Advertisement

16


    மாலை நேரம் எப்போதும் போல அன்று சரவணன் வந்த பிறகு பாடல் பாட வேண்டுமே என்று யோசித்துக் கொண்டிருந்ததில்., திலகவதி  அன்று பாடலை செலக்ட் செய்து கொடுத்திருந்தார்.

        அத்தை சொன்ன பாடலை கேட்டுக் கொண்டிருந்தால்., அது ஒரு பழைய பாடல் அதை யூ ட்யூப் ல் பார்க்கவும் செய்திருந்ததால்., அதையே யோசித்து அதை எப்படி பாடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.,

         அந்த நேரம் சரவணன் அம்மு  என்று சத்தமாக அழைத்தான்., இவ்வளவு சீக்கிரம் வர மாட்டானே  என்ற எண்ணத்தோடு திலகவதி ஹாலிற்கு வந்தார்.,

         “என்னடா சீக்கிரம் வந்துட்ட“., என்றார்.,

       “இல்லம்மா நெக்ஸ்ட் வீக் அவளுக்கு காலேஜ் கூட்டிட்டு போகனும் இல்ல.,  அதுக்கு ட்ரெஸ் பர்சேஸ் பண்றதுக்காக போலாம்னு வந்தேன்., நீங்களும் அவளும் கிளம்புங்க போலாம்“., என்று சொன்னான்.

       “நான் எதுக்குடா.,  நீ அவள கூட்டிட்டு போயிட்டு வந்துருஎன்று சொன்னார்.

      அவன் பார்த்த பார்வையில்சரி சரி கிளம்பறேன்“., என்றார்.

        “புரிஞ்சுக்கோங்க.,  உங்களை கட்டாயப்படுத்தலை.,  ஆனா வேற வலி கிடையாது., பொண்ணுங்களுக்கு எப்படி டிரஸ் வாங்கனும்னு எனக்கு தெரியாது., அது மட்டும் இல்லாம நீங்க வந்தா தான்., அவளுக்கு போட்டு பார்த்து வாங்குறதுக்கு வசதியா இருக்கும்., அதுக்காகத்தான் கேட்கிறேன்“., என்று சொன்னான்.

        “சரி தான் போடா.,  நீயும் ரெப்பிரஷ் ஆகி வா., டீ எடுத்துட்டு வர சொல்றேன்என்று சொல்லி சமையல்கார அம்மாவிடம் டீ சொல்லி விட்டு அம்முவையும் கிளம்பச் சொல்லியிருந்தார்.,

         கிட்டத்தட்ட கூட ஒரு மாதம் கடந்த நிலையில்., அவர்கள் வீட்டிற்கு அம்மு வந்து மூன்று மாதங்களை  தாண்டி இருந்தது., யாராலும் சொல்ல முடியாது மூன்று மாதங்கள் தான் கடந்து இருக்கிறது என்று., ஏதோ அவள் நிறைய காலங்கள் இங்கேயே இருப்பது போன்ற பிரமை தான்.,  அம்மா மகன் இருவருக்கும்.

          ஏன்  என்றால் அவளுக்கு இது தான் தன் வீடு என்ற எண்ணத்தில் தான் இருந்தாள்., வேறு எதைப் பற்றியும் இப்போதெல்லாம் யோசிப்பதில்லை., அவளுடைய பாட்டு ட்ராயிங் என்று போய்க்கொண்டிருந்தது., ஸ்போக்கன் இங்கிலீஷ் ஒரு வழியாக முடித்து வைத்திருந்தாள்.,

        ஒரு அளவுக்கு நல்ல தெளிவான ஆங்கில நடை வந்திருக்க., மற்றவற்றை அவனே பார்த்துக் கொள்வதாக சொல்லி வகுப்பை நிறுத்தியிருந்தான் சரவணன்., முடிந்த அளவு அவளை அவ்வப்போது பேச வைத்தான்..

           பெங்களூரில் இருந்த பெரிய மாலுக்கு அழைத்து சென்றான்.,

         அவள் அவற்றை எல்லாம் பார்த்தவுடன் யோசித்துக் கொண்டே வந்தாள்., “என்னமா ஏதோ யோசிக்கிறஎன்று திலகவதி கேட்டார்.

      “இல்ல இந்த மால் ரொம்ப அழகா இருக்கு., நல்ல பெரிய மால்“., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

      “ஆமாடா உனக்கு பிடிச்சிருக்கா“.,  என்று கேட்டார்.

         “ம்ம் ம்ம்.,  அழகா இருக்குஎன்று சொன்னாள்.

