Advertisement

அப்போதும்  “எனக்கு மனசு பதறுது., நான் முன்னாடியே உன்ன கல்யாணம் பண்ணிக்க ன்னு சொன்னேன் இல்ல., பேசாம அவளையே கல்யாணம் பண்ணியிருந்தா நாம எதுக்கும் பயப்பட வேணாம்னு சொன்னேன்.,  நீ தான் அது இதுன்னு சொல்லிட்ட“., என்றார்.,

      ” அம்மா அப்படி சொல்லாதீங்க மா.,  அம்மு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் ன்னு இல்ல., அம்முவ கல்யாணம் பண்ணிக்கிறதுல எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது., ஆனா அவளுக்கு ஞாபகம் வந்து மீராவா மாறிட்டா., அவ மனசுல என்ன நினைப்பு இருந்துச்சு., அவளுக்கு எப்படிப்பட்டவங்கள  கல்யாணம் பண்ணனும் அவ மனசுல ஒரு கனவு இருக்கும் இல்ல.,  அந்த கனவுக்கு ஒத்துப்போகாத ஆளா நான் தெரிந்தேன் அப்படி னா அவ மனசு  என்ன பாடுபடும் யோசிங்க.,  நம்ம பழசெல்லாம் மறந்து இருக்க போய் தானே இப்படி ஒருத்தனுக்கு  நம்மள கட்டி வச்சிட்டாங்க ன்னு நினைக்க மாட்டாளா“., என்று சொன்னார்.

       “ஏன்டா உனக்கு என்னடா குறைச்சல்“.,  என்று ஒரு அம்மாவாக கேட்டார்.

      “அம்மா உங்களுக்கு உங்க பையன் அழகா தான் தெரிவான்.,  ஆனா அவளுக்கு என்னை விட அழகா எத்தனையோ பேர் தெரிய வாய்ப்பிருக்கு.,  அதனால தயவு செய்து தேவையில்லாத தை பேசாதீங்க.,

       ‌இப்போ அவர் மயக்கம் தெளிஞ்சு முழிக்கிற வரைக்கும் அமைதியா இருங்க“., என்று சொன்னான்.

         “இன்னும் மயக்கம் தெளியாம இருக்காளே டா., எனக்கு பயமா இருக்கே“., என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

         “புலம்பாதிங்க அவளுக்கு ஒன்னும் செய்யாது., சரியாயிடுவா..,  நான் வேணா அவங்க வீட்டுக்கு போன் பண்ணி சொல்லட்டா.,  ஒரு வேளை அவங்க வீட்ல உள்ளவங்க குரல் கேட்டால்., நினைவு திரும்ப வாய்ப்பு இருக்கலாம்“., என்று சொன்னான்.

     “ஆமாடா அதுவும் சரிதான்., ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லிடு.,  அவங்க அம்மா அப்பா வந்துருவாங்க“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

            சரவணனும் தான் போன் செய்து சொல்லி விட்டு வருவதாக வெளியே சென்றான்., அதற்குள் நர்ஸ் உள்ளே வர திலகவதியைநீங்க கொஞ்ச நேரம் வெளியே இருங்க மா“.,  என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்.

         அவர்கள் சென்ற சற்று நேரத்தில் அரைமயக்கத்தில் இருந்தவளுக்கு., இவர்கள் பேசியது அனைத்தும் கேட்க முடிந்தது.,  ஆனால் அவளால் அதற்குள் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தாள்.,

         அவளின் நினைவுகள் இப்பொழுது குழம்ப தொடங்கியது., தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அறியாமல் புலம்பத் தொடங்கியது அவள் மனது.,

      அவளுக்கு கண்ணிலிருந்து மட்டும் கண்ணீர் நிற்காமல் வடிந்து கொண்டே இருந்தது..

