Advertisement

11

         மருத்துவமனையில் சோதனை அறைக்கு சென்றவள்., சற்று பயந்தது போலவே இருந்தாள்.

           அவளை சோதனை அறையின் படுக்கையில் அமர வைக்க..,  அப்போதும் சரவணன் கையை பிடித்துக்கொண்டு தான் ஏறி அமர்ந்தாள்.,

      டாக்டர்அம்மு படுத்துக்கோ“., என்று சொன்னார்.

        அவளோ பயந்து போய் திலகவதியை பார்த்தாள்.,  திலகவதியோஒன்னும் இல்லடா.,  அத்தை பக்கத்துல தானே இருக்கேன்., டெஸ்ட் தானே படுத்துக்கோ“.,  என்று சொன்னார்.,

         திலகவதி ஒருபுறம் இருந்தாலும்., மற்றொரு புறம்  சரவணன் கையை அழுத்தமாகப் பிடித்து இருந்தாள்.,

      அவனும்ஒன்னும் இல்லடா.,  ரிலாக்ஸ் இரு., பக்கத்தில் தானே இருக்கோம்., டாக்டர் கேக்குறதுக்கு மட்டும் நீ கரெக்டா அன்ஸர் பண்ணி விடுஎன்று சொல்லி விட்டு தள்ளி நின்றான்.

          டாக்டர்அம்மு நான் சொல்றத கவனமா கேக்கனும் சரியா“.,  என்று நிதானமாக பேசத் தொடங்கினார்.

     அவளுக்கு சிலவற்றை சொல்லிக் கொண்டிருக்க., அதே நேரம் அவளுக்கு அருகில் இருந்த நர்சிடம் சொல்லி மருந்து செலுத்த சொன்னார்.

          அவளை அரை மயக்க நிலைக்கு கொண்டு செல்லும் மருந்து செலுத்தப்பட்டது., அரை மயக்க நிலையில் இருக்கும் போதே அவளுக்கான மருத்துவம் தொடங்கியது.,

        அந்த மருந்தின் வீரியத்தில் தூக்கமும் இல்லாமல்  மயக்கமும் இல்லாமல் அரைத்தூக்கத்தில் இருப்பவள் போன்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தாள்.,

          அப்போது அவள் விபத்தில் இருந்து தப்பித்து சரவணன் கையில் கிடைத்த நாளை சொல்லி டாக்டர் கேட்க தொடங்கினார்.,

       “இப்போ  சரவணன் உங்களை  காப்பாற்றி எடுத்துட்டு வர்றாரு., இதுக்கு முதல்ல என்ன நடந்தது“., என்று கேட்டார்.

             அவள் சற்று திணறலாகஎப்போ என்ன“., என்று கேட்டார்.

         “சரவணன் தூக்கிட்டு வந்தது உங்களுக்கு தெரியுமா“.,  என்று கேட்டார்.,

         இல்லை எனும் விதமாக தலையை மட்டும் அசைத்தாள்.,

         “சரி அந்த ரூமுக்கு வந்ததுக்கப்புறம்என்று சொல்லி.,  அவள் மயக்கம் தெளிந்த பொழுது அவள் இருந்த நிலையை விவரித்து கேட்டனர்.,

       அவள் லேசாக அங்குமிங்கும் தலையசைத்தாள்.,

          பின்புசரி இப்போ நம்ம முன்னாடி போறோம்.,  இன்னும் முன்னாடி போறோம்.,   உங்களுக்கு இதுக்கு முன்னாடி எந்த விஷயம் ஞாபகம் இருக்கு.,  அப்படின்னு இப்ப நீங்க சொல்லணும்“., என்று சொல்லிவிட்டு

      சற்று நேரம் அவளிடத்தில்புரியுதா“., என்று கேட்டுக் கொண்டிருந்தவர்., அவள்இருட்டாஇருக்குஎன்று சொல்லிக் கொண்டிருந்தாலும் கண்கள் இறுக அழுத்தமாக  மூடியிருந்தது.,

       அவளுக்கு தெரியவில்லை என்பதை புரிந்து கொண்ட டாக்டர்., “இன்னும் கொஞ்சம் நேரம் முன்னாடி போங்கஎன்று சொன்னார்.,

        ம்ம்ம்., ம்ம்ம் என்று முனகினாள்.,

        “இப்ப  என்ன தெரியுது“., என்றார்.

