Advertisement

     பின்னரே அவளுக்கு இங்கிருந்து போக மனம் இல்லாததையும்.,  டாக்டர் தான் தன்னை அதுதான் உன் குடும்பம் என்று சொல்லி அனுப்பியதையும் பற்றி சொன்னவள்.,

“எப்படியோ அங்க போய் கொஞ்ச நாள்ல ஓரளவுக்கு மனசால செட்டாகிருவேன் அப்படி ன்னு நம்பி தான் போனேன்.,  சரி அம்மா அப்பா அக்கா அண்ணா அப்படிங்கிற நம்பிக்கைல செட் ஆயிடும் ன்னு நம்பினேன்., ஆனா அங்க அந்த அண்ணி பேசினது..,  என்னால முடியவே இல்லை..,  நான் நேற்று காலேஜ் போயிட்டு வந்தேன்.,

காலேஜ்ல போட்டோஸ் எல்லாம் காமிச்சாங்க.,  நீங்களே என் கூட காலேஜுக்கு வந்தீங்க இல்ல அந்த போட்டோஸ்”.,என்று சொல்லி விட்டு அவர் மடியிலேயே மேலும் முகம் சாய்த்து கொண்டவள்.,

அவள் அண்ணி பேசியதை எல்லாம் சொல்லிவிட்டு “நான் பைத்தியம் மாதிரி எதுவும் பிஹேவ் பண்ணினேனா அத்தை.,  இங்க இருந்த அப்ப நான் சரியா இல்லையா”., என்று கேட்டாள்.

“யாரை பார்த்து யாரு பைத்தியம் சொல்றது., அவ சொன்னா  அத கேட்டுட்டு உங்க வீட்டில் ஒருத்தரும் ஒன்னும் சொல்லலையா., நாளைக்கு நம்ம சென்னை போறோம்., உங்க அண்ணி காரிய நான் உண்டு இல்ல ன்னு ஆக்குறேன்., அதுக்கப்புறம் தான் எஸ்டேட் போறோம்”.,  என்று சொன்னார்.

“எஸ்டேட் போறோமா”., என்றாள்.

“ஆமா டா நாளைக்கு நானும் சரவணனும் எஸ்டேட் கிளம்பலாம் ன்னு இருந்தோம்., அவன் தான் பத்து நாள் கழிச்சு ன்னு சொல்லிக்கிட்டு இருந்தான்.,

இப்ப தான் அவன்ட்ட  அடம்பிடிச்சு பிடிவாதம் பண்ணி நாலஞ்சு நாள்ல வேலையை அவசர அவசரமாக முடிக்க வச்சு., இழுத்துட்டு போறதுக்கு ரெடி பண்ணி வச்சிருக்கேன்.,

அவன் நாளைக்கு ன்னு சொன்னாலே., இன்னும் 5 நாள் ஆக்கிடுவான்., என்கிட்ட நாளைக்கு ன்னு சொல்லி இருக்கான்.,  ஆனா பாரு நாளைக்கு காலையில் ஏதாவது வேலை இருக்கும்.,  3 நாள் கழிச்சு தான் கூட்டிட்டு போறேன் ம்மா ன்னு சொல்லுவான்.,

நம்ம எஸ்டேட் போறதுக்கு முன்னாடி.,  சென்னை போறோம்.,  உங்க அம்மா கிட்ட அண்ணிகிட்ட ன்னு எல்லாரிடமும் சண்டை போட்டுட்டு தான் மறுவேலை.,

உனக்கு மாப்பிள்ளை பார்ப்பாளா., அவ என்ன நெனச்சிட்டு இருக்கா., நான் இருக்கிறேன் இல்லடா நான் பார்த்துக்கிறேன்.,அதுக்காக அழுவியா., நீ எப்ப வந்த”. என்று கேட்டார்.

அவள் அண்ணனும் அக்காவும் நேற்று வந்து விட்டுவிட்டு.,  இன்று காலை சென்றதை சொன்னாள்.,

“நீங்க இல்லாதப்ப வந்தது., தப்பா அத்தை”.,என்று கேட்டாள்.

