Advertisement

17

           நாட்கள் கொஞ்சம் வேகமாக நகர்வது போல் இருந்தாலும்.,  அவர்களைப் பொறுத்தவரை எப்போதும் உள்ளது மாறாமல் நிதானமாக நகர்ந்து கொண்டிருந்தது.,

          இப்பொழுதெல்லாம் அம்மு அவளறியாமல் சில காரியங்களைச் செய்யத் துவங்கி இருக்கிறாள்.

           எப்போதும் இருப்பது போல  தெரிந்தாலும்.,  சில நேரங்களில் குழப்பமான மனநிலையில் தலையை பிடித்தபடி அமர்ந்திருப்பாள்.,

             பின்பு நாட்கள் சாதாரணமாக இப்படியே போய்க் கொண்டிருக்க.,  சில நாள்களில் அவளறியாமல் பாடல்களை முணுமுணுப்பதை கவனித்துக் கொண்டு தான் இருந்தார்., அதை சரவணன் இடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.,

          “டேய் இன்னைக்கு இந்த பாட்டு முணுமுணுத்தா டா.,  இதுவரைக்கும் வந்த பாட்டை எனக்கு தெரிஞ்சு அவ கேட்கலைஎன்றவர்.,

           “நீ தான் பாட்டு தேடி செலக்ட் பண்ணி கொடுக்கிற.,  இல்லாட்டி பழைய பாட்டு நான் தேடி கொடுக்கிறேன்., ஆனா இப்ப முணுமுணுக்கற பாட்டு அந்த பிள்ளைங்க காலேஜ்ல பாடின பாட்டு ன்னு உனக்கு ரெக்கார்டு அனுப்பினாங்க இல்ல அது தானே“.,  என்று கேட்டனர்.

         “ஆமாம்மாஎன்று சொன்னவன்.,  “விடுங்க அவளுக்கு ஞாபகம் வந்துச்சுன்னா வரட்டும்., தானா வர்ரது நல்லது தான்னு டாக்டர் சொன்னாரு.,  அதனால தான மாத்திரை மருந்து ன்னு கொண்டு போய்க்கிட்டு இருக்கோம்.,  விடுங்க பார்த்துக்கலாம்“., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

            அந்த வார கடைசியில் சரவணனும் வீட்டில் இருக்க., வேலையெல்லாம் முடிந்து மதிய நேரத்திற்கு மேல்.,

        திலகவதி தான் சும்மா இருக்காமல்., “டேய் சரவணா., இன்னைக்கு தான் நீ வீட்ல இருக்க.,  ஏதாவது  படம் போட்டு விடு., பார்க்கலாம்“.,  என்று சொன்னார்.

     ” எப்பொழுதும் ஹோம் தியேட்டர் ரூமில் வைத்து தான் படம் போடுவான்., ஆனால் இன்று என்ன படம் போட்டாலும் சொல்லுடா.,  இந்த அவ பார்க்கணும் சொன்னா.,  இவ பாக்கணும்ன்னு சொன்னா“., என்று சொல்லி வீட்டில் வேலைக்கு இருக்கும் இரு பெண்களையும் சேர்த்து சொன்னார்.

       சிரித்துக்கொண்டேஇப்ப என்ன ஹாலிலே போட்டு விடுறேன்.,  எல்லாரும் உக்காந்து பாருங்க., எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு., நான் அத பார்க்கிறேன்“., என்று சொன்னான்.

          அவர்கள் சொன்ன  படத்தை வைத்து விட்டு.,  அவன் ஹாலில் வேறு ஒரு இடத்தில் அமர்ந்து தன் லேப்டாப்பை  கையில் வைத்துக்கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.,

         அவ்வப்போது போன் செய்து பிஏ விடமும்., மேனேஜர் இடமும் பேசிக்கொண்டே வேலை செய்து கொண்டிருந்தான்.

            இங்கோ படம் ஓடிக்கொண்டிருக்க.,  ஏற்கனவே பார்த்த படம் தானே.,  எத்தனை தடவை தான் பார்ப்பீங்க“., என்று அவன் அம்மாவை திட்டிக் கொண்டிருந்தான்.

         அந்தப் படத்தின் ஒரு காட்சியில் பஸ் லேசாக தடம்புரண்டு மலையில் தொங்குவது போன்ற காட்சி வரும்.,  ‘அதை பார்க்கும் போது எத்தனை முறை பார்த்தாலும் இதே தான் பார்ப்பாங்க‘., என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு.,  அந்த நேரம் தான் அங்கிருந்த அம்முவின் நினைவு வந்தது.,

        அவசரமாக திரும்பி பார்க்கும் போதே.,  அவள் அந்த காட்சியை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள்.,

       அதற்கு முன் வந்த பாடலை எல்லாம் சிரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்தவள்., அந்த காட்சியை மட்டும் வெறித்து நோக்கிக் கொண்டு இருந்தாள்.