         முகத்தை கையை வைத்து அழுத்தி துடைத்துக் கொண்டவள்., “மழை., நான் நனையுறேன்“., என்றவள் கண்ணை திறக்க முயற்சி செய்தாள்.,

          “கொஞ்சம் முன்னாடி போங்க., இப்போ என்ன பாக்குறீங்க“., என்று கேட்டார்.,

      “மேகம்.,  மேகத்து பக்கத்துல நான் இருக்கேன்“., என்றாள்.

         “இன்னும் கொஞ்சம் முன்னாடி போங்க“., என்று சொன்னார்.,

            “இப்போ நீங்க எந்த இடத்தில் இருக்கீங்க“.,என்று கேட்டார்.

          அப்போது அவள்மண்ணு சரியுது“.,  என்று மட்டும் சொன்னாள்.

        “எங்க மண்ணு சரிஞ்சது“., என்று கேட்டார்.,

       “பஸ் வந்துகிட்டு இருந்த ரோட்ல“., என்று சொன்னாள்.,

         “பஸ்ல வந்தீங்களா“., என்று சொன்னார்.,

        ஏதோ ஒரு விதமாக தலையை மட்டும் அசைத்தாள்.,

      “பஸ்ல உங்க கூட யாரெல்லாம் இருந்தா“., என்று சொன்னார்.,

         “க்ளாஸ் உள்ள எல்லாரும்“., என்று மட்டும் பதில் அளித்தாள்.

     ” க்ளாஸ்ல உள்ளவங்க னா ப்ரண்ட்ஸ் தானே., அவங்களோட  எங்க வந்து இருக்கீங்கஎன்று கேட்டார்., 

         “அது அதுஎன்று சொன்னவள்.,  மேற்கொண்டு வேறு வார்த்தை எதுவும் சொல்லாமல் தலையசைவில் பதில் சொல்லி கொண்டிருந்தாள்.

               அதற்கு மேல் அவளுக்கு பதில் சொல்ல தெரியாமல் அமைதியானலும் கண்ணீர் வடிந்தது.,

            “சரி மண் சரிந்து.., அதுக்கப்புறம் என்ன ஆச்சு“.,  என்று கேட்டார்.,

            அவள் கை ரெண்டையும் விரித்து தேடத் தொடங்கினாள்., மூச்சை இழுத்து விட்டு மூச்சு திணறுவது போல.,  மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கை கால் நடுங்கத் தொடங்கியது.,

         “என்னாச்சு அம்மு ஏன் இப்படி பதட்டமாகுறீங்க., ரிலாக்ஸ்“., என்றார் டாக்டர்.,

          “கீழே விழுந்துட்டேன்“., என்று மட்டும் சொன்னவள் கையை பக்கத்தில் நீட்டி தடவ முயற்சித்தாள்.,

     “ஒண்ணுமில்ல.,  இங்க பாருங்க.,  உங்க பிரெண்ட்ஸ் யாராவது உங்க கண்ணுக்கு தெரியுறாங்களா“.,  என்று கேட்டார்.,

      இல்லை எனும் விதமாக தலையசைத்தாள்.,  

      ” இப்ப ஏன் கையை நீட்டுறீங்க“., என்று கேட்டார்.

       “பிடிக்கணும்.,  பிடிக்கணும்“., என்று கையை நீட்டி மீண்டும் சத்தமாக சொன்னாள்.,

         “உங்க பேரு ஞாபகம் இருக்கா“., என்று அருகில் இருந்த மற்றொரு டாக்டர் கேட்டார்.,

         மறுப்பாக தலையசைத்தவள்.,
சற்று பதறியவளாக கைகாலெல்லாம் உதிரத் தொடங்கியது., சற்று வேகமாக மூச்சை இழுத்து விட்டு அவள் உடல் பயத்தில் உதறி மயக்க நிலைக்குச் செல்லும் முன் டாக்டர் கையை காட்ட.,

