Advertisement

10

        பெங்களூர் வந்து சேர்ந்தவளை வீட்டில்  நல்லபடியாக பார்த்துக் கொண்டனர்.,

         அவள் உடையை மாற்றியவுடன் அப்படியே படுத்து தூங்கி விட்டாள்., வந்த  அவள் தூங்குவதைப் பார்த்து விட்டு அறையில் லேசாக ஏசி வைத்து கதவை மெதுவாக சாத்தி வைத்தவர்.,  வீட்டில் பத்து நாள் இல்லாததற்கு சேர்த்து வீடு எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விட்டு வந்தார்.,

     எல்லா வேலைகளும் சரியாக நடந்து இருக்கிறதா என்பதை பார்த்துக் கொண்டிருந்த அதே நேரம்., தன்னை ரெப்பிரஷ் செய்து கொண்டு வந்த சரவணன் தான்., “என்னம்மா அம்மு எங்கே., சத்தமே இல்லை”., என்று கேட்டான்.

           “தூங்குறாடா தூங்கட்டும்., நான் அங்க ஊர்ல டாக்டருக்கு போன் பண்ணி கேட்டுட்டேன்., டேப்லட் உடைய  எஃபேக்ட் ல  தூங்குறா., நல்ல  தூங்கட்டும் ன்னு சொன்னாங்க., அது மட்டுமில்லாம அவளுக்கு தூக்கம் ரொம்ப முக்கியம்.,  எவ்வளவுக்கெவ்வளவு தூங்குறாளோ அவ்வளவுக்கவ்வளவு அவளுக்கு நல்லது ன்னு சொன்னாங்க ., அதுதான் தூங்கிட்டும் ன்னு விட்டுட்டேன்”., என்று சொன்னார்.

           “சரி மா., டின்னர் டைம்க்கு அவளை எழுப்பிருங்க”., என்று சொன்னவன் தன் அலுவலக விஷயங்களை பற்றி போன் செய்து விசாரித்து கொண்டிருந்தான்.,

         குடும்ப டாக்டருக்கு போன் செய்து கேட்டான்.,

        அவரோ “நாளை வர வேண்டாம்.,  டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கவில்லை., நாளை மறுநாள் வாங்க., ஒரே ஒரு சின்ன சோதனை மட்டும் செய்வோம்., அதிலேயே அவளுடைய ஆரோக்கியம் பற்றி தெரிந்து விடும்.,

        அவளால் எளிதாக பழைய நினைவுகளை  மீட்டெடுக்க முடியும் என்றால்., அந்த பரிசோதனையை மேற்கொண்டு செய்யலாம் இல்லை என்றால் சற்று தள்ளிப் போட வேண்டியதிருக்கும்”., என்று அவளுக்கு ட்ரீட்மெண்ட் காக பேசியிருக்கும் டாக்டர் சொன்னதாக சொன்னார்.,

      “சரி டாக்டர் ஒன்னும் பிரச்சனை இல்ல”.,  என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

      “இப்ப புது இடத்தை பார்த்த உடனே அந்த பொண்ணு என்ன செய்து”.,  என்று கேட்டார்.

       “தூங்கிட்டு இருக்கா” என்று சொன்னவன்.,  அந்த டாக்டர் அங்கு கொடுத்த மருந்துகளை போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தான்.

        அவரும் “பிரச்சினை இல்லை., சரியான  மருந்து தான் கொடுத்திருக்காங்க”., என்று சொன்னார்.

       நாளை மறுநாள் அப்பாயின்மென்ட்  நேரத்தை  உறுதி செய்து கொண்டவன்.,  அதன் பிறகு அம்மாவிடம் போய் டாக்டர் சொன்ன விஷயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தான்.,

        அவரும் “சரிடா., அம்மு எப்படியோ சீக்கிரம் குணமாகிட்டா போதும்”., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

        தூங்கி எழுந்தவளோ  இருட்டிய பிறகு எழுந்திருந்தால்.,  வீட்டை பார்த்தவள் எதுவும் சொல்லாமல் சுற்றி சுற்றி பார்த்து விட்டு தலையை பிடித்துக் கொண்டாள்.,

        திலகவதி அம்மா “என்னடா ஆச்சு”.,  என்று கேட்டார்.,

       “இல்லத்த எனக்கு ஏன் இதெல்லாம் புதுசா தெரியுது”.,  என்று கேட்டாள்.

           “அப்படியா தோணுது”., என்று அவரும் கேட்டார்.