       சற்று நேரத்தில் அவளுக்கு கை கால் உதறல் எடுக்க தொடங்கியது.,  தற்செயலாக அவளையே பார்த்துக் கொண்டிருந்ததவன்.,

       லேப்டாப்பை வைத்து விட்டு.,  “அம்மாஎன்ற சத்தத்தோடு வேகமாக ஓடி வந்தான்.,  அப்போது தான் திலகவதியும்அய்யோ அருகில் அவளை வைத்துக் கொண்டே இந்தப் படத்தை போடச் சொல்லி விட்டோமே“.,  என்று பதறிப்போனார்.

       அவசர அவசரமாக டிவி ஆஃப் பண்ணும் போதே.,  அவள் அரைமயக்க நிலைக்குச் சென்றவளின்  கை மட்டும் சரவணனை இறுக்கமாக பிடித்திருந்தது.,

            சற்று மூச்சு இழுத்து மூச்சு விட்டவள்., “பிரண்ட்ஸ் பஸ்“., என்று சொல்லியபடியே மயங்கி விட்டாள்.

             அவனும் அவன் அம்மாவிடம்அவளுக்கு ஞாபகம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்., ஆனா மயக்கம் தெளிய வைக்க முயற்சி பண்ணணும்., சீக்கிரம்“., என்று சொன்னான்.

       அதற்குள் வீட்டில் இருந்தவர்கள் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளிக்க அவளுக்கு மயக்கம் மட்டும் தெளியவே இல்லை.,  உடனடியாக மருத்துவமனைக்கு போன் செய்து விட்டு அவளை தூக்கி காரில் வைத்துக் கொண்டு அம்மாவும் மகனும் மருத்துவமனைக்கு கிளம்பி சென்றனர்.

               அங்கு டாக்டரும் ட்ரீட்மென்ட் கொடுத்துக் கொண்டிருந்தார்.

          அவளுக்கு மயக்கத்தை மட்டும் தெளிய வைக்க முடியவில்லை., டாக்டர் சற்று  யோசனைக்கு தான் போனார்., என்ன செய்வது என்ற  நினைவோடு அவளுக்கு கொடுக்கக்கூடிய ஊசி மருந்துகளை கொடுத்துவிட்டு.,  இவர்களின் குடும்ப டாக்டருக்கு அழைத்து சொன்னார்.

      அவரும் வந்து என்னென்ன மருந்துகள் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்., “மயக்கம் தெளிய தான் நேரம் எடுக்கிறது.,  ஆனால் பல்ஸ் எல்லாம் நார்மலாக இருப்பதால் பயப்பட எதுவும் இருக்காது., பொறுத்திருந்து பார்ப்போம்“. என்று பேசிக் கொண்டிருக்கும் போதே.,

       திலகவதி தான்அவங்க வீட்டுக்கு சொல்லிடலாமாடா“., என்று கேட்டார்.

         “பொறுங்க இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம்., ஒரு வேளை மயக்கம் தெளிந்த அப்புறம் வேணா சொல்லிக்கலாம்., மயக்கம் தெளிஞ்சு அவளுக்கு உண்மையிலேயே பழைய ஞாபகம் வந்துருச்சு னா சொல்லலாம்.,  இல்ல பழைய ஞாபகம் வரல.,  இப்போ உள்ள ஞாபகம் மட்டும் தான் இருக்கு  என்றால்., நம்ம வெயிட் பண்ணனும்.,  அவசரப்பட்டு அவங்க வீட்டுக்கு சொல்லவேண்டாம்“., என்று சொல்ல திலகவதியும் அது சரி என்று ஒத்துக் கொண்டார்.

               அன்று பகல் முழுவதும் மயக்கத்திலேயே அவள் இருக்க., இரவு அந்த அறைக்குள் அம்மாவும் மகனும் சென்று காத்திருந்தனர்.,

       அவளிடம் இருந்து எந்த அசைவும் இல்லை எனும் போது டாக்டர் தான் நீங்கள் வேண்டுமானால் பேச்சுக் கொடுத்துப் பாருங்களேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.,

      அப்போது அவள் கன்னத்தை தட்டிஅம்மு அம்மு“., என்று அழைத்தனர்.

     அவளிடம் எந்த அசைவும் இல்லை., டாக்டர் தான்அவளிடம் ஏதாவது பேச்சுக் கொடுங்கள்“., என்று சொன்னார்.

