Advertisement

15

    மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இரண்டு நாட்கள் என்னவோ போல் இருந்தவள்., குழப்பமா இருக்கு என்று அடிக்கடி திலகவதி யிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.,  பின்பு சாதாரணமாக மாறிப் போனாள்.

அவளுக்கு தான் மறந்துவிடுமோ அந்த எண்ணத்தோடு பயத்தில் அமைதியாக இருந்து கொண்டாள்.

     இப்படியே இரண்டு நாட்கள் செல்ல அவளுக்கு ஓவிய வகுப்பிற்கு அழைத்து சென்றாலும்., வீட்டில் தினமும் அவளை பாட வைப்பதற்கு திலகவதியோ அல்லது சரவணனும் மறக்கவில்லை.,  யாராவது ஒருவர் நிச்சயமாக அவளை பாட வைத்து விடுவார்கள்.,

       இப்பொழுதெல்லாம் சரவணன் வேலை வேலை என்று அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிக்க தொடங்கியிருந்தான்.,

     அதற்கு காரணமும் இருந்தது அன்று மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு அவள் கம்ப்யூட்டரில் ஏதாவது செய்கிறாளா என்று பார்ப்பதற்காக.,  அவனுடைய லேப்டாப்பை கொடுக்க முதலில் யோசித்துக்கொண்டே இருந்தவள்., பின்பு லாவகமாக ஓபன் செய்தாள்.,

     சிலவற்றை அவன் வேண்டுமென்றே சந்தேகம் கேட்டான்.,

            அவளும் அதை விளக்கிக் கொண்டிருந்தாள்., அவனுக்குப் புரிந்து விட்டது இவளுக்கு ஆழ்மனதில் இருக்கும் ஞாபகங்கள் அது சம்பந்தப்பட்ட விஷயங்களை பார்க்கும் போது நினைவுக்கு வருகிறது என்பது.,

         அதை அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருக்க அப்போது அவன் அம்மா தான்சரவணா சாப்பிட்ட உடனே தூங்க போகாத கொஞ்சம் பேசணும்“.,  என்று சொன்னார்.

       சரி மா என்று கேட்டுக்கொண்டான்.,          
         தன் அன்னை யோசனையோடு இருப்பதை பார்த்தவன்., ‘ஏதோ பெரிய விஷயம் தான் பேசப் போகிறார்‘., என்று நினைத்தவன் அதற்கு தகுந்தார் போல தன் மனதை சமப்படுத்திக் கொண்டான்.

           அது போலவே மாத்திரையின் வீரியத்தில் எப்பொழுதும் போல அம்மு தூங்கிவிட.,  அதன் பிறகு சரவணனை அழைத்து ஹாலில் அமர்ந்து பேசத் தொடங்கியிருந்தார் திலகவதி.

       “அம்மா சொல்றதை கேளுடா தம்பி.,  அந்த பொண்ணுக்கு எப்ப நாளும் நினைவு திரும்புவதற்கு வாய்ப்புகள் நிறைய தெரியுது.,  ஆனா அவ சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவளுக்கு டக்குனு ஞாபகம் வருது.,

     அது ஏதாவது கொடுத்தால் அதைப் பத்தின விஷயங்களை அவளறியாமல் வெளியே வர ஆரம்பிக்கிறது.,  இதுமாதிரி நிச்சயமா ஒரு நாள் அவளுடைய பழைய விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வரதுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கு.., 

           அதனால நீ அவட்ட விலகி இருந்துக்கோ.,  ஏன்னா அவளுக்கு நினைவு திரும்பின அப்புறம் இப்போ உள்ள விஷயங்கள் மறந்து போவதற்கான வாய்ப்புகள் இருக்கு ன்னு டாக்டர் சொல்லிருக்காரு.,  அப்படி மறந்து போற சந்தர்ப்ப சூழ்நிலை வந்துச்சுன்னா. அதுக்கு நம்ம இப்பவே மனதை பக்குவப்படுத்திக்கனும்.,

      ஏன்னா அவளை காப்பாத்தனும் நம்ம வீட்ல வச்சு பார்த்துகிட்டோம் ன்கிற ஒரே காரணத்துக்காக நம்ம நினைவுகள் அவளுக்கு இருக்கணும்னு  எந்த கட்டாயமும் கிடையாது.,   நம்ம எதிர்பார்க்கிறது தப்பு., நம்ம கையில கிடைச்சா காப்பாற்றிட்டோம்.,  யாரா இருந்தாலும் இதுதான் செஞ்சிருப்போம் அப்படி நினைச்சுக்கோ“., என்று சொன்னார்.