          “இல்ல.,  நான் இங்க தானே உங்க கூட தானே இருந்தேன்னு சொன்னீங்க”.,  என்று கேட்டாள்.,

         “ஆமாடா., எங்க கூட தான்  இருந்த”.,  என்று சொன்னார்.

        “அப்புறம் ஏன் எனக்கு இந்த இடம் எல்லாம் புதுசா தெரியுது.., நான் ஏற்கனவே இங்க இருந்தேனா.,  எனக்கு இந்த இடம் தெரிஞ்சு இருக்கணும் இல்ல”., என்றாள்.

      அவளுக்கு ஞாபகம் இல்லை என்பதே இப்போது தான்., அவள் உணர தொடங்கி இருக்கிறாள்., என்பதை உணர்ந்தவர்.

        “அது ஒன்னும் இல்லடா., உனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு இல்ல., அதனால உனக்கு ஒரே குழப்பமா இருக்கு., இங்க இருந்தோமா.,  என்ன பண்ணுனோம்னு.,  வேற ஒன்னும் இல்ல., நீ இங்க தான் இருந்த”.,  என்று சொன்னார்.,

            அவளும்., “ஓஓ சரி என்று சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்து கொண்டாள்.,

       ஆனால் அவள் கண்ணில் அவர்களது வீட்டை பார்த்தோ.,  அல்லது வீட்டில் வேலை செய்பவர்கள் அவர்களுக்கு தரும் மரியாதையை பார்த்தோ.,  சிறு மாற்றம் கூட வந்து போகவில்லை., சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.,

         அதை கவனித்துக் கொண்டிருந்த சரவணன் தான்.,  “அந்த பொண்ணோட நார்மல் பிஹேவியர் தான் மா இருக்கு.,  சிலர் தெரியாத அல்லது புரியாத விஷயத்தையோ., இல்ல இடத்தையோ.,  எக்சைட்மென்ட் ஆ பார்ப்பாங்க.,  பார்க்காத அதிசயத்தைப் பார்த்த மாதிரி பார்ப்பாங்க”., என்று சொன்னான்.

       அவன் அம்மா தான்.,  “ஒரு வேளை அவங்க வீடு இந்த மாதிரி இருக்குமோ.,  என்னவோ”., என்று சொன்னார்.

       “இல்லம்மா., நான் அப்படி யோசிக்கல அந்த பொண்ணோட மென்டாலிட்டி முன்னாடியே இப்படி  தான் இருந்திருக்கும்  அப்படின்னு எனக்கு தோணுது., ஏன்னா நீ யார வேணா இருந்துட்டு போ., நான் இப்படித்தான் இருப்பேன் அப்படின்னு நினைப்பாங்க இல்ல., அந்த மாதிரி மென்டாலிட்டி இருக்குமோனு தோணுது.,

           “நீ இப்படி ன்னா.,  அது உன்னோட எனக்கும் அதுக்கும் சம்பந்தம் கிடையாது நினைப்பாங்க இல்ல., அந்த மாதிரி தான் தோணுது., ஏனோ என் மனசுக்கு அப்படி தான் யோசிக்குது”., என்று சொல்லிக்கொண்டிருந்தான்.,

        “அப்படி இருக்குமோ”., என்று கேட்டார்.

          இருக்குமோ., இல்ல அப்படித்தான் இருக்கும்னு எனக்கு தோணுது., இந்த பொண்ணு நீங்க சாதாரண டிரஸ் வாங்கி கொடுக்கும் போதும் அதை பெருசா எடுத்துக்கல., இப்போ நீங்க பார்த்து பார்த்து வாங்கி கொடுக்கும் போதும் அது அவளுக்கு பெருசா தெரியல.,

         சும்மா சாதாரணமா ஏதோ ஒரு டிரெஸ் வேணும் அப்படிங்கற மாதிரி தான் தோணுது., ஊட்டியில் வச்சு டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கா.