“இது உன் வீடு நீ எப்ப வேண்டும்ஆனாலும் வரலாம்.,  உன் இஷ்டம் தான்.,  இந்த வீடு உனக்காக எப்போதும் திறந்திருக்கும்”., என்று சொன்னார்.

மேலும் இருக்கமாக அவரைக் கட்டிக் கொண்டு., அவர் மடியில் முகம் புதைத்தவள் கண்ணீரோடு அவரைத் திரும்பிப் பார்த்து.,

“அவங்க ஏதும் சொல்லுவாங்களா அத்தை” என்று கேட்டதற்கு

அவளைப் பார்த்து சிரித்தபடி “அவன் மனசு எனக்கு தெரியும்., உனக்கு நான் சொன்னா புரியாது., நீ இப்ப என்ன பண்ற., இப்படியே மாடிக்குப் போற., அவன் ரூம்ல தான் இருக்கிறான்.,

நீயே போய்  அவன் என்ன செய்கிறான்னு பாரு., ஏன்னா நீ போனதுல இருந்து  இதுவரைக்கும் யாரையும் ரூமுக்கே வர விட்டது இல்லை.,  நீ என்ன பண்ற போயி மாடி ரூம்ல அவன் என்ன செய்கிறான் பார்த்துட்டு வர்ற., நீ  பார்த்த  அப்புறம் அவன் இருக்க கூடாதுன்னு சொன்னா.

அதுக்கு அப்புறம் நான் அவன் கிட்ட பேசுறேன்.,  அவன் உன்னைய இருக்க கூடாதுன்னு சொல்றானா இல்ல.,   என்னை இருக்க கூடாதுன்னு சொல்றானா ன்னு பார்ப்போம் வா”., என்று சொன்னார்.

“நீங்களும் வாங்க அத்தை”., என்று அழைத்தாள்.

“நீ போய் பாத்துட்டு வாடா., நான் இங்கேயே இருக்கிறேன்.,எனக்கு இப்பதான் மனசு நிம்மதியா இருக்கு”., என்று சொன்னார்.

“சினக்ஸ் நல்ல செஞ்சிருந்தேனா  அத்தை” என்று கேட்டாள்.

“நீயா செஞ்ச., ரொம்ப டேஸ்டா இருந்துச்சு., அதுதானே பார்த்தேன் இவளுக்கு எப்படி இவ்வளவு நல்லா சமைக்க வந்துச்சுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்”., என்று சொன்னார்.

“இது மட்டும் அந்த அக்கா காதுல  கேட்டுச்சு.,  நாளையிலிருந்து சமையல் பண்ணி போட மாட்டாங்க”., என்று சொல்லி சிரித்துக் கொண்டே இருந்தாள்.

“சரி மீதி இருந்துச்சுன்னா., நான் போய் சாப்பிட்டு வரேன்”., என்று சொன்னார்.

“அதெல்லாம் சாப்பிடாதீங்க., ஆறி போய் இருக்கும்., இப்ப சுட சுட அடையும் அவியலும் வரும்”., என்று சொன்னாள்.

“அதுவும் நீ தானா”., என்று கேட்டார்.

“ஆமா ரெடி பண்ணிட்டேன்., சுடா சுடுவாங்க”., என்று சொன்னாள்.

“முதல்ல போய் பேசிட்டு வா” என்று சொல்லி சரவணன் அறைக்கு அனுப்ப.,

அவளோ “அத்தை எப்படி அத்தை என்னை அனுப்புறீங்க.,  உங்களுக்கு உங்க பையன் மேல ரொம்ப நம்பிக்கை இல்லையா”., என்று கேட்டாள்.

“ஆமா., ஏன் பையன் அதுக்கு எல்லாம் சரி பட மாட்டான்”.,  என்று சொன்னார்.

