Advertisement

21

அவளின் மனநிலை இங்கு வந்த பிறகே ஓரளவு தெளிவாக இருப்பது போல அவளே உணர்ந்தாள். மாத்திரை போட்டாலும் அதிக தூக்கம் எல்லாம் இல்லாமல் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தாள்.

டாக்டரின் நம்பர் அவளிடம் இருப்பதால் அவளே டாக்டருக்கு அழைத்து பேசினாள்.,

சரவணன் வீட்டின் எண்ணிலிருந்து அழைக்கவும்., டாக்டர் “சொல்லுங்க சரவணன்”., என்று ஆரம்பித்தார்.

“இல்ல நான் அம்மு” என்று சொன்னாள்.

அவரோ “என்ன ஆச்சு மா., எப்ப இங்க வந்த., ஏன் அம்மு ன்னு சொல்லுற”., என்று கேட்டார்.

” டாக்டர் கொஞ்சம் சின்ன பிரச்சினை., அதனால தான் இங்க வந்து இருக்கேன்., நான் நாளைக்கு உங்களை வந்து மீட் பண்ண வரலாமா”., என்று அவளே டாக்டரிடம் முன்பதிவை பெற்றுக் கொண்டாள்.

“சரி மா வா., என்றவர்,  “சரவணன் இருக்காங்களா”., என்று கேட்டார்.

“அவங்களும் அத்தையும் கோயிலுக்கு போயிருக்காங்க., இன்னைக்கு மத்தியானம் தான் வருவாங்க.,  நான் நாளைக்கு வந்து பார்க்க வரேன் டாக்டர்.,  அத்தை கூட வர்றேன்”., என்று சொன்னாள்.

” சரி மா.,வா டேப்லெட் எல்லாம் எடுத்துக்கிற தானே”.,  என்று கேட்டு அவள் “ஆமாம்” என்று சொன்ன பிறகே  அழைப்பை வைத்தார்.

வீட்டில் சமையல் செய்பவரிடம் “நான் இன்னைக்கு சமைக்கட்டுமா”., என்று கேட்டாள்.

“அம்மு மா உங்களுக்கு சமைக்க தெரியுமா”., என்று கேட்டார்.

“அதெல்லாம் நல்ல செய்வேன்., எங்க ஊர் சமையல் செய்யட்டுமா” என்று கேட்டுக்கொண்டே தமிழ்நாட்டு சமையல் வகைகளை விதவிதமான வகைகளை பற்றி விவரித்து சொல்லிக் கொண்டு இருந்தாள்.,

அவர்கள் ஏற்கனவே மதிய உணவு வெளியே முடித்துவிட்டு வருவதாக சொல்லி இருந்ததால்., மதியத்திற்கு என்று எதுவும் செய்யாமல் மாலை சிற்றுண்டி வகைகளுக்காக  அவளே தயார் செய்து எடுத்து வைத்தாள்.,

அது மட்டுமல்லாமல் இரவு உணவிற்காக இவள் சொல்லியபடியே சமையல் செய்பவரும் எல்லாம் செய்து எடுத்து வைத்தார்.,  “சூடா செஞ்சி  கொடுத்திடலாம்”., என்று சொன்னாள்.

“நான் வந்தது தெரிய வேண்டாம்., சர்ப்ரைஸா போய் அவங்க முன்னாடி நிற்கனும்”., என்று சொன்னாள்.

