Advertisement

அவள் அம்மாவோ.,  “இல்ல மீரா நான்தான் சொல்லிட்டேனே., உனக்கு கொஞ்சம் ஹெல்த் நல்ல ஆன பிறகு தான் கல்யாணம் பண்ணனும் அப்படின்னு., அதை தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்“., என்று சொன்னார்.

          “சோ., உங்கள பொறுத்தவரைக்கும் நான் ஹெல்த் சரியில்லாதவ., அப்படி தானே“., என்றவள்.,

       “அப்புறம்  யாரை கேட்டு மா.,  கல்யாணத்துக்கு முடிவு பண்ணுனீங்க., உங்கள பொருத்தவரைக்கும் இப்போ மீராவை வந்திருப்பது., அந்த வீட்டு அம்மு  மட்டும் தான்., அதுவும் டாக்டர் சொல்லி தான்., நான் இங்க வந்து இருக்கேன், என்ன பொறுத்த வரைக்கும் எனக்கு ஞாபகம் வரும் போது., இது என்னோட முன்ஜென்மம் ன்னு தான் நான் யோசிச்சேனே ஒழிய.,

    என்னோட இப்போ உள்ள நிகழ்காலம் ன்னு நான் நினைக்கவே இல்ல.,  டாக்டர் சொல்லி சொல்லி தான் இந்த வாழ்க்கை ஆக்சிடென்ட் க்கு முன்னாடி முன்னாடி ன்னு பலதடவை எடுத்துச் சொல்லி தான் என்னை அனுப்பி இருக்காங்க.,

        நான் இந்த வீட்டு மீரா அப்படின்னு நினைச்சு தான்., என் மனச நானே ட்ரெயின் பண்ணிட்டு இருக்கேன்.,  ஆனா போற போக்க பாத்தா இங்கே என்னால செட்டாக முடியாதுன்னு தோணுது.,  தயவுசெய்து என்னைக் கொண்டுபோய் பெங்களூரில் விட்ருங்க.,

       நான் அங்கு அம்முவா வே இருந்துட்டு போயிருவேன்.,  என்னால இந்த மீரா கேரக்டரா என்னை ஏத்துக்க முடியல.,  எனக்கு புடிக்கலை.,  நான்  என் மனசை சமாதானப் படுத்தி மாறிருவேன்னு தான் நினைச்சேன்.,  ஆனா மாறமுடியும் தோணவே இல்லை“., என்று சொல்லி அழத் தொடங்கவும்.,

      அவள் அக்காதான் தன்னோடு சேர்த்து பிடித்துக்கொண்டு அவள் முதுகை தடவி விட்டபடி., “ஒன்னும் இல்லைடா எல்லாம் சரியா போயிடும்.,  ஒரு நாளைக்கு ரெஸ்ட் எடு“., என்று சொன்னார்.

      “இல்ல என்னால முடியும் தோணவே இல்ல., நான் உங்கள எல்லாரையும் நிமிர்ந்து பார்த்துப் பேசும் போதெல்லாம் உங்க கண்ணுல ஒரு பரிதாபமோ.,  ஐயோ பாவம் ன்கிற அந்த எண்ணம் மட்டும் தான்., உங்க  எல்லார் முகத்திலும் இருக்கு.,  என்னால அத பாக்க முடியல.,  என்னைய நார்மல் மீராவா  நீங்க ஏத்துக்கவே இல்ல.,  உங்களுக்கே என்னைக்கு என்னைய மீராவா ஏத்துக்க முடியுமோ., அன்னைக்கு நான் வாரேன்.,

     அப்படி இல்லாட்டி என்ன எங்கேயாவது வெளியே அனுப்பி விடுங்க., என்னால இங்கே இருக்க முடியாது“., என்று சொன்னாள்.

         மீராவின் அண்ணனோஒன்னும் இல்ல டா., சரியா போயிடும் சரியா போய்டும்“., என்று சொல்லி தன் அக்காவின் தோளில் சாய்ந்திருந்தவளின் தலையை தடவி கொடுத்தான்.

             அவன் மனைவியை பார்த்து முறைத்தபடி., அம்மாவிடம்உங்களுக்கு இப்ப என்ன அவசரம் ன்னு அவளுக்கு கல்யாணம் பேசினீங்க.,  யாரை கேட்டு கல்யாணம் பேச சொன்னீங்க.,  மாப்பிள பார்க்கணும் அப்படி இப்படின்னு பேச்சு  எடுத்தீங்க இருக்கு., அவளுக்கு தான் காலேஜ்  இருக்கு.,  எக்ஸாம் முடிக்கணும் அந்த வேலை எல்லாம் இருக்கு.,  அத விட்டுட்டு உங்களுக்கு என்ன அவசரம்“., என்று சொன்னான்.