“ஆனால் என்னையும் நம்பி அனுப்புறீங்களே அது தான்”., என்று கேட்டாள்.,

“நீ என்ன பண்ணுவ”., என்று கேட்டார்.,

“உங்களுக்கு நான் என்ன பத்தி தெரியவே இல்லை., இருந்தாலும் என்னை நம்பி அனுப்புறதால உங்க பையனோட கற்புக்கு நான் கேரன்டி”.,  என்று சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே சென்றாள்.

அவரோ சிரித்துகொண்டே “கடவுளே சீக்கிரம் எல்லாத்துக்கு ஒரு வழியை காட்டு”., என்று வேண்டிக் கொண்டு தன் கணவரின் புகைப்படத்தை பார்த்து “மருமக வந்துட்டாங்க., ஆனா அவன் மனசில் எதையும் வச்சுட்டு எதுவும் பேசக்கூடாது அது தான் பயமா இருக்கு”.,  என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்கு சிரித்தபடி சென்றார்.

சத்தமின்றி அமைதியாக மேல் அறைக்கு சென்றாள்.

அவன் அறையில் சோபாவில் சாய்ந்து படுத்தபடி எரிந்து கொண்டிருக்கும் விளக்கை வெறித்தபடி படுத்திருந்தான்.,

அருகில் மியூசிக் பிளேயர் இருந்து மிதமான இசையொலி மட்டும் வந்து கொண்டே இருந்தது., பின்பு என்ன நினைத்தானோ ஆஃப் பண்ணிவிட்டு.,

மெல்லிய குரலில் ஒலித்த  மீராவின் பாடல்களை ஒலிக்க விட்டிருந்தான்.

சரியாக  அதே நேரம் மீரா மாடிக்கு வர.,  அவள் குரல் தான் அவளை வரவேற்றது.

அன்பே சுகமா என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க., கதவை மெதுவாக சத்தம் இன்றி திறந்தவள் அமைதியாக வாசலில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதில் அவளுடைய குரல் “தலைவா சுகமா.? சுகமா.? உன் தனிமை சுகமா.? சுகமா.?  என்ற பாடல் வரும் போது அவன் வாய் மட்டும் ஏதோ முணுமுணுப்பது தெரிந்தது.,

சத்தமே இல்லாமல் வந்தவள் அவனின் கவனம் இங்கு இல்லை என்பதை உணர்ந்து., மெதுவாக முட்டிபோட்டு ஊர்ந்து அவன் படுத்திருந்த சோபாவின் அருகே வந்தவள் காதை வைத்து ஒட்டு கேட்க முயற்சித்தாள்.,

பாடல் ஒலித்துக் கொண்டிருந்தாலும் அவன் பேசுவது எதுவும் புரியாமல் அமைதியாக அவனைப் பார்த்தபடி இருந்தவள்.,  பின்பு மெதுவாக அவன் முன் கையை ஆட்ட திரும்பி பார்த்தவனுக்கு ‘அவள் தானா என்ற சந்தேகத்தோடு அவளையே உற்றுப் பார்த்தான்’.,

அவளோ “இப்போ என்ன முனுமுனுத்தீங்க.,  என்ன சொன்னீங்க”., என்று கேட்டாள்.

அவனும் அவளை பார்த்தபடியே இருந்தானே தவிர  வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.

அவனுக்கு அவளின் பிம்பம் கனவாகவே தோன்றியது.,

“எப்ப முனங்கினேன்”., என்றான் மெதுவாக.

அவளும் அந்த லைனை பாடிக்காட்டினாள்., “தலைவா சுகமா சுகமா.. உன் தனிமை சுகமா சுகமா”.,  என்று பாடிக் காட்ட.

அவனும் “இல்ல சுகமில்லை அதை தான் சொன்னேன்”., என்று சொன்னான்.

“ஏன் சுகமில்லை”., என்று அருகில் வந்து கேட்க.,

அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவன்.,  கையை நீட்டி ஏதோ கேட்பது போல கேட்க.,  அவளும் அவன் கையில் தன் கையை வைத்தாள்.

அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்., தன் மேல் மொத்தமாக இழுத்து அவளை சாய்த்து கொண்டான்.

“இன்னைக்கு தான்  கனவுல வரனும் ன்னு தோணுச்சா”., என்று கேட்டான்.

‘இது கனவா’ என்று யோசித்தவள் நிதானமாக அவன் மார்பில் இருந்த தலையை நிமிர்த்தி., அவன் முகத்தை பார்த்தாள்.

அப்போதும் பாட்டு ஒலித்துக் கொண்டிருக்க., இப்போதும் விளக்கை வெறித்த படி., தனியே சொல்லி கொண்டு இருந்தான்., “இதுல ஒவ்வொன்றிலும் சுகமா சுகமா ன்னு கேட்குற., எனக்கு சோகம்  தான் அதிகமாயிட்டே போகுது., ரொம்ப கஷ்டமா இருக்கு”., என்று சொல்லி எங்கோ பார்த்து முனங்கி கொண்டிருந்தான்.

அப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது அவன் ‘தன்னை கனவில் வந்த பிம்பம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்., அவன் கைக்குள் மொத்தமாக அடங்கிப் போய் இருக்கிறேன்., இது கூட தெரியாமல் சுகமா சுகமா என்று கேட்டுக் கொண்டிருக்கிறான்”., என்று நினைத்தவள்.

அவனுக்கு இது கனவல்ல என்று புரிய வைக்கும் பொருட்டு நிமிர்ந்தவள் அவன் தாடையை பிடித்து ஆட்டினாள்.

அவனும் அது எதையும் கண்டு கொள்ளாமல்., “நீயே கொஞ்ச நேரம் தான் கனவுல இருக்கப் போற.,  நீ கொஞ்ச நேரம் அப்படியே இரு., நான் பேசுகிறேன்” என்று அரை தூக்கத்தில் புலம்புவதை போல புலம்ப.,

‘இவன் சரிப்பட்டு வர மாட்டான்’ என்று மனதிற்குள் நினைத்தவள். கொஞ்சமாக அவன் கைக்குள்ளே இருந்த படியே அவன் முகத்தருகில் தன் முகத்தை கொண்டு வந்தவள்., அவனை வேகமாக பிடித்து தன்னைப் பார்த்து திருப்பினாள்.

அவனோ “ஏன் அம்மு.,  சொன்னது மறந்து போயிரும்., என்னமோ சொல்லிட்டு இருந்தேனே”., என்று சொன்னேன்.

இவன் சரிப்பட்டு வரமாட்டான் என்று நினைத்தவள்., அவன் கன்னத்தில் அழுத்தமாக தன் உதட்டை பதித்தாள்.,  முதலில் என்ன நடக்கிறது என்று புரியாமல் போனாலும்., தன் கன்னத்தில் அழுத்தமான அவளின் முத்தத்தை உணர்ந்தவன் வேகமாக திரும்பிப் பார்த்தான்.,

அப்போதுதான் அவளை தன் கைக்குள் அடக்கி இருப்பதும்.,  தன் மேல் இழுத்து போட்டிருப்பதும்  உணர்ந்தவன் “அம்மு” என்றான் வேகமாக.

“ப்பா கனவில் இருந்து வெளியே வந்துட்டீங்களா”., என்றாள்.

ஆனாலும் அவன் கன்னத்தில் கையை வைத்தபடி., அவன் மேல் சுகமாக சாய்ந்து கொண்டு அவள் பேசினாள்.

“அம்மு நீ எப்படி இங்க”., என்று தன்னை நிதானப் படுத்திக் கேட்டவன். எழும்ப முயற்சி செய்ய.,

“அப்படியே இருங்க”.,என்றபடி   அவன் மேல் அப்படியே சாய்ந்தாள்.,

“இவ்வளவு நேரம் கனவு நினைச்சு உளருனீங்க இல்ல., அதெல்லாம் இப்போ சொல்லுங்க.,  நான் பக்கத்திலேயே இருந்து கேட்கிறேன்”., என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

Advertisement