Advertisement

18

       மருத்துவமனையில் தூக்க மருந்தின் வீரியத்தில் தூங்கிக் கொண்டிருந்தவளை சுற்றி அத்தனை பேரும் நின்று பார்த்து விட்டே நகர்ந்து சென்றனர்.,

          அவர்கள் வீட்டினரையும் அவளையும் சற்று நேரம் பார்த்துக் கொண்டே இருந்தவன்., பெருமூச்சுடன் அங்கிருந்து முதல் ஆளாக வெளியேறினான்.,

               மற்றவர்கள் வெளியே வரும் ஹாஸ்பிடல் காரிடரில் நின்ற சரவணன் மனதிற்குள் தெளிவான முடிவு எடுத்திருந்தான்.

            அதையே வெளியே வந்த தன் அம்மாவிடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.,

          “அம்மு தூக்கம் கலைந்து தெளிஞ்சு எந்திரிச்சிட்டானா.,  முதல்ல டாக்டர் விட்டு பேச சொல்லுங்க., ஏன்னா இப்போ அவங்க குடும்பம் அவளுக்கு ரொம்ப முக்கியம்., என்ன தான் நம்ம நல்லா பார்த்தாலும் நாம யாரோ தான்., இதை  நாம சொல்வதை விட டாக்டர் சொல்றது தான் நல்லது.,

          கண்டிப்பா டாக்டர் அப்படி தான் பேசுவார் இருந்தாலும்.,  நம்மளும் மனசு அளவுல அதை  இப்பவே யோசிச்சு வச்சுக்கணும்.,  அது அவ ஃபேமிலி.,  அவ கூடப்பொறந்தவங்க.,  அது தான் அவளுக்கு முக்கியம்.,  நீங்க அப்புறம் ரொம்ப குழப்பிக்க கூடாது.,  நான் சொல்றது உங்களுக்கு புரியுதா ம்மா“.,  என்று கேட்டான்.

           “புரியுதுடா ஆனா என்ன.,  இத்தனை நாள் பழகினதால மனசு கெடந்து தவிக்குது“., என்று சொன்னார்.

      “அம்மா இங்க இருக்க சென்னையில தான் இருக்கப் போறா., உங்களுக்கு பார்க்கணும்னு தோணுச்சு னா., நான் பிளைட் ஏத்தி விடுறேன் போய் பார்த்துட்டு வாங்க.,  அதை விட்டுட்டு சும்மா எதையும் யோசிச்சிட்டு இருக்காதீங்க“.,  என்று சொன்னவன் அதற்கு மேல் வேறு எதுவும் சொல்லவில்லை.

        மருத்துவரின் அறைக்கு சென்றவன்.,  “டாக்டர் நாங்க பேசுவதை விட நீங்க பேசினால் அவள்ட்ட சரியான ரெஸ்பான்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன்.,  முடிஞ்சவரைக்கும் நீங்களே பேசுங்க.,  அவ கிட்ட சொல்லுங்க புரிஞ்சுக்குவா“.,  என்றவன்.

         “இப்பவும் எங்க வீட்டில வைச்சு பார்ப்பதற்கு நாங்க தயங்காமல் ஒத்துக்கலாம்., ஆனா

          அம்மா அப்பாவா  அவங்களோட  எதிர்பார்ப்பு எவ்வளவோ இருக்கும்.,  அப்படிங்கிறது எனக்குமே புரியுது.,  சோ பெத்தவங்க கிட்ட இருக்கிறது தான்  இப்போ அவளுக்கு நல்லது.,  தெளிவா ஞாபகம் வந்து இருக்கு.,  அப்படி ங்கும் போதுஅவங்க கிட்ட விடுவது தான் நல்லது.,

     டாக்டர் இது வரைக்கும் நடந்த எதுவும் ஞாபகம் இல்ல.,  அவ மைண்ட்ல வேற ஏதும் குழப்பம் வந்து விடக் கூடாது.,  அவளை ரொம்ப யோசிக்கக்க வைக்க கூடாது என்பதற்காக தான்.,  யார் கூடவும் அனுப்ப மாட்டேன்னு.,  உங்க கிட்டே சொன்னேன்.,  பெத்தவங்களா இருந்தாலுமே அவளுக்கு முழுசா ஞாபகம் இல்லாதப்போ எப்படி அனுப்புறது ன்னு தான் நான் யோசிச்சேன்.,

         ஆனா இப்ப அவளுக்கு நல்ல தெளிவான ஞாபகம் வருது ன்னு நீங்களே சொல்றீங்க தானே., அப்படி இருக்கும் போது ஒரு பொண்ணா அவங்க பெத்தவங்க கூட இருக்கிறது ரொம்ப பாதுகாப்பு ன்னு நான் பீல் பண்றேன் டாக்டர்“.,  என்று சரவணன் சொன்னான்.