             பின்பு திலகவதியிடம்  “நான் பாத்திருக்கேன் ஆனா இதைவிட சின்ன மால் தானே  முன்னாடி பார்த்து இருக்கேன்“., என்று சொன்னாள்.

        “நினைவு எதுவும் வந்து விட்டதோ“., என்று அம்மாவும் மகனும் யோசனையோட அவளைத் திரும்பிப் பார்த்தனர்., ஆனால் அவள் முகத்தில் தெளிவான நிலையில் மட்டும் தான் இருந்தது.,  ‘எந்த சிறு குழப்பம் கூட இல்லாமல் இருக்க.,  சரி அவளுக்கு வேறு எந்த நினைவும் தொல்லை படுத்தவில்லை‘., என்ற எண்ணத்தோடு அழைத்து சென்றனர்.

         அங்கு ஏற்கனவே கல்லூரி பிள்ளைகள் போன் செய்து கலர் மட்டும் சொல்லி இருக்க.,  அந்த கலரில் மட்டுமே உடைய எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அழைத்து வந்திருந்தான்.

     கல்லூரி மாணவர்கள் மீண்டும் அழைத்து அவனிடம் பேசி இருந்தனர்.,  “இந்த முறை அவள் வேறு எதிலும் கலந்து கொள்ளவோ.,  வேறு எந்த நிகழ்விலும் அவளை நாங்கள் வற்புறுத்தப் போவதில்லை., அவளாக மற்றவற்றில் சேர்ந்து கொண்டால் சரி.,  இல்லை உங்களோடு இருந்தால் கூட எங்களுக்கு போதும்.,

    எங்கள் வகுப்பில் அனைவரும் சேர்ந்து எடுக்கும் போட்டோவில் மட்டும் அவள் எங்களோடு இருந்தால் அது போதும்., என்று சொல்லியிருந்தனர்.

     அதற்காகவே மாணவர்கள் ஒரு கலரில் உடையும்.,  மாணவிகள் எல்லோரும் ஒரு கலரில் உடையும் என்று பேசி இருப்பதால் அந்தக் கலரை போன் செய்து சொல்லியிருந்தனர்., எனவே அதே கலரில் உடை எடுப்பதற்காக தான் இப்போது இங்கு அழைத்து வந்திருந்தான்.

      அவள் சுடிதார் கவுன் மாடல் என்றே பார்த்துக்கொண்டிருக்க.,  முதல்முதலாக திலகவதி தான்ஏன் புடவை எடுத்தால் என்னஎன்று தோன்றியது. உடனே அவன் சொன்ன கலரில் தேடித்தேடி புடவை பார்த்துக் கொண்டிருந்தார்.

        இவள் சுடிதார் செக்ஸனில் நிற்கும் போதே சரவணன் தான்.,  “என்னடாஎன்று கேட்டான்.

     ” இல்ல அத்தையை காணோம்“., என்றாள்.

    “அம்மா அங்க இருக்காங்க“., என்று சொன்னவன்.”ஏன்டா எதுவும் பிடிக்கலையா“., என்று கேட்டான்.

        “அத்தை வரட்டுமே“., என்றாள்.

      இவன் அம்மாவிடம் அழைத்து செல்ல.,  அவரும்வந்துட்டீங்களாஎன்று கேட்டவர்.,  “அம்மு புடவை கட்டிக்கிறியா டா“., என்று திலகவதி கேட்டார்.

     அவளும்நான் கட்டிக்கிறேன்என்றாள்.

       “இது எதற்காக எடுக்கிறோம் தெரியுமா“.,  என்று கேட்டார்.

     “தெரியாது“., என்றாள்.

      “நம்ம நெக்ஸ்ட் வீக் ஒரு காலேஜ்  பங்ஷனுக்கு போறோம்., அங்க  வர்ற புள்ளைங்க எல்லாம் இந்த கலர்ல டிரஸ் பண்ணிட்டு வரணும்னு சொல்லி இருக்காங்க., உன்னைய அங்க கூட்டிட்டு போலாம்னு இருக்கோம்., போலாமா“.,  என்று திலகவதி கேட்டார்.

      “அங்க நிறைய பேர் வருவாங்களா.,  ஜாலியா இருக்கு மா.,  அங்க எதுவும் ஃபங்ஷனா“., என்று மீண்டும் மீண்டும் கேட்டாள்.,

      “ஆமா ஜஸ்ட் சும்மா போயிட்டு நம்ம உடனே கிளம்பிடலாம்“., என்று சொன்னார்.

       “ம்ம் ம்ம் போலாம்“., என்று மட்டும் சொல்லி இருந்தாள்.

