Advertisement

14

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

தவம் போல் இருந்து யோசிக்கிறேன்

அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை

             ஆழ்ந்த குரல் அவன் காதுக்குள் இன்னும் ஒலிப்பது போன்ற பிரமை.,

           இதை எப்படி சொல்வது என்று அவனுக்கு புரியவில்லை., அனைத்து பாடல்களுமே கேட்டு முடித்திருந்தான்.,  சில பாடல்கள் அவளது பிடித்தம் என அவளுடைய  நண்பர்கள் சொல்லி இருந்தனர்.

             அதை மீண்டும் மீண்டும் கேட்டிருந்தான்., சோகக் குரலில் அப்படியே அந்த சோகத்தில் அவள் கரைந்து போனது போலவே பாடியிருக்கிறாள்.,

           மகிழ்ச்சியில் அவள் குரலில் ஒரு துள்ளலும்., பாடல் வரிகளுக்கேற்ப அவள் குரல் மாறும் விதமும்., அவனுக்கு ஏதோ அது மாயவலை போல தோன்றியது., கேட்பவர்கள் நிச்சயமாக அவள் குரலில் சிக்கிவிடுவார்கள்.

            இது முன்னமே தெரிந்திருந்தால் அவளை கண்டிப்பாக பாட்டு வகுப்பில் சேர்த்து விட்டிருப்பான்.,

           இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை., அவள் பாடலை எப்படி வெளியே கொண்டுவர வேண்டும் என்று அவனுக்குள் ஒரு எண்ணம் இருந்தது.,

         அதை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்ற முடிவோடு தான் அன்று இரவு உறங்க சென்றிருந்தான்..

         அவன் வீட்டிற்கு வரும் போதே அவள் உறங்கி இருந்தாள்.,  பெங்களூரில் வந்து இறங்கியதும் நேராக கம்பெனிக்கு சென்று சில வேலைகளை முடிக்க வேண்டியது இருந்ததால் அவற்றை எல்லாம் முடித்து விட்டு அதன் பிறகே வீட்டிற்கு வந்தான்.,

             அம்மாவிடம் போனில் மட்டும் சொல்லியிருந்தான்., அவன் வரும் போது அவன் அம்மா மட்டும் முழித்திருக்க.,

        தன்னை ரெப்பிரஷ் செய்து கொண்டு வந்தவன்., உணவருந்தி விட்டு அங்கு நடந்தவற்றை அவன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்., அப்போது தான் அவள் பாடிய சில பாடல் வரிகளை போட்டு காட்டினான்.

      அவன் அம்மா தான்என்ன குரல்டா இந்த பொண்ணுக்குஆனா நமக்கு இது தெரியாம போச்சே.,  இந்த யோசனை இல்லாமல் போச்சே“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

     “நல்ல குரல் இருக்குற எல்லாரும் நல்ல பாடுவாங்க ன்னு  இல்லமா., நம்ம அவ பாடுவா என்பதை யோசிச்சு கூட பாக்கல., ஆனா இதுவரைக்கும் அவளை டைவர்ட் பண்ணுறது காக கூட டிவி போடலை., போட்டிருந்தா கண்டு பிடிச்சிருப்போம்.,  நீங்க பாட்டு கேட்கிறது இல்ல தானே.,  பொதுவாக கார்ல போகும் போது பாட்டு போடுவேன்.., இல்ல னா ஹோம் தியேட்டர் ரூம்ல போடுவேன்.,

       இவ அந்த ரூம் பக்கம் வரலை.,  இப்ப நம்ம  எங்கேயும் ட்ரவெல் போகலியே அம்முவ அங்கிருந்து அழைத்து வரும் போது நம்ம பாட்டு போடுற நிலையிலா இருந்தோம்., அதனால எதையும் யோசிக்கலை.,

         பார்க்கலாமா நாளை மறுநாள் டாக்டர் பார்க்க போக வேண்டியது இருக்கு இல்ல.,  அவர் கிட்ட சொல்லி இதை வெளியே கொண்டு வருவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கான்னு பாப்போம்.,

      எனக்கும் ஒரு ஐடியா இருக்கு நாளைக்கு சொல்றேன்“., என்று சொன்னான்.