         அமைதியாக அமர்ந்திருந்தவன் சிரித்தபடி., “உங்க புள்ள இன்னும் அந்த அளவுக்கு மனசு கட்டுப்படுத்த தெரியாம இல்லமா.,  இருக்கும் சின்ன சின்ன எண்ணங்கள் இருக்கதான் செய்து இல்லன்னு சொல்லல.,  ஆனா அது  என்னோட வயசு காரணமாக கூட இருக்கலாம்.,

        அல்லது இவ்வளவு அனுபவம் இருந்தும்., இந்த பொண்ணு ஏதோ அவளோட சில குணங்களால் ஈர்த்தது  கூட இருக்கலாம்.,  அதுக்காக அப்படியே மயங்கி போய் இல்ல.,  பைத்தியக்காரத்தனமா யோசிக்கவே மாட்டேன் நம்புங்க.,

      அப்படியே இருந்தாலும் மேக்சிமம் போனா., அவ அவங்க வீட்டுக்கு போய்ட்டா அப்படிங்கற மாதிரி இருந்துச்சுன்னா.,  கொஞ்ச நாளைக்கு மனசு கஷ்டமா தான் இருக்கும்.,

     ஏன் அப்பா போன புதுசுல  எல்லா விஷயத்தையும் நம்ம தாங்கலை., ரெண்டு பேரும் நம்ம கஷ்டத்த  நமக்குள் வைச்சிக்கலை., எனக்கு தெரியாம மறைச்சுக்கிட்டு நீங்களும்.,  என்னோட கஷ்டத்தை  உங்களுக்கு தெரியாம மறைச்சுக்கிட்டு நானும் இருந்தோம் இல்ல.,

      அப்படி தான் ம்மா இப்பவும்., நம்மை பார்த்துக்கலாம்.,  நீங்க தான்  பகல் ஃபுல்லா அவ கூட இருக்கறீங்க.,  நீங்க பார்த்துக்கோங்க., நீங்க அந்த மாதிரி எதுவும் யோசிக்காதீங்க“.,  என்று சொன்னான்.,

         சிரித்தபடி அவனைதூங்கு போஎன்று அனுப்பி வைத்தவருக்கு மனம் பாரமாக இருந்தது.,

         ‘தான் தானே அவன் மனதிலும் ஆசையை விதைத்து விட்டோமோஎன்றும்  தோன்றியது.,  ‘அவன் மனதில் ஆசை விதித்தது தவறு தானேஎன்று நினைத்து கொண்டவர்.,

      அவன் அப்பா தவறிய பொழுதில் அவன் ஏற்கனவே தொழில்துறையில் காலூன்ற தொடங்கியிருந்தான்.,

      அப்போது பார்ட்டி நண்பர்களோடு கெட் டூ கெதர் என இருக்கும் சமயங்களில் இலேசாக மது அருந்துவது பழக்கம்., அப்படித்தான் அவன் தந்தை இறந்த சமயங்களிலும் அவ்வப்போது மதுவை துணைக்கு அழைத்துக் கொண்டான்.,

    அதை நினைத்து இப்போது பெருமூச்சு விட்டார்., “கடவுளே என் பிள்ளைக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாதுஎன்று ஒரு தாயாக வேண்டிக்கொண்டார்.

      அதன் பிறகு இரண்டு நாட்கள் அதன் போக்கில் செல்ல., இப்பொழுது எல்லாம் அவன் தாமதமாக தான் வீட்டிற்கு வரத் தொடங்கியிருந்தான்.,

     அவளோடு செலவழிக்கும் நேரங்களை குறைத்துக் கொண்டான்., ஆனால் வீட்டில் அவளுடைய இருக்கும் திலகவதி தான் இவளை எப்படி விட்டு பிரிந்து இருக்க போகிறோம் என்று தோன்றியது.,

      மகனை நினைத்து வருந்தியவருக்கு தன் நிலையும் வருத்தமாகத்தான் இருந்தது.,  ஆனால் என்ன செய்ய முடியும் பழகிக்கொள்ள தானே வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.,

    அப்போது  தான் அவருக்கு அவருடைய செல்லில் அழைப்பு வந்தது., தெரியாத நம்பராக இருக்க எடுத்து பேச தொடங்கினார்.