      சரவணன் வேகமாக அருகில் வந்தவன்., அவள் கையை பிடித்துக் கொண்டான்.,

       அவன் கையை அத்தனை அழுத்தமாக பிடித்தவளை பார்க்கும் போது.,  அவன் கையை விட மாட்டாள் என்பது போலவே அவனுக்கு தோன்றியது.,  ஏனெனில் அத்தனை அழுத்தமாக பிடித்திருந்தாள்.,

       முதல் நாள் மயக்கம் தெளிந்து எழும் போது எப்படி அழுத்தமாக கையை அசைக்க முடியாத அளவிற்கு பிடித்திருந்தாலோ., அதே அளவிற்கு பிடித்து இருந்தவள்., மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அரை மயக்க நிலையில் கண்ணை திறக்கவும்.,  சரவணன் அருகில் இருப்பதை பார்த்தவள் அவனோடு ஒட்டி கொண்டாள்.,

           அவள் முதுகில் கை கொடுத்து அவளை லேசாக தூக்கி பிடிக்க பாதி எழுந்த வாக்கில் அமர்ந்தவள்., அவன் மார்பில் முகம் புதைத்து அவனோடு மேலும் ஒண்டிக்கொண்டாள்.,

     தன்னோடு சேர்த்து பிடித்தவன்., “அம்மு ஒன்னும் இல்லடா.,  ஒன்னும் இல்ல“.,  என்று அவள் முதுகை தடவிக் கொடுத்தான்.

       அவளோபயமா இருக்குஎன்று மட்டுமே மீண்டும் மீண்டும் சொன்னாள்.

     அப்போது  தான் டாக்டர் சரவணனை பார்த்துபயத்தில் இருக்கும் போது பின்னோக்கி கொண்டு செல்ல முயல்வது மிகவும் கஷ்டம்“., என்று கன்னடத்தில் அவனிடம் சொன்னார்.

            அவளுக்கு கன்னடம் தெரியாது என்பதால் டாக்டர் அவனிடம் கன்னடத்தில் பேசத் தொடங்கியிருந்தார்.,

           “ரொம்ப கஷ்டப்பட்டு பின்னாடி கொண்டு போக முடியாது., அவங்க சொல்லுறதை கெஸ் பண்ணினா., ஒரு வேளை காலேஜ் டூரா இருக்க வாய்ப்பு இருக்கு., மண்சரிவு சிக்கியிருக்கு.,  இதை  மட்டும் வச்சு  நீங்க விசாரிச்சு கண்டுபிடிக்க முடிந்தால் கண்டுபிடிங்க.,  ஆனால் கரெக்டா அவங்க பிரெண்ட்ஸ் ட்ட தான் ஒப்படைக்கிறீங்களா ன்னு  பார்த்துக்கோங்க.,

         ஆனா இப்ப இந்த பொண்ணு இருக்கிற மனநிலையில்., அவங்க பேரன்ட்ஸ் அல்லது ப்ரண்ட்ஸ் யாரையாவது அடையாளம் தெரிஞ்சா தான் போவாங்க., இல்லாட்டி போக மாட்டாங்க., அவங்களுக்கு வேற யாரையும் அடையாளம் தெரியலை“., என்று சொல்லும் போதே.,

            அவள் அவனோடு மேலும் ஒட்டிக் கொண்டாள்.

             அவன் மேல் சாய்ந்து இருந்தவளுக்கு கண்ணீர் மட்டும்  நிற்காமல் வடிந்து கொண்டே இருந்தது.,

       அவன் சட்டையில் ஈரத்தை உணர்ந்தவன்.,  குனிந்து பார்க்க அவள் கண் திறந்து இருக்க கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வடிந்தது கொண்டே இருந்தது.,

             அவளுக்கு நினைவு வந்து இருக்கிறதா என்பதை கண்டு கொள்வதற்காகடாக்டர் அவளிடம் பேச தொடங்கினார்..,

          “என்னம்மா ஆச்சு., ஏன் இவ்வளவு பயம்“., என்று கேட்டார்.