         அம்மாஎன்னடா அதுக்குள்ள தூங்கிட்ட., எந்திரிச்சு பாட்டுபாட வேண்டாமா“., என்று சொல்லி அவளுக்கு பிடித்த விஷயங்களை பேசியும்., எந்த அசைவும் இல்லை எனும் போது என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருந்தனர்.,

     சரி கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்வோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

டாக்டரிடம் திலகவதி புலம்ப தொடங்கியிருந்தார்.,  “இப்படி ஆகும்னு நினைக்கலை டாக்டர்., எனக்கு அந்த படத்துல அப்படி ஒரு ஆக்சிடெண்ட் சீன் வரும்ன்றதே மறந்து போச்சு.,  எப்பவும் நாங்க ஜாலிக்காக உட்கார்ந்து பார்க்கறது., எங்க மெயிட் இரண்டு பேருக்கும் அந்த படம் ரொம்ப பிடிக்கும் அதற்காக எப்பவாது இந்த மாதிரி டைம்ல அவங்களுக்கு படத்தை போட்டு விட்டால் சந்தோஷமா இருப்பாங்க.,  ன்னு  நினைச்சு தான் போட்டு விட்டேன்.,

           ஆனால் அதை பார்த்து பதறுவா ன்னு ஞாபகம் இல்லையே., இல்லனா போட்டு இருக்கவே மாட்டோமே“., என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

           டாக்டர் தான்அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா., நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க“., என்று சொன்னார்.

         “கொஞ்ச நேரம் அவ கூட இருக்கிறேனே“., என்று சொன்னார்.

         அவள் கையை பிடித்துக்கொண்டே அமர்ந்திருந்தார். அம்மாவிற்கு துணையாக சரவணனும் அங்கேயே நின்றான்.

         டாக்டர்சரி கொஞ்ச நேரம் இருந்து விட்டு வந்து விடுங்கள்என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டார்.

        நர்சும் பல்ஸ் ரேட் எல்லாம் செக் செய்து விட்டு., அவளுடைய நிலையையும் பரிசோதித்து விட்டு வெளியே சென்றார்.

         அவர்கள் போனவுடன்., அவளின் கையைப் பிடித்தபடி திலகவதி புலம்பிக் கொண்டிருந்தார்.,

       “சரவணா ஏன்டா இந்த பொண்ணுக்கு மட்டும் இப்படி பிரச்சினை வந்துச்சு.,  யோசிச்சு பாரு இவள நம்ம கையில எடுத்து வந்தப்ப பாவம் புள்ள எப்படி பரிதவித்துப் போனா., அதுக்காகவே வெளியே சொல்லாமல் எத்தன நாளு பொத்தி பொத்தி வைத்திருந்தோம்., இன்னைக்கு பார்த்தா இந்த படத்தை  போட்டு விட சொல்லுவேன்., 

         அதுவும் இப்படி ஒரு காட்சி வர்ற  படத்தையா போட்டு விடுவேன்.,  புள்ள மனசுக்குள்ள  எப்படி பதறுனாலோ.,  தெரியலையே எனக்கு நினைச்சாலே பயமா இருக்கு“.,  என்று சொன்னார்.

       “விடுங்கம்மா.,  அவளுக்கு ஞாபகம் வந்திட்டா நல்லது தானே“.,  என்று சொன்னான்.

          “ஞாபகம் வந்தாலும் அந்த ஞாபகத்துல அவளுக்கு வலி தருமே.,  அவளுக்கு தெரியும் எப்படி விழுந்தா ன்னு., மறுபடியும் பயப்படுவாளே டா.,  ஒருநாள் ட்ரீட்மெண்ட் கொடுத்ததுக்கே ஒரு வாரம் பயந்து போய் இருந்தாலே.,  அவளுக்கு ஏதாவது குழப்பம் வந்துச்சுன்னா உன்னையும் என்னையும் எப்படி பிடிச்சிட்டே இருப்பாளே.,  ஏன் அவங்க அம்மா அப்பாவை இங்க இருக்காங்க ன்னு தெரிஞ்சும்., ஏன் அவ அம்மா அப்பா கூட நம்மால் அனுப்ப முடியல.,

            மறுபடியும் அவ குழம்பிற கூடாதுன்னு தானே.,  என் காலேஜ் கூட நீ  வேலைக்கு போனாத  பொய் சொல்லி கூட்டிட்டு போனோம்.,  அவ மனச குழப்பிக்க கூடாது ன்னு தானே.,  ஆனா இப்பவும் என்னால அது கெட்டுப் போச்சு“.,  என்று புலம்பினார் சரவணன் அம்மா.

        “அதெல்லாம் ஒன்னும் இல்ல.,  ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க.,  நல்ல ஆகிருவா., நல்லபடியா எந்திரிச்சிருவா“.,  என்று சொன்னான்.

         “ஆமாடா நல்லா படியா எந்திரிப்பா டா., அவ நமக்கு அம்மு தான்., அவங்க வீட்டுக்கு மீரா., அந்த மீராவை பத்திரமாக திருப்பி தருவோம் ன்னு தானே சொன்னோம்“.,  என்று சொன்னார்.

         அம்மா அவளுக்கு நினைவு வந்துருச்சுன்னா.,  பத்திரமா தான் அவங்க வீட்டுல திருப்பிக் கொடுக்கப் போறோம்.,  நம்ம வீட்ல நம்ம அம்முவா இருக்கிற வரைக்கும் அவளை நம்ம பாதுகாப்பா பார்த்துக்குவோம்.,  அவ்வளவு தான் அதுக்கு இப்படி பொலம்புறீங்க விடுங்க“.,  என்று சொன்னான்.,

      

Advertisement