    அவர்கள் தங்களை மீராவின் வீட்டினர் என அறிமுகப்படுத்திக் கொண்டு., “தாங்கள் வந்து பார்க்க வரலாமா.,  நாளை வரட்டுமா“.,  என்று கேட்டனர்.

        “தாராளமா வாங்க“., என்று சொல்லி விட்டுஅவளுடைய நிலை உங்களுக்கு தெரியும்., அதனால தான் சொல்றேன் நாங்க உங்கள எங்க சொந்தகாரங்கனோ., தெரிஞ்சவங்கனோ தான் அறிமுகப்படுத்த முடியும்.,  தப்பா எடுத்துக்காதீங்க“.,  என்று சொன்னார்.

       “இல்ல இல்ல நீங்க அவ நல்லதுக்கு தானே சொல்றீங்க., நாங்க அப்படியெல்லாம் யோசிக்கல“.,  என்று சொல்லிவிட்டு மறுநாள் வருவதாக சொல்லி இருந்தனர்.,

        ஏனெனில் மீராவின் அம்மா தான் அவளுக்கு பிடித்த பண்டங்களை செய்து கொண்டு தான் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க அதை செய்வதற்காக தான் இத்தனை தாமதம். இல்லா விட்டால் அவன் கல்லூரி சென்று வந்த மறுநாளே வந்திருப்பார்கள்.

          சரவணனிடம்அவர்கள் நாளை வருகிறார்கள்என்று சொன்னார்.,

அவனும்சரி மா வரட்டும் பார்த்துக்கலாம்“., என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

     திலகவதி தான்., “அவங்க வர்ற நேரம் நீ வீட்ல இருக்க மாதிரி பாத்துக்கோடா“., என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

        “சரிமா பாத்துக்கறேன்என்று சொன்னவன்

       ‘அவர்கள் வந்தவுடன் அவளுக்கு அவர்களை பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து விடுமா.,  அல்லது யோசிப்பாளா.,  அல்லது ஏதேனும் அவளிடம் மாற்றங்கள் வருமாஎன்று யோசித்துக் கொண்டே இருந்து அவனை அவனே குழப்பிக்கொள்ள தொடங்கியவன்.,  அப்போது தான் தலையை உதறி நினைவுகளை தள்ளிவிட்டு வேலைக்குள் தன்னை பொருத்திக் கொண்டான்.

       ‘இது சரியல்ல அம்மா சொல்வது போல நான் அதிகம் யோசிக்க வேண்டும்‘., என்று நினைத்தவன் பின்புஇனி இப்படி யோசிக்க கூடாதுஎன்ற உறுதியோடு அமைதியாகி விட்டான்.,

      அவர்கள் சொன்னது போல  மறுநாள் வந்து சேர்ந்தனர்.,  திலகவதி தான் வரவேற்று அமர வைத்தார்.,

       அவளுக்கு பிடித்த பண்டங்களும் அவளுக்குப் பிடித்தது போன்ற சிலவற்றையும்., செய்து கொண்டு வந்திருந்தனர்.,

        ‘ஐயோ இன்னைக்கே  நினைவு திரும்பினா.,  என் பிள்ளை நிலைமை‘., என்று யோசித்தவர்.,  ‘சேச்சே  தப்பு தப்பு அவளுக்கு நினைவு திரும்பினா நல்லது தானே.,  அவங்க வீட்ல உள்ளவங்க சந்தோஷப்படுவாங்க இல்லைஎன்று நினைத்துக்கொண்டார.,

        அவளுக்கு பிடித்த கலரில் உடை.,  அவளுக்கு  பிடித்த சுவை என பார்த்து பார்த்து ஸ்வீட் காரம் என செய்து கொண்டு வந்திருந்தனர்.,

          அதையெல்லாம் திலகவதியின் கையில் கொடுத்து திலகவதி கை பிடித்து நன்றி சொல்லி பேசிக்கொண்டிருந்தனர்.,  மீராவின் அக்காவும் அம்மாவும்., அவள் அண்ணியை அழைத்து வரவில்லை கேட்டதற்கு நாங்கள் வேறு ஒரு உறவினர் வீட்டிற்கு செல்கிறோம் என்று சொல்லிவிட்டு தான் வந்திருந்தனர்.