      அதை கேட்டுக் கொண்டிருந்த மருத்துவர்.,  “நிச்சயமாக பேசுறேன் சரவணன்., இந்த நாலு மாசத்துல நீங்களும் உங்க அம்மாவும் பார்த்துக்கிட்டே அளவுக்கு யாரும் பார்த்துப்பாங்களா ன்னு எல்லாம் தெரியாது.,

          அந்த பொண்ணு மனசு அளவுல உங்களையும்., உங்க அம்மாவையும் ரொம்ப நெருக்கமா பீல் பண்றா.,  ஆனா நீங்க சொல்ற மாதிரி அஸ்   பேரன்டா அவங்க பெத்தவங்களும் சில விஷயங்களில்  பீல் பண்ணி இருப்பாங்க.,

        அதனால அவங்க கூட தான் அனுப்பனும்., நான் பேசுறேன்., பொண்ணு ட்ட  நான் எடுத்து சொல்றேன்“.,  என்று சொன்னார்.

       அவனும் சரி என்று தலை அசைத்துக் கொண்டான்., வெளி வார்த்தையாக மருத்துவரிடம் இவ்வளவு விஷயங்கள் பேசி விட்டாலும் அவனுக்கு மனதிற்குள் வருத்தம் இருக்கத்தான் செய்தது.,

        4 மாதத்தை விட இத்தனை வருடம் வளர்த்த அவர்களின் மனதையும் அன்பையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு டாக்டரை பேச சொல்லி இருந்தான்., அவளின் தூக்கம் களைவதற்காக அனைவரும் காத்திருந்தனர்.

    தூக்கம் களைந்து எழுந்தவள் சற்றுநேரம் எதைப்பற்றியும் பேசாமல் அமைதியாக முழித்து பார்த்திருந்தாள்.,

         பின்பு அரசின் உதவியோடு எழுந்து அமர்ந்து அவள் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.,

          ஏற்கனவே டாக்டர்அவள் தூக்கத்திலிருந்து விழித்த உடன் என்னை கூப்பிடுஎன்று சொல்லி இருந்ததால் வேறு யாரிடமும் எதுவும் சொல்லாமல் நர்ஸ் அந்த அறையிலிருந்து இன்டர்காமில் அழைத்து டாக்டரிடம் சொன்னார்.

        டாக்டரும் சற்று நேரத்தில் வருவதாக சொன்னவர்., அவர் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து சேர்ந்தார்.

       அவர் வரும்போது இவளோ பார்வை சுவரில் வெறித்த வண்ணம் இருக்க கண்ணின் கருவிழி அலைபாய்தலுடன்  அமர்ந்திருந்தாள்.,

         ஆனால் அவளிடம் எந்த யோசனையும்  இருப்பது போல தெரியவில்லை.,  மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தவளை பார்த்த டாக்டருக்கு தான்.  ‘ஏன் இந்த பொண்ணு இப்படி இருக்குஎன்ற யோசனையோடு வந்து அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

       “மீராஎன்று அழைத்தார்.

      திரும்பிப் பார்த்தவள்டாக்டர்என்றாள்.,

        “கேட்டா தப்பா நினைக்க கூடாது., இப்ப எப்படி பீல் பண்ற.,  என்ன ஆச்சு தூங்கி எழுந்த பிறகு ரொம்ப டிஸ்டர்ப் ஆகுதா., இல்ல நார்மலா பீல் பண்றீங்களா“.,  என்று கேட்டார்.

        “ஓகே வா இருக்கேன் டாக்டர்“., என்று சொன்னாள்.

    “இப்ப உங்களுக்கு ஏதும் குழப்பமா இருக்கா“., என்று கேட்டார்.

      சற்று நேரம் மௌனமாக இருந்தவள்.,  “எதுவா இருந்தாலும்., நாம நினைச்ச மாதிரி  நம்ம மாத்திக்கலாமா டாக்டர்.,  அப்படித்தான் என்னை செட் பண்ணிக்கிறேன் டாக்டர்.,  என்னைய நான் சரி பண்ணிக்கறேன்“.,  என்று சொன்னாள்.

          டாக்டர் சரவணன் கூறியபடி அறிவுரைகளை சொல்ல தொடங்கினார்., “உன்னை எத்தனை வருஷம் வளர்த்தவங்க உங்க அம்மா அப்பா ஞாபகம் இருக்கா., நீ அவங்க வீட்டு பொண்ணு மீரா.,  உன்னோட அக்கா அண்ணன்  நீ இல்லாம போயிட்டீயோ ன்னு  நினைச்சு பயந்து போய்ட்டாங்க., இப்ப நீ அவங்க கைல திருப்பி கிடைச்சிருக்க.,  இது அவங்களுக்கு எவ்வளவு பெரிய சந்தோஷமா இருக்கும்.,

      அது மட்டும் இல்லாம நீ யாருன்னே தெரியாம உன்னை எடுத்து பத்திரமாக பாதுகாத்த அவங்களுக்கும்  நீ நல்லபடியா உன் வீட்டுக்கு திரும்பி போறது தானே.,  அவங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்“.,  என்று சொன்னார்.