       அவனின் மனைவி தான்., “நான் தான் சொன்னேன்., ஒரு நல்ல இடம் வந்துச்சு.,  பொண்ணு நல்லா இருக்கா அப்படின்னு சொன்னாங்க., அவங்களுக்கு சரி ன்னு சொன்னாங்க., அது மட்டும் இல்லாம“.,  என்று ஏதோ சொல்ல வந்தவள் அப்படியே நிறுத்தி விட..,

      “என்ன அது மட்டுமில்லாம“., என்று அவள் அக்கா கேட்டாள்.

          “இல்ல அது வந்து உங்க தங்கச்சி ஏற்கனவே நாலு மாசம் ஒரு இடத்துல போய் அங்கே இருந்து இருக்கா., நல்லபடியா தான் திரும்பி வந்தா ன்னு  எப்படி தெரியும்., அதனால சட்டுபுட்டுனு கல்யாணத்தை பண்ணி கொடுத்தா“., என்று சொன்ன அடுத்த நிமிடம் மீராவின் அண்ணன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.,

       “கொன்னுருவேன் பாத்துக்கோ.,  நல்லபடியா இருக்கும் னா இரு.,  இல்லாட்டி உங்க அம்மா வீட்ட பார்த்து போயிக்கோ.,  உன்னை யார் இங்கே இரு ன்னு தாங்கவெல்லாம்  செய்யல., நான்தான் அன்னைக்கே டைவர்ஸ் பண்றேன்னு சொன்னேன் இல்ல.,  எல்லாரும் சேர்ந்து தானே இவளை திருப்பியும் சமாதானம் பண்ணி பேசி வைச்சிங்க., உன்னை போய் லவ் பண்ணி கல்யாணம் பண்ணினேன் நினைச்சா., எனக்கே அசிங்கமா இருக்கு.,  என்ன பேச்சு பேசுற., கொலை பண்ணிடுவேன் ஞாபகம் வச்சுக்கோ“., என்று சொன்னவன்.

     மீராவிடம் உன் ஆசைப்படியே பெங்களூரில் கொண்டு விடுறேன் டா., நீ அங்கேயே இரு., நிச்சயம் அங்க நிம்மதியா இருப்ப., எக்ஸாம் டைம் நானே வந்து உன்னை கூட்டிட்டு வரேன்.,  நான் அவங்க வீட்ல பேசுறேன்“., என்று சொன்னான்.

      “பேச வேண்டாம்., நான் பார்த்துக்கிறேன்“. என்று சொன்னாள்.

        அவள் அக்கா  “நானும் கூட போய் மீராவை அங்கு விட்டு வருகிறேன்“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

   மதிய உணவை கட்டாயப்படுத்தி உண்ண வைத்தனர்., அவளை அழைத்துக் கொண்டு பெங்களூருக்கு கிளம்பினர்., மீராவின் அக்காவும் அண்ணனும்.,

        அங்கு செல்வதற்கு முன் போன் செய்து கேட்டனர்.,

    அவர்கள்  வீட்டின் நம்பருக்கு அழைத்து கேட்க., அவர்கள் கோயிலுக்கு சென்று இருப்பதாக தகவல் வந்தது.,

          முதலில் திலகவதி அம்மாவின் நம்பருக்கு தான் முயற்சி செய்தார்கள்.,

        அது சுவிட்ச் ஆஃப் எனவும் வீட்டின் எண்ணிற்கு அழைத்து கேட்டனர்., அவர்கள் அம்முவுக்காக வேண்டிய வேண்டுதலை நிறை வேற்றுவதற்காக மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்று இருக்கிறார்கள் என்று வீட்டில் வேலை பார்ப்பவர்கள் சொன்னார்கள்.

      அப்படியா என்று கேட்டுக்கொண்டு வைக்கப்போகும் போது மீரா அவனிடம் இருந்து போனை வாங்கி பேசினாள்.

      “நான் அம்மு பேசுறேன்என்று சொல்லவும்., “நல்லா இருக்கியா பாப்பா., எப்படி இருக்க“.,  என்று கேட்டார்.