       நர்ஸ் வந்து பார்த்து விட்டு சிறுசிறு மாற்றங்கள் வந்து செல்வதை உணர்ந்தவர் பார்க்கும் போது தான் படுத்திருந்தவளின்  கண்ணின்  பக்கவாட்டில் கண்ணீர் வழிந்து கொண்டிருப்பது தெரிந்தது.,

                ஆனால் மயக்கம் இன்னும் தெளியவில்லை என்பதை உணர்ந்தவர்., அவசரமாக டாக்டர் அழைத்தார்.

        டாக்டர் வந்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தார்., மீண்டும் மீண்டும் அவளுக்கு சில  ஊசிகளை போட்டு விட்டார்.,

    சற்று நேரத்தில் அவளுக்கும் என்னவோ  என்று பயந்துபோய் சரவணன் உள்ளே வர., அவள் கால்கள் உதறுவதை பார்த்தவன்.,

       “டாக்டர் என்னாச்சிஎன்று கேட்டான்.

        “மயக்கம் தெளியுது., அவளோட பயம்., பதட்டம் தான் வேற ஒன்னும் இல்ல“.,  என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே நர்ஸ் ஒரு பக்கம் கையை பிடிக்க.,  இன்னொரு பக்கம் கையை திலகவதி பிடித்துக் கொள்ள., அவள் கால்களை தன் இரு கைகளாலும் கெட்டியாக பிடித்துக் கொண்டான் சரவணன்.

           மயக்கம் தெளிய சிறு சிறு அறிகுறிகள் தெரிந்த உடனே  டாக்டர் தான் யாரையும் உள்ளே இருக்க வேண்டாம் என்று வெளியே அனுப்பினார்.,

      அவளுடைய நிலை என்ன என்பது தெரியாமல் யாரும் முதலில் அவளை பார்க்க வேண்டாம் என்று சொல்லி டாக்டரும்.,  நர்ஸ் ம்  மட்டும் உள்ளே இருந்தனர்.,

         வீட்டினர் வெளியே அனுப்பப்பட்டனர்., மீராவின் குடும்பத்தினரும் வந்து கொண்டிருப்பதால் அவர்களுக்காக காத்திருக்கத் தொடங்கினர்.,


        உள்ளே டாக்டர் அவளின் விழிப்பதற்க்காக காத்திருக்க.,  எதிர்பார்த்தது போல கண் விழித்தவள் கண்ணீர் விட்டு அழுதாள்.,

        பின்பு எதுவும் சொல்லாமல் அவளிடம்என்னமா என்ன செய்துஎன்று கேட்டார்.,

          தலையை மட்டும் ஆட்டியவள் என்னை இங்கே எப்ப கூட்டிட்டு வந்தாங்க“., என்றாள்.

     “என்னம்மா சொல்லுஎன்றவர்காரணம் சொன்னால் தான் தெரியும்., ஆனால் பிரச்சனை எதுவுமே இல்லையே“.,  என்று சொன்னார்.

       அவள் தான் டாக்டரிடம்நான் எந்திரிச்சு உட்காரணும்“., என்று சொன்னாள்.

       நர்ஸ் ன் உதவியோடு அவளை அமர வைத்தனர்., “சொல்லுமா என்ன செய்துஎன்று கேட்டார்.,

         “எவ்வளவு நாளா நீங்க என்னைய பாக்குறீங்க“., என்று கேட்டாள்.

      டாக்டர் லேசான சிரிப்போடு நினைவு வந்துவிட்டது போல.,  என்று நினைத்துக் கொண்டுகிட்டத்தட்ட நாலு மாசத்துக்கு மேல உன்னை பார்த்துகிட்டு இருக்கேன் மா“., என்று சொன்னார்.

      “அப்போ நாலு மாசமா.,  நான் இங்க தான்  இருக்கேனா“.,  என்றாள் கண்ணீரோடு.,

       “இல்லைமா.,  நாலு மாசமா நீ சரவணன் வீட்ல இருக்க“.,  என்று சொன்னார்.,

         ஓஓ  என்றவள்., அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே.,

       டாக்டர் தான்அம்முஎன்று அழைத்தார்.

              லேசாக நிமிர்ந்து பார்த்தவள்.,  அமைதியாக இருந்தாள்.