        அமைதியாக தலையை அசைத்து கேட்டுக் கொண்டாள்.,

     வேறு எதுவும் பதில் சொல்லவில்லை., “இப்போது உங்க வீட்டுக்கு போகலாமா“., என்று கேட்டார்.

      அமைதியாக தலையை அசைத்தவள்., “மத்தவங்க எல்லாம் என்ன சொல்றாங்க டாக்டர்“., என்றாள்.

       “மத்தவங்க சொல்றதுக்கு என்ன இருக்கு.,  இதுல உன்னோட முடிவு தான் முக்கியம்“., என்று சொன்னவர் வேறு எதுவும் சொல்லவில்லை.,

        இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் இருந்து சில டெஸ்ட் களை  எடுத்துக் கொண்டு., அதன் பின்பு அவள் வீட்டிற்குப் போகலாம் என்று சொல்லி இருந்தார்.

      அதன் பொருட்டே டாக்டரும் அதையே நர்சிடம் சொல்லி மற்ற டெஸ்டுகள் ஒவ்வொன்றாக எடுக்க ஏற்பாடு செய்ய சொன்னார்.

    பின்பு அவர்கள் வீட்டினரிடம் சென்று சில டெஸ்ட் மட்டும் எடுத்து விட்டு ட்ரீட்மென்ட் பார்த்துட்டு.,  இரண்டு நாட்கள் கழித்து அவளை நீங்கள் கூட்டிப் போகலாம்., அதுவரை அவள் இங்கு இருக்கட்டும்“., என்று சொன்னார்.,

       அனைவருக்கும் சந்தோஷம் அவர்கள் முகத்தில் தெரிந்தது.

டாக்டர் தான்போய் பாக்குறவங்க பார்த்து பேசிட்டு வாங்க“., என்று சொன்னவர்.

         ஆனா மீரா பேசி தெளிவாக்கி விட்டுட்டு வந்திருக்கேன்.,  யாரும் எதுவும் சொல்லி குழப்பிறாதீங்க“., என்று சொன்னவர்., அவளிடம் பேசியதையும் சொன்னார்.

       அவள் அதை ஏற்றுக் கொண்டதையும் சொன்ன பின்பு சரவணனை பார்த்து கண்ணை காட்டி விட்டு சென்று விட்டார்.

       முதலில் அவர்கள் வீட்டினர் சென்று பேசத் துவங்கும் போது., அவள் அம்மாவும் அப்பாவும்அவள் பிழைத்து வந்ததே போதும்என்று சொன்னார்கள்.,

       அக்கா பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைய முடியாத சூழ்நிலையால் வீட்டில் இருக்கிறாள்., என்று சொன்னார்கள்.,

           அண்ணன் மட்டும் உடன் வந்து இருக்க.,  அவனும் அவள் மீண்டும் தங்கள் கையில் கிடைத்ததே போதும் என்று சொல்லிக்கொண்டிருந்தான்.,

        “இப்போ ரெண்டு நாள் டாக்டர் இங்கே சொல்லிருக்காங்க., இரண்டு நாள் கழிச்சி உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறோம்“., என்று சொன்னார்கள்.,

    அமைதியாக தலையை ஆட்டிவள் மனம் கிடந்து தவித்தது.,  அதை வெளியில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளே முழுங்க முடியாமல் அமைதியாக வைத்துக் கொண்டாள்.

     அதே நேரம் திலகவதி அவளை பார்க்க வர.,  அவரின் பின்னால் சரவணனும் வந்தான்., அவர்களை பார்த்தவுடன் அவளது மனம் என்ன நினைக்கிறது என்று அவளால் சொல்லவே முடியவில்லை.,

       அவள் அருகில் வந்த திலகவதி அவளை அணைத்துப் பிடித்தபடி அவன் நெற்றியில் முத்தமிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா.,  நீ சந்தோஷமா இருந்தா எங்களுக்கு அது போதும்.,  என்று சொல்லிக் கொண்டிருந்தார்.,

          எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டியவள் வேறு எதுவும் சொல்லவில்லை., ஆனால் அவள் திலகவதியின் கையை அழுத்தமாக பிடித்து இருந்ததை திலகவதி உணர்ந்தார்.,

          ‘இந்த பொண்ணு ஏன் அழுத்தமாகவே பிடிச்சிருக்குஎன்று யோசித்தவர் வேறு எதுவும் சொல்லவில்லை.,

      

Advertisement