“சரி மா சொல்லல”., என்று சொன்னார்.,

அதையே டிரைவர் இடமும் சொல்லி விட்டு.,  அவள் செருப்பை எல்லாம் ஒழித்து வைத்துவிட்டு.,  அவள் துணி எல்லாம் பின்னாடி காய்ந்து கொண்டிருந்ததால் அவற்றையும் எடுத்து கெஸ்ட் ரூமில் வைத்து விட்டு கிச்சனுக்குள் நுழைந்து கொண்டாள்.,

சரியாக அவர்கள் இருவரும் வந்து இறங்கும் நேரம் ஒழிந்திருந்து., அவர்கள் இருவரையும் பார்த்தவளுக்கு சற்று மனம் வலிக்கத்தான் செய்தது.,

இவள் எப்படி இவர்களை பிரிந்த இந்த  நான்கு நாள்களில் சற்று மெலிந்ததாக தோன்றியதோ.,  அது போல தான் அவர்கள் இருவருமே சற்று முகம் வாடியும்.,  சோர்வாகவும் தோன்றியது.,

கோயில் சென்று வந்ததால் அலைச்சல் என்று நினைத்துக் கொண்டாலும்., அவர்களின் எப்போதும் உள்ள முகம் அவளுக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.,  எப்போதும் அம்மாவும் மகனும் சிரிப்போடு பேசிக்கொண்டே.,  கேலியும் கிண்டலுமாக ஒருவரை ஒருவர் வாரிக் கொள்வார்கள்.,

சரவணனை பொருத்தவரை அவன் அம்மாதான் முதலில் தோழி என்பது அவளுக்கும் தெரியும்., அது போல தான் அவருக்கும் தன் மகன்தான் முதல் நண்பன்.,  அதன் பிறகு தான் மற்றவர்கள் அதை அடிக்கடி அவள் வீட்டில் இருக்கும் போது சொல்லிக்கொண்டே இருப்பார்.,

உங்க மாமா போனதுக்கப்புறம் எனக்கு எல்லாமே சரவணன் தான்.,  என்று அவர் திரும்ப திரும்ப சொன்னதை இப்போது நினைத்துக் கொண்டவள்.,  ஒழிந்திருந்து இருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.

அப்போது தான் சமையல் செய்பவர் சென்று தண்ணீர் கொடுத்து விட்டு “ஏதாவது சாப்பிடுறீங்களா., எடுத்துட்டு வரவா”., என்று கேட்டார்.

“மத்தியான சாப்பாடு முடிச்சிட்டோம்., கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வர்றேன்., ஈவ்னிங் டீ மட்டும் போதும்”., என்று சொல்லி விட்டு போய்விட்டார்.

சமையல் செய்பவரும் தலையை ஆட்டிக்கொண்டு உள்ளே வர.,

இவ்வளோ வாயில் விரல் வைத்து ‘சத்தம் போட்டுறாதீங்க’ என்பது போல பாவனை காட்டி கொண்டிருந்தாள்.

அவரும் சரி என தலையாட்டி விட மாலை சிற்றுண்டி வகைகளை அவள் கையாலேயே சுட சுட செய்து எடுத்தாள்.,

உளுந்து வடையும் தேங்காய் சட்னியும் செய்து வைத்தவள்.,  அதோடுகூட இனிப்பு பணியாரம்., கார பணியாரம் என்ற வகைகளையும் செய்து அவற்றிற்கும் தொட்டுக்கொள்ள சட்னி வைத்தவள்.,

தனித்தனியாக அவற்றையெல்லாம் தட்டில் வைத்து  சூடாக இருக்கும் படி எடுத்து வைத்தவள்.,  அவர்கள் டீ குடிக்க வந்து அமரவும் எடுத்து சமையல் செய்பவரிடம் கொடுத்துவிட.

அவர்களுக்கு அவரும் எடுத்து வைத்து கொடுத்து விட்டு சென்றார்.

இவள் அவர்கள் எப்போதும் குடிப்பது போல ருசியில் டீ தயாரித்து அனுப்பி வைத்தாள்.

அவர்கள் சமையல் செய்பவரிடம் “ஏம்மா இவ்வளவு செஞ்சா” என்று கேட்டார்.

“நீங்க தான் மதியம் வீட்ல சாப்பிடல இல்ல அதுதான்” என்று சொல்லி அம்மு சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொல்லி சமாளித்தார்.