    மீராவின் அக்கா கணவர் அண்ணன் அப்பா என அனைவரும் நன்றி சொல்லி விட்டு அமர்ந்து இருக்க., இவர்கள் இருவரும் தனியே நன்றி சொல்லிவிட்டு சேர்ந்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.,

        அவளை எங்கே என்று மீராவின் அம்மா கேட்டார்.,

       “வந்துருவா நாங்க அவள  பிடித்து உட்கார வைத்தா அவளுக்கு குழப்பம் வந்துரும்., சும்மா சாதாரணமா மீட் பண்ற மாதிரி இருக்கணும்.,  அவளுக்கு எந்தவித குழப்பமும் வரக்கூடாது என்பதற்காக தான்., அவளை எப்பவும் போல டிராயிங் கிளாஸ் அனுப்பியாச்சு., இப்ப வந்துடுவா.,

          எப்பவும் நான் தான் கொண்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வருவேன்.,  இன்னைக்கு நான் கொண்டு விட்டேன்.,   இப்ப கூப்பிடுவதற்கு சரவணன் போயிருக்கான்.,  வந்துவிடுவான்“.,  என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார் வீட்டிற்குள் நுழைவது தெரிந்தது.,

     காரை விட்டு அவள் இறங்க அழகாக எப்போதும் போடும் கவுன் மாடல் டிரஸ் போட்டுக்கொண்டிருந்தாள்.,  தன் குட்டி முடியை விரித்து விட்டிருந்தாள்.

         அவளுடைய டிராயிங் க்கு தேவையான பொருள்களை சரவணன் எடுத்துக் கொண்டு வர., இவ்வளோ அவனிடம் கதை பேசிய படியே வீட்டிற்குள் வந்தாள்., 

      திலகவதி எழுந்து நிற்க., அவளோ  கையை பிடித்துக் கொண்டு வந்தவர்களை குறுகுறுவென பார்த்துக் கொண்டே இருந்தாள்.,  அவளிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று சரவணன் பார்த்துக்கொண்டே அவளுடைய ட்ராயிங் திங்க்ஸ் எல்லாம் சென்று டைனிங் டேபிளில் வைத்து விட்டு வந்தான்.,

        அவளோ சற்று  பார்த்துவிட்டு பேசாமல் திரும்பிப் போக போகும் போது தான் திலகவதி அம்மு என்று அழைத்தார்.,

      என்னத்தை என்றாள்.,  “வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு கேட்க மாட்டியா“., என்று சொன்னார்.,

          வாங்க என்று யோசனையோடு சொன்னவள்.,  அவள் அம்மா அப்பாவின் முகத்தை சற்று நேரம் உற்றுப் பார்க்க.,

       சரவணனுக்கும் திலகவதி அங்கிருந்த அனைவருக்குமே ஒரு நிமிடம் இதயம் படபடப்பாய் துடித்து அடங்கியது ., ஆனால் அவளுக்கோ யோசனையோடு திலகவதியை பார்த்துஇவங்க யாருஎன்று கேட்டாள்.

             வந்தவர்களுக்கு கண்ணீர் வந்தாலும் எல்லோரும் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தனர்.

       “நம்ம ரிலேஷன் தான்டா“.,  என்று சொன்னார்.

    “நான் இவங்களை இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கேனா“., என்று கேட்டாள்.

       “ஆமா நீ  அடிக்கடி பார்த்திருக்க“., என்று சொன்னவர்.

       “பார்த்திருக்கிறேனா“., என்று யோசனையோடு  சொன்னவள்., அவள் அக்காவையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

         பின்புஅவங்க கிட்ட தட்ட என்னை மாதிரி இருக்காங்களோ“., என்று கேட்டாள்.

       அவள் அக்காவுக்கு  அவளை பார்த்து கண்ணீர் வந்தாலும் கலங்கிய கண்ணை மறைத்த படி அமர்ந்து கொண்டார்.,

       சரவணன் தான்அப்படியா தெரியுது உனக்கு“., என்று கேட்டான்.

     “இல்ல கேட்டேன்என்று சொன்னவள்.

     

Advertisement