         “உனக்கு அம்மு சொன்னா தெரியுதா., இல்ல உன்னோட ஒரிஜினல் பேர் சொன்னா தெரியுமா“., என்று கேட்டார்.

        டாக்டரிடம் அழுது கொண்டே அவள் சொன்னது., “அதுதான் டாக்டர் இப்ப எனக்கு குழப்பமா இருக்கு., இப்ப நான் அம்மு வா இல்ல., மீரா வா“., என்று கேட்டாள்.,

         டாக்டர் சற்று நேரம் விழித்தவர்.,  “என்னம்மா சொல்ற“., என்று கேட்டார்.

       எனக்கு மீரா ன்னு கூப்பிட்ட ஒரு குடும்பம்., பிரண்ட்ஸ் காலேஜ் ன்னு ஞாபகம் இருக்கு., ஆனா அம்முனு கூப்பிட்ட  ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப நெருக்கமா தெரியுறாங்களே.,

     ஒருவேளை போன ஜென்மத்தில் உள்ளதா அந்த மீரா ன்கிற விஷயம்“., என்று கேட்டாள்.

        ” இல்லம்மா உனக்கு என்ன தோணுது.,  அப்படிங்கறத இப்ப என்கிட்ட தெளிவா சொல்லு“., என்றார்.

        அவளுக்கு பழைய விஷயங்களை சொல்லிஅவை எல்லாம் எனக்கு எப்போதோ உள்ளது போல தோன்றுகிறது., ஆனால் நான் அம்மு ஆக இருந்தது இப்போது உள்ளது போல தோன்றுகிறது“., என்று சொன்னார்.

           அவர் அவளுக்கு விளக்கமாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.,

        உனக்கு விபத்து நடப்பதற்கு முன் நடந்த விஷயங்கள் அவை., உன் பெற்றோர்கள்.,  உடன் பிறந்தவர்கள் கல்லூரி தோழர்கள்.,  கல்லூரி என உள்ளது அனைத்தும் விபத்திற்கு முன் உள்ளது.,  இப்போது உள்ளது என்று நீ  சொல்வதெல்லாம் விபத்திற்குப் பின் உள்ளது., இரண்டுமே நினைவிருக்கிறதா“.,  என்று கேட்டார்.

      அழுதுகொண்டே தலையாட்டினாள்.,  “ஓகே இப்போ உன்னோட அம்மா அப்பா வருவாங்க“., என்று சொன்னார்.,

      அவள் ஏங்கி ஏங்கி அழுது துவங்கவும்.,  “எதுக்கு மாஎன்று கேட்டார்.

        “என் பிரெண்ட்ஸ் எல்லாம் பஸ்ஸோட மண்ணில் புதைந்ததை  நான் கண்ணால பார்த்தேன்“.,  என்று சொல்லி அழும் போது தான்.,

        அவள் ஏன் பிரண்ட்ஸ் கல்லூரி வளாகம் அதைப் பற்றிய நினைப்பு இல்லாமல் இருந்திருக்கிறாள்., என்பது அப்போது தான் புரிந்தது., ஏனெனில் கடைசியாக அவள் பார்க்கும் போது மண்சரிவில் பஸ் மாட்டுவதை தான்.,  எனவே அனைவரும் இறந்து விட்டார்கள் மண்ணில் மூழ்கி விட்டார்கள்.,  தானும் இப்போது இறக்கப் போகிறோம் என்ற எண்ணம் தான் அவள் கீழே விழும் போது அவள் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது., 

       அதனால் தான் கல்லூரி பற்றிய நினைப்பும்.,  அவர்கள் எல்லாம் பிழைத்துக் கொள்வார்கள் என்ற எண்ணமும் இல்லாமல் இருந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவர்.,

     “உன் பிரெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்காங்க.,  காலேஜ்ல இருக்காங்க., நாலு மாசம் தான ஆகுது.,  இன்னும் ரெண்டு மாசம் காலேஜ் இருக்கு.,  நீ இப்ப எக்ஸாம் எழுதலாம்.,  படிக்கலாம்என்று சொல்லும் போதே

ஏங்கி ஏங்கி அழுது துவங்கியவள்.,     “டாக்டர் நான் இப்போ அம்மு வா மீரா வா“.,  என்று கேட்டாள்.