        அவன் அம்மாவோ.,  “அந்த பாட்டை திருப்பி ஒரு தடவை போடுறா., அந்த குரலை கேக்கணும் போல இருக்கு“.,  என்று சொன்னார்.

     சிரித்தபடியே மீண்டும் அப்பாடலை ஒலிக்க விட்டான்.

கொள்ளை நிலவடிக்கும்
வெள்ளை ராத்திரியில்
கோதை ராதை நடந்தாள்.,
மூங்கில் காட்டில் ஒரு கானம்
கசிந்தவுடன் மூச்சு வாங்கி
உறைந்தாள்.,
பாடல் வந்த வழி
ஆடை பறந்ததையும்
பாவை மறந்து தொலைந்தாள்.,
நெஞ்சை மூடி கொள்ள
ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை எடுத்தாள்.,
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்.,
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்,
தான் இருக்கின்ற இடத்தினில் நிழலையும் தொடவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க..

       பாடல் முழுவதும் முடிந்து விட.,  “என்ன குரல் டா சரவணா., கேட்க கேட்க கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு“.,  என்று சொன்னார்.

       “அவளை இனிமேல் பாட வைத்து உக்காந்து கேட்டுகிட்டே இருங்கஎன்று சொன்னவன் சிரித்த படியே தன் அறைக்கு வந்து சேர்ந்தான்.,  அவற்றை நினைத்துக்கொண்டே உறங்கி போனான்.

            மறுநாள் காலை எழுந்தவுடன் எப்போதும் போல அவன் வேலைகளை முடித்துக்கொண்டு காலை உணவிற்காக டைனிங் டேபிளில் வந்து அமரந்தான்.,

       அவளோ உணவு எடுத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்., அவன் அமரவும்.,  அதைப் பார்த்தவள்.

        “நேத்து நீங்க எப்ப வந்தீங்க“.,என்று கேட்டபடி உணவை உண்ண தொடங்கியிருந்தாள்.

          அவனும்நைட்டு தான் வந்தேன்“.,  என்று சொன்னான்.

         “ஈவ்னிங் வருவேன் ன்னு சொன்னீங்க“., என்றாள்.

        “வந்துட்டேனே.,  ஆபீஸ்ல வேலை இருந்ததால ஆபீஸ் போயிட்டேன்.,  அதான் வொர்க் முடிச்சிட்டு வர லேட்டாயிடுச்சு“., என்று சொன்னான்.

      “அப்படியாஎன்று கேட்டுக்கொண்டாள்.,

       “இன்னைக்கு ஆபீஸ் போகலையாஎன்று அவனிடம் கேட்டாள்.,

              அவனோஆபீஸ் போகணும்., ஆனால் வீட்டுக்கு ஒரு ஆளை வர சொல்லி இருக்கேன்., அவங்க வந்த பிறகு பார்த்து பேசிட்டு போகணும்“., என்று சொன்னான்.

           அதற்கு அவளோஇன்னைக்கு ஆபீஸ் மீட்டிங் வீட்ல வச்சா“., என்று கேட்டாள்.

             “ஆபீஸ் மீட்டிங் இல்ல., உன்ன பாட்டு கிளாஸ் சேர்த்து விட போறேன்“.,  என்று சொன்னான்.

             “என்ன இன்னொரு கிளாசாஎன்றாள்.,

                “ஏன் படிக்க மாட்டியா“., என்று கேட்டான்.

                 “இல்ல ஏற்கனவே டிராயிங் கிளாஸ்  இருக்கே.,  எப்ப பாட்டு கிளாஸ் ம் கஷ்டம் இல்ல., அது தவிர வீட்டிலேயே ஸ்போக்கன் இங்கிலீஷ் நடக்குது இல்ல“., என்று அடுக்கினாள்.

