Advertisement

இப்போ உங்களுக்கு கிடைச்ச விஷயம்.,  மண்சரிவு., மண் சரிந்து பஸ் சரிஞ்சது ன்னு சொல்லுறாங்களே தவிர ஃபுல் டீடெயில் அந்த பொண்ணால சொல்ல முடியல“., என்று சொன்னார்.

       மற்றவர்களும்ஆமா அப்படித்தான்‘  என்று நினைத்துக் கொண்டனர்.

      அவர்களுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.,  எப்படியோ அவள் நினைவு வந்துவிடும் என்று நினைக்க..,  அவள் மீண்டும் பயந்து நடுங்கி இப்படி ஒடுங்கி போவதை திலகவதி தான் விரும்பவில்லை.,

         அவர் மருத்துவரிடம் அவள் அரை மயக்க நிலையில் இருப்பதை புரிந்து கொண்டுடாக்டர் அம்மு  இப்படியே இருந்தா கூட நான் பார்த்துக்கிறேன்.,  அதற்காக ஞாபகத்துக்கு கொண்டு வர்றோம் ன்னு சொல்லி இன்னும் அவளை நான் ஒடுக்க விரும்பல., அவ படிக்கிறா., நார்மலா வீட்ல  இருந்து.,  சாதாரண பொண்ணு மாதிரி கூட  அவ இருந்த போதும்.,  இப்படி பயந்து நடுங்கி பாருங்க.,  இன்னும் அவனோட கையே இவ்வளவு அழுத்தமாக பிடித்து இருக்கா பாருங்க..,

        கிட்டத்தட்ட அரைமணி நேரம் ஆகுது.,  அந்த டெஸ்ட் முடிஞ்சு.,  இன்னும் கையை விட மாட்டேங்கிறா., இந்த அளவுக்கு பயந்து போறவள., இன்னும் பயம் காட்ட விரும்பவில்லை.,  நீங்க முதல்ல சொன்ன மாதிரியே கொஞ்சம் கொஞ்சமா மருந்து கொடுத்தே குணப்படுத்தலாம்., அல்லது ஏதாவது அதிர்ச்சியில் நீங்க சொன்ன மாதிரி அவளுக்கு பழைய ஞாபகங்கள் திரும்ப வந்துருச்சுன்னா சந்தோஷம்.,

       அதுக்காக நினைவு வரலைன்னாலும் நான் அவள பாத்துக்குறேன்., அதுக்காக அவளை இப்படி எல்லாம் கஷ்டப்பட விடமாட்டேன்“., என்று சொல்லிக்கொண்டு  இருந்தார்.

       அதற்கு மேல் அங்கு இருந்தவர்கள் யாரும் எதுவும் பேச வில்லை பிறகு அவளுக்கான மருந்துகளை எழுதிக் கொடுத்தார்., அதை மட்டும் தொடர்ந்து எடுத்துக்கொள்ள சொன்னார்., பின்பு 15 நாள்களுக்கு ஒருமுறை  சிறுசிறு  மருத்துவப் பரிசோதனை மற்றும் செய்துகொள்வோம்.,

         அவளது பேச்சு நடவடிக்கைகளில் மாற்றம் வந்த பிறகு மருந்தின் அளவை குறைத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார்., சரி என்றே சம்மதித்தனர்.

          அவளை ஒரு வழியாக வீட்டிற்கு அழைத்து வந்த பின்னும் எப்போதும் போல பழையபடி சரவணனிடம் அல்லது திலகவதியிடமும் ஒட்டிக் கொண்டே இருக்க ஆரம்பித்தாள்., கால்களை சோபாவில் கூட அமரும் போது கீழே போடுவது கிடையாது.,  சுருட்டி வைத்துக் கொள்வாள்.,  அப்படி அமர்ந்திருப்பதைப் பார்க்கும் போது தான் சற்று அவர்களுக்கு வருத்தமாக இருந்தது.,

        ‘சாதாரணமாக இருந்த பிள்ளையை நாம் தான் ட்ரீட்மெண்ட் என்ற பெயரில் மீண்டும் பயதிற்குள் தள்ளி விட்டோமோஎன்று நினைக்கத் தொடங்கி இருந்தனர்.

       அப்போது தான் அவளும் சற்று தூங்கி இருக்க.,  இருவரும் பேசிக் கொண்டே இருந்தனர்.,

        அவள் சோபாவிலே அமர்ந்து திலகவதியின் மடியிலேயே தலை வைத்து உறங்கி இருந்தாள்.,  திலகவதி அவளை விட்டு நகராமல் அமர்ந்திருந்தார்.

       மாலை நேரம் அவளை எழுப்பியவர் காபி கொடுத்து எப்போதும் உள்ள அவளது வேலைகளை செய்ய சொன்னாலும்., அவர் கையைப் பிடித்துக் கொண்டு அலைந்தாள்.

          ரெஸ்ட் ரூம் செல்லும் போது மட்டும் தான் அவர் துணை இல்லாமல் சென்றிருந்தாள்., மற்றபடி எங்கு சென்றாலும் அவள் கையை கோர்த்துக்கொண்டு அவர் கூடவே இருந்தாள்.,

        அவர் தான்இப்படி இருக்க கூடாது மா.,ஒன்னும் இல்ல“., என்று சொன்னார்.

        சரவணன் தான்  “இன்னைக்கு மட்டும் விடுங்க ம்மா“., என்று சொன்னான்.,

        அவள் சற்று பதட்டத்தோடு இருப்பது போல தோன்றியது., அதனால் அவளிடம் வேறு எதுவும் சொல்ல வேண்டாம் என்ற எண்ணத்தோடு அமர்ந்துக் கொண்டார்.,

        அப்போதுதான் இரவு உணவை முடித்து கொண்டு அறைக்கு வந்து படுக்க போகும் போது பயந்தவள்., “இங்க படுக்க மாட்டேன்“., என்று சொன்னாள்.

        “ஏன்மா“., என்று கேட்டார்.

       “கீழே விழுந்து விடுவேன்., பயமா இருக்கு“., என்று சொன்னாள்.,

         “நான் தான் கூட இருக்கேன் இல்ல“., என்று சொன்னார்.

        “நீங்க இந்த பக்கம் தான் இருக்கீங்க.,  அந்தப்பக்கம் பள்ளமா இருக்கு“.,  என்று சொன்னாள்.,

         ஒருபுறம் ஆள் இல்லாமல் இதுவரை தனியாக படுத்தவள்., இப்போது படுக்க மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.,

     அவரும்சரி இரு.,  நான் போய் சரவணனை கூட்டிட்டு வரேன்“., என்று சொன்னார்.,

       “இல்ல.,  நான் உங்க கூட வாரேன்“. என்றாள்.

     “சரி வா“.,  என்று சொன்ன பின்பு ஹாலில் உட்கார வைத்தார்.,  “நான் போய் சரவணனை  கூட்டிட்டு வரேன்“., என்று சொல்லிவிட்டு சரவணன் அறைக்கு சென்று கதவை தட்டினார்.

           “என்னமா“., என்றான்.,

        ” டேய் கட்டிலில் படுக்க மாட்டேன்., ஒரு பக்கம் பள்ளமா இருக்கு.,  விழுந்திடுவேன் ன்னு சொல்லுறா., நான் வந்து கட்டில்ல நகட்டி போடு., சுவரை ஒட்டியது போல போட்டுவிடு வா“., என்று சொன்னார்.,

      “அம்மா  உங்க கட்டில் ஆள் வரச் சொல்லி அப்படி பண்ண முடியும்.,  அது மட்டும் இல்லாமல் நகர்த்துவது கஷ்டம் மா., ஒருநாள் அஜெஸ்ட் பண்ணுங்க“., என்று சொன்னான்.

      “டேய் அந்த பொண்ணும் பயப்படுறாடா“.,  என்று சொன்னார்.

         “இன்னைக்கு ஒரு நாள் மட்டும் வேறரூம்ல மாறிக்கோங்க., இல்லனா பெட்  கீழே எடுத்து போட்டு பார்ப்போமாஎன்று சொல்லிக் கொண்டே இருந்தான்.

       “சரி டா இன்னைக்கு ஒரு நாளைக்கு., நீ வந்து எங்க கூட ரூம்ல படுத்துக்கோ“., என்று சொன்னார்.,

        “அதெல்லாம்  வேண்டாம்மாஎன்றான்.,

       “ஒன்னும் இல்லடா.,  நான் தான் கூட இருக்கிறேன் இல்ல“.  என்று அவனையும் சேர்த்து கூட்டிக்கொண்டு வர அவள் காலை மடக்கி சோபாவில் உட்கார்ந்து இருப்பதை பார்த்தவன்.,

        “அம்மா ஏன் ம்மா.,  சோபால உட்கார்ந்து கூட காலை கீழே தொங்க போட  பார்த்து பயப்படுறா“., என்று கேட்டான்.,

        “ஏண்டா பிள்ளை எப்படி விழுந்தாளோ.,  எவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலோ தெரியலையே“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

        “அதுக்காக இப்படியே விட முடியாது மா., கொஞ்சம் கொஞ்சமா மாத்தனும்  இல்ல“., என்று சொன்னான்.

         நம்மகிட்ட வந்து பத்து நாள் கூட ஆகவில்லை., இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கூட்டிட்டு போய்.,  கொஞ்சம் கொஞ்சமா மாத்திடலாம்.,   கவலைப்படாதே“., என்று சொன்னார்.

           “நான் சொல்றது இந்த பொண்ணுக்கு  நினைவு வரும் போது அவளுக்கு வருத்தமா இருக்கும் இல்ல., இப்படி பயந்தா வெளியே தனியா விட முடியுமா யோசிச்சு பாருங்க“.,  என்று சொன்னான்.

        “படிச்சிட்டு இருந்த பொண்ணா இல்ல.,  படிச்சு முடிச்ச பொண்ணா எதுவுமே தெரியல., அவ மைன்ட் ஏதாவது ஆக்டிவிட்டில மாற்றி விடனும் மா“.,  என்று சொன்னார்.

        “கண்டிப்பாக செய்வோம்., அவளுக்கு என்ன பிடித்தது எதுவுமே தெரியவில்லை ட்ரை பண்ணுவோம்“., என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.,

        அதன் பிறகு அவளை அழைத்துக் கொண்டு அறைக்கு வந்தனர்., கட்டிலை நகர்த்த முடியுமா என்று பார்க்கட்ரை பண்ணுவோம்என்று சொல்லிவிட்டு இருவரும் சேர்ந்து கட்டிலை நகர்த்த முயற்சி செய்ய அவர்களால் முடியவில்லை., என்ற உடன் வேறு வழியில்லாமல் ஒரு பக்கம் திலகவதியும்.,  மறுபக்கமும் சரவணனும் படுத்தனர்.,

        நடுவில் அவளை படுக்க சொல்ல.,  அவளோ சரவணன் கையை பிடித்துக்கொண்டு.,  திலகவதியின் கையையும் சேர்த்து பிடித்துக் கொண்டாள்.,

      சரவணன் தான் அவள் தூங்கும் வரை அமைதியாக இருந்தவன்., “தூங்கிட்டா தலையணை வைச்சு விடுறேன்., நான் எந்திரிச்சு ரூமுக்கு போறேன்“., என்று சொன்னான்.

         “டேய் யார்ரா இவன்., பெரிய இவன் மாதிரி“.,  என்று சத்தம் போட்டார்.,

          ” ம்மா., ஒரு பொம்பள புள்ள பக்கத்துல இருக்கிறானே ன்னு கூட யோசனை இல்லாமல்., பேசாம இருடா ன்னு சொல்றீங்க.., மத்தவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க“., என்று கேட்டான்.

      “மத்தவங்க என்ன நினைக்கிறாங்க ன்னு எனக்கு தெரியாதுடா., ஆனா எனக்கு தெரியும்., நீ இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட., பேசாமல் இரு சிரிப்பு காட்டிட்டு“., என்று சொன்னார்.

           “அம்மா என் இமேஜை டேமேஜ் பண்ண நீங்க மட்டும் போதுமா“., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

       அவரோ இவனை பார்த்து சிரித்துக் கொண்டே அவள் கையை கோர்த்தபடி பிடித்தபடி தூங்க தயாராகிக் கொண்டிருந்தார்.,

            அம்மாவின் நம்பிக்கை பார்த்தவனுக்கு.,  ‘தன் அம்மா தன் மேல் எத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறார்‘.,  என்ற எண்ணம் தோன்றியது.

            அதே நேரம் அவளும் எவ்வளவோ விஷயங்களை மறந்த போதிலும் ஏதோ ஒரு விதத்தில் நம்புகிறாள்., தன்  கையை கோர்த்திருக்கும் அவள் கையையே பார்த்துக் கொண்டிருந்தவன்., 

       இவளின் பாதுகாப்பு என் பொறுப்பு என்ற எண்ணம் மனதிற்குள் ஆழத் தோன்றியது., அவளை நல்லபடியாக பார்த்துக் கொள்வேன்., பார்த்துக் கொள்ள வேண்டும்.,

          அம்மா  இன்று மருத்துவரிடம் சொன்னது போல.,  ஒருவேளை நினைவு வந்தால் அவர்கள் வீட்டில் அவளை நல்லபடியாக ஒப்படைப்பேன்., ஒருவேளை நினைவு வரவில்லை என்றால் கடைசி வரை நான் பார்த்துக் கொள்வேன்.,  என்ற எண்ணத்தோடு அவள் பிடித்திருந்த கையை தானும் லேசாக அழுத்தி விட்டபடி., அவளை இரவு விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தபடி உறங்கிவிட்டான்.

      நம்பிக்கை மட்டும் எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது.,

கஷ்டங்கள் தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த யோசனைகளை கொடுக்கும்.. கஷ்டங்கள் இல்லையென்றால் முன்னேற வேண்டுமென்ற எண்ணமே நமக்கு வராது.

Advertisement