          “கீழ விழுந்துட்டேன்என்று மீண்டும் மீண்டும் சொன்னவள்., சரவணனிடம்  ஒட்டிக்கொண்டு., “கீழே இறங்குவோம் பயமா இருக்குஎன்று அந்த கட்டிலில் இருப்பதை கூட பயந்தவளாக சொன்னாள்.,

            “ஒன்னும் இல்ல.,  பக்கத்துல தான் நின்னுட்டு இருக்கிறேன் இல்ல., கீழே எல்லாம் விழ மாட்ட“., என்று சொன்னான்.

            அவளுக்கு கீழே விழுந்தது தெளிவாக நினைவிருக்கிறது., 

        மீண்டும் டாக்டர் அவளிடம் மயக்கம் இல்லாத போதுஎப்படி விழுந்த., இப்போ ஞாபகம் இருக்கா“., என்று கேட்டார்.

            ” பஸ் சரிந்தது“., என்று மட்டும் திரும்ப சொன்னவள்., 

     “நிறைய பேர் இருந்தாங்க“., என்று மட்டும் சொன்னாள்., அவளுக்கு விழுந்த அதிர்ச்சியில் தான் அனைத்தும் மறந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவர்கள் அதற்கு மேல் எதுவும் கேட்காமல்.,  “ஒன்னும் இல்ல இப்ப கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்“.,  என்று சொன்னார்.

      அதற்குள்  டாக்டர் நர்ஸ் டம்., “வெளியே யாரிடமாவது சொல்லி ஒரு ஜூஸ் வாங்கிட்டு வர சொல்லுங்கஎன்று சொன்னார்., அவர்களது குடும்ப டாக்டரும் அவர்களோடு தான் இருந்தார்.,

           டாக்டரின் அறைக்கு வந்த பிறகும் அவள் சரவணனை விட்டு பிரியாமல் பிடித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.,

        அதுவரை தள்ளி நின்றிருந்த  திலகவதி அருகில் அமர்ந்து அவள் கையை பிடித்துக் கொண்டுஒன்னுமில்லடா“., என்று சொன்னார்.

      அவர் கையை பிடித்துக் கொண்டாலும் சரவணனின் தோளில் சாய்ந்தவள் சற்று நேரம் நிமிரவே இல்லை.,  “மருந்தின் வீரியத்தினால் இன்று ஒரு  நாள் முழுவதும் கூட அப்படி இருக்கும்என்று டாக்டர் சொன்னதை நினைத்திருக்க..,

       அவளின் பிடியோ சரவணன் கையை அழுத்தமாக பிடித்து இருந்தது., அதை டாக்டருக்கு சுட்டிக்காட்ட டாக்டர் புரிந்து கொண்டவராககொஞ்ச நேரத்துல சரியாயிடும்என்று சொன்னவர்.

           “இன்னொரு சின்ன டெஸ்ட் ட்ரை பண்ணுவோம்“., என்று குடும்ப டாக்டரிடம் சொன்னார்.,

          சரி என்றனர் டாக்டரின் அறையில் இருந்த பெரிய அளவு இருந்த டிவி ஸ்கிரீனில் அது போன்ற ஒரு ஆக்சிடென்ட் காட்சியை ஓட விட முயற்சி செய்து கொண்டிருந்தனர்., அப்போது அங்கு அவர்கள் காட்டியது மலையிலிருந்து கீழே விழும் ஒரு ஆடவனை., அதைப் பார்த்ததும் தன் கால்களை சுருக்கிக் கொள்ள தொடங்கி இருந்தாள்.

          அதை பார்த்ததும் டாக்டர்உயரமான இடத்தில் இருந்து விழுந்து இருக்காங்கன்னு தெரியுது.,  ஆனா எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாங்களோ  தெரியல.,  கடவுள் அருளால் தான் இந்த பொண்ணு அடி அதிகம் இல்லாமல் தப்பிச்சு வந்த மாதிரி எனக்கு தோணுது“., மேகம்.,  மழை தவிர வேற எதுவுமே இந்த பொண்ணுக்கு கடைசி நேரத்துல ஞாபகமில்லை., விழுந்த நேரத்தில் இருந்த அந்த நினைவுகள் மட்டும் தான் தெரியுது., வேறு எதுவும் இல்லை.,

     

Advertisement