தான் மீராவின் அருகில் வந்து அவள் நெற்றியில் முத்தம் வைத்துஉடம்ப பாத்துக்கோ.,  நல்லா சாப்பிடு காலேஜுக்கு போ.,  பிரண்ட்ஸோட இரு.,  எப்பவும் போல நீ உன்னை பிரீஸ்க்கா வச்சுக்கோ“.,  என்று அறிவுரை சொல்லி அவர்களிடம் சொல்லிக் கொண்டு விடை பெற்றார்.,

            சரவணனும் சென்று வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று விட்டு.,  அவளிடமும்போயிட்டு வாரேன் ஹெல்த் பார்த்துக்கோங்க“.,  என்று சொல்லி விட்டு வெளியேறி விட்டான்.,

         ‘யார் கவனித்தார்களோ.,  இல்லையோ மீரா அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.,  அவள் சரியான நேரத்திலிருந்து திலகவதியும்.,  சரவணனும் அவளை மீரா என்ற பெயரை சொல்லி அழைக்கவே இல்லை.,  மற்றவர்களிடம் பேசும் போது கூட  திலகவதி யாவது பெயர் சொன்னது உண்டு., ஆனால் அவனோ ஒரு முறை கூட பெயரை உச்சரிக்கவே இல்லை.

       அவர்கள் கார் அங்கிருந்து கிளம்பவும்.,  மீரா அமைதியாக சென்று அவளுடைய அறையில் படுத்து விட்டாள்.

            அவளின் மனம் பழையபடி நிலைகொள்ளாமல் தவிப்பது போல தோன்றியது.,  டாக்டர் ஏற்கனவே சொல்லிக் கொடுத்தபடி மனதை ஒருநிலைப்படுத்த கற்றுக் கொண்டவள் அவற்றையே மீண்டும் செய்ய தொடங்க.,  தலையெல்லாம் வலிப்பது போல தோன்றியது.,  எனவே எதுவும் சொல்லாமல் அப்படியே படுத்தவள் உறங்கிவிட்டாள்.,


      சென்னையிலிருந்து காரில் கிளம்பி அவர்கள் பெங்களூர் சாலையில் நுழையு முன் திலகவதி தான்பெங்களூர் தான் போகனுமா என்ன“.,  என்று கேட்டார்.

       “என்ன ஆச்சு மா“., என்றான்.

    “இல்லடா அப்படியே நம்ம எஸ்டேட்டுக்கு போயிட்டா என்ன.,  என்று யோசனை ஒரு பத்து நாள் எஸ்டேட்டில் தங்கி வந்தா நல்லா இருக்கும் இல்ல“., என்று சொன்னார்.

           “அம்மா திடீர் திடீர் ன்னு  முடிவு எடுப்பீங்களா“., என்று கேட்டார்.

     “ஏன்டா அங்க திடீர் ன்னு போனா என்ன.,  நமக்கு டிரெஸ் எல்லாம் இருக்கே.,  இப்ப போனா கூட பத்து நாள் தாராளமா தங்கலாம்., அப்புறம் எதுக்குடா தயங்குற“.,  என்று கேட்டார்.

        “இப்ப என்ன உங்களுக்கு குன்னூர் எஸ்டேட் போகனும் அவ்வளவு தானே.,  போகலாம் விடுங்கஎன்று சொன்னவன்.

     “ஆனால் ஒரு பத்து நாள் பொறுங்க., கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சிட்டு போவோம்“., என்றான்.

       “போடா எனக்கு இப்பவே போகனும் போல இருக்கு.,  நீ என்னன்னா ஏதேதோ சொல்ற., பத்துநாள் சொல்லிட்டு ஒரு மாசம் ஆக்குவ.,  எனக்கு உன்னை பத்தி தெரியாதா“., என்றார்.

        சிரித்துக்கொண்டேநிஜமா இந்த தடவை பத்தே நாள் தான்., முக்கியமான வேலை இருக்கு.,  முடிச்சிட்டு கண்டிப்பா நீங்களே வராட்டி கூட நான் கிளம்பிப் போயிருவேன் போதுமா“., என்று சொன்னான்.

     “சரி டா அப்ப சரி., ஆனால் பேச்சு மாத்துன உனக்கு பனிஷ்மென்ட் கூட பத்து நாள் அங்க இருக்கிற மாதிரி டீல் வச்சுக்கலாமா“., என்று கேட்டார்.

        “சரிமா டீலுக்கு ஓகே“., என்று சொன்னான்.

          சற்று நேரம் அமைதியாக இருந்தவர்.,  “ஏன்டா கிளம்பும் போது அவளுக்கு விசிட்டிங் கார்டு கொடுத்த“., என்று கேட்டார்.

         “அது ஒன்னும் இல்லம்மா அவளுக்கு டாக்டர் பற்றி டீடைல்ஸ் ஏற்கனவே டாக்டர் கொடுத்து இருக்கிறார்., அதைத் தவிர வேறு எதுவும்  ஹெல்ப் வேணுமின்னா சொல்லு அப்படின்னு சொல்லி தான் விசிட்டிங் கார்ட் குடுத்தேன் மா“., என்றான்.

      அவன் அங்கிருந்து கிளம்பும் போது அவளிடம் பேசிவிட்டு வெளியே வந்ததும்.,  மீண்டும் உள்ளே சென்றவன்., அவள் கையில் அவனுடைய விசிட்டிங் கார்டை கொடுத்து விட்டுஎந்த உதவினாலும் எப்ப என்றாலும் தயங்காம போன்  பண்ணுங்க“., என்று சொல்லி விட்டே வந்திருந்தான்.

    அதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தவன்., அமைதியாக பாதையை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

      திலகவதி அவனைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தார்., அவனுக்காக தான் எஸ்டேட் போவோமா என்று கேட்டார்., வீட்டிற்கு சென்றால் நிச்சயமாக அம்முவின் நினைவுகள் அதிகம் வரும்.,  அதை தவிர்க்கவே எஸ்டேட் போவோம் என்று சொன்னார்.,

      ஆனால் அவனோ வேலை இருக்கிறது என்று பத்து நாள் தள்ளி போடுகிறானே என்று யோசித்தவர்., சரி எப்படியும் பத்து நாளில் அவனை இழுத்துக் கொண்டாவது சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.,

          அவனின் மன மாற்றம் தான் இப்பொழுது முக்கியம் என்ற எண்ணம் அவர் மனதில் அதிகம் இருந்தது., அவன் மனம் மாறுமா.,

       மனம் என்பது அவ்வளவு எளிதில் மாறுவதில்லை மாறிவிட்டதாக  சொல்லி முகமூடி போட்டுக் கொள்ளலாம்.,

     ஒருவரின் கடமை மற்றவரின் மனதை நிறைசெய்வதாக இருந்தால் அதுவே அதற்கு கிடைத்த பரிசாகும்.

Advertisement