       அவளுடைய குணங்கள் சில விஷயங்களில் மாறாது அப்படின்னு சொன்னாங்க தானே.,  அவ தானா அவளுடைய வேலையை செஞ்சுகிட்டாலும்.,  ஒரு ஓரமா உட்கார்ந்துட்டா., பிறகு ஏன் அப்படின்னு நம்ம பேசிட்டு இருக்கும் போது அந்த டாக்டர் சொன்னாங்க ஞாபகம் இருக்கா..,

          அவளுடைய சில விஷயங்கள்.,  அவளுடைய குணங்கள்., அவளுடைய சாதாரண பழக்கம் எப்படி இருக்குமோ.,  அந்தப் பழக்க வழக்கங்கள் மாறாது.,  அவை எப்போதும் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும்., என்ன பழைய ஞாபகங்கள் இல்ல அவ்வளவுதான் அப்படின்னு சொன்னாங்க இல்ல., என்று சொன்னவன்.,

      எஸ்டேட்ல் வைத்து டாக்டரிடம் “எப்படி இவ்வளவு சரளமா வாசிக்கிறா” அப்படின்னு கேட்கும் போது..,  அவங்க சொன்னாங்க இல்ல  “இந்த பொண்ணுக்கு வாசிக்கிற பழக்கம் இருக்கலாம்., அதனால தான் சலிக்காம வாசிக்கிறா ன்னு சொன்னாங்களா.,  அப்படி கூட இருக்க வாய்ப்பு இருக்கு இல்ல மா”.,  என்று சொன்னான்.,

        “அப்படியும் இருக்கும்டா.,ஆனாலும் இதெல்லாம் நல்லபடியா சரி ஆயிட்டானா.,  நமக்கு அது போதும்., அதை விட வேற என்ன வேண்டும்”., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.,

           இரவு உணவிற்குப் பிறகு.,  அம்மா கையை பிடித்த படியே படுத்திருந்தாள்.,

         “என்னடா”., என்று அவர் கேட்டார்.

          “இல்லத்த.,  எனக்கு எங்கேயோ புதுசா வந்திருக்கிற மாதிரி., ஒரு மாதிரி இருக்கு”.,  என்று சொன்னாள்.,

       “ஒன்னும் இல்லமா., எப்போ இருக்கிற இடம் தான்.,  நீ எப்பவும் என் கூடத்தான் இருப்ப”., என்று சொன்னார்.,

         “அப்படியா”., என்று கேட்டு விட்டு அமைதியாக கண்மூடி கொண்டாள்.

       பகலில் அதிக நேரம் தூங்கியதாலோ  என்னவோ., சற்று நேரம் உறக்கம் வராமல் உருண்டு கொண்டே இருந்தவள்.,  பின்பு மாத்திரையின் வீரியத்தாலும்  வந்த களைப்பிலும் உறங்கி விட்டாள்.,

      காலையில் எப்போதும் போல எழுந்து அவள் வேலையை  அவள் செய்து கொண்ட பின்பு வெளியே வந்தவள்., அவர் அவளுக்கு ஊட்டியில் வைத்து வாங்கிக் கொடுத்திருந்த சாதாரண  உடை தான் அணிந்திருந்தாள்.,

            “வேற டிரஸ் போட்டுக்கலாம் இல்ல”., என்று கேட்டார்.

              ” இல்லை அதெல்லாம் வேண்டாம்., இதே போட்டுக்கிறேன்”., என்று சொன்னாள்.,

          “ஆமா என் டிரஸ் எல்லாமே ஆக்சிடெண்ட்ல காணாமப் போச்சா”.,  என்று கேட்டாள்.,

          அவரோ “நீ உங்க வீட்ல இருந்து வரும் போது கொஞ்சமா தான் கொண்டு வந்திருந்த.,  அது அப்படியே போயிருச்சு”.,  என்று சொன்னார்.,

        “அப்படியா”., என்று கேட்டுக் கொண்டு அமைதியாகி விட்டாள்.,

         அவனும் அலுவலகம் கிளம்பி வரவும்., “எங்க போறீங்க” என்றாள்.

       அவன் அம்மாவை சிரித்தபடி திரும்பி பார்த்தான்.,

         அவரோ “அம்மு யாரும் கிளம்பும் போது எங்க போறீங்கன்னு கேட்கக் கூடாது”., என்றார்.,

           “ஏன் கேட்க கூடாது., அப்ப எப்படி கேட்கணும்”., என்றாள்.

            சிரித்து விட்டவர்., “அதெல்லாம் ஒன்னும் இல்ல.., அவன் ஆபீஸ் போறான்.,  அவன் வேலை முடிச்சுட்டு வருவான்.,  பத்துநாள் ஊரிலேயே இருந்தாச்சி இல்ல., அப்ப அவனுக்கு ஆபீஸ்ல வேலை எல்லாம் அப்படியே இருக்கும் தானே”., என்று சொன்னார்.