     “ஒன்னும் பிரச்சனை இல்ல., தெளிவா சொல்லுறேன்“., என்று சொன்னவர் நர்சிடம் கண்ணை காட்டி அவளுக்கு தூங்குவதற்கு ஊசி போட்டு தூங்க வைக்க சொன்னார்.,

       அவளுக்கு ஊசி போட்ட சற்று நேரத்தில் அழுது கொண்டே தூங்கி விட வெளியே வந்தவர்.,

         “மீராவின் பெற்றோர்கள் எப்போது வருவார்கள்“., என்று கேட்டார்.

         “வந்துட்டு இருக்காங்க சார் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க“.,  என்று சொன்னவுடன்.,

       “சரி வரட்டும்என்று சொல்லிவிட்டு இவர்களிடம் எப்படி சொல்வது என்ற யோசனையோடு அமர்ந்திருந்தார்.

           அதே நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு கிட்டத்தட்ட 5 மணி நேரத்தில் வந்து விடலாம் என்ற சூழ்நிலையில்., அவர்களும் கார் பிடித்து வந்ததால் சீக்கிரமாக வந்து சேர்ந்தனர்.

     பின்பு இரண்டு குடும்பத்தையும் வைத்துக்கொண்டே டாக்டர் அவளுடைய நிலையை இப்போது எடுத்து சொன்னார்.,

      “அவள்  குழப்பிக் கொள்கிறாள்., இரண்டும் நினைவிருக்கிறது.,  இது இந்த ஜென்மம் வேறு ஜென்மமா என்று அவளுக்குள் ஒரு குழப்பம் வந்திருக்கிறது.,  அவள் ஒரே ஜென்மத்தில் தான் இரண்டு பிறப்பு எடுப்பது போல எடுத்திருக்கிறாள் என்பது அவளுக்குப் புரியவில்லை.,

      அவள் தன்னைத்தானே குழப்பிக் கொண்டு அழுது கொண்டிருக்கிறாள்“.,  என்று சொன்னார்.

     குடும்பத்தினரும் சரி.,  திலகவதி சரவணனும் சரி இதை எப்படி சரி செய்வது என்று குழம்பிப் போயினர்.

      டாக்டரை பார்த்து  “என்ன டாக்டர் செய்ய வேண்டும்என புரிந்து கொள்ள ஆவலுடன் கேட்டனர்.

      “அது தான் இப்ப கிரிட்டிக்கல்., ஏதாவது ஒரு நினைவு மட்டும் இருக்கு  ன்னு சொல்லி ஆச்சுன்னா.,  முழுக்க முழுக்க அந்த சைடே போயிடுவாங்க.,  இப்போ ரெண்டு நினைவும் இருக்கு.,  அதனால அவளுக்கு மைன்ட் செட் எப்படி இருக்கும்னா.,

    அந்த சைடும் வேணும்.,  இந்த சைடும் வேணும் ன்னு எதிர்பார்ப்போட  மனசு அங்கே இங்கே  ன்னு தடுமாறிட்டு இருக்கும்.,   சோ இப்ப நீங்க தான் முடிவு பண்ணனும்.,  என்ன பண்ணனும்னு“., என்று சொல்லிவிட்டார்.,

      “அவள் தூங்கி எழுந்த பிறகு தெளிவாக இருக்கிறாளா என்ன என்று பார்ப்போம் பொறுத்திருங்கள்“., என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்..

       குழம்பித் தவிக்கும் மனம் என்பது கலங்கிய நீர் போல தான்.,  அது தானாக தெளிவடையும் வரை யாராலும் எதுவும் செய்ய முடியாது., அமைதியாய் இருந்து விட்டால் நிச்சயமாய் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடையும்.

வானிலை மாற்றத்தை விட மிக வேகமாக இருக்கும் மனிதனின் மனநிலை மாற்றம்.

Advertisement