“நீ இவ்ளோ ஐட்டம்  இப்பவே சாப்பிட கொடுத்துட்டா.,  அப்புறம் நைட் எப்படி சாப்பிடுவது”., என்று திலகவதி எப்போதும் போல பேச முயற்சி செய்தாலும் பேச்சில் ஒரு ஒட்டா தன்மை இருந்தது, போலவே இருந்தது.

அமைதியாக கிச்சனில் நின்றவள் ‘இப்பொழுதே போய் முன்னால் நின்று விடுவோமா’., என்று தான் யோசித்தாள்.

பின்பு அவரவர் அறைக்கு செல்லட்டும் என்று காத்திருந்தாள்.,

இரவு உணவுக்காக அடை அவியல் போன்றவற்றை செய்வதற்கு எல்லாம் தயார் செய்து ஏற்கனவே வைத்து      விட்டதால் சமையல் செய்பவர் தான் மீதியை தான் செய்து கொள்வதாக சொல்லிக்கொண்டிருந்தார்.,

இவளும் தன் முகம் கழுவி சுத்தம் செய்து கொண்டு டீ குடித்தாள், அவர்கள் அவரவர் அறைக்கு சென்று விட்டதை அறிந்து விட்டு மெதுவாக திலகவதியின் அறைக்குள் செல்வதற்காக போனாள்.

அங்கு எப்போதும் போல கதவு லேசாக சாத்தி வைக்கப் பட்டிருந்தது., மெதுவாக திறந்து கொண்டு செல்ல அங்கு திலகவதியும் தன் கணவரின் புகைப்படத்தின் முன் நின்று புலம்பிக் கொண்டிருந்தார்.

சத்தமே இல்லாமல் அவள் வந்தது கூட தெரியாமல்.,  தன் கணவரின் புகைப்படத்தை பார்த்து புலம்பிக் கொண்டிருந்தார்., தனியாக இருக்கிறோம் என்ற நினைவோ என்னவோ சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்.

“நான் என்னங்க பண்ணுவேன் அவன் மனசு கெடந்து தவிக்குது.,  எனக்கு தெரியுது.,  ஆனா அவன் வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொன்னால் தானே.,  நாளைக்கு ஏதாவது பேச முடியும்., அவன் எதுவுமே சொல்ல மாட்டேங்குறான்.,

இதோ கோயிலுக்கு போயிட்டு வந்தாச்சு., அவன் எப்பவும் சாப்பிடற சாப்பாடு அளவு எனக்கு தெரியாதா.,  மனசு கேட்க மாட்டேங்குது., ஏதோ சாப்பிடனுமே ன்னு சாப்பிடுறான்., இவன் இப்படி இருந்தா எப்படி நிம்மதியா இருக்க முடியும்.,

என்னால சாப்பிடவே முடியல.,  ஏனோ என்னமோ தெரியல இப்போ ஈவினிங் வீட்டிலிருந்த ஸ்நாக்ஸாக கூட இரண்டு சாப்பிட்டான்.,  அது கொஞ்சம் நிம்மதியா இருந்தது.,  ஆனாலும் பாருங்க எங்கிட்ட எதுவுமே பேசாமல் மாடிக்குப் போய்ட்டான்.,

ஆனால் பாருங்க இப்ப முன்னாடி மாதிரி நான் கேள்வி கேட்க முடியாது., ஏதாவது ஒன்னு பண்ணுங்களேன்”., என்று சொன்னவர்.

“பாருங்க அம்மு புள்ள இங்க இருந்த வரைக்கும் அத்தை அத்தைன்னு சுத்திக்கிட்டு இருந்துச்சு.,  இப்பவும் நாங்க தான் கொண்டு போய் கட்டாயப்படுத்தின மாதிரி.,  டாக்டர்ட்ட சரவணன் சொல்லி தான் டாக்டரும் பேசினாரு.,  கொண்டு போய் அவங்க அம்மா வீட்டுல விட்டுட்டு வந்துட்டோம்.,