          “நல்லா இருக்கேன்., நீங்க எப்படி இருக்கீங்க“., என்று அங்கு வேலை செய்பவரிடம் கேட்டுக் கொண்டிருந்தவள்.,

    “அத்தை எங்க போய் இருக்காங்கஎன்று கேட்டாள்.,

          ” கோயிலுக்கு போய் இருக்காங்க., நாளைக்கு மதியானம் தான் வருவாங்க“., என்று சொன்னவுடன்.

         “அக்கா நான் பெங்களூர் வரேன்“., என்று அவள் சொல்லவும்.,

          “பஸ் வர்றீயா., ட்ரெயின்ல வருகிறாயா“., என்று கேட்டவர்., நேரத்தை மட்டும் சொல்லு மா., கார் அனுப்ப தான் கேட்டேன்., டிரைவர் அனுப்பி வைக்கிறேன்“.,  என்று அவர் சொன்னார்.

          “நான் வந்து வரும்போது போன் பண்றேன்., பஸ்ல தான்  வாரேன்என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்.

            அவங்க ஊர்ல இல்லையாமே., நாளைக்கு மத்தியானம் தான் வர்றாங்களாம்“., என்று அவள் அண்ணன் சொன்னான்.

          “இல்ல நாளைக்கு மத்தியானம் அத்த வந்துருவாங்க.,  என்னை கொண்டு விட்டாலும் சரி., இல்லை என்னை பஸ் ஏத்தி விடுங்க.,  நான் போய்க்கிறேன்“., என்று சொன்னாள்.

           மனது கேட்காமல் தான் இருவரும் சேர்ந்து அழைத்துச் சென்றனர்.,  இவள் பாதி வழியில் போகும் போதே., வீட்டிற்கு மீண்டும் அழைத்து இந்த பஸ்ஸில் வந்து கொண்டிருப்பதாக பஸ் நம்பரோடு சேர்த்து சொன்னாள்.,

    பஸ் சரியாக  இரவு நேரத்தில் வந்து சேரும் என்பதால் அந்த நேரத்தில் அவர்கள் வீட்டு டிரைவர் வந்து அவர்களை அழைத்து சென்றார்.

       அங்கு கெஸ்ட் வந்தால் தங்குவதற்கு என இருக்கும் ரூமில் அக்கா அண்ணனோடு அவளும் தங்கிக் கொண்டாள்.

           அவர்கள் இருவரும் மறுநாள் காலையில் கிளம்பவேண்டும்., “வீட்டில் சண்டை எந்த அளவில் இருக்கிறது என்று தெரியவில்லைஎன்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

      ” சரி நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்“., என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டாள்.

         அவர்கள் காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பி விட., “அம்மு மா எப்படி இருக்க“., என்று வீட்டில் உள்ளவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

       அவளோநல்லா இருக்கேன்“., என்று சொன்னாள்.

        “நல்லா இருக்கேன்னு சொல்றீங்கமா., ஆனா மெலிஞ்சு போயிட்டியே மா“.,  என்று சொன்னார்.

      “அதெல்லாம் இல்ல சரியாயிருவேன்“., என்று சொன்ன படிஅத்த எப்போ வருவாங்க“., என்று கேட்டாள்.

          அவங்க ரெண்டு பேரும் உங்களை ஊருல விட்டுட்டு வந்த பிறகு ரொம்ப டல்லாவே இருந்தாங்க.,  இரண்டு நாள் தான் வீட்டில் இருந்தாங்க., அப்புறம் தான் கோயிலுக்கு போயிட்டு வரேன்., நேத்திக்கடன் செலுத்த தான் போய் இருக்காங்க.,  கோயிலுக்கு போய்ட்டு உடனே வர மாட்டாங்க.,  எப்பவுமே சாமுண்டீஸ்வரி கோயில் போனா கூட ஒரு நாள் எடுத்துட்டு அங்க பக்கத்தில் உள்ள கோயிலுக்கு போய்  பார்த்துட்டு தான் வருவாங்க“., என்று சொன்னார்.

சரி வரட்டும்“.,என்று சொல்லிக் கொண்டிருந்தாள். “மத்தியானம் வந்துடுவாங்க“., என்று சொல்லவும்  அவளும் ஒரு முடிவுக்கு வந்தாள்.

முடிவு எடுக்கும் வரை யோசிக்கவேண்டும்., முடிவு எடுத்த பின் அதை பற்றி யோசிக்க கூடாது.

மற்றவர்களின் ஏளனங்கள் என்னை ஒருபோதும் வீழ்த்தியதில்லை காரணம் என் மனவலிமைக்குப் பலம் அதிகம்.

Advertisement