         இப்போது எல்லாம் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்வாள்., அதிகமான கேள்விகள் அவளிடம் இருக்காது., எது சொன்னாலும் அவர்கள் தன்னுடைய நல்லதுக்கு தான் சொல்கிறார்கள் என்ற எண்ணத்தோடு தான் இருந்து கொண்டிருந்தாள்.,

          மாத்திரைகளின் அளவு குறைக்கப்பட்டு இருந்தது., ஆனாலும் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறாள்.

    அவளுக்கான ஐடி கார்டை ஏற்கனவே சரவணனுக்கு அவளுடைய அண்ணன் அனுப்பி இருந்ததால்., இந்த முறை அவளை பிளைட்டில் அழைத்து செல்வதாக ஏற்பாடு செய்திருந்தான்.

     அங்கு தன் நண்பனின் காரை மட்டும் கேட்டிருந்தான்.,  முதலில் காரில் போகலாம் என்று நினைக்கும் போது தான்.,  இவள் கல்லூரிக்கு சென்று உடனே திரும்ப வேண்டும் என்ற காரணத்தினால்.,  அதிகாலை பிளைட் ல்  இங்கிருந்து கிளம்பி சென்று விடலாம்.,

     பின்பு கல்லூரியில் பங்க்ஷன் முடித்து விட்டு மாலை அங்கே இருந்து கிளம்பினால் இரவு வீட்டிற்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தோடு ஏற்பாடு செய்திருந்தான்., அதன்படியே கிளம்புவதற்காக தான் இந்த ஏற்பாடெல்லாம்.,

     ஏற்கனவே டிக்கெட் எல்லாம் எடுத்து வைத்து இருந்ததால் இப்போது அவளுக்கு உடை மட்டும் எடுக்க வேண்டும்., ரெடிமேட் உடை என்ற எண்ணத்தோடு தான் அவன் சரியாக ஒரு வாரத்திற்கு முன் அழைத்து வந்திருந்திருந்தான்.

      அவன் அம்மாவோ  புடவை செக்ஸனில் போய் நின்றிருந்தார்.,  அம்முவும் சரி என்று தலையை ஆட்டி விட அங்கு புடவையே தேர்ந்தெடுக்கப்பட்டது.,

      உடல் முழுவதும் ஜரிகை கொடி போல ஓடிய பூக்களோடு நிறைந்த சிறிய அளவிலான கட்டி ஜரிகை கொண்ட பட்டு சேலையை தேர்ந்தெடுத்தார்.,

         மிகவும் அழகாக இருந்தது ஆனால் அவனோஅம்மா அவளுக்கு டிராவல் சமயம் எப்படிமா கட்டிப்பாஎன்று கேட்டான்.

       “அதெல்லாம் பொண்ணுங்க சாரி கட்டிப்பாங்க டா., சேலை தான்டா அழகா இருக்கும்“., என்று சொன்னவர்என்ன பிள்ளைக்கு முடிதான் கம்மியா போச்சுஎன்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

        இப்போது கொஞ்சம் முடி வளர்ந்து இருந்தாலும்.,  அவளுக்கு பின்னல் போட முடியாது அது ஒன்றுதான் திலகவதிக்கு வருத்தம்.,

     அவளுடைய பழைய போட்டோக்களை மீராவின் அம்மா.,  திலகவதிக்கு அனுப்பி இருக்க.,  அதை பார்த்தவர் தான்எப்படி இருக்கா புள்ள“., என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்.

    புடவையை வாங்கி கொண்டு பிளவுஸ் தைக்க கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்து சேரும் போதே லேட்டாகி இருந்தது.,

         வந்தவுடன் சாப்பிட்டு விட்டு மாத்திரையை போடப் போகும் போது சரவணன் தான்.,  “இன்னைக்கு பாட்டு பாடுறீயா., இல்ல  டயர்டா இருந்தா போய் படுத்துக்கிறீயா“., என்று கேட்டான்.

       அத்தையே பார்த்தவள்., சிரித்துக் கொண்டேஇந்த பாட்டு அத்தைக்கு ரொம்ப பிடிக்குமாம்.,  அத்தை சொன்னாங்க., அதனால் அந்த பாட்டை ப்ரிப்பேர் பண்ணுனேன்., அதையே பாடுறேன்“.,  என்று சொன்னாள்.

     “சரி பாடுஎன்று சொல்லி சொல்லிக்கொண்டிருந்தான்.

    “பால் போலவே வான் மீதிலே
     யார் காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து
ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா.,
தென்றலே என் தனிமை கண்டு
நின்று போய் விடு“.,

என்று தொடங்கியவள்.,

முழுப்பாடலையும் அதே பழைய பாடலின் மெட்டில் பாடி முடித்தாள்.

       அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் திலகவதி., அழகா பாடின அவ்ளோ அழகா இருக்கு அந்த பாட்டு., நீ பாடினதை  நான் கேட்கனும் ன்னு  ரெக்கார்ட் பண்ணி வச்சிட்டேன்.,  பகலில் கூட நான் நினைச்ச நேரத்தில் போட்டு கேட்க வேண்டும்“., என்று சொல்லி திலகவதி சொல்லிக் கொண்டிருந்தார்.,

       அவளோஏன் இதை ரெக்கார்ட் பண்ணி வைக்கணும்., நீங்க எப்ப கேட்டாலும் நான் பாடுவேன்“., என்று சொன்னார்.

       திலகவதி தான் எதுவும் சொல்லாமல் சிரித்தபடி லேசான பார்வையாக சரவணனை பார்த்தார்., அவனும்எப்போது வேண்டுமானாலும் அவளுக்கு நினைவு திரும்பும்., ஏன் கல்லூரிக்கு சென்ற இடத்தில் கூட நினைவு திரும்பலாம்என்று ஏற்கனவே டாக்டர் சொல்லியிருந்தார்.

     அதை நினைத்து தான் நண்பனிடம்அங்கு இருக்கும் ஒரு நாள் மட்டும்  காரை அனுப்பு“., என்று சொல்லியிருந்தான்.

      அவனோ  “டேய் இதெல்லாம் கேட்கணுமா., அனுப்பு ன்னு சொன்னா அனுப்பிட்டு போகிறேன்., அது எதுக்குடா கேட்டுகிட்டு இருக்கே“., என்று சொல்லியிருந்தான்.,

அது அவன் கல்லூரி தோழன்.

      அவர்கள் சென்னையில் கல்லூரிக்கு செல்லும் நாளும் வந்தது.,  பிளைட்டில் செல்லும் போது எப்படி இருக்க போகிறாளோ என்ற பயம் சரவணனுக்கு இருக்கத்தான் செய்தது.,  ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டான்.

       இங்கிருந்து கிளம்புவதற்கு முன் அவன் நண்பனுக்கு மட்டும் போன் செய்து சொல்லிவிட்டு.,  அவர்கள் வீட்டிற்கும் சொல்லிவிட்டான்.

     இவளைசீக்கிரம் கிளம்புங்கஎன்று சொல்லி சொல்லிக் கொண்டிருந்தான்.

              திலகவதி கிளம்பி முடித்தவர் அவளுக்கு தலையை போனி போடாமல் சிறிதாக முடி எடுத்து கிள்ளிப் செய்து விட்டு தலையை விரித்து விட்ட படியே வைத்திருந்தார்.,

       புடவை கட்ட சொல்லிக் கொடுக்கத் தொடங்கும் போதே.,  “நான் இதுக்கு முன்னாடி புடவை கட்டி இருக்கேனே.,  எனக்கு ஞாபகம் இருக்கு“., என்று சொன்னாள்.,

       அவருக்கு பகீரென்று தான் இருந்தது.,  நினைவு இருக்கிறதோ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே ., அவள் லாவகமாக கட்டுவதை பார்த்துக்கொண்டிருந்தார்.,

      அழகாக மடிப்பு எடுத்து கட்டி முடித்திருந்தாள்., இதற்கு முன்பே கல்லூரியில் அது கடைசி வருடம் என்பதால் இடையே புடவை அணிந்திருந்தனர்.,

  அது மட்டுமல்லாமல் அண்ணனின் கல்யாணம் என்று சில விசேஷங்களுக்கு ஏற்கனவே புடவை கட்டி இருந்ததால்., அவளுக்கு கட்ட தெரிந்திருந்தது.,

       ஆனால் எதற்கு புடவை கட்டினாள் என்பது தெரியாமல்.,  நான் ஏற்கனவே கட்டி இருக்கேன் என்று சொல்லிக்கொண்டே கட்டிக் கொண்டிருந்தாள்.,

       அவளுக்கு பின் எடுத்துக் கொடுப்பதும்.,  அவள் மடிப்பை சரி செய்வதுமாக இருந்த திலகவதி தான்., அவள் புடவை கட்டி முடிக்கவும் அவளைப் பார்த்து அசந்து போனார்.

      ‘எத்தனை அழகாக இருக்கிறாள்என்ற நினைவோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.,

பின்புஅத்தை போலாமா., சரியா இருக்காஎன்று கேட்டாள்.

     

Advertisement