போன் பண்ணி நம்ம பேசலாம்னு சொன்னாலும்., சரவணன் பேச விட மாட்டேங்கிறான். வேண்டாமா பேசாம இருங்க ன்னு சொல்லுறான்.,  எனக்கு பேசணும்னு ஆசையா இருக்கு.,  ஆனா அவன் பேச்சை மீறி பேச முடியல.,  சரி அந்த பிள்ளையாவது கால் பண்ணும் ன்னு பார்த்தா அவளும் ஒத்த போன் பண்ணல.,

அவங்க வீட்ல உள்ளவங்க அன்னைக்கு பேசியதோடு சரி., அதுக்கு அப்புறம் பேசலை.,  இப்ப நான் யார் கிட்டே போய் சொல்லுவேன் சொல்லுங்க., எனக்கு மனசுக்குள்ள தப்பாவே தோணிட்டு  இருக்கு., அவ கிட்ட  ஒரு தடவை பேசினா நல்லா இருக்கும்னு தோணுது., போன் பண்ணலாம்னா  இந்த பையனுக்கு தெரிஞ்சா திட்டுவானே ன்னு.,  இன்னும் பயமா இருக்கு., என்ன பண்ண”.,  என்று அவர் போட்டோவிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

அவர் கண்ணில் லேசாக கண்ணீர் துளி தேங்கி நின்றது.,

அதை தள்ளி நின்று பார்த்தவள்.,  எதுவும் சத்தம் செய்யாமல்., எதுவும் சொல்லாமல்.,

அவரை பின்புறமாக இறுக அணைத்துக் கொண்டு அவர் தோளில் தலைசாய்த்துக் கொண்டு., மேலும் இறுக அணைத்துக் கொண்டவள்.  அத்தை என்ற அழுகை குரலோடு அவரைக் பிடித்துக் கொண்டாள்.

அவருக்கு தான் நம்ப முடியவில்லை., ‘தான் ஏதும் கனவு காண்கிறோமா.,  அவளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பதால் இப்படி தோன்றுகிறதா’ என்ற நினைவோடு.,

தன் இடுப்பை கட்டி முன்புறம் சேர்ந்து இருந்த அவள் கைகளை பார்த்தவருக்கு நிஜமா என்று நம்ப முடியாமல்., தன் மேல் இருந்த கையை தடவிப் பார்த்தவர்.,

“அம்மு” என்று சொல்ல., “அத்தை” என்ற சத்தத்தோடு அவள் அழுவது மட்டுமே தெரிந்தது., “டேய் இங்க பாரு அழக்கூடாது., அதான் அத்தை ட்ட வந்துட்ட இல்ல”., என்று சொல்லி அவளை முன்புறம் இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

அவளோ அவர் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்., “நானே நீ வந்துட்ட ன்ற சந்தோஷத்தில் இருக்கேன்.,  நீ எதுக்கு அழுற., மறுபடியும் இவ கிட்டயே வரவா ன்னு நினைத்தா அழுற”., என்று கேட்டார்.,

அவளோ  அவரை அணைத்தபடியே தலையை ஆட்டியவள் “ஏன் அத்தை என்னை அங்கே விட்டீங்க.,  ஏன் அத்தை என்னை அனுப்புனீங்க”., என்று சொல்லி அழ.,

“என்னடா என்ன ஆச்சு”. என்று கேட்டார்.

சற்று நேரம் அவர் தோளில் சாய்ந்து பிடித்தபடி நிற்க.,

“எத்தனை வயசு ஆச்சு எனக்கு.,  ரொம்ப நேரம் நிற்க முடியாது”.  என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு கட்டிலில் சென்று அமர்ந்தவர்., அவளை தன் மடியில் சாய்த்துக் கொண்டார்.

மெதுவாக தலை கோதிக் கொடுக்க அவரை இடுப்போடு கட்டிக்கொண்டு அவர் மேலேயே முகம் புதைத்து படுத்திருந்தவள்.,  சற்று நேரம் அமைதியாய் இருந்தாள்.

Advertisement