              “உனக்கு பாட தெரியுமா., அப்படியே விட்டுருவேன்இல்லன்னா பாட்டு கிளாஸ் கத்துக்கோ, உனக்கு ட்ராயிங் நல்ல வந்தா டிராயிங் கிளாஸ் நிப்பாட்டி விடுவோம்., பாட்டு நல்ல பாடினா., பாட்டு கிளாஸ் வேண்டாம் ன்னு சொல்லிருவோம்., ஸ்போக்கன் இங்கிலீஷ் நல்ல பேச ஆரம்பிச்சிட்டா விட்டுடலாம்“., என்று சொன்னான்.,

            ’ஐயோ இவ்வளவு இருக்குதா‘., என்று யோசித்தவள்.,

               அவனிடம்நானே பாட்டை பார்த்து கேட்டு  நானே படிக்கிறேன்., அதுக்கெல்லாம் எதுக்கு பாட்டு கிளாஸ்“., என்றாள்.

             “உனக்கு பாட தெரியுமா“., என்று கேட்டான்.

       “பாட்டு தானே., பாட்டு கேட்டு  நானே பாட்டு பாட ட்ரை பண்றேன்., ஒரு வேளை நான் நல்ல பாடலை னா சேர்த்து விடுங்கள், பாட்டு நல்ல இருந்தா என்னை விட்டுறீங்களா“., என்று கேட்டாள்,
         அவனோநல்லா பாடினா தினமும் பாட்டு பாடணும்., அப்ப  மட்டும் தான் உன்னை விடுவேன்., இல்லனா பாட்டு கிளாஸ் போகனும்“.,என்று சொன்னான்.

         சற்று நேரம் அமைதியாக யோசித்தவள்.,”நான் ஈவினிங் சொல்லட்டுமா  உங்களுக்கு“., என்றாள்.

          “அது எப்படி இப்ப ஆள்களை வர சொல்லி இருக்கேனே“.,  என்று அவனும் பதிலுக்கு சொல்லிக் கொண்டிருந்தான்.

        காலை வேளையில் ஏற்கனவே எழுந்து வந்த உடனே.,  அவன் அம்மாவிடம் சொல்லி இருந்தான். “நான் பேசுவதற்கு தகுந்தாற் போல பேசுங்கள்., அவளுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறேன் ன்னு நீங்கள் எதையும் குட்டையை குழப்பி விடாதீர்கள்“., என்று சொல்லியிருந்தான்.

           “ஐயய்யோ பாடனுமா“., என்றாள்.

           பின்பு அவள்பாட்டே நான் இப்பதிக்கு கேட்கவே இல்லையே“., என்று சொன்னாள்.

          அவன் ஏற்கனவே இவளுக்காக எடுத்து வைத்திருந்த பாடல்களை ஓட விட்டான்.

             அதில் ஒரு பாடலை மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டவள்., “இதோட லயன்ஸ் வேண்டுமே“.,  என்றாள்.

         உடனே அவன் பாடல்வரிகளை தன் செல்லை எடுத்து அதை வீட்டில் இருக்கும்., அலுவலக அறையில் இருந்து பிரிண்ட் அவுட் எடுத்து கையில் கொடுத்தார்.,

         “ட்ரை பண்ணு“., என்று சொன்னான்முதல் சில வரிகளை மட்டும் பாட முயற்சி செய்தாள்.

          ஏற்கனவே நினைவு இருக்கும் போது பாடியதோ என்னவோ., குரல் லேசாக பிசிறு தட்டினாலும் அவளால் ஓரளவு நன்றாக பாட முடிந்தது.

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே
தள்ளிபோகட்டும் எந்தன்
இன்பம் துன்பம் எல்லாமே
உன்னை சேரட்டும்.,

       என்று பாட அவன் தான் சரி பாடி விடுவாள் என்ற எண்ணம் தோன்றியது.,

          பின்பு அவனிடம் அவள்நல்ல பாடினேனா“., என்று கேட்டாள்.,

        அவனோபரவாயில்ல., சரி இல்லனா  நீ பாட்டு கிளாஸ் தான் போ“., என்று சொன்னான்.

          ” இல்ல இல்ல., எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுங்க., நான் உங்களுக்கு நல்ல பாடி காட்டுறேன்“., என்று சொன்னாள்.

              அவனோ இரண்டு மூன்று பாடல்களை கையில் கொடுத்து., “மாலை தான் அலுவலகம் விட்டு வந்ததும் பாடி காட்ட வேண்டும்., இல்லை என்றால் நாளைக்கு பாட்டு கிளாஸ் இல் சேர்ந்து படிக்க வேண்டும்“., என்று சொல்லியிருந்தான்.