           “ஆபீஸ்ல உங்களுக்கு வேற யாரும் வேலை பார்த்து தர மாட்டாங்களா”.,  என்று கேட்டாள்.,

          அவன் “ஆஹா அது சரி.,  இது நம்மோட சொந்த கம்பெனி., எல்லாவற்றிருக்கும்  ஆள் இருப்பாங்க., வேலை எல்லாம் பார்த்து வச்சிருப்பாங்க.,  ஆனாலும் நான் போய் செக் பண்ணனும் இல்ல.., சரியா செஞ்சு இருக்காங்களா இல்லையா., ன்னு பார்க்கணும் இல்ல”.,  என்று சொன்னான்.

         இவளும் சரி என்று  கேட்டுக் கொண்டாள்.,

    பின்பு அவனிடம் “எப்ப வருவீங்க” என்று கேட்டாள்.,

      “ஏன் என்ன வேண்டும்”.,  என்று கேட்டான்.

      “இல்ல சும்மா கேட்டேன்”., என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டாள்.

         அதன்பிறகு அலுவலகத்திற்குச் சென்றாலும் அவ்வப்போது அம்மாவிடம் என்ன செய்கிறாள் என்று கேட்டுக்கொள்ள தவறவில்லை.,

          அதன் பிறகு அவனுக்கு வேலை இழுத்துக் கொள்ள மாலை நேரம் போன் செய்து கேட்டான்.

        ” பகலில் தூங்கவே இல்ல டா., தூங்கு ன்னு சொன்னதுக்கு., நம்ம வீட்டுக்கு பின் பக்கம் தெருவில் இருக்குற அந்த பார்க் அதை சுத்தி இருக்குற கார்டன் அதையே பார்த்துட்டே இருக்கா., எங்கேயோ பார்த்து இருக்கேன்னு சொல்றா., மாடி ரூம் பால்கனியில் உட்கார்ந்துட்டே இருக்கா.,  நான் அதுதான் சொல்லிட்டு இருக்கேன்., நம்ம எஸ்டேட்டில் பார்த்திருப்ப அப்படின்னு சொன்னா.., ரொம்ப யோசனைக்கு பிறகு  ஓ சரி ன்னு கேட்டுக்கிட்டா”., என்று சொன்னார்.

       “இல்லமா கார்டன் போயிருப்பாங்க., அந்த மாதிரி பிளவர் ஷோ அந்த மாதிரி ஏதாவது பார்த்திருப்பா., பின்னாடி பார்க் அதை சுற்றியுள்ள இடமெல்லாம்  நிறைய பூச்செடி இருக்கிறதால.,  அவளுக்கு அப்படித்தான் இருக்கும்.., பார்த்தபடி தோணுது.,  ஒன்னும் இல்லம்மா விடுங்க அப்படியே இருக்கட்டும்”., என்று சொல்லி விட்டான்.,

       மருத்துவமனை செல்ல வேண்டியதை சொன்னான்., “டேய் நா மட்டும் எப்படிடா தனியா கூட்டிட்டு போவேன்”., என்று அம்மா கேட்டான்.,

         நாளைக்கு பகலில் தானே ம்மா., நான் கண்டிப்பாக கூட இருப்பேன்.,   மத்தியானம் 12 மணிக்கு மேல தான் வர சொல்லி இருக்காரு., சோ நான் காலையில ஆபீஸ்க்கு சீக்கிரம் வந்து வொர்க் முடிச்சுட்டு.,  12 மணிக்கு கரெக்டா ஹாஸ்பிடல் தான் வருவேன்.,  நீங்க அவள கூட்டிட்டு ஹாஸ்பிடல் வந்துடுங்க”.,  என்று சொல்லிக்கொண்டிருந்தான்.,

          “சரிடா சீக்கிரம் வா”., என்று சொன்னார்.

        “இல்ல மா.,  இன்னும் கொஞ்சம் ஒர்க் இருக்கு.,  முடிச்சிட்டு கரெக்டட் ஆ டின்னர் நேரத்துக்கு வந்துருவேன்”., என்று சொல்ல அவரும் சரி என்று கேட்டுக்கொண்டார்.

          இரவு உணவிற்கு வந்தவன் சேர்ந்தமர்ந்து சாப்பிடும் போது அவளிடம்.,  “பகலில் என்ன செஞ்ச.,  போர் அடிச்சதா.,  புக் வாசிச்சியா”., என்று கேட்டான்.,

        திரு திருவென விழித்தாள்., அவன் அம்மாவை பார்த்து “சோ நீங்க செல்லை கொடுத்து விளையாட விட்டு வேடிக்கை பார்த்து இருக்கீங்க”.,  என்று கேட்டான்.

Advertisement