Advertisement

“அம்மு நிஜமா நீ தானா”., என்று கேட்டான்.

” ஐயோடா இன்னொரு தடவ இது கனவு இல்லன்னு ப்ரூவ் பண்ண கிஸ் எல்லாம் பண்ணமாட்டேன்., அதெல்லாம் தப்பு”., என்று சொன்னவள்.,

அவன் நெஞ்சில் தலையை வைத்து படுத்துக் கொண்டு.,  அவன் கன்னத்தை பிடித்து கிள்ளி வைத்தாள்.,

“ஷ்ஷ் ஹா” என்று அவன் சத்தம் கொடுக்க.,

“இப்ப புரியுதா.,  இது கனவல்ல நிஜம் நிஜம் நிஜம்.,  நான் இங்கதான் இருக்கேன்.,  நான் இங்கதான் இருக்கேன்”.,  என்று சொன்னாள்.

அவனின் அம்மு என்ற அழைப்பு அழுத்தம் ஆகியது., ” நிஜமாவா.,  உங்க வீட்ல நீங்க வரதுக்கு ஒன்னும் சொல்லலையா”.,  என்று கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “யாரும் எதுவும் சொல்லல., சொல்லிட்டு தான் வந்து இருக்கேன்”., என்று சொன்னாள்.,

“நீ எப்ப வந்த., யார் கூட வந்த”., என்று கேட்டான்.

அவள் நடந்ததை எல்லாம் சொல்லும் போதே அவனுக்கு கோபம் இருப்பதை அவன் கைகளின் பிடியில் உணர்ந்தவள்.,

“ரிலாக்ஸ் சரவணா., ரிலாக்ஸ்., நானே என்ன பைத்தியம் சொன்னதை கண்டு கொள்ளாமல்  இப்பவும் சொன்னா சொல்லிட்டு போறாங்க ன்னு வந்துட்டேன் இல்ல.,  அதுதான் அத்தை  சொல்லி இருக்காங்க இல்ல.,  நான் வந்து சண்டை போடுறேன் ன்னு சொல்லி இருக்காங்க.,

நான் அப்படியே கூட்டிட்டு போய் சண்டை போட்டுட்டு வந்துருவேன்”., என்று சொன்னாள்.

“ஏன் சண்டை போட உங்க அத்தை மட்டும் போதுமா”., என்று கேட்டான்.

“அத்த பையனும் வந்தா நல்லா தான் இருக்கும்”., என்று சொல்லி அவன் மேல் விரலை வைத்து சுரண்டினான்.

“ஆமா நீ இங்கே ரூமுக்கு வந்தது அம்மாவுக்கு தெரியுமா” என்று கேட்டான்.

“அது அத்த சொன்னாங்க., நீங்க”.,என்று சொல்லி அவர் சொன்னதையும் தான் சொன்னதையும் சொன்னாள்.,

“எங்க அம்மா என்னோட  இமேஜை டேமேஜ்  பண்ண  முடிவு பண்ணிட்டாங்க”., என்று சொன்னான்.

“அது உங்களை பற்றி தெரிந்து தானே சொல்லியிருக்காங்க.,  இவ்வளவு நேரம் ஆச்சு நீங்க டம்மி பீஸ்  அதுதான் பேசாம இருக்கீங்க”.,  என்று சொன்னாள்.,

“யாரப்பாத்து டம்மி பீஸ் ன்கிற.,  இரு அம்மாட்ட போய் கல்யாணத்துக்கு டேட் பிக்ஸ் பண்ண சொல்லிட்டு வரேன்”.,  என்று சொன்னான்.,

அவனை இழுத்து அணைத்துக் கொண்டவள்., “என்ன நீங்களும் பைத்தியம் நினைக்கிறீர்களா”., என்று கேட்டாள்.,

“லூசு”., என்றான்.

“பாருங்க என்னை  லூசு சொல்றீங்க”.,  என்று சொல்லி அவனிடம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

“நீ எப்பவுமே என்னோட அம்மு தான்”., என்று சொன்னாள்.

“அது தெரியும் எனக்கு”., என்று சொன்னாள்.

” எப்படி தெரியும்”., என்று கேட்டான்.

“நீங்க எனக்கு  நினைவு வந்துருச்சுன்னு சொன்ன அப்புறம் ஒரு தடவை கூட மீரா ன்னு  கூப்பிடல”.,  என்று சொன்னாள்.

சிரித்தவன்., “ஏனோ கூப்பிடனும் தோணல”.,  என்று மட்டும் சொன்னான்.

அவனை நிமிர்ந்து பார்க்க  அவளை தூக்கி கொண்டு எழுந்து நின்றவன்.,அவளை தன்னோடு சேர்த்து பிடித்துக்கொண்டு அவள் நெற்றியில் முத்தம் வைத்து.,  “உங்க வீட்டில் ஒன்னும் சொல்ல மாட்டாங்க தானே”., என்று கேட்டான்.,

” அதெல்லாம் அத்தை பேசுவாங்க.,  நாளைக்கு அத்தை சென்னை போகனும் ன்னு சொன்னாங்க”.,  என்று சொன்னாள்.

“இப்பவே கிளம்புவோம்”., என்று சொன்னான்.

“இதை மட்டும் அத்தை ட்ட சொன்னீங்க.,  உங்களுக்கு திட்டு இருக்கு., நீங்க தானே டாக்டரை விட்டு பேசி என்னை ஊருக்கு அனுப்பினீங்க.,  வாங்க நானே சொல்லி கொடுக்கேன்”., என்று சொல்லி சிரித்துக் கொண்டாள்.

அவனை அழைத்துக்கொண்டு அவளும் சேர்ந்து கீழே கவர அவர்கள் இருவரும் சேர்ந்து வருவதற்காகவே ஹாலில் காத்திருந்த திலகவதிக்கு தான் கண்ணீர் வழிந்தது.,  அது நிச்சயமாக ஆனந்த கண்ணீராக தான் இருக்கும்.,

மனதிற்குள் கணவரிடம் “என்ன நடந்தாலும் சரிங்க நம்ம மருமகளை கையோட கூட்டிட்டு போயி.,  அவங்க வீட்ல கல்யாணம் பேசிட்டு வரப் போறேன்., ஆனா அதுக்காக அவங்க வீட்டுல விட்டுட்டு வரமாட்டேன்.,  எவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ண முடியுமோ., அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணி அவளை நம்ம வீட்டு மருமகளா மாற்றிடுவேன்., அப்பதான் நம்ம பையனும் சந்தோஷமா இருப்பான்., எனக்கு நிம்மதியா இருக்கும்”., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

கீழே வரவும் “என்ன சரவணா., சென்னை க்கு  ஒரு வாரம் கழிச்சு போய் பேசிக்கலாம்”., என்று சொன்னார்.

“ஏன்மா நான் இப்பவே போவோம் ன்னு கேட்கிறேன்”., என்று சொன்னான்.

“மைசூர் வரை கோயிலுக்கு அழைஞ்சிட்டு வந்தது  செம டயர்டா இருக்கு.,  நான் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்கணும்”.,  என்று சொன்னான்.

“அம்மா”., என்றான்.

அவள் சிரித்துக் கொண்டே., “டேய் உன் அவசரத்துக்கு போக முடியாது., நான் மெதுவா தான் போவேன்”., என்று சொன்னவர்.,  அம்முவை பார்த்து கண்ணை காட்டியவர்., அவனை சீண்டி கொண்டிருந்தார்.,

பின்பு மறுநாள் மீராவின் வீட்டில் சென்று பேசிக் கொள்ளலாம் என்று பேசி முடிவு எடுத்துக் கொண்டிருந்தனர்.,

அன்று மீரா இரவு மாத்திரை போடாமலே நிம்மதியாக தூங்கினாள்.

அப்போது தான் உணவு நேரத்தில் அவர்களிடம் சொல்லி இருந்தாள்., “நாளை டாக்டரிடம் செல்ல வேண்டும்” என்று.,

“நிச்சயமாக போகலாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

அது போலவே மறுநாள் காலை அவளை மருத்துவமனையில் காட்டி விட்டு.,  அதன் பிறகு சென்னை சென்றனர்.

அங்கு அவளின் அண்ணன் மனைவியை நல்ல நாலு கேள்வி கேட்டுவிட்டார் திலகவதி.,

“யார் வீட்டு பொண்ணுக்கு., யார் மாப்பிள்ளை பார்க்கிறது.,  அவ என் வீட்டு மருமக., என் வீட்டு மருமகளுக்கு நீ மாப்பிள்ளை பார்ப்பீயா.,  யாரை கேட்டு பார்த்த., அது மட்டுமில்லாம பைத்தியம் ன்னு சொன்னீயா.,  என்ன நெனச்சிட்டு இருக்க.,

உனக்குத்தான் வித்தியாசமான பைத்தியம் பிடிச்சு இருக்கு., நீ முதல்ல டாக்டர போய் பாரு”.,  என்று சொன்னவர்.

“என் மருமகளை பற்றி இனிமேல் ஒரு வார்த்தை பேசினாலும்., உன்னால் இருக்கிற இடம் தெரியாம ஆக்கிருவேன்., யாருன்னு நினைச்சுட்டு பேசுற”., என்று சொன்னவர்.

அதன்பிறகே  அவர்களின் குடும்பத்தை பற்றி சொல்ல.,  தெரிந்து கொண்டனர்.,

மீராவின் அம்மா அப்பாவிடம் நேரடியாகவே பேசிவிட்டார் திலகவதி.

“இந்தா பாருங்க.,  இனிமேல் என் மருமகள இங்கெல்லாம் விட்டு வைக்க தயாராக இல்லை.,  எனக்கு என் மருமக மட்டும் போதும்.,  நீங்க எப்போ வர முடியும் சொல்லுங்க.,  இந்த வாரத்திலேயே ஒரு நல்ல நாளில் கல்யாணத்தை பண்ணிக்கணும்.,

கல்யாணத்தை முடிச்சுட்டு அதுக்கப்புறமா ரிஷப்ஸன் வைச்சிருக்கேன்.,  அதுக்கப்புறம் தான் அங்க எஸ்டேட்டுக்கு அவங்க அப்பாவ கும்பிட போறோம்”., என்று சொன்னார்.

அவள் அண்ணன் அமைதியாக.,  “அவள் படிப்பு முடியட்டும்”., என்று சொன்னான்.

“படிப்பு தானே.,  அது எக்ஸாமுக்கு நானே  கூட்டிட்டு வந்து எழுத வைச்சிருக்கிறேன்”., என்று சொன்னவர் “உங்கள நம்பி தான் அனுப்பினேன்.,  ஆனால் என் மருமகள் நொந்து போய் தான் வந்தா.,. இனிமேல் அப்படியெல்லாம் விட முடியாது”., என்று கறாராக பேசியவர்.,

அதன் பின்பு உடனடியாக தேதி குறித்து., அந்த வாரத்திலேயே திருமணத்தை முடிப்பது என்று முடிவு செய்தார்.

அதுபோலவே பெங்களூர் வந்தவர்கள் கோவிலில் வைத்து திருமணமும்., அதன் பிறகு ஒரு வாரம் கழித்து ரிசப்ஷனும் என்று முடிவு செய்து கொண்டனர்.,

கோயிலில் வைத்து திருமணத்தை முடித்து விட்டு.,  அதன் பிறகு மீராவின் குடும்பதினர் கிளம்பி சென்றனர்.,

ஒரு வாரம் கழித்து ரிசப்ஷன் க்கு வந்து விடுவதாக சொல்லி விட்டு சென்றனர்.,

அப்போது அவன் தான் அம்மாவிடம் கிண்டலாக “எஸ்டேட் க்கு வாங்க போவோம்”., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

“வேண்டாம்  நீ தான சொன்ன.,  பத்து நாள்ல கூட்டிட்டு போறேன் ன்னு., பரவாயில்லை போனா போகுது., கூட ஒரு வாரம் கழித்து போகலாம்”., என்றார்.

“என்னை ஏமாத்திட்ட ன்னு., இப்பவே நினைப்பீங்க., கூப்பிட்டா அடம் பிடிக்கிறதா சொல்லுவீங்க”., என்று சொன்னான்.,

“ஆமாடா., இப்ப ரிசப்ஷன் முடியட்டும் ஒன்று சேர்ந்து போவோம்”.,  என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

அவனும் சிரித்துக் கொண்டே “எப்படியோ எஸ்டேட் போறது கன்பார்ம்”., என்று சொன்னான்.,

“பின்ன இல்லையா.,  கண்டிப்பா போக வேண்டாமா”., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.,

அவள் தன் மருமகள் ஆகி விட்ட மன நிம்மதியோடு அவர் இருக்க., அவனோ தன் மனதில் நினைத்தவளே தனது மனைவி ஆகிவிட்டதை நினைத்து மிகவும் மகிழ்வோடு அமர்ந்திருந்தான்.

அன்றைய இரவு அவர்களின் தனிமையில் அவன் மார்பில் தலை வைத்து படுத்து இருக்க.,

அவனும் அவள் தலையைக் கோதிவிட்டபடி “பாட்டு பாடு அம்மு” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.,

“என்ன பாட்டு” என்றாள்.

“நீ என்ன பாடினாலும் கேட்பேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே.,

அவளோ

ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
பாா்த்துக்கொண்டே
பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க
காத்திருந்தோம்
ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாா்த்திருந்தோம் என்று பாட அவனோ.,

நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி.,

என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தம் வைத்து அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்..

மனதிற்குப் பிடித்த மனதை புரிந்து கொண்ட.,  வாழ்க்கை துணை அமைவது என்பது வரம் தான்.,

விட்டுக் கொடுத்துப் போபவர்கள்., கெட்டுப் போவதே இல்லை., எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது என்பது வரம்., வரம் கிடைக்கவில்லை என்று வருத்தப் படுவதை விட.,  அடுத்தவருக்கு அந்த வரத்தை கொடுக்க முயற்சி செய்யலாம்.,

        நான் நான் என்று இருவரும் சண்டை போடுவதை விட., நாம் என்று சொல்லி விட்டு வாழ்ந்து பார்த்து விடுங்கள்., 

         வாழ்க்கை ஒரு முறைதான்.

சந்தோஷத்தைத் தேடாதே; ஆனால் சந்தோஷமாயிருக்க சதா சர்வகாலமும் தயாராயிரு.

Advertisement