           ‘ஐயோ பாட்டு கிளாஸ் எக்ஸ்ட்ராவா., முடியவே முடியாது, இதற்காக ஒழுங்கா பாடி காட்டனும்என்று நினைத்துக் கொண்டாள்.

           “இந்த பாட்டு மட்டும் போதும் இல்லை“., என்று கேட்டாள்.

         அவனோஇல்ல இல்ல இன்னும் ரெண்டு மூணு இருக்கு“., என்று சில பாடல் வரிகளை எடுத்துக் கொடுத்தான்.

       அவள் வாசித்துப் பார்க்கும் அளவிற்கு தெளிவாக எடுத்துக் கொடுத்து இருந்தான்.

        அவன் எடுத்துக் கொடுத்ததை அவள் வாசித்து விட்டு அதற்குரிய பாடலை கேட்டுக்கொண்டிருந்தாள்., அந்த ராகம் தப்பாமல் பாட வேண்டும் என்பதற்காக தான்.

          அப்போது அங்கு வந்து நின்ற திலகவதி., “ஓகே கிளம்பு கிளம்புஎன்று சொன்னார்.

             அவர் அழைத்த உடன் திரு திருவென முழித்துக் கொண்டிருந்தாள்., “பாட்டு வேற படிக்க சொல்லி இருக்காங்களேஎன்று சொன்னாள்.

             “டிராயிங் கிளாஸ் போய்ட்டு வந்து பார்த்து கொள்ளலாம்., இப்ப வா“., என்று சொன்னார்.

         “அய்யய்யோ., அப்புறம் இன்னைக்கு ஈவினிங் நான் பாட்டு பாடி காட்டலை னா., அடுத்த நாளில் இருந்து பாட்டு கிளாஸ் வேற போகணும்“., என்று சொன்னாள்.

           அப்படி சொல்லும் அவளைப் பார்க்கும் போது சிறுபிள்ளை போலவே தோன்றியது.

               “அதெல்லாம் என்கிட்ட சொல்லாத.,  நீ நைட் பாடி காட்டினா போதும்.,  வந்து டிராயிங் கொஞ்சம் பண்ணிட்டு.,  ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ் முடிச்சுட்டு.,  அதுக்கப்புறமா பாட்டு பாடினால் போதும்“., என்று சொன்னார்.

          “எனக்கு நிறைய படிக்க கொடுக்குறீங்க“., என்று சொன்னாள்.

             “நீ இதை விட நிறைய படிச்ச.,  இப்ப தான் படிக்க மாட்டேங்குற“., என்று சொன்னார்.

          “இதை விட நிறைய படிப்பேனா“., என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

           ‘சீக்கிரம் நினைவு திரும்பட்டும்என்று மனதிற்குள் திலகவதி வேண்டிக் கொண்டாலும்., சரவணனின் அம்மாவாக அவர் மனதோ., அவன் மனதிற்குள் ஆசைப்படுகிறான் என்பதை தெரிந்தவர்., ‘இவளுக்கு பழைய ஞாபகங்கள் வந்தவுடன் இப்போது உள்ளதெல்லாம் மறந்துவிட்டால் என்ன செய்ய.,  சரவணனின் நிலை என்னவாகும்‘., என்று தோன்றியது.,

            இருந்தாலும்அவனிடம் இப்போதே சொல்லி வைக்கவேண்டும்., அதிகமான ஆசையை வளர்த்துக் கொள்ளக் கூடாதுஎன்று ஒரு தாயாக தன் மகனின் மீது அக்கறை கொண்ட மனதோடு யோசித்துக் கொண்டார்.

           ‘தன் மகனின் ஆசை நிறைவேற வேண்டுமென்றால் இவளுக்கு பழையது நினைவுக்கு வர கூடாது‘., ஆனால் ஒரு பிள்ளையை பெற்றவளாக.,  இவளுடைய பெற்றவர்களையும்.,  இவளுடைய உடன் பிறந்தவர்களும்.,  இவளோடு படித்த நண்பர்களையும் நினைக்கும் போது இவளுக்கு நினைவு வர வேண்டும் என்று தான் வேண்டிக்கொண்டார்